Wednesday, November 30, 2011

ஜித்தாவில் 9-12-2011 ஆன்லைன் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு

இன்ஷாஅல்லாஹ் வரும் 09-12-2011 வெள்ளி அன்று மாலை 6.30 முதல் 8 மணி வரை ஷர்ஃபியா நிஹாத் அரப் மாடியில் ஆன்லைன் மூலம் மாநில் பொதுச்செயலாளர் சகோதரர் கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பொறுப்புகள் ஒரு அமானிதம் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள். நீங்கள் அனைவரும் கலந்து கொள்வாதோடு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவ்வினர்களையும் அழைத்து வந்து பயனடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

Tuesday, November 29, 2011

சகோ. ஷாஹூல் ஹமீதின் ஹஜ் அனுபவங்கள்

பெரியவர்: ஹஜ்ஜின் போது மினாவில் தொழுகைகளை சுருக்கித்தானே தொழ வேண்டும் ? ஏன் நான்கு ரகாத்துகள் முழுமையாக தொழ சொல்கிறீர்கள் ?

மவ்லவி: ஏன் ஓய்வாகத்தானே இருக்கிறீர்கள் . சுருக்கித் தொழ வேண்டிய அவசியமில்லை. முழுமையாக தொழுதால் நல்லது தானே !

பெரியவர்: ஹஜ்ஜின் போது நபிகள் (ஸல்) மினாவிலும்அரஃபாவிலும் தொழுகைகளை முழுமையாக தொழுதார்களா? அல்லது சுருக்கி தொழுதார்களா?

மவ்லவி: சுருக்கித் தான் தொழுதார்கள்

பெரியவர்: அது போதும் எனக்கு!


இந்த சம்பாஷனை ஒரு மவ்லவிக்கும் ஊரிலிருந்து ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய வந்திருக்கும் ஒருவருக்கும் இடையில் நடை பெற்றது.

அவருக்கு கிட்டத்தட்ட 60 வயதிருக்கும் . பெயர் ஷாஹுல் ஹமீத்.நாகர்கோயிலை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையில் (வளசரவாக்கம்) வசித்து வருகிறார் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஏகத்துவ பிரச்சாரத்தின் மிக மிக ஆரம்பக் காலத்திலிருந்து அதில் தம்மை இணைத்துக் கொண்டு செயல் பட்டு வருபவர். ஏறக்குறைய  25 ஆண்டுகளுக்கு மேலாக ஏகத்துவத்தை கடை பிடித்து வருபவர்.

அவருக்கு தான் இந்த சோதனை . நபி வழியை குலைப்பதெற்க்கென்றே  ஒரு கூட்டம் இங்கு அலைந்து கொண்டிருக்கிறது. அவர் தனது நிலையில் உறுதியாக இருந்தார்.

துல்ஹஜ் 8 அன்று குளியல் அறையில் வழுக்கி விழுந்து கால் முறிவு ஏற்பட்டு விட்டது. நடப்பதே பெரும் பாடாகி விட்டது. அரஃபாவிற்கு (பிறை 9) செல்ல முடியுமா என்பதே பெரும் சந்தேகமாகிவிட்டது. இதற்கிடையில் மவ்லவியின் ஆதரவாளர்கள் கால முறிந்ததர்க்கு ஒரு அற்புதமான காரணத்தை கண்டு பிடித்தனர். அல்லாஹ் ரசூலுக்கு மாற்றமாக இவர் நடந்ததால் தான் கால் முறிவாம்!

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு அவன் காட்டிய வழியில் நடப்பவர்கள் யார் அதற்க்கு மாற்றமாக நடப்பவர்கள யார் என்பதை இறைவனே நன்கு அறிந்தவன்.

உண்மையில் இறைவன் அவனது வழிகாட்டலுக்கு மாற்றமாக நடப்பவர்களின் காலை முறிப்பது என்று முடிவெடுத்தால் இந்த பித்னாவை செய்தவர்கள் எல்லாம் நொண்டியாக தான் ஊருக்கு போக வேண்டி இருக்கும்.

