Saturday, November 10, 2012

ஜித்தா-செனைய்யா கிளை பயான் மற்றும் மாதாந்திர கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-11-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டல செனைய்யா கிளை மாதாந்தியா கூட்டம் அஸர் தொழுகைக்குப்பின் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் கிளை தலைவர் சகோ. ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. சகோ.சவுக்கத் ஹுசைன் அவர்கள் அல்லாஹ்வின் அடிமைகள் என்ற தலைப்பில் மார்க்க உரையாற்றினார்கள். பின்பு கிளையின் வரும் நாட்களின் செயல்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-ஷரஃபியா இரத்த அழுத்தம் இரத்த குளுகோஸ் கண்டறியும் முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் கடந்த 9-11-2012 அன்று காலை 8 மணிமுதல் 10 மணி வரையில் இலவசமாக, இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு மற்றும் இரத்த அழுத்த அளவு கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது. மேலும் அதில் உணவையே மருந்தாக ஆக்கக்கூடிய வழிமுறைகள் அடங்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டது. இதில் 75க்கும் மேற்பட்ட சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, November 7, 2012

ஜித்தா மண்டல குர்பானி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இவ்வருட ஹஜ் பெருநாளைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமை ஏற்பாடு செய்திருந்த கூட்டு குர்பானி திட்டத்திற்க்கு ஜித்தா மண்டலம் 4 ஆடுகளுக்கும், 5 மாடுகளுக்கும் உண்டான பங்குகளை திரட்டி மாநிலத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டு அதனை மாவட்டம் மூலம் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, November 6, 2012

ஜித்தா - பாப் மக்கா கிளை மாற்றுமத தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-11-2012 திங்கள் அன்று ஜித்தா மண்டலம் பாப் மக்கா கிளையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மாற்றுமத சகோதரருக்கு தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. மேலும் அவருக்கு ஐந்து இஸ்லாமிய புத்தகங்களும் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, November 4, 2012

ஜித்தா - தபூக் கிளையில் தனிநபர் தாஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 02-11-2012 வெள்ளி அன்று அஸருக்குப்பின்  தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. தபூக்  அஜிஸியா பகுதியில் பணிப்புரியும்  சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்துகூறி முக்கிய பத்து நூல்களையும் வழங்கி தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா - தபூக் கிளையில் தனிநபர் தாஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 01-11-2012 வியாழன் அன்று அஸர் தொழுகைக்குப்பின்  தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. தபூக்  சுலைமானியா பகுதியில் பணிப்புரியும்  சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்துகூறி, முக்கிய ஐந்து நூல்களையும் வழங்கி தனி  நபர் தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா - தபூக் கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 02-11-2012 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்  "அல்லாஹ்வை அஞ்சுபவர் யார்?" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் " இறைத் தூதர்களும்! எதிப்பாளர்களும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாலர் சகோ. முஜாஹீத் அவர்கள்  "மூமின்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இதில் 45திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். நபிவழி து.ஆ வுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
 

ஜித்தா - தபூக் கிளையில் ஆலோசனைக்கூட்டம்

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 01-11-2012 வியாழன்  அன்று  இரவு 11 மணி அளவில் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக கிளை செயளாலர் சகோ. நிஜாம் அவர்கள் மாதாந்திர வரவு, செலவு கணக்குகளை படித்தார்.  கிளை தலைவர் சகோ. அப்துல்அஜீஸ் அவர்கள் "நபிகள் நாயகத்தின் முதல்கட்ட அழைப்பு பணி" என்ற தலைப்பில் சிறப்புரையற்றினார்கள். மேலும் கிளையின் மார்க்க சமுதாய பணிகளை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்று விரிவாக ஆலோசிக்க பட்டது. மேலும் து.ஆ வுடன், இரவு உணவிற்குப் பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.