Wednesday, September 28, 2011

ஆன்லைன் நிகழ்ச்சி - மதீனா

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்கள், மண்டல, கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இன்ஷாஅல்லாஹ் வரும் 07-10-2011 வெள்ளி அன்று மதியம் சௌதி நேரம் 2.30 முதல் 4 மணி வரை சகோ. பி.ஜெ அவர்கள் ஆன்லைன் மூலம் மதீனா கிளைக்காக கடல் கடந்தவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள், இது ஆன்லைன் பி.ஜெ இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. இதனை நீங்கள் பார்ப்பதுடன், உங்கள் கிளை மூலம் கூட்டாக அனைவரும் பார்க்கவும் ஏற்பாடு செய்து கொடுத்து அனைவரும் பயனடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா - சௌதி அரேபியா



           


Friday, September 23, 2011

TNTJ-கிளைகளே உஷார்.........

சைபுல்லா ஹாஜா "கஸ்ரத்" &கோ,அவர்களின் "சித்து வேலை "ஆரம்பம்!!

நேற்றைய தினம் (19-09-2011) மாலை எனக்கு ஒரு போன் வருகிறது! 
* யாரு.. ? மஹ்ளரியா..?
* ஆமாம் ! நீங்க யாரு..?
* நான் சைபுல்லாஹ் ஹாஜா அண்ணன் "சேகுதுமான்" பேசுகிறேன்!
(இவரை எனக்கு நன்றாகத் தெரியும்! நான் ,பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் (ஆரம்பத்தில் tntj பள்ளியாக செயல் பட்டது,தற்போது சைபுல்லா குரூப் இல் ஐக்கியமாகி விட்டது)பணி புரியும்போது அப்போது கடையநல்லூர் ல் செயல் பட்ட "இஸ்லாமியக் கல்லூரி"க்காக இவரிடம் அங்குள்ள கொள்கைச் சகோதரர்களிடமிருந்து, பல்லாயிரக் கணக்கில் இவரிடம் வசூல் செய்து கொடுத்தேன்! அந்த விசுவாசத்தில் என்னைத் தொடர்பு கொள்கிறார்!)
* சரி! சந்தோஷம் ! என்ன விஷயம் ..? என்று கேட்டேன்!
* (அவர் சொன்னார்) நாம் (சைபுல்லாஹ் ஹாஜா,சேகுதுமான்) சென்ற வாரம்! லெப்பைகுடிக்காடு சென்றிருந்தோம்! அப்போது! பொதக்குடியும் (நான் பணிபுரியும் ஊர்) ட்ரஸ்ட் ஆகி விட்டது! என்று தகவல் வந்தது! அதனால்..நாமெல்லாம் ஒருங்கிணைந்து செயல் படலாம் என்பதற்காக கேட்டேன்! என்று சொன்னார்! (இவர்களுக்குத் தெரியாது,அதே சென்ற வாரம் ! நான் லெப்பைகுடிக்காடு tntj மர்கசில் ஜும்ஆ உரை நிகழ்த்தியதும்,இரவு தெருமுனைக் கூட்டத்தில் சைபுல்லா குரூப்இன் வண்டவாளங்களை தோலுரித்ததும் இவர்களுக்குத் தெரியாது)
* நான் சொன்னேன் ட்ரஸ்ட் என்பதற்கே இங்கு (பொதக்குடி)வேலை இல்லை!முழுக்க,முழுக்க tntj மாநில தலைமையின் வழிகாட்டுதலின் படிதான் செயல்படுகிறது,இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து அப்படித்தான் செயல் படும் என்று சொன்னேன்!

* அப்படியா..? என்று ஏக்கத்தோடு கேட்டவர்! (ஒரு மீன் வலையில் விழாமல் தப்பி விட்டதே! என்ற ஏமாற்றத்தில்) அடுத்த நொடி, வேறு எந்தக் கேள்வியும் கேட்காமலே தொடர்பை துண்டித்து விட்டார்! 

சகோதரர்களே! எச்சரிக்கை! உங்கள் கிளைகளை உஷார் படுத்துங்கள்! அயோக்கியர்கள் (தங்கள் வலையில் ஏதாவது மீன் சிக்குமா..? அதன் மூலம் இன்னும் எவ்வளவு சுருட்ட முடியுமோ,அந்தளவு சுருட்டலாம் என்பதற்காக வலம் வருகிறார்கள்!)

Thursday, September 15, 2011

ஜித்தா மண்டல ஃபித்ரா முழு விவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் சார்பாக இந்த ஆண்டு ஃபித்ரா தொகை ரூபாய் 800000 (எட்டு லட்சம்) தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
கிளைகள் வாரியாக அதன் விபரம் பின் வருமாறு:
1 Madina 50795
2 Makkah 58928
3 Taif 12048
4 Tabuk 58012
5 Yanbu 49301
6 Al Baha 11506
7 NAJRAN 13169
A செனைய்யா 144759
B Sarafiay Branch 110072
C Sea Port & Balad 110470
D அல் சலாமா 63241
E சுலைமானியா 31687
F கடையநல்லூர் 32542
G மேலப்பாளையம் கிளை 33795
H பொது 17012
I அப்ஹா 2663
மொத்தம் 800000 ரூபாய்

Tuesday, September 13, 2011

ஜித்தா மண்டல தலைவர் சகோ. நௌஷாத், மலேஷியா மண்டல நிர்வாகிகளுடன் சந்திப்பு


அல்லாஹ்வின் திருப்பெயரால்,,,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…