அரஃபாவிற்க்கு அவர் கைத்தாங்கலாக அழைத்து செல்ல ஒரு சகோதரர் முன் வந்தார். அல்ஹம்துலில்லாஹ் ! ஹஜ்ஜின் எல்லா கடமைகளையும் சிறப்பாக செய்து முடித்தார்

ஊருக்கு சென்ற பிறகு உடைந்த காலுக்கு அறுவை  சிகிக்சை செய்ய வேண்டும்.

சிகிக்சை நல்ல விதமாக முடிந்து பூரண குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்.   

     

ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!  (9:51)

கருத்து - நௌஷாத்
ஆக்கம் - சிராஜ்தீன 

Monday, November 28, 2011

ஜித்தா-மதீனா கிளையில் பிரசுர விநியோகம்

ஜித்தா மண்டலம் மதீனா கிளை சார்பாக மதீனா வரும் ஹாஜிகளுக்கு, காலை முதல் உறங்குவது வரை நாம் ஓத வேண்டிய சிறிய து.ஆ க்களின் தொகுப்பு ஹஜ் பெருநாள் முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. வெப்மாஸ்டர் அப்பாஸ், மற்றும் மாணவரனி ஆலோசகர் சித்தீக் இவர்களின் பெற்றோர்களும், கோவை சகோ. சுலைமான் அவர்களும், தாங்கள் பெற்று கொண்டதோடு மட்டுமல்லாமல். அதிகம் நோட்டீஸை பெற்று தன்னுடன் வந்தவர்களுக்கும், தாங்கள் தங்குயிருக்கும் ஹோட்டலில் தங்கியிருப்பவர்களுக்கு விநியோகிக்க வாங்கி சென்றது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்த்தது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்ஷா அல்லாஹ் வரும் புதன் அன்று இஷா தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் சாகர் கிளை சார்பாக பெண்களுக்குகான சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற உள்ளது. இதில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர் & நண்பர்கள் குடும்பத்தினரையும் கலந்துகொண்டு பயனடைய சொல்லவும்.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

Sunday, November 27, 2011

ஆஷூரா நோன்பு - சிறப்புகள்

ஜித்தா-செனய்யா கிளை ஆலோசனைக்கூட்டம்


அல்லாஹ்வின் பேரருளால் 25.11.2011 வெள்ளி அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளை ஆலோசனைக் கூட்டம் கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில் நடைபெற்றது.
1.      இதில் கிளையின் தாஃவா பணியினை இன்னும் அதிகப்படுத்த பல வழிமுறைகள் பற்றி ஆலோசிக்கப் பட்டது.
2.      தர்ஃபியா நடத்தவும், மதினா பயணம் ஏற்பாடு செய்யவும் மண்டலத்தை அணுக வேண்டும் என்றும் வரும் மாதாந்திர கூட்டத்தில் அறிவிக்கவும் முடிவு செய்யப் பட்டது.
3.      உறுப்பினர் அட்டை இல்லாத உறுப்பினர்களை கண்டறிந்து அவர்களுக்கு உறுப்பினர் அட்டை கொடுக்கும் பணியும் சீரமைக்கப்பட்டது.
4.      தனிநபர் சந்திப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதையும், புதிதாக வந்துள்ள சகோதரர்களை சந்தித்து அவர்களுக்கு தாஃவாவின் முக்கியத்தவத்தை எடுத்துரைக்கும் பணியும் அதிகப்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
5.      TNTJ-மாநில தலைமையின் நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிக்கான கடந்த இரண்டு ஆண்டுகள் மாணவர் ஸ்பான்ஸர் முடிவடைந்து, வரும் புதிய கல்வியாண்டிக்காக ஸ்பான்பர் எடுக்க மாதாந்திர கூட்டத்தில் அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.
நிர்வாகிகள் அனைவரும் கலந்து தங்களது கருத்தையும், ஆலோசனையும் பகிர்ந்து கொண்டார்கள். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்து லில்லாஹ்.





