அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 09-11-2012 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம்அவர்கள் முதல் கட்ட பேச்சை முன் உதரணமாக பேசியவுடன் பின்பு ஒன்றின்பின் ஒருவராக கலந்து கொண்டவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் து.ஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, November 14, 2012
ஜித்தா-தபூக் கிளையில் தர்பியா வகுப்பு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 08/11/2012 வியாழன் அன்று இரவு 11:30 முதல் 01 மணி வரை வாராந்திர (மார்க்க) தர்பியா நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டது எவ்வாறு?, எப்போது? என்பதை "ஹதீஸ் கலை" [பாகம்-7] என்ற தலைப்பில் TNTJ மாநில தலைமையில் சகோ. P.J அவர்கள் நடத்திய உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன், ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் எடுத்துரைத்தார்கள். தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் கலந்துக்கொண்டு பயனடைந்தனர், மேலும் து.ஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, November 13, 2012
ஜித்தா-ஜிஸான் கிளை தாஃவா & மஷூரா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், 09-11-2012 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டல ஜிஸான் கிளையில் தாஃவா மற்றும் கிளை மஷூரா கிளைத்தலைவர் சகோ.ஜப்பார் தலைமையில் நடைபெற்றது. இதில் தாடியின் அவசியம் பற்றி சி.டி உரையின் ஒளிபரப்போடு விளக்கப்பட்டது. பின்பு நடந்த கிளை கூட்டத்தில் வரும் நாட்களில் பயான், துண்டு பிரசுரம், அஷூரா நோன்பை மக்களிடம் கொண்டு செல்வது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, November 10, 2012
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய மகேந்திரன்
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 08/11/2012 வியாழன் அன்று மஹ்ரிப்பிற்கு பிறகு TABUK சுலைமானியா பகுதியில் ஹவுஸ் டிரைவராக பணிபுரியும் நாகை – மீணம்பநல்லுரைச் சேர்ந்த சகோ, P.மகேந்திரன் அவர்கள் சத்தியமார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்கை நேறியாக ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்களும், கிளை செயலாளர் நிஜாம் அவர்களும் கொள்கை விளக்கம், வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிக்கூறி, கலீமாவையும் சொல்லிக் கொடுத்தனர். மேலும் அவர் தனது பெயரை முஹம்மது சரீப் மாற்றிக்கொண்டார்.இறுதியில் அவருக்கு சகோ, P.J அவர்களின் தமிழாக்கம், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், பைபில் இறைவேதமா?, இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை!,நபிவழித்தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும். மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம்,கிருஷ்தவருடன் நடந்த விவாதம், பைபில் இறைவேதமா? குர்ஆன் இறைவேதமா? விவாதம்!, இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள்! ஆகியதலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினர்! அல்ஹம்துலில்லாஹ்.
ஜித்தா-மதீனா கிளையில் மார்க்க உரை மற்றும் குரான் வகுப்பு
அல்லாவ்ஹின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 09-11-2012 வெள்ளி அன்று ஜூம்ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சியும் குரான் வகுப்பும் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் காதர் அவர்கள் இறுதி வெற்றி இஸ்லாமியர்களுக்கே என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்பு குரான் தஜ்வீத் முறைப்படி ஓதும் வகுப்பு நடைபெற்றது. து.ஆ மற்றும் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்.
ஜித்தா-ஸாகர் கிளையில் மார்க்க உரை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-11-2012 வெள்ளி அன்று மாலை 04 முதல் 05 வரை ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ரஃபி அவர்கள். அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
ஜித்தா-ஸாகர் கிளையில் பெண்கள் பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-11-2012 புதன் அன்று காலை 11 முதல் 12 வரை ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.திருமதி முனாப் அவர்கள் ஹதீஸ்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அனேக பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
ஜித்தா-செனைய்யா கிளையில் கேம்ப் பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-11-2012 வியாழன் இரவு இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளை பட்ச் சாக்லேட் கம்பெனியின் கேம்பில் பயான் ஏற்பாடு செய்து இருந்தது. இதில் சகோ.சலீம் சேட் அவர்கள் அமல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். துஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)



