Monday, October 24, 2011

ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளை பயான்

 
அல்லாஹ்வின் திருப்பெயரால்
 
இன்ஷாஅல்லாஹ் வரும் 28-10-2011 வெள்ளி மாலை 6.45 முதல் 8 மணிவரை ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளையில், குர்பானியின் சிறப்புகளும், சட்டங்களும் என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நடைபெற உள்ளது. இதில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்வதோடு, உங்களுக்கு தெரிந்தவர்களையும் கலந்துகொள்ள செய்யுங்கள். இந்த நிகழ்ச்சி ஜித்தா மண்டல இணைய தளமான jeddahtntj.blogspot.com ல் நேரலையாகவும் ஒளிபரப்பாக உள்ளது.
 
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

Saturday, October 22, 2011

ஜித்தா மண்டல இரத்ததான முகாம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...........

ஜித்தா மண்டலம் இரு வருடங்களுக்கு முன்பு ஒரு இரத்ததான முகாமை நடத்தியபின் முகாம்கள் நடத்திடாமல், அவசர இரத்ததானம் மட்டும் அளித்து வந்தது, இது பற்றி மாநில பொ.செ. சகோ. ரஹ்மத்துல்லா ஜித்தா வந்தபொழுது கேட்டபொழுது, அதற்க்காக சில காரணங்கள் எங்கள் தரப்பில் சொல்லப்பட்டது. அப்பொழுது மாநில பொ. செ அவர்கள் தொடர்ந்து அவசர இரத்ததானம் செய்து வந்தாலும் அவ்வப்பொழுது அடையாள இரத்ததான முகாம் நடத்துங்கள் என்று வலியுறுத்தினார்கள், அதன்படி இன்ஷாஅல்லாஹ் இனி ஒவ்வொரு வருடமும் ஹாஜிகள் பயனுறும் வகையில் அடையாள முகாம்கள் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. 

அதனடிப்படையில் 21-10-2011 வெள்ளி அன்று மதியம் 3 மணி முதல் 7 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலமும், ஜித்தா கிங் ஃபஹத் ஹாஸ்பிடலும் இணைந்து இரத்ததான முகாம் நடத்தியது. இதில் நம் சகோதரர்கள் சுமார் 140 பேர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் மருத்துவ சோதனைக்குப்பின் 118 பேர்களிடம் இரத்ததானம் பெறப்பட்டது.  

இம்முகாம் நடைபெற்றதை பார்த்த அந்த ஹாஸ்பிடலின் பாகிஸ்தானிய மருத்துவர் தாமும் கலந்து கொள்வதாக சொல்லி ஆர்வத்துடன் பங்கேற்றார். அதேபோல் அங்கு வந்த 3 சௌதி நாட்டினை சேர்ந்த இளம்பெண்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ய முன்வந்தனர். 

ஜித்தா நகர் கிளை நிர்வாகிகள் ஆர்வத்துடன் தங்களது கிளை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வந்தனர்.மண்டல நிர்வாகிகள் இறுதிவரை இருந்து அனைவரையும் கவனித்து சிறப்பாக செயல்பட்டனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை மேலாளர் நமது ஜமாத்திற்க்கு தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். நிகழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ் சிறப்பாக நிறைவேறியது.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

Wednesday, October 19, 2011

இரத்ததானம் செய்வோர் கவனத்திற்க்கு

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

 

இரத்த தானத்தில் எவ்வளவு ரத்தம் எடு்க்கப்படுகிறது?

300 மில்லி. நம் உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. எடுக்கப்படுகிற ரத்தம் மீண்டும் நம் உடலில் உற்பத்தி ஆகிவிடுகிறது.

 

இரத்த தானத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் எவ்வளவு நாட்களில் உடலில் உற்பத்தி ஆகும்?

10 லிருந்து 20 நாட்களில்.

 

இரத்ததானம் ஏன் கொடுக்க வேண்டும்?

நமது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120நாட்கள் தான் உயிரோடு இருக்கும் பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நாம் ரத்தம் கொடுத்தாலும் கொடுக்க விட்டாலும் இது தான் செயல். ஆக அழிந்த பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றவருக்கு கொடு்த்து உயிர் காப்பது நல்லது தானே!

 

இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

இருபது நிமிடம்.

 

இரத்ததானம் செய்த பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடு்க்க வேண்டும்?

இருபது நிமிடம்.

 

இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?

நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்ததானம் செய்வது நல்லது. இரத்ததானம் கொடுப்பதற்கு முன் மோர் போன்ற திரவங்களை குடுப்பது நல்லது.

