அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 13-06-2012 புதன் அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஜித்தா-ஸாகர் பகுதியில் பெண்களுக்கான சிறப்பு பயான் ஒன்றினை ஏற்பாடு செய்து இருந்தது. இதில் சகோ. ராஷிதா அப்துற் ரஹ்மான் ஆலிமா அவர்கள் விடைபெறும் நேரம் என்ற தலைப்பில் மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள். இதில் பெண்கள் 45 பேர்களும், சிறுவர், சிறுமியர் 15 பேர்களும் ஆக 60 பேர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். சிற்றுண்டி து.ஆ விற்க்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
(குறிப்பு:- பெண்களாக கலந்து கொண்டதால், அவர்கள் போட்டோ எடுப்பதை விரும்பாததால், போட்டோ எடுக்கவில்லை)
|
Saturday, June 16, 2012
ஜித்தா மண்டல பெண்கள் பயான்
ஜித்தா மண்டலம் தபூக் கிளை தர்பியா வகுப்பு
| அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் 15/06/2012 வியாழன் அன்று இரவு11/30 முதல் 12/30 மணி வரை வாராந்திர தர்பியா வகுப்பு நடை பெற்றது. இதில் கிளை பொருளாளர் சகோ. முஜாஹித் அவர்கள் வழிகெட்டக்கொள்கைகள்" பகுதி-11 என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோ, P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகள் இதில் இடம் பெற்றது, இதில் தபூக் கிளை நிர்வாகிகளும், மற்றும் கொள்கை சகோதரர்களும் கலந்துக்கொண்டு பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். இரவு உணவு து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். |
ஜித்தா-தபூக் கிளை வாரந்திர பயான்
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் |
ஜித்தா-தபூக் கிளையில் மிஃராஜூம் தவறான நம்பிக்கையும் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம்
| அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 15-05-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் மிஃராஜூம் தவறான நம்பிக்கையும் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் |
Friday, June 15, 2012
ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் பொதுக்குழு கூட்டம்
அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் 15 / 06 / 2012 வியாழன் அன்று இரவு 12 மணிக்கு கிளை பொதுக்குழு ஜித்தா மண்டல தலைவர் ஆலோசனையின் பேரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவை நடத்த ஷகாகாவிலிருந்து 450 கி.மீ தூரத்தில் உள்ள தபூக் கிளை தலைவர் அப்துல் அஜீஸ் மற்றும் கிளை செயலாளர் நிஜாம் இருவரையும் ஜித்தா மண்டலம் நிர்ணயித்திருந்தது. அதனடிப்படையில் அவர்கள் இந்த கூட்டத்தை நடத்தி வைத்தனர்.
முதலில் கிளை செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சகோ. நிஜாம் TNTJ அரும்பணிகள் குறித்தும் நாம் ஏன் TNTJஇணைய வேணடும், என்று விளக்கி உரை நிகழ்த்தினார்கள்.அதை தொடர்ந்து சகோ.அப்துல் அஜீஸ் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக கிளைத்தலைவர் இம்தாத் அவர்களின் பதவி விலகல் கடித்தை ஏற்று கொண்டதோடு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நாகையை சேர்ந்த முஹம்மத் அன்வர்தீன் [0555194812] அவர்கள் ஏகமனதாக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கிளை அமைப்பாளர் சகோ , உபைதுர் ரஹ்மான் அவர்களின் நன்றி உரையோடு இரவு 1:30 மனியளவில் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
|
ஜித்தா-ஷகாகா கிளையில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-06-2012 வியாழன் இரவு இஷாவிற்க்கு பிறகு ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 45 பேர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் பற்றிய தங்களது சந்தேகங்களை கேட்டனர் அதற்க்கு தபூக் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தெளிவாகவும், விரிவாகவும் பதில் அளித்தார்கள். இரவு உணவிற்க்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சதீஸ் குமார்
| தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ராமநாதபுரம் சாயல்குடியை சேர்ந்த சகோ. சதீஸ் குமார் அவர்கள் 15/ 06/ 2011 வெள்ளி அன்று தபூக் கிளை நிர்வாகிகளின் முன்னிலையில் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொன்டு தன் பெயரை சாதிக் என்று மாற்றிக்கொன்டார், கிளையின் சார்பில் தவ்ஹீத் ஜமாத் தாயிக்கள் உரையாற்றிய 25 சி.டிக்கள் வழங்கப்பட்டது. கடந்த 11 / 5 / 2012 அன்று இந்த சகோதரருக்கு தபூக்கிளை மர்க்கஸில் தஃவா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்! |
Thursday, June 14, 2012
ஜித்தா-ஷகாகா கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு
இறைவனின் அருளால் 07/06/2012 வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஷ்காகா கிளை வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியை கிளை செயலாளர் சகோ.இஸ்மாயில் தொடங்கிவைத்தார்கள். இதில் அமைப்பாளர் சகோ. A.K.உபைதுர்ரஹ்மான் அவர்கள் " பித்-அத்தினால் ஏற்படும் விளைவுகள். " என்ற தலைப்பில் விளக்கமாக உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இரவு உணவு, துஆ-விற்குபின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். |



