அல்லாஹ்வின் திருப்பெயரால்.......... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புள்ள மண்டல, கிளை நிர்வாகிகள், மற்றும் கொள்கை சகோதரர்கள் அனைவருக்கும் ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இந்தக்கடிதம் தங்களை சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும், பூரண உடல் நலத்தோடும் சந்திக்கட்டுமாக. இன்ஷாஅல்லாஹ் விரைவில் நாம் புனித ரமலான் மாதத்தை அடைய உள்ளோம். இதில் நாம் அதிகம் நல் அமல்களை அதிகம் செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடும் அதே சமயத்தில், நாம் நமது ஜமாத் மூலமாக நோன்பு ஃபித்ரா தொகையை திரட்டி, தாயகத்தில் உள்ள நமது வசதியற்ற ஏழை எளியவர்களுக்கு கொடுத்து வருகின்றோம். இவ்வருடமும் நமது அந்த சேவை அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி இன்ஷாஅல்லாஹ் தொடர உள்ளது, இதற்க்காக நமது ஜித்தா மண்டலம் ஒரு நபருக்கு 13 ரியால் என்று நிர்ணயித்து உள்ளது. (பொதுக்குழுவில் 15 ரியால் என் நிர்ணயித்தாலும், அதிக சகோதரர்கள் எங்களின் அரிசி விலை 13 தாண்டாது என்று சொன்னதாலும், அதிக பேர்கள் தனக்கு மட்டும் தராமல், தாயகத்தில் உள்ள தமது குடும்பத்தினருக்காகவும் தருகிறார்கள், அவர்கள் நாட்டில் 75 அல்லது 80 ரூபாய்தானே கேட்கின்றார்கள் நீங்கள் அறிவித்தது மிகவும் அதிகமாக உள்ளது என்று தயக்கம் காட்டியதாலும், 13 என்று மாற்றி நிர்வாகாகுழுவில் நிர்ணயித்தோம், இதில் சில சகோதரர்கள் தனக்கு 15 ரியால் தரவிரும்பினால் அதைபெற்றுக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது) இவ்வாறு திரட்டப்படும் தொகையை ஜித்தா சார்பாக சுமார் 10 லட்சமாவது திரட்ட வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்துள்ளோம். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொருவரும் வசூல் செய்தால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும், அத்துடன் வாகன வசதி உள்ளவர்கள், எங்களில் சிலர் அந்த வசதி இல்லாமல், இடங்கள் தெரிந்தும் செல்ல முடியாமல் உள்ளனர், அவர்களுடம் நீங்கள் சென்று இந்த புனித பணியில் உங்களையும் ஈடுபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். உங்களில் பல பேர்கள் இங்கு குடும்பத்துடன் உள்ளீர்கள், அவர்கள் நீங்கள் இதற்க்காக வெளியே செல்ல அனுமதிக்காமல் இருக்கலாம், அவர்களிடம் இதனால் அல்லாஹ்விடம் கிடைக்கும் நன்மையில் உங்களை போக அனுமதித்ததால் அவர்களுக்கும் கிடைக்கும் என்பதனை புரிய வைத்து வந்து கலந்துகொள்ளுங்கள் என்று அழைக்கின்றோம். ஃபித்ரா ஃபார்ம் தேவைப்பட்டால் பொருளாளர் யுனுஸ் - 0502786576 அல்லது அப்துல் பாரி - 0567122902 இவர்களை தொடர்பு கொள்ளவும். இந்த இலக்கை அடைந்த்திட உங்களின் ஒத்துழைப்பையும், உழைப்பையும் து.ஆ வையும் கேட்டுநிற்க்கும், ஜித்தா மண்டல நிர்வாகிகள் |
Thursday, July 21, 2011
ஃபித்ரா வசூல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment