Sunday, September 9, 2012

ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்   தபூக்  கிளையில் 06.09.2012 வியாழன் அன்று இரவு 11.30 முதல் 01 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது.  இதில் கிளைத் தலைவர்  சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள், குர்ஆன் என்றால் என்ன? [ஹதீஸ் கலை பகுதி-1] மாநில தலைமையில் சகோ. பி.ஜெ அவர்கள் நடத்திய பாடத்தின் உரையின் வீடியோ காட்சிகளுடன்,  குர்ஆன் - ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் கொள்கை சகோதரர்களுக்கு எடுத்துரைத்தார்கள். தபூக்  கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றனர். மேலும் து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்

 

ஜித்தா மண்டல ஆன்லைன் பயான் அழைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்ஷா அல்லாஹ் வரும் 14-09-2012 வெள்ளி அன்று மாலை 07 முதல் 08.30 மணி வரை(சௌதி நேரம்) ஜித்தா மண்டலம் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் தாயகத்திலிருந்து சகோ. அப்பாஸ் அலி அவர்கள் மண்ணறையும், மறுமையும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள். இதில் அனைவரும் கலந்து கொண்டு பயனுற அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

ஜித்தா-ஸாகர் கிளை பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 05-09-2012 புதன் அன்று ஜித்தா மண்டலம் ஸாகர் பகுதியில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் மாநிலத்திலிருந்து சகோ. ஒலி முஹம்மது இஸ்லாத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக பெண்கல் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-மதீனா கிளை ஆன்லைன் பயான்

அல்லாஹுடைய மாபெரும் பேரருளால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மதினா கிளையில் 0 7-09-2011 வெள்ளிகிழமை அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு ஆன்லைன்  நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆலிம் கரீம் அவர்கள் "அடுத்த தலைமுறையும் நமது கடமையும் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நாம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்ல வேண்டும்  என்பதையும்,அவர்களுக்கு நாம் என்னவெல்லாம் சொல்லி கொடுக்க வேண்டும் என்பதையும் தெளிவாக குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரத்தோடு விளக்கியது மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா மண்டல ஆலோசனை கூட்டம்.

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 5-9-2012 புதன் அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் ஆலோசனைக்குழு கூட்டம் ஸாகர் பகுதியில் மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி தலைமையில் நடைபெற்றது. அதில் தர்பியா முகாம், ஆன்லைன் மூலம் பயான் மற்றும் இரத்த தான முகாம் நடத்துவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 



Saturday, September 8, 2012

ஜித்தா-ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 7-9-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம்  ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஏகத்துவம் எனும் தலைப்பில் கிளை தலைவர் சகோ. செய்யது முஸ்தபா அவர்கள் உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து கிளை செயலாளர் சகோ. முஹம்மது ஹனிபா அவர்கள் தர்பியா முகாம் மற்றும் இரத்ததான முகாம் சம்பந்தமான அறிவிப்புகளை வழங்கினார். அதிகமான சகோதர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் பயான் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 



Sunday, September 2, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பிலிப்பைன்ஸ் சகோதரிகளின் பெருநாள் சந்திப்பு

அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளையில் கடந்த  31/08/2012  வெள்ளி அன்று அஸருக்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் இல்லத்தில் அவரின் மனைவி சகோதரி சுமையாவின் தலைமையில்  ஈத் பெருநாள்  சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தபூக் நகரில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சமிபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய ஏராளமான சகோதரிகள் கலந்து கொண்டனர். கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவி சகோதரி சுமையாஹ் அவர்களின் துவக்க உரையுடன் கலந்துரையாடல் மற்றும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.