அளவற்ற அருளானனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஆன்லைன் பீஜே இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/moolaikum_pangu_undu/
பாலினத்தில் மூளைக்கும் பங்கு உண்டு
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் தொடர்பன உறுப்புகளிலும் செயல்பாடுகளிலும் மட்டுமே வேறுபாடுகள் உள்ளன. மற்ற விஷயங்களில் ஆணும் பெண்ணும் சமமே என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது.
இந்தக் கருத்து முற்றிலும் சரியானதல்ல. பாலியல் தொடர்பான உறுப்புக்களில் மட்டுமின்றி மூளை, சிந்தனை, ஆற்றல் உள்ளிட்ட அநேக விஷயங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அநேக வேறுபாடுகள் உள்ளன என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தை மெய்ப்படுத்தும் சான்றுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
இது "THE HINDU" பத்திரிக்கையில் செப்டம்பர் 18 - 2011 அன்று 6 - வது பக்கத்தில் வெளிவந்த கட்டுரை
ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது.
உடற்கூறு கட்டமைப்பு ரீதியான வித்தியாசங்கள் பிறப்பிலேயே உள்ளது - பேராசிரியர் காஃபி
ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது எனக் கூறுகிறார் அமெரிக்காவில் உள்ள வேய்னே ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி.
சென்னையில் M.V. அருணாசலம் அறக்கட்டளை சார்பாக நடந்த அகில உலக நரம்பியல் மற்றும் உளவியல் அமைப்பின் 8 வது மாநாட்டில் "பாலினத்தின் பாத்திரம் (Role fo sexes)" என்ற தலைப்பில் பேராசிரியர் காஃபி உரையாற்றினார்.
அதில் அவர்
ஏன் ஆண்கள் ஆண்களாக இருக்கின்றனர், பெண்கள் ஏன் பெண்களாக இருக்கின்றனர் என்பதற்கான விளக்கம் மனித மூளையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
உடல் கட்டமைப்பு ரீதியாகவும், செயல்பாடு ரீதியாகவும் ஆண், பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன. மூளையின் அளவிலும், மூளையின் உட்பொருள்களான செர்ப்ரோஸ்பினல் ஃபுளூயிடின் (serebrospinal fiuid) அளவு, வெள்ளை பருப்பொருள் (white matter), சாம்பல் பருப்பொருள்களின் அளவு (gray matter) வரை ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன.
இந்த உடல் கட்டமைப்பு ரீதியான வேறுபாடு பிறப்பிலே தோன்றுகின்றது. ஆனால் இந்த வேறுபாடு வளர வளர மாறுபடுகின்றதா?, அல்லது அதே நிலையில் நீடிக்கிறதா?
இது வரை இந்தக் கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் மனிதனின் வளர்ச்சிக்கும் வயதுக்கும் ஏற்ப மூளைகளில் மாறுபாடுகள் தோன்றுகின்றன என்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது வெளிவரத் தொடங்கி உள்ளன என்று கூறுகின்றார் பேராசிரியர் காஃபி.
9 வயதில் மூளையின் வெளிப் பகுதியை மூடி இருக்கும் கோர்டெக்ஸ் (cortex) எனும் பொருள் பெண் மூளையை விட ஆண் மூளையில் பெரியதாக இருக்கின்றது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 19 வயதில் இந்த வேறுபாடுகள் மாற்றம் அடைகின்றன.
இந்த வேறுபாடுகள் ஆண், பெண் என்ற பாலினத்தைப் பொருத்து மாறுபடுகின்றது. ஆண் மூளை "முன் மடலின் (frontal lobe)" தடிமன் பெண் மூளையை விட வேகமாக குறைகின்றது. ஆனால் மூளையின் "பின்பக்கப் பகுதி (posterior region )" இதற்கு நேர்மாற்றமாக உள்ளது, அதாவது பெண் மூளை பின்பக்க பகுதியின் (posterior region) தடிமன் ஆண் மூளையை விட வேகமாகக் குறைகின்றது.
சில வருடங்கள் தொடர்ந்து மூளையைப் புகைப்படங்கள் எடுத்து ஆய்வு செய்ததில் அது ஒரே மாதிரி இருப்பதில்லை, மூளையில் மேல குறிப்பிடபட்ட பகுதிகள் வயதுக்கு ஏற்ப மாற்றம் அடைகின்றன என காஃபி விளக்குகின்றார்.
30 வயதுக்கு மேல் மனிதனுக்கு வயது கூட கூட மூளையின் கட்டமைப்பு சுருங்குகின்றது.
நரம்பியல் மற்றும் உளவியலோடு பாலினத்திற்குத் தொடர்பு இருக்கின்றது என்றால் அப்பொழுது கண்டிப்பாக மூளையிலும் வேறுபாடு இருக்கும் என்று குறிப்பிட்டார் பேராசிரியர் காஃபி.
அவர் மேலும் கூறுகையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மொழிச் செயல்பாடுகளிலும் (language function),
காட்சி இடம்சார் செயல்பாடுகளிலும் (visual-spatial function),
சமூக அறிவாற்றல் திறனிலும் (social cognition skills),
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதிலும் (empathy) ,
உணர்வு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் (emotion and perception)
தேடுவது (seeking) பரபரப்பு (sensation) போன்ற பண்பிலும்
கண்டிப்பாக வேறுபாடுகள் உள்ளன.
பண்புகள் ஒரே மாதிரி இருந்தாலும், ஆண் பெண்ணிற்கான அடிப்படை உயிரியல் ஒன்றல்ல.
ஒரே வேலையைச் செய்து முடிப்பதற்கு ஆண் மூளையில் செயல்படும் பகுதியும், பெண் மூளையில் செயல்படும் பகுதியும் வெவ்வேறாக உள்ளது.
இந்த உடல்கூறு ரீதியான வேறுபாடு ஆண், பெண்களின் சமுதாய நிலையினாலும் தோன்றி இருக்கலாம், சமூகத்தில் ஆண்கள், தேடக் கூடியவர்களாகவும் (hunter), அனைத்தையும் திரட்டக் கூடியவர்களாகவும் (gatherer), பெண்கள் குழந்தையைச் சுமக்கக் கூடியவர்களாகவும், கவனிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கும் எனப் பேராசிரியர் காஃபி குறிப்பிடுகின்றார்.
இருந்தாலும் இந்த வேறுபாடுகள் நம்மை வகைப்படுத்தி வரையறுக்கின்றதா? "ஆம் இந்த உடல்கூறு ரீதியான வேறுபாடுகள் நம்மை (ஆண், பெண் என) மட்டும் தான் வேறுபடுத்துகின்றது. தனிப்பட்ட மனிதன் அவனுடைய சிறப்பான மாறுபட்ட திறமைகளை வைத்து வேறுபடலாம். எது எப்படி இருந்தாலும் "உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், இந்த ஆண் பெண் உடல் ரீதியான வேறுபாடுகளில் நாம் கண்டிப்பாக கவனம் செலுத்தியாக வேண்டும் எனக் கூறி முடிக்கின்றார் அமெரிக்கப் பேராசிரியர் காஃபி.
No comments:
Post a Comment