 

சின்ன சின்ன உடல் கோளாறுகள் இருப்பவர்கள் இரத்ததானம் செய்யலாமா?

உதவி்க்கு கீழே உள்ள பட்டியலை படிக்கவும்.

·         சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு உள்ளவர்கள் கொடுக்கலாம்.

·         ஆஸ்துமா- மூச்சுத்திணரல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.

 

இரத்ததானம் செய்யக்கூடாதவர்கள் பட்டியல் கீழே.

·         இதயக்கோளாறுக்காக மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க மாத்திரைகள், டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுபவர்கள் இரத்த தானம் செய்யக்க கூடாது.

ரத்ததான செய்வோர் கவனத்திற்க்கு

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
 
இன்ஷாஅல்லாஹ் TNTJ ஜித்தா மண்டலம் நடத்து ரத்ததான முகாம் நடைபெற இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன, இப்புனித பணியில் நீங்கள் கலந்து கொள்வதோடு, உங்கள் நண்பர்கள், மற்றும் உறவினர்களையும் கலந்துகொள்ளூமாறு அன்புடன் அழைக்கின்றோம். வாகன வசதி தேவைப்பட்டால் மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரியை 0567122902 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
 
இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

Saturday, October 15, 2011

ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

கடந்த 14-10-2011 வெள்ளி அன்று மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை சகோ. முனீப் (தம்மாம்) அவர்கள் தேர்வு களமும், தீர்ப்பு திடலும் என்ற தலைப்பில் மார்க்க உரையாற்றினார்கள், இதில் சுமார் 75 பேர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஜித்தா மண்ட்ல இணையதளம் மூலம் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டது. கலந்து கொண்ட அனேகர்கள் உரை மிகவும் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் இருந்த்தாக சொன்னார்கள். சிற்றுண்டி ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. மண்டல அறிவிப்புகளுக்கு பின் து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்

ஜித்தா மண்டல மதீனா கிளையில் ஆன்லைன் பயான்

அல்ஹம்துலில்லாஹ் ஜித்தா மண்டல மதீனா கிளையில் கடந்த வெள்ளி அன்று மதியம் 2.30 மணி முதல் 3.15 ஆன்லைன் மூலம் ரியாத்திலிருந்து சகோ. ஹாஃபீஸ் மௌலவி அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 25 பேர்கள் கலந்து கொண்டனர். மதிய உணவிற்க்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.




ஜித்தா மண்டல செனைய்யா கிளை மாதாந்திர கூட்டம்

ஜித்தா மண்டல செனைய்யா கிளை மாதாந்திர கூட்டம்.

அல்லாஹ்வின் அருட்கிருபையால் 15.10.2011 அன்று மாலை அஸர் முதல் மஃரிப் வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளை மாதாந்திர கூட்டம் கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது. மௌலவி பஸீர் முஹம்மது மன்பயி "ஸூரத்துல் இக்லாஸின் சிறப்புகள் மற்றும் ஹஜ்ஜின் சிறப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

 

புதிதாக இஸ்லாத்தை தழுவிய ராமநாதபுரத்தைச் சார்ந்த சகோ.அமீருக்கு கிளையில் சார்பில் மார்க்க விளக்க புத்தகங்களை மௌலவி பஸீர் முஹம்மது மன்பயி வழங்கினார்கள். அந்த சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தெளிவாக விளக்கப் பட்டது. மிகக்கவனமாக செவியேற்றார்.

தொடர்ந்து ஜித்தா மண்டல தலைவர் சகோ.நவ்ஷாத் அவர்கள் இரத்ததானம் பற்றியும்,பெருநாளுக்கு மறுநாள் நடக்க இருக்கும் பல்சுவை நிகழ்ச்சி பற்றியும் விளக்கினார்கள். கிளைத்தலைவர் மாநில தலைமையின்அறிக்கைகளை வாசித்தார். கிளையின் இந்த மாத செயல்பாடுகள் பற்றி பேசப்பட்டது. உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். துஆவுடன் நிறைவுற்றது.அல்ஹம்து லில்லாஹ்.

தபூக் கிளையில் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொன்ட சதீஷ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில்  14 /10 / 2011 வெள்ளி  அன்று இலங்கை கொழும்பை சேர்ந்த  சகோ, சதீஷ்  அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொன்டு தன் பெயரை ஜாக்ஹிர்  என்று மாற்றிக்கொன்டர், கிளை நிர்வாகிகள் முன்னிலையில்  தமிழாக்க நுல்களும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!