திருக்குர்ஆன் & நூல்கள் பரிசளிப்பு


TNTJ  தபூக் கிளை நிர்வாகிகள் 24/11/2011 வியாழன் அன்று தபூக்கிற்கு வந்திருந்த இந்தியத் தூதரக அதிகாரி திரு S.D.மூர்த்தி [Consul Community Welfare] C G I Jeddah KSA. அவர்களை சந்தித்து, அவர்களுக்கு PJ அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயற்ப்பையும் மேலும் பல இஸ்லாமிய நூல்களையும் வழங்கி, தூய இஸ்லாத்தையும்,TNTJ வின் செயல்பாடுகளையும் எடுத்துரைத்தனர். மிகுந்த ஆர்வத்துடனும், பெரும் மகிழ்சியுடனும் அவர் செவிதாழ்த்தி, நூல்களையும் பெற்று கொண்டார். இச்சந்திப்பிற்கு [ I I S T ] Vice Principal Mr. சம்சுதீன் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இந்திய தூதரக அதிகாரி கூட்டத்தில் தபூக் கிளை நிர்வாகிகள்

24/11/2011 வியாழன் அன்று இரவு இந்தியத் தூதரக அதிகாரிகள். தபூக் வாழ் இந்தியர்களுடைய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்க ஒரு முக்கிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இக்கூட்டதிற்கு TNTJ தபூக் கிளை நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இக்கூட்டம் [ I I S T ] மீட்டிங் ஹாலில் திரு S.D. மூர்த்தி [Consul Community Welfare] C G I- Jeddah KSA. அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் TNTJ தபூக் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் TNTJ தபூக் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் தபூகில் பலவித பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் அவலநிலை குறித்தும், இந்தியத் தூதரகத்தின் அலட்சியப்போக்கை குறித்தும் அழகாக எடுத் துரைத்தார். இறுதியில் தபூகில் 7 பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தனர். அதில் நமது கிளைத் தலைவர் அப்துல் அஜீஸும் தமிழகம் சார்பாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அல் ஹம்து லில்லாஹ்.

Saturday, November 26, 2011

ஜித்தா - ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

கடந்த 25-11-2011 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பி.ஜெ அவர்கள் வெளிநாட்டில் வேலை செய்வோர் கவனத்திற்கு எனும் தலைப்பில் உரையாற்றிய சி.டி. ஒளிபரப்பப்பட்டது. அதிகமான சகோதரா்கள் கலந்து கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளை இன்னும் அதிகப்படுத்துமாறு கேட்டு கொண்டனா். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, November 22, 2011

ஜித்தா - ஷர்ஃபியா கிளை பயான் & கிளை கூட்டம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அல்லாஹ்வின் அருளால் கடந்த 18-11-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் ஷரபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஜித்தா மண்டல துணைத்தலைவர் சகோ.முஹம்மது ரபி அவர்கள் அல்லாஹ்வின் அற்புதங்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியினை புரஜக்டர் மூலமாக ஒளிபரப்பப்பட்டது. அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
அதனை தொடர்ந்து ஷரபியா கிளையின் மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கிளையின் செயல்பாடுகளை எவ்வாறு அதிகரிப்பது என்பன போன்ற கலந்தாலோசனை நடைபெற்றது. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, November 19, 2011

துவங்கியது மதுரையில் தாயீக்கள் தர்பியா, இந்தியா முழுவதிலும் இருந்து 300க்கும் அதிகமான தாயீக்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சத்தியத்தியக் கொள்கையை நோக்கி அணி அணியாய் அலை அலையாய் மக்கள் படையெடுத்த வண்ணம் வந்து கொண்டிருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

இந்த சத்தியக் கொள்கையை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்., கணக்கு வழக்குகளிலும், சறுக்காத கொள்கையிலும் மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்றதன் காரணமாக கடந்த ரமலான் மாதத்தில் வேறு எந்த அமைப்புகளும் செய்திட முடியாத ஒரு சாதனையை இறைவனின் கிருபையால் செய்து காட்டியது. அதாவது கடந்த ரமலான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான பித்ரா தொகையை கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடமிருந்து திரட்டி அதை உரியவர்களிடம் சேர்ப்பித்தது.. அல்ஹமதுலில்லாஹ்.
எவ்வித இம்மை இலாபமும் இன்றி மறுமை வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, ஒரு சகோதரன் கூட தவறான கொள்கையில் இருக்கும் வரை இந்த ஜமாஅத்தின் பணிகள் ஓய்ந்து விடாது என்ற நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டு .., திருக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மட்டுமே சரியான வழிமுறை என்ற சத்தியக் கொள்கையில் இன்று வரை சறுக்கிவிடாத இந்த ஜமாஅத்தின் கிளைகள் ஊர்கள் தோறும் நாளுக்கு நாள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றது.

