Monday, July 29, 2013

ஏகத்துவவாதிகளின் ஒற்றுமையை பறைசாற்றிய ஜித்தா இப்தார்!

 
 ஏகத்துவவாதிகளின் ஒற்றுமையை பறைசாற்றிய ஜித்தா இப்தார்! 

அல்லாஹ்வின் அருளால் ஜித்தா மண்டல TNTJ வின் இப்தார் நிகழ்ச்சி 26-07-2013 வெள்ளி அன்று நகரின் மையப்பகுதியான பின்லாடன் அரங்கில் நடைபெற்றது. 700 க்கும் அதிகமான ஜித்தா நகர கிளைகளை சேர்ந்த சகோதரர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒருவரையொருவர் போட்டியிட்டு தன்னார்வத்துடன் பலரும்  உபசரித்ததும், அரங்க ஒழுங்குகளை பேணி உரைகளை செவிமடுத்ததும் கொள்கை சகோதரர்களின் சகிப்புத்தன்மையையும் ஒற்றுமையையும்  உணர்த்தியது. நோன்பு திறக்கும் முன்னதாக நிகழ்த்தப்பட்ட உரையில் மண்டல அழைப்பாளர் மேலப்பாளையம் ஹக் முஹைதீன் "தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம்" என்ற தலைப்பில் பேசினார். மக்ரிப் தொழுகைக்கு பிறகு மண்டல அழைப்பாளர் முஹாஜிர் "பொருள் கொடுத்து அருள் பெறுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு ஆர்வத்துடன் நான்கு மாற்றுமத சகோதரர்களும் பங்கேற்றனர். நால்வருக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஒரு சகோதரர் அரங்கில் இஸ்லாத்தை ஏற்றது குறிப்பிடத்தக்கது. தனது குடும்பவிழாவைப்போல் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  700 சகோதரர்களுக்கும்  PJ அவர்களின் "துஆக்களின் தொகுப்பு" நூல்கள் மற்றும் "ரியாதுஸ் ஸாலிஹீன்" தொகுப்பின்  700 ஆடியோ சீடிக்கள், லைலத்துல் கத்ரை விளக்கும் 700 துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மாநாடைப்போல் நடந்த இந்நிகழ்ச்சியில் மண்டல துணைத் தலைவர் ரபீ தலைமையேற்றார். சகோ. ஷௌகத் உசேன் தொகுத்து வழங்கினார். மண்டல செயலாளர் அப்துல்பாரி நன்றியுரை ஆற்றினார். இரவு உணவுக்கு பின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

 
ஜித்தா மண்டல நிர்வாகிகள்.


No comments:

Post a Comment