Wednesday, January 4, 2017

ஹதீஸில் துஆக்கள்

காலையில் ஓத வேண்டிய துவா: நமது நபிகள் நாயகம் சொல்லி கொடுத்தது நாமும் ஓதுவோம்
காலையில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ولَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذَا الْيَوْمِ وَخَيْرَ مَا بَعْدَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذَا الْيَوْمِ وَشَرِّ مَا بَعْدَهُ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
அஸ்பஹ்னா வஅஸ்பஹல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதல் யெவ்மி வ கைர மா பஃதஹா, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி ஹாதல் யெவ்மி வ ஷர்ரிமா பஃதஹா, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி
பொருள் : (அல்லாஹ்வின் கிருபையால்) நாம் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். ஆட்சியும் அல்லாஹ்வுக்கே! புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே! வணங்கப்படுபவன் அல்லாஹ்வைத் தவிர (வேறு) இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. அவனுக்கே ஆட்சி உரியது. அவனுக்கே எல்லா புகழும் உரியது. அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். என் இரட்சகா! இந்நாளின் நன்மை மற்றும் இ(ந்நாளான)தற்கு பிறகுள்ள நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன். இன்னும் இந்நாளில் ஏற்படும் தீமை மற்றும் இ(ந்நாளான)தற்கு பிறகுள்ள தீமையிலிருந்து உன்னை கொண்டு நான் காவல் தேடுகிறேன். என் இரட்சகா! நரகத்தில் உள்ள வேதனை மற்றும் கப்ரில் உள்ள வேதனையிலிருந்து உன்னிடம் நான் காவல் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம்


Sent from my iPhone

No comments:

Post a Comment