ஆனால் கிளைகள் உருவாகும் அளவிற்கு சத்தியத்தை எடுத்துச் செல்லும் பிரச்சாரகர்கள் (தாயீக்கள்) பற்றாக்குறை ஆகிக்கொண்டே வந்தது. வார வெள்ளிக்கிழமைகளில் நபி வழியின் அடிப்படையில் ஜூமுஆ தொழுகை, நாள் தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் பெண்கள், ஆண்கள் பயான் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், தர்பியாக்கள், மாற்று மத சகோதரர்களிடம் தாவா நிகழ்ச்சிகள் என இந்த ஜமாஅத்தின் பணிகள் அதிகமாகிக்கொண்டே செல்வதைக் கருத்தில் கொண்டு புதிய தாயீக்களை உருவாக்கும் பல முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

அதன் ஒரு முயற்சியாக இன்று (19/11/2011) மற்றும் நாளை (20/11/2011) ஆகிய இரு தினங்களில் இந்தியா முழுவதிலும் இருந்து தவ்ஹீத் தாயீக்களை வரவழைத்து அவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துவது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமை மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மதுரை மாநகரில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்தியா முழுவதும் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இருக்கும் தவ்ஹீத் பிரச்சார சகோதரர்களுக்கு இந்த முகாமில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்று இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 300க்கும் அதிகமான தவ்ஹீத் பிரச்சார தாயீக்கள் இன்று காலை முதல் மதுரையில் குவியத் துவங்கினர். மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருக்கும் KV துரையப்ப நாடார் தேனம்மை மஹாலில் காலை 8 மணி முதலே தாயீக்கள் குவியத்துவங்கினர். ஏற்கனவே பெயர் கொடுத்திருந்தவர்கள் அங்கிருந்த பட்டியலில் தங்களின் பெயர்களுக்கெதிரே கையொப்பமிட்டு பதிவு செய்து தங்கள் இருக்கைகளில்அமர்ந்தனர்.

இறைவனின் மாபெரும் கிருபையால் சரியாக காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியின் துவக்கமாக இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் அப்துந்நாசிர் "உளத்தூய்மை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து மாநிலத் தலைவர் சகோ.பீ.ஜைனுல் ஆபீதின் "பேச்சுக்கலை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த உரையில் தாயீக்களின் பேச்சு எப்படி இருக்க வேண்டும், மக்களைக் கவரும் விதமாக பேசுவது எப்படி, மக்களை வெறுப்புக்குள்ளாக்கும் பேச்சுக்களைத் தவிர்ப்பது எப்படி போன்ற நுனுக்கங்களை பேச்சாளர்களுக்கு விளக்கினார்.

அதைத் தொடந்து சேலம் தவ்ஹீத் கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.சுலைமான் "பலகீனமான மற்றும் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய செய்திகள்" என்ற தலைப்பில் தன் உரையைத் துவக்கினார்.

இதில் தவ்ஹீத் தாயீக்கள் எந்தச் செய்திகளை ஆதாரமில்லை என மறுக்கிறார்கள், அதே செய்தியை எதன் அடிப்படையில் மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் ஆதாரங்களோடு விளக்கினார்.

அடுத்ததாக மாநில தனிக்கை குழு உறுப்பினர் தஃபீக் அவர்கள்  "டிரஸ்ட் சங்கம் வேறுபாடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பொது இயக்கத்தையும் பொதுமக்களின் நிதியில் இருந்து வாங்கப்படும் சொத்துக்களையும் டிரஸ்ட் ஆக பதிவு செய்தால் அது அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் மட்டுமே சேரும், அதேபோல அந்தச் சொத்தினைச் சங்கமாகப் பதிவு செய்தால் அது அனைத்து மக்களுக்கும் பொதுவான சொத்து ஆகிவிடும் என்பதையும், டிரஸ்டிற்கான அதிகாரம் மற்றும் சங்கத்திற்கான அதிகாரம் போன்றவைகள் குறித்தும் தெளிவாக விளக்கினார்.

