அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் 16/08/2012 வியாழன் அன்று ஸஹர் நேரம் 02 முதல் 04 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்: "வழிகெட்டக் கொள்கைகள்" [பகுதி-19] இஜ்மா என்பதும் எந்த ஒரு அடிப்படையும் அற்ற வரட்டு வாதம் என்ற தலைப்பில் சகோ. P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் [கொள்கை சகோதரர்களுக்கு] எடுத்துரைத்தார்கள். இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். மேலும் துஆவுடன் இரவு [ஸஹர்] உணவிற்கு பிறகு நிகழ்ச்சிநிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
Saturday, August 18, 2012
ஜித்தா-தபூக் கிளை தர்பியா வகுப்பு
Thursday, August 16, 2012
ஜித்தா-தபூக் கிளை இஃப்தார் மற்றும் பயான்
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் -15-08-2012 புதன் அன்று ரமளான் பிறை 27 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி" என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 27 ஆம் பாகத்தை உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். |
Wednesday, August 15, 2012
ஜித்தா-துறைமுக கிளை நோட்டீஸ் விநியோகம் மற்றும் இஃப்தார்
| அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-08-2012 புதன் அன்று ஜித்தா துறைமுக பகுதியில் உள்ள சியான்கோ கம்பெனி கேம்பில் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளை புகை பிடிப்பதை தவிர்க்கும் வகையில் வெளியிட்டுள்ள நோட்டீஸை துறைமுக கிளை விநியோகித்ததுடன், இஃப்தார் நிகழ்ச்சியையும் நடத்தியது. கிளை மற்றும் மண்டல நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். |
பித்ராவைத் திரட்டி அனுப்பும் மண்டலங்கள்(மாநில தலைமை கடிதம்)
பித்ரா தொடர்பாக பிற மாவட்டங்களுக்கோ கிளைகளுக்கோ பரிந்துரை செய்வோர் கவனத்திற்கு...
கடந்த செப்டம்பர் 10 திருச்சி காஜாமலையில் மாநில நிர்வாகிகள் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர் தலைமையில் காலை 10 மணிக்கு கூடியஇக்கூட்டம் இரவு எட்டு மணிக்கு நிறைவடைந்தது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
வெளிநாடுகளில் இருந்து பித்ராவைத் திரட்டி அனுப்பும் மண்டலங்கள் அத்துடன் சில ஊர்களுக்குப் பரிந்துரை செய்யும் நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
சில ஊர்களில் 200, 300 ரூபாய்களுக்கே பித்ரா கிடைக்காமல் ஏழைகள் வாடும் போது வேறு சில ஊர்களில் 500, 600, 1000 என்று பித்ராவை அள்ளிக் கொடுப்பதற்குப் பரிந்துரைகள் காரணமாகி விடக்கூடாது.
அதிகமான பணத்தை அதிக மக்களுக்கு கொண்டு சேர்க்க சோம்பல் பட்டுக்கொண்டு தொகையை அதிகப்படுத்திக் கொடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் தங்கள் ஊர்களில் விநியோகிக்க இயலாமல் மற்ற ஊர்களுக்கு சில கிளைகள் பித்ரா தொகையை தானம் செய்துள்ளன. இது போல் நடக்காமல் இருக்கும் வகையில் பரிந்துரை அமைய வேண்டும்
கிளைகள் இல்லாத ஊர்களுக்கும், கிளைகள் இருந்தும் பித்ரா தவிர வேறு எந்தப் பணியும் செய்யாத கிளைகளுக்கும் செய்யப்படும் பரிந்துரையை ஏற்பதில்லை.
மண்டல நிர்வாகிகள் பரிந்துரை செய்யக் கூடாது. அந்தந்த ஊர் பெயரில் நிதி திரட்டித் தரும் கிளைகள் பரிந்துரை செய்தால் அதைத் தான் தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும். அந்தப் பரிந்துரையை மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் தான் தலைமை வினியோகம் செய்யும்.
இப்படிக்கு
ரஹ்மத்துல்லாஹ்
ஜித்தா-ஜிஸான் கிளை ஆலோசனை கூட்டம் மற்றும் இஃப்தார்
| அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் ஜிஸான் கிளையில் 13-08-2012 திங்கள் அன்று இன்ஷா அல்லாஹ் பெருநாளைக்கு அடுத்த நாள் நடைபெற உள்ள பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி பற்றி ஆலோசனை கூட்டமும், பின்பு இப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அல்ஹ்மதுலில்லாஹ். |
ஜித்தா-தபூக் கிளை இஃப்தார் மற்றும் பயான்
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 14-08-2012 செவ்வாய் அன்று ரமளான் பிறை 26 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி" என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 26 ஆம் பாகத்தை உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். |







