Saturday, November 19, 2011

துவங்கியது மதுரையில் தாயீக்கள் தர்பியா, இந்தியா முழுவதிலும் இருந்து 300க்கும் அதிகமான தாயீக்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சத்தியத்தியக் கொள்கையை நோக்கி அணி அணியாய் அலை அலையாய் மக்கள் படையெடுத்த வண்ணம் வந்து கொண்டிருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

இந்த சத்தியக் கொள்கையை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்., கணக்கு வழக்குகளிலும், சறுக்காத கொள்கையிலும் மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்றதன் காரணமாக கடந்த ரமலான் மாதத்தில் வேறு எந்த அமைப்புகளும் செய்திட முடியாத ஒரு சாதனையை இறைவனின் கிருபையால் செய்து காட்டியது. அதாவது கடந்த ரமலான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான பித்ரா தொகையை கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடமிருந்து திரட்டி அதை உரியவர்களிடம் சேர்ப்பித்தது.. அல்ஹமதுலில்லாஹ்.
எவ்வித இம்மை இலாபமும் இன்றி மறுமை வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, ஒரு சகோதரன் கூட தவறான கொள்கையில் இருக்கும் வரை இந்த ஜமாஅத்தின் பணிகள் ஓய்ந்து விடாது என்ற நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டு .., திருக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மட்டுமே சரியான வழிமுறை என்ற சத்தியக் கொள்கையில் இன்று வரை சறுக்கிவிடாத இந்த ஜமாஅத்தின் கிளைகள் ஊர்கள் தோறும் நாளுக்கு நாள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றது.

ஆனால் கிளைகள் உருவாகும் அளவிற்கு சத்தியத்தை எடுத்துச் செல்லும் பிரச்சாரகர்கள் (தாயீக்கள்) பற்றாக்குறை ஆகிக்கொண்டே வந்தது. வார வெள்ளிக்கிழமைகளில் நபி வழியின் அடிப்படையில் ஜூமுஆ தொழுகை, நாள் தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் பெண்கள், ஆண்கள் பயான் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், தர்பியாக்கள், மாற்று மத சகோதரர்களிடம் தாவா நிகழ்ச்சிகள் என இந்த ஜமாஅத்தின் பணிகள் அதிகமாகிக்கொண்டே செல்வதைக் கருத்தில் கொண்டு புதிய தாயீக்களை உருவாக்கும் பல முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

அதன் ஒரு முயற்சியாக இன்று (19/11/2011) மற்றும் நாளை (20/11/2011) ஆகிய இரு தினங்களில் இந்தியா முழுவதிலும் இருந்து தவ்ஹீத் தாயீக்களை வரவழைத்து அவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துவது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமை மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மதுரை மாநகரில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்தியா முழுவதும் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இருக்கும் தவ்ஹீத் பிரச்சார சகோதரர்களுக்கு இந்த முகாமில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்று இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 300க்கும் அதிகமான தவ்ஹீத் பிரச்சார தாயீக்கள் இன்று காலை முதல் மதுரையில் குவியத் துவங்கினர். மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருக்கும் KV துரையப்ப நாடார் தேனம்மை மஹாலில் காலை 8 மணி முதலே தாயீக்கள் குவியத்துவங்கினர். ஏற்கனவே பெயர் கொடுத்திருந்தவர்கள் அங்கிருந்த பட்டியலில் தங்களின் பெயர்களுக்கெதிரே கையொப்பமிட்டு பதிவு செய்து தங்கள் இருக்கைகளில்அமர்ந்தனர்.

இறைவனின் மாபெரும் கிருபையால் சரியாக காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியின் துவக்கமாக இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் அப்துந்நாசிர் "உளத்தூய்மை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து மாநிலத் தலைவர் சகோ.பீ.ஜைனுல் ஆபீதின் "பேச்சுக்கலை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த உரையில் தாயீக்களின் பேச்சு எப்படி இருக்க வேண்டும், மக்களைக் கவரும் விதமாக பேசுவது எப்படி, மக்களை வெறுப்புக்குள்ளாக்கும் பேச்சுக்களைத் தவிர்ப்பது எப்படி போன்ற நுனுக்கங்களை பேச்சாளர்களுக்கு விளக்கினார்.

அதைத் தொடந்து சேலம் தவ்ஹீத் கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.சுலைமான் "பலகீனமான மற்றும் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய செய்திகள்" என்ற தலைப்பில் தன் உரையைத் துவக்கினார்.

இதில் தவ்ஹீத் தாயீக்கள் எந்தச் செய்திகளை ஆதாரமில்லை என மறுக்கிறார்கள், அதே செய்தியை எதன் அடிப்படையில் மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் ஆதாரங்களோடு விளக்கினார்.

அடுத்ததாக மாநில தனிக்கை குழு உறுப்பினர் தஃபீக் அவர்கள்  "டிரஸ்ட் சங்கம் வேறுபாடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பொது இயக்கத்தையும் பொதுமக்களின் நிதியில் இருந்து வாங்கப்படும் சொத்துக்களையும் டிரஸ்ட் ஆக பதிவு செய்தால் அது அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் மட்டுமே சேரும், அதேபோல அந்தச் சொத்தினைச் சங்கமாகப் பதிவு செய்தால் அது அனைத்து மக்களுக்கும் பொதுவான சொத்து ஆகிவிடும் என்பதையும், டிரஸ்டிற்கான அதிகாரம் மற்றும் சங்கத்திற்கான அதிகாரம் போன்றவைகள் குறித்தும் தெளிவாக விளக்கினார்.

சரியாக 1 மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவடைந்து லுஹர் தொழுகை மற்றும் மதிய உணவிற்கான இடைவேளை விடப்பட்டது.

தொழுகைக்குப் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு சுவையான உணவுகள் வழங்கப்பட்டன.

உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4.30 வரை தாயீக்களிடம் குறை கேட்டல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரச்சாரகர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த குறை கேட்டல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் அதன்பிறகு மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.எஸ் .சுலைமான் "ஒற்றுமை கோசம்" என்ற தலைப்பிலும், மாநிலச் செயலாளர் அம்பத்தூர் யூசுப் "தாயீக்களுக்கான ஒழுங்குகள்" என்ற தலைப்பிலும், மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி " சஹாபாக்களைப் பின்பற்றுதல் – எதிர் கேள்விகளும் பதில்களும்" என்ற தலைப்பிலும், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சையது இப்ராஹீம் "ஆன்லைன் பீஜே இணையத்தளம் ஒரு பார்வை" என்ற தலைப்பிலும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி "தவ்ஹீத் ஜமாஅத்தின் நாம் ஏன் இருக்க வேண்டும்" என்ற தலைப்பிலும் உரையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

இன்றைய நிகழ்ச்சி நிறைவு பெற்று நாளை காலை 9 மணிக்கு அடுத்த அமர்வு துவங்குகிறது.  இன்ஷா அல்லாஹ்!

DSC07128
DSC07131
DSC07132
DSC07140

DSC07141

No comments:

Post a Comment