சரியாக 1 மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவடைந்து லுஹர் தொழுகை மற்றும் மதிய உணவிற்கான இடைவேளை விடப்பட்டது.

தொழுகைக்குப் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு சுவையான உணவுகள் வழங்கப்பட்டன.

உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4.30 வரை தாயீக்களிடம் குறை கேட்டல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரச்சாரகர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த குறை கேட்டல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் அதன்பிறகு மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.எஸ் .சுலைமான் "ஒற்றுமை கோசம்" என்ற தலைப்பிலும், மாநிலச் செயலாளர் அம்பத்தூர் யூசுப் "தாயீக்களுக்கான ஒழுங்குகள்" என்ற தலைப்பிலும், மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி " சஹாபாக்களைப் பின்பற்றுதல் – எதிர் கேள்விகளும் பதில்களும்" என்ற தலைப்பிலும், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சையது இப்ராஹீம் "ஆன்லைன் பீஜே இணையத்தளம் ஒரு பார்வை" என்ற தலைப்பிலும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி "தவ்ஹீத் ஜமாஅத்தின் நாம் ஏன் இருக்க வேண்டும்" என்ற தலைப்பிலும் உரையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

இன்றைய நிகழ்ச்சி நிறைவு பெற்று நாளை காலை 9 மணிக்கு அடுத்த அமர்வு துவங்குகிறது.  இன்ஷா அல்லாஹ்!

DSC07128
DSC07131
DSC07132
DSC07140

DSC07141

Tuesday, November 15, 2011

உங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்க


உங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்க- Online Petition Filing
 

நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது. குடிநீர், சாலை வசதி,மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள உள்ள கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிகடம் சொல்லி சொல்லி அலுத்து போய் இருக்கும். செல்வாக்கு உள்ளவர்கள் பிரச்சினைகளை உயர் அதிகாரிகளிடம் பணம் கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்வார்கள். ஆனால் அனைவாராலும் இதை செய்ய முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மையானவர் மாவட்ட கலெக்டர் தான் ஆனால் நாம் அவரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க வேண்டுமானால் படாத பாடு பட வேண்டும். இதனால் பெருமாலானவர்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை.


ஆனால் நம் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை உருவாக்கி வைத்துள்ளது.  ஆனால் இந்த வசதி இருப்பதை பல பேர் இன்னும் அறியாமல் உள்ளனர். ஆதலால் இந்த வசதியை அனைவரும் பயன்படுத்தும் விதமாக இங்கு தெரியப்படுத்துகிறேன்.

  • இதற்க்கு முதலில் Online Petition Filing இந்த லிங்கில் செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் வலது பக்க சைட்பாரில் Select என்ற ஒரு சிறிய கட்டம் இருக்கும்.
  • அதில் கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • அந்த லிஸ்டில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
  • உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நான் திருவள்ளூர் மாவட்டத்தை தேர்வு செய்துள்ளேன்.
  • அந்த விண்டோவில் நான் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள ஈமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும். 
  • அதை குறித்து கொண்டும் ஈமெயில் அனுப்பலாம்.
  • அல்லது அதில் உள்ள கோரிக்கை பதிவு என்ற லிங்கை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் கோரிக்கையை அனுப்பலாம். 
  • இதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உங்கள் கோரிக்கைக்கான ஒரு எண் கொடுப்பார்கள் அதை குறித்து கொண்டு கோரிக்கை நிலவரம் என்ற பகுதியில் இந்த எண்ணை கொடுத்து சோதிப்பதன் மூலம் உங்களின் கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என அறியலாம்.
  • கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் அந்த கோரிக்கை எண் வைத்து நீதிமன்றங்களில் மேல் முறையீடும் செய்யலாம். 
  • நண்பர்களே இதில் கொடுக்கும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும் போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.
  • இந்த தளத்தில் சில மாவட்டத்தை தேர்வு செய்தால் அந்த தளம் error காண்பிக்கும்.ஆனால் சில மாவட்டத்தை தேர்வு செய்தால் அந்த தளம் வேலை செய்கிறது. 






