Tuesday, November 29, 2011

சகோ. ஷாஹூல் ஹமீதின் ஹஜ் அனுபவங்கள்

பெரியவர்: ஹஜ்ஜின் போது மினாவில் தொழுகைகளை சுருக்கித்தானே தொழ வேண்டும் ? ஏன் நான்கு ரகாத்துகள் முழுமையாக தொழ சொல்கிறீர்கள் ?

மவ்லவி: ஏன் ஓய்வாகத்தானே இருக்கிறீர்கள் . சுருக்கித் தொழ வேண்டிய அவசியமில்லை. முழுமையாக தொழுதால் நல்லது தானே !

பெரியவர்: ஹஜ்ஜின் போது நபிகள் (ஸல்) மினாவிலும்அரஃபாவிலும் தொழுகைகளை முழுமையாக தொழுதார்களா? அல்லது சுருக்கி தொழுதார்களா?

மவ்லவி: சுருக்கித் தான் தொழுதார்கள்

பெரியவர்: அது போதும் எனக்கு!


இந்த சம்பாஷனை ஒரு மவ்லவிக்கும் ஊரிலிருந்து ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய வந்திருக்கும் ஒருவருக்கும் இடையில் நடை பெற்றது.

அவருக்கு கிட்டத்தட்ட 60 வயதிருக்கும் . பெயர் ஷாஹுல் ஹமீத்.நாகர்கோயிலை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையில் (வளசரவாக்கம்) வசித்து வருகிறார் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஏகத்துவ பிரச்சாரத்தின் மிக மிக ஆரம்பக் காலத்திலிருந்து அதில் தம்மை இணைத்துக் கொண்டு செயல் பட்டு வருபவர். ஏறக்குறைய  25 ஆண்டுகளுக்கு மேலாக ஏகத்துவத்தை கடை பிடித்து வருபவர்.

அவருக்கு தான் இந்த சோதனை . நபி வழியை குலைப்பதெற்க்கென்றே  ஒரு கூட்டம் இங்கு அலைந்து கொண்டிருக்கிறது. அவர் தனது நிலையில் உறுதியாக இருந்தார்.

துல்ஹஜ் 8 அன்று குளியல் அறையில் வழுக்கி விழுந்து கால் முறிவு ஏற்பட்டு விட்டது. நடப்பதே பெரும் பாடாகி விட்டது. அரஃபாவிற்கு (பிறை 9) செல்ல முடியுமா என்பதே பெரும் சந்தேகமாகிவிட்டது. இதற்கிடையில் மவ்லவியின் ஆதரவாளர்கள் கால முறிந்ததர்க்கு ஒரு அற்புதமான காரணத்தை கண்டு பிடித்தனர். அல்லாஹ் ரசூலுக்கு மாற்றமாக இவர் நடந்ததால் தான் கால் முறிவாம்!

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு அவன் காட்டிய வழியில் நடப்பவர்கள் யார் அதற்க்கு மாற்றமாக நடப்பவர்கள யார் என்பதை இறைவனே நன்கு அறிந்தவன்.

உண்மையில் இறைவன் அவனது வழிகாட்டலுக்கு மாற்றமாக நடப்பவர்களின் காலை முறிப்பது என்று முடிவெடுத்தால் இந்த பித்னாவை செய்தவர்கள் எல்லாம் நொண்டியாக தான் ஊருக்கு போக வேண்டி இருக்கும்.

அரஃபாவிற்க்கு அவர் கைத்தாங்கலாக அழைத்து செல்ல ஒரு சகோதரர் முன் வந்தார். அல்ஹம்துலில்லாஹ் ! ஹஜ்ஜின் எல்லா கடமைகளையும் சிறப்பாக செய்து முடித்தார்

ஊருக்கு சென்ற பிறகு உடைந்த காலுக்கு அறுவை  சிகிக்சை செய்ய வேண்டும்.

சிகிக்சை நல்ல விதமாக முடிந்து பூரண குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்.   

     

ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!  (9:51)

கருத்து - நௌஷாத்
ஆக்கம் - சிராஜ்தீன 

No comments:

Post a Comment