Saturday, October 20, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா முகாம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில்  18/10/2012 வியாழன் இரவு 11:30 முதல் 01 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடைபெற்றது. இதில் கிளைத்தலைவர் சகோ.  அப்துல் அஜீஸ் அவர்கள்,  ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டது எவ்வாறு? எப்போது? "ஹதீஸ் கலை" [பகுதி-5] என்ற தலைப்பில்  TNTJ  மாநில தலைமையில் சகோ. P.J அவர்கள் நடத்திய பாட உரையின் வீடியோ காட்சிகளுடன்,   குர்ஆன்- ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் எடுத்துரைத்தார்கள். இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்து கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். மேலும் து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா - ஷர்ஃபியா கிளையில் பிரசுரம் விநியோகம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 19-10-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் அரஃபா நோன்பை வலியுறுத்தி 75 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-செனைய்யா கிளையில் இலவச குர்ஆன் விநியோகம்

அல்லாஹ்வின் மகத்தான அருளால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் ஜித்தா மண்டல செனைய்யா கிளை சார்பில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய ராமநாதபுரத்தை சார்ந்த இரண்டு சகோதரர்களுக்கு 18/10/2012 வியாழன் அன்று இரவு  குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. கிளையின் செயலாளர் சகோ.யாகூப் முன்னிலையில்  சகோ.ஹமீது அவர்கள் குரானை வழங்கினர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டல நோட்டீஸ் விநியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-10-12 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் சார்பாக அரஃபா நோன்பின் சிறப்புகளை கூறி, நோன்பு வைக்க வலியுறுத்தும் 400 பிரசுரங்கள் ஜித்தா ஷர்ஃபியா, பலத் பகுதிகளில் உள்ள தமிழ் சார்ந்த நிறுவனங்களில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் வகையில் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

வெளிவந்து விட்டது ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம்.

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 

வெளிவந்துவிட்டது

Take a Look  http://video.onlinepj.com/


வெளிவந்து விட்டது ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம். அல்ஹம்துலில்லாஹ்

இதில் நேயர்களுக்கு தேவையான ஏரளாமான வசதிகளை இடம் பெறச் செய்துள்ளோம்.
 
குறிப்பாக,

இதில் இடம் பெறும் வீடியோக்களை கணிணி , ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனிலும் பார்த்துக் கொள்ளலாம்.
 
ஒரு மணி நேர வீடியோவில் நேயர்கள் தங்களுக்கு தேவைான பகுதியை எளிதில் பார்க்கலாம் அந்த பகுதி டவுன்லோடு ஆகும் வரைகாத்திருக்க தேவையில்லை.

இன்னும் பல்வேறு வசதிகளுடன் Youtube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது நமது வீடியோ இணையதளம்!

* 
நேயர்களே வீடியோக்களை அப்லோடு செய்து கொள்ளலாம்.
 
 
பார்த்து விட்டு, வீடியோ இணையதளம் குறித்த தங்களின் கருத்துக்களை webmaster@onlinepj.com க்கு அனுப்பலாம்
 
-
வெப்மாஸ்டர்

Friday, October 19, 2012

TNTJ மாநில தலைமை கடிதம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கண்ணியத்திற்குரிய கொள்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்குரிய மருத்துவம் குறித்து அவர்கள் மீதுள்ள அன்பினாலும், அக்கரையினாலும் பலர் ஏரளாமான ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். அக்கு பிரஷர், அக்கு பஞ்சர், ஹேமியோபதி, ஆயுர்வேதா, சித்தா, யூனானி, அலோபதி, திபத்திய மருத்துவம் உள்ளிட்ட இன்னும் ஏராளமான மருத்துவ முறைகள் வரை ஆலோசனைகள் வந்தவண்ணம் உள்ளன.  இந்தியாவின் பல்வேறு குக்கிராமங்களில் உள்ள வைத்தியர்களிலிருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா, உட்பட பல வெளிநாடுகளில் உள்ள மருத்துவர்கள் வரை பல பரிந்துரைகள் வந்துள்ளன.  பலர் தமக்கு தெரிந்த மருத்துவர்களிடம் சந்திக்க நேரம் வாங்கி வந்துள்ளனர். சிலரிடமிருந்து மருந்துகளும் லேகியங்களும் வந்துள்ளன. சகோதரர் பி.ஜே அவர்கள மருத்துவம் குறித்து மாநில நிர்வாகம் என்ன முடிவு செய்திருக்கிறது என்று பலரும் கேட்டவாறு உள்ளனர். 
எவ்வகை மருத்துவம் செய்வது என்பதை சகோதரர் பி.ஜே. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவம் தொடர்பாக வரும் தகவல்களை திரட்டி அவர்களுக்கு தெரியப்படுத்துவதும் உறுதுணையாக இருப்பது நிர்வாகத்தின் கடமையாகும். இந்த அடிப்படையில் அவர்களுக்கு வந்த தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவை பரீசீலிக்கப்பட்டும் வருகின்றன. மருத்துவத்திற்கு பலகோடி ரூபாய் செலவாகும் என்பது போன்று மக்களில் பலர் கருதுவதாக தெரிகிறது. ஆனால் இந்த வகை கேன்சருக்கான மருத்துச் செலவு சகோதரர் பி.ஜே. அவர்களின் சக்தி உட்பட்ட அளவே உள்ளது. எது எப்படி இருந்தாலும் எந்நிலையிலும் அவர், எப்போதும் போல் யாருடைய உதவியையும் ஏற்க தயாராக இல்லை. ஆகவே பொருளாதாரம் பற்றி கொள்கை சகோதரர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். வழக்கம் போல் உங்கள் து.ஆ க்களை அதிகப்படுத்திக் கொள்ளவும்.

இப்படிக்கு,
ஆர்.ரஹ்மத்துல்லாஹ் ,
பொதுச்செயலாளர்,
19.10.2012

ஜித்தா-செனைய்யா கிளை கேம்ப் பயான்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையில், 17/10/2012 (புதன்கிழமை)அன்று இரவு கேம்ப் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சலீம் சேட் இறுதிப்பயணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தமிழகத்திலிருந்து ஜித்தாவுக்கு வந்துள்ள புதிய சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். து.ஆ வுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, October 14, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தாஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 13-10-12 சனி அன்று லுஹறுகுப்பின், தபூக் விமான நிலையத்தில் கிளைச் செயளாலர் சகோ. நிஜாம் அவர்களுடன் பணி புரியும் பாகிஸ்தானை சேர்ந்த சகோ. ரியாசத் அலீக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும், கிளைச் செயளாலர் நிஜாம் அவர்களும், உருது மொழியில் இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்து கூறி, உருதுமொழி நூல்களையும் வழங்கி தஃவா செய்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்.