முதல்வர் நாற்காலியில் ஒரு வெறிநாய்

mod

Monday, November 14, 2011

ஜித்தா-செனைய்யா கிளை துண்டு பிரசுர தாஃவா

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையின் சார்பில் புகைபிடிப்பதாலால் ஏற்படும் தீங்கினை விளக்கி அதிலிருந்து விலகி மனிதன் தனது உடலை பாதுகாப்பது கடமையாது என்பதை வி்ளக்கி துண்டு பிரசுரம் மற்றும் பயணதுஆ அரபியில் எழுதப்பட்ட ஸ்டிக்கரும் செனைய்யா பகுதி கேம்ப்களில் விநியோகித்து வருகின்றது. இதனை ஜித்தாவில் நடந்த பெருநாள் விடுமுறை தின பல்சுவை நிகழ்ச்சியிலும் விநியோகிக்கப் பட்டது. 



Friday, November 11, 2011

ஜித்தா மண்டல கிளைகள் கூட்டமைப்பு மஷீரா

அல்லாஹ்வின் திருப்பெயரால்........

கடந்த 07-11-2011 திங்கள் அன்று இரவு 9 மணி முதல் 1.30 மணி வரை, ஜித்தா மண்டல கிளைகளின் கூட்டமைப்பு கூட்டம் மண்டல நிர்வாகிகள் தலைமையில் ஜித்தாவிலுள்ள பண்ணை வீட்டில் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கிளைகள் தாங்கள் ஆற்றி வரும் பணிகள் மற்றும் பங்களிப்புகளையும், சக கிளைகளுக்கும் மற்றும் மண்டலத்திற்க்கு அவர்களின் ஆலோசனைகளையும் வழங்கினார்கள். மண்டலமும் கிளை செய்ய வேண்டிய பணிகளையும், அவர்கள் செய்ய தவறிய பணிகளையும் சுட்டிக்காட்டி செய்யும்படி கேட்டுக்கொண்டது. பயனுள்ளதாக அமைந்த இந்த கூட்டத்திற்க்கு தொலைதூர கிளையான தபூக் கிளை நிர்வாகிகளும் கலந்த்துகொண்டது சிறப்பாக அமைந்ததுடன், அவர்கள் சிறப்பாக ஆற்றிவரும் மாற்று மதத்தினருக்காக ஆற்றி வரும் மார்க்க பணிகள் பற்றி கேட்டு அறிந்துகொண்டதுடன், தாமும் செய்வதாக சொன்னார்கள். பின் து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

தபூக் கிளையின் மார்க விளக்க கூட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்................

11-11-2011 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டல தபூக் கிளை நிர்வாகிகள் அங்கு உள்ள ஆஷ்ட்ரா பண்ணையில் உள்ள கேம்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சியினை நடத்தினார்கள். இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தை புரிந்த்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 முஸ்லீம் சகோதரர்களும், 18 மாற்று மத சகோதரர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும், இஸ்லாமிய மார்க்க விளக்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் அடிக்கடி இதுபோன்ற நிகழ்ச்சியினை நடத்துமாறு கேட்டுகொண்டனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Friday, November 4, 2011

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற திவாகரன்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளை நிர்வாகிகளின்
முயற்சியாலும் அல்லாஹ்வின் மாபெரும் உதவியாலும் தபூக் ஆஸ்ட்ரா விவசாய பண்னையில் பணிபுரிந்துவரும் இலங்கை யாழ்பாணம் மாவட்டம் குருநகரை  சேர்ந்த சகோ.திவாகரன்   அவர்கள்  03/11/ 2011  வியாழன் அன்று தபூக் கிளை நிர்வாகிகளின் முன்னிலையில்  இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக  ஏற்றுக்கொன்டு தன் பெயரை அப்துல் ரஹ்மான்  என்று மாற்றிக்கொன்டார், கிளையின் சார்பில் இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!