அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 01-03-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷர்ஃபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் மௌலவி அவா்கள் நற்குணங்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
|
Sunday, March 3, 2013
TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சி
சகோ. பி.ஜெ & அல்தாஃபியுடன் ஜித்தா மண்டல, கிளை நிர்வாகிகள் சந்திப்பு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 23-02-2013 சனி அன்று இரவு, மக்கா வந்திருந்த மாநில தலைவர் சகோ. பி.ஜெ அவர்களையும், மேலாண்மை குழு உறுப்பினர் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களையும் ஜித்தா மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சந்தித்து ஜமாத்தின் மண்டல செயல்பாடுகள் பற்றி விவரித்து அவர்களிடம் மேலும் செம்மையுடன் செயல்பட ஆலோசனைகளும் பெறப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
சகோ. பி.ஜெ - ஜித்தா மண்டல நிர்வாகிகள் சந்திப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
TNTJ மாநில தலைவர் சகோ. பி.ஜெ அவர்களும், மேலாண்மை குழு உறுப்பினர் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களும் மக்கா வந்திருந்தபோது, ஜித்தா மண்டல நிர்வாகிகள், ஜித்தா நகர் கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் மக்கா கிளை நிர்வாகிகள் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு, ஜித்தா மண்டல அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் www.facebook.com/JeddahTNTJ வெளியிடப்பட்டுள்ளது. அந்த பக்கத்திற்க்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
Friday, March 1, 2013
TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா - தபூக் கிளையில் 01-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் மார்க்கமும் மானிடமும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும் நமது நிலையும் என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹித் அவர்கள் புறம் பேசுவதை தவிர்ப்போம் என்ற தலைப்பிலும், சகோ. முஹம்மது ரஃபீக் எது நேர்வழி என்ற தலைப்பிலும் சிற்றுரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஸ்ரீலங்கா சகோதரர்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 28-02-2013 வியாழன் அன்று இலங்கை மாத்தலையைச்சேர்ந்த சகோதரர் ஜிகான் தூய இஸ்லாத்தை ஏற்றார். இவருக்கு கிளை தலைவர், இலங்கை சகோதரர் மிக்காஷ் உதவியுடன் சிங்கள மொழியில் இஸ்லாமிய கொள்கைகளை எடுத்துக்கூறி ஸகாதாவை சொல்லிக்கொடுத்தார்கள். இவருக்கு சிங்கள மொழி குர் ஆன், புத்தகங்கள் மற்றும் சி.டிக்கள் வழங்கப்பட்டது. சகோதரர் ஜிகான் தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.
|
Subscribe to:
Posts (Atom)