 கடந்த 07-09-2011 -புதன் இரவு அன்று, மலேஷியா  சென்றிருந்த 
ஜித்தா மண்டல தலைவர் சகோ. நௌஷாத்,மலேஷியா மண்டல                                 நிர்வாகிகளை சந்தித்தார்கள். மலேஷியா மண்டல பொருளாளர் 
சகோ. அய்யுப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 
இரு மண்டலத்திலும் நடைபெறும் பணிகள் பற்றியும், மாநில நிர்வாகத்திற்க்கு அளித்து வரும் பங்களிப்பு பற்றியும், இனி எவ்வாறு செயல்பாடுகளை அமைத்து கொள்வது எப்படி என்பது பற்றியும்,    உறுப்பினர்களை எப்படி அதிகப்படுத்துவது என்றும், பெண்கள்    தாஃவாவை  எப்படி அமைத்துக் கொள்வது என்றும்,  நிர்வாக   செலவுகள் மற்றும் மாநிலத்திற்க்கு அளிக்கும் பங்களிப்புகளுக்கு   நிதி திரட்டுவது  எப்படி என்பது பற்றியும், விரிவாக 
விவாதிக்கப்பட்டது. இரவு 9.30 மணிக்கு தொடங்கப்பட்ட கூட்டம் 
சுமார் 1 மணிக்கு து.ஆ மற்றும் இரவு  உணவுடன் இனிதே 
நிறைவேறியது  அல்ஹம்துலில்லாஹ்

ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 9.9.211 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இது கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து துணைத் தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் ரமலானில் நாம் கற்றுதும் பெற்றதும் என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.







இந்த வருடம் பி்த்ரா வசூல் செய்ததில் ஜித்தா மண்டலத்தில் முதலாவதாக விளங்கும் இந்த கிளையின் தொகை ஃபித்ரா 12015 ரியால்  – ஜக்காத் 430 ரியால் என்ற கணக்கும், ஜித்தா மண்டல கணக்கும் அறிவிக்கப்பட்டது. தொடந்து இது நம்ம நேரம் என்று தலைப்பில் இந்த ரமலானில் தங்களது செயல்பாடுகள், பெருநாளின் ஒவ்வொரின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது. துஆவுடம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்து லில்லாஹ்.


Tuesday, September 6, 2011

ஷவ்வால் நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இணைப்பை பார்வையிடவும்.

நன்றி.


Monday, September 5, 2011

இப்படியும் உங்களால் உதவ முடியும்


முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உட்பட, மாதாந்திர ஓய்வூதியத் தொகை வேண்டி விண்ணப்பிப்பவர்கள், இனி, சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,விடமே மனு அளிக்கலாம். அந்த மனு மீது விசாரணை நடத்தி, 30 நாளில் உத்தரவு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

முதியோர் ஓய்வூதியத்தொகை உட்பட அரசின் மாதாந்திர ஓய்வூதியத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாருக்கு முகவரியிட்டு, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட, வி.ஏ.ஓ.,விடம், திங்கட்கிழமைதோறும் அளிக்கலாம்.ஓய்வூதியம் கோரும் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய படிவத்தில் வி.ஏ.ஓ., ஒப்புகைச் சான்று அளிப்பார். கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் கிராமங்களுக்கு, செவ்வாய்க்கிழமை தோறும் அலுவலகத்தில்அமர்ந்து, வி.ஏ.ஓ., மனு வாங்கி, ஒப்புகைச் சீட்டு வழங்குவார்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி, அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையன்று, தமது அறிக்கையுடன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரிடம் ஒப்படைப்பார். அந்த மனுக்கள் மீது தாசில்தார், மண்டல துணை தாசில்தார், ஆர்.ஐ., ஆகியோர் குழுவாக செயல்பட்டு, அரசின் மாதாந்திர ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக ஆய்வு செய்து, 30 நாளில் ஆணைகள் வழங்க வேண்டும். இத்திட்டத்தில், இடைத்தரகர்கள் யாரேனும் குறுக்கீடு செய்தால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், ""மனு அளிக்கும் முதியோரிடம் தேவையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும் கூட, இந்த உதவித்தொகையால் தான், அவர்கள் உயிர் வாழ முடியும் என்று அதிகாரிகள் முடிவு செய்தால், அவர்களிடம் ஆவணங்கள் கேட்டு அலைக்கழிக்காமல், உடனடியாக உத்தரவு வழங்கும்படி அரசு தெரிவித்துள்ளது. இதனால், முதியோர் அலைக்கழிப்பு குறையும். பொதுமக்கள் இந்த நடைமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றனர்.

Sunday, September 4, 2011

ஜித்தா மண்டல இஃப்தார் நிகழ்ச்சி 2011











அல்லாஹ்வின் திருப்பெயரால்


28-08-2011 வெள்ளியன்று ஜித்தா மண்டலத்தின் இஃப்த்தார் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. சகோ,முஹம்மது உவைஸ் அவர்கள் ரமாலான் நம்மை பன்படுத்தியதா? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.  600 மேற்பட்ட சகோதர, சகோதரிகள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ரியாத் ரஃப்வா ஜாலியாத் இலவசமாக வெளியிட்ட, சகோ. பி.ஜெ அவர்கள் எழுதிய வரும்முன் உரைத்த இஸ்லாம் என்ற புத்தகம் வருகை தந்த அனைவருக்கும் இலவசமாக வழங்கப் பட்டது.

அனைத்து கிளை சகோதரர்களும் மிகஆர்வமுடன் பங்கேற்று தங்களின் பங்களிப்பை வழங்கியதை கலந்து கொண்ட அனைவரும் பாராட்டிணர். இறுதியாக துஆவுடன் நிகழ்சி இனிதே நிறைவு பெற்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.