| அல்லாஹ்வின் பேரருளால் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் 03/08/2012 வெள்ளி அன்று மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் மண்டல நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சகோ.சலீம் சேட் ரமளானும் குர்ஆனும் என்ற தலைப்பில், ஈமான் உறுதி பெறவும், மறுமையின் வெற்றிக்கும் வழிவகுப்பது குர்ஆன் தான் என்றும், இந்த புனிதமாதத்தில் அதனை அதிகமாக ஒதுவாதலும் அதிக நன்மைகளை பெற்றுத்தரும் என்றும் விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் 120க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயன பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ். |
Sunday, August 5, 2012
ஜித்தா-செனைய்யா கிளையில் இஃப்தார் மற்றும் பயான்
ஜித்தா-செனையா கிளை ஃபித்ரா விளக்க நோட்டீஸ் விநியோகம்
| அல்லாஹ்வின் அருளால் தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையில் 03/08/2012 வெள்ளி அன்று ரமளான் மாதத்தை முன்னிட்டு பெருநாள் தொழுகைக்கு முன் ஏழைகளுக்காக கொடுக்க வேண்டிய ஃபித்ரா பற்றி விளக்கும் நோட்டீஸ்கள், மற்றும் வரும் உரைத்து இஸ்லாம் என்ற தலைப்பிலான 15 புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்தது. |
ஜித்தா-தபூக் கிளை இஃப்தார் மற்றும் பயான்(நாள்-16)
| அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் -04-08-2012 சனி அன்று ரமளான் பிறை 16 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி" என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 16 ஆம் பாகத்தை உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் |
Saturday, August 4, 2012
ஜித்தா-கடையநல்லூர் கூட்டமைப்பு மஷூரா
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலத்தில் ரமலானை முன்னிட்டு அங்காங்கே கிளைகளில் இஃப்தாருடன் மார்க்க விளக்க பயானும். நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் கடையநல்லூர் கூட்டமைப்பின் சார்பில் 02/08/2012 வியாழன் அன்று நடந்த ஆலோசனை மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியில் கிளை பொருளாளர் சகோ.அமீன் குர்ஆனை ஓதுவோம் என்ற தலைப்பில் சிறிய உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து மற்றொரு பொருப்பாளர் சகோ.அப்துல் பாசித் கூட்டம் கூட்டப்பட்ட நோக்கம் பற்றி விளக்கினார்கள்..இஃப்தாருக்குபின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
|
ஜித்தா-கடையநல்லூர் கூட்டமைப்பின் கேம்ப் தாஃவா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் சார்பில் 03/08/2012 வெள்ளி அன்று ஜித்தாவிலுள்ள உஸ்ஃபான் பகுதியில் உள்ள கேம்ப்களின் தாவா சந்திப்புக்கு சென்றனர். இதில் கூட்டமைப்பின் பொருப்பாளர் சகோ.அப்துல் பாசித் மற்றும் ஜித்தா மண்டல து.செயலாளர் சகோ.கவுஸ் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். ஃபித்ரா பற்றி விளக்கப்பட்டது. நோட்டீஸ்கள் விநியோகிப்பட்டது. து.ஆவுடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
ஜித்தா-தபூக் கிளையில் தர்பியா வகுப்பு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் 02-08-2012 அன்று ஸஹர் நேரம் 2 முதல் 4 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "வழிகெட்டக் கொள்கைகள்" [பகுதி-17] "முதஷாபிஹாத்" இரு பொருள் தரும் வார்த்தைகள் என்ற தலைப்பில் சகோ, P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள். இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். மேலும் து.ஆவுடன் ஸஹர் உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 03/08/2012 வெள்ளி அன்று ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "தக்வா தரும் பாடம்" என்ற தலைப்பிலும். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் "கடந்து செல்லவேண்டிய பாதை" என்ற தலைப்பிலும், சிற்றுரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்கள் உள்பட 45 ற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
ஜித்தா-தபூக் கிளை இஃப்தார் மற்றும் பயான்(நாள்-15)
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் -03-08-2012 வெள்ளி அன்று ரமளான் பிறை 15 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி" என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 15 ஆம் பாகத்தை உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
|








