Saturday, September 15, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை  மர்கஸில் 06-09-2012 வெள்ளி அன்று  ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது. ந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்  "ஹஜ்ஜின் சிறப்புகள்" என்ற தலைப்பில், ஹஜ் என்றால் என்ன?  அது நமக்கு எப்படி கடமையாக்கப்பட்டது? என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் தெளிவாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.

மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நாடும் நடப்பும்" என்ற தலைப்பில் கடந்தவார உலக நிகழ்வுகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து கிளை பொருளாலர் சகோ. முஜாஹீத் அவர்கள்  "மூமின்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள்.  இதில் பிறமத சகோதரர்கள், உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி துஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

ஜித்தா மண்டல ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 14-9-2012 வெள்ளி அன்று இஷாவிற்க்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஆலோசனை கூட்டம் மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி தலைமையில் மண்டல து.தலைவர் ரஃபீ முன்னிலையில் நடைபெற்றது. அதில் தர்பியா முகாம் மற்றும் இரத்த தான முகாம் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது. புதிய கிளை சம்பந்தமாகவும் எடுத்துரைக்கப்பட்டது. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

ஜித்தா மண்டல ஆன்லைன் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 14-9-2012 வெள்ளி அன்று மஃரிப் முதல் இஷா வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் சகோ. அப்பாஸ் அலி அவர்கள் மண்ணறையும் மறுமையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து இரத்த தானம் பற்றிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்கள். 75க்கும் அதிகமான சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 



Wednesday, September 12, 2012

ஜித்தா மண்டல பாப்-மக்கா புதிய கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-09-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் பாப்-மக்கா பகுதியில் மண்டல து.தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் தலைமையில் மண்டல செயலாலர் சகோ. அப்துல் பாரி அவர்கள் முன்னிலையில் புதிய கிளை துவக்கப்பட்டது. சகோ.ரஃபீ அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தின் அவசியம் என்ற தலைபில் சிறிய உரை நிகழ்த்தினார்கள். பின்னர் கிளை தலைவராக சகோ. மாலிக், செயலாளராக சகோ. சதக்கதுல்லாஹ்வும் இடைக்காலத்திற்க்கு பொறுப்பளிக்கப்பட்டார்கள். சகோ. பாரி அவர்கள் கிளை பணிகள் பற்றிய ஒழுங்குகள், ஆலோசனைகளை கூறினார்கள். பின்னர் து.ஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். 

Sunday, September 9, 2012

TNTJ ஜித்தா தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய சகோ. இரவி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம்  தபூக் கிளையில் கடந்த 06-09-2012 வியாழன் அன்று  தபூக் AL AFARI POLY CLINICல் கிளை துணைச்செயலாளர் சகோஉமர் மாலீக் அவர்களுடன் பணி புரியும்  விருதாச்சலம்-காட்டூரைச் சேர்ந்த  சகோதரர் இரவி அவர்கள் TNTJ தபூக் கிளை மர்கஸில் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்.

 

இவருக்கு கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் இறை கோட்பாடு, வணக்க, வழிபாடுகள் மற்றும் கலீமாவின் விளக்கத்தையும் எடுத்து கூறி, கலீமாவை சொல்லி கொடுத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். மேலும் அவர் தனது பெயரை முஹம்மது ரபீக் என்றும் மாற்றிக்கொண்டார். அவருக்கு சகோ. P.J அவர்களின் தமிழாக்கம்திருமறை தோற்றுவாய்மாமனிதர் நபிகள் நாயகம்வருமுன் உரைத்த இஸ்லாம்மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்பைபில் இறைவேதமா?,  இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை, நபிவழித் தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும். மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம்கிருஸ்தவருடன் நடந்த விவாதம்பைபில் இறை வேதமாகுர்ஆன் இறை வேதமா? விவாதம், இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள் ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ். 

"அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழையும் போது உமது இறைவனை போற்றி, துதிப்பீராக, பாவமன்னிப்பு தேடுவீராக!! (திருக்குர்ஆன் – 110:2,3]

 

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளை  மர்கஸில் 06-09-2012 வெள்ளி அன்று  ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை" என்ற தலைப்பில், மனிதன் மரணித்தப்பின் கப்ரில் நடக்கவிருக்கும் அனைத்து விஷயங்களையும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.

மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நாடும் நடப்பும்! என்ற தலைப்பில், கடந்த வார நிகழ்வுகளையும் (பி.ஜே Vs சைபுத்தீன் ரசாதி விவாத ஒப்பந்தங்கள் உள்பட) தொகுத்து வழங்கினார்கள்.

பின்பு கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள்  "மூமின்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும் சிற்றுரை ஆற்றினார்கள். 

இந்நிகழ்ச்சியில்  பிறமத சகோதரர்கள், ரவி உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி து.ஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

 

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சாளர் பயிர்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 06-09-2012  வியாழன் அன்று இரவு 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு, கிளைத் தலைவர்  சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் சகோ.  நிஜாம் அவர்கள் முன் உதாரண உரையை பேசியவுடன் பின்பு, ஒன்றின் பின் ஒருவராக தபூக் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மற்றும் கொள்கை சகோதரர்களும் பேசி தங்களது பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். து.ஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்