வல்ல நாயன் கிருபையால் கடந்த 11-11-2009 அன்று மக்ரிப் முதல் இஷா வரை, ஜித்தா மண்டலம் சார்பில் ஜித்தாவில், ஸாகர் பகுதியில் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் சகோ. எம்.எஸ் சுலைமான் (TNTJ மேலாண்மைக்குழு உறுப்பினர்) அவர்கள் கலந்து கொண்டு, மறுமையின் சிந்தனைகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் அதிகமான பெண்கள் பிள்ளைகளுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்;.
Saturday, November 7, 2009
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
ஜித்தாவில்
வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 06-11-09 அன்று ஜித்தா மண்டல ஏற்பாட்டில் ஜித்தா கிலோ14, இஸ்லாமிய அழைப்பு மையத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் முதல் அமர்வில் சகோ. பஷீர் மௌலவி அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் வியாபாரம் எனும் தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சகோ. அப்துல் மஜீது ஸஹ்வி அவர்கள் குர்பானியின் சட்டங்கள் குறித்து உரையாற்றினார். இரண்டாம் அமர்வில் சகோ. சைபுல்லாஹ் அவர்கள் குர்ஆன் உருவாக்கிய சமுதாயம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் 300க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, November 4, 2009
Saturday, September 12, 2009
ஜித்தாவில் நடைபெற்ற இஃப்தார் விருந்து
கடந்த 11-9-2009 அன்று வெள்ளிக் கிழமை மாலை 5-30 முதல் இரவு 8-30 வரை இரண்டு அமர்வாக இஃப்தார் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஜித்தா மண்டல தாஃயி சகோ.சௌகத் ஹூஸைன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முதல் அமர்வில் சகோ. பஸீர் மௌலவி அவர்கள் ”அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள்”’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
துஆ, இஃப்தார் மற்றும் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரண்டாம் அமர்வில் சகோ. பிர்னாஸ் மௌலவி அவர்கள் ”’நோன்பின் நோக்கம் இறையச்சம் ஒன்றே”’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஜித்தாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வந்து 600 க்கும் மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
இறுதியாக சகோ.முகையதீன் அவர்களின் நன்றியுரைக்குப் பின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறையுற்றது.
நிகழ்ச்சி நிறைவுற்ற பின் சகோ.பி.ஜெயினுலாபிதீன் அவர்கள் எழுதிய திருமறையின் தோற்றுவாய் என்ற தலைப்பிலான புத்தகம் இலவசமாக கொடுக்கப் பட்டது. TNTJ ரியாத் மண்டலம் புத்தகம் அனுப்பி உதவியது.

Thursday, September 10, 2009
Friday, September 4, 2009
அல்-பஹா கிளையில் நடைபெற்ற பொதுக்குழு!
ஜித்தா மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் 08 ஆகஸ்ட் 2009 அன்று ஜித்தாவில் உள்ள அல்-பஹா கிளை பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் அல்-பஹா கிளை புதிய தலைவராக செய்யது அப்துல்காதர்(மேலப்பாளையம்), செயலாளராக அக்பர் அலி(மயிலாடுதுரை), பொருளாளராக அப்துல் ஹமீது(மன்னார்குடி) ஆகியோர் மற்றும் துணை செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்திற்கு மண்டல பொருளாளர் நவ்ஷாத், மண்டல பொதுச்செயலாளர் அப்துல் பாரி மண்டல துணை பொதுச்செயலாளர் அஹ்மது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்திற்கு மண்டல பொருளாளர் நவ்ஷாத், மண்டல பொதுச்செயலாளர் அப்துல் பாரி மண்டல துணை பொதுச்செயலாளர் அஹ்மது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Friday, August 28, 2009
Saturday, June 6, 2009
ஜித்தாவில் நடைபெற்ற பெண்கள் பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 14-05-2009 அன்று ஜித்தா, ஸாகர் பகுதியில் ஜித்தா மண்டலம் ஏற்பாட்டில் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சகோதரி ராஷிதா ஆலிமா அவர்கள் வீணாகும் நேரங்கள் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். 20க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, April 16, 2009
மஸ்ஜிது நபவியை நோக்கி ஒரு பயணம் நிகழ்ச்சி
வல்ல அல்லாஹ்வின் கிருபையால், கடந்த 16-04-2009 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் மஸ்ஜிது நபவியை நோக்கி தலைவர் சலிம்சேட் அவர்களின் தலைமையில், துணைத்தலைவர் சகோ. செய்யது முஸ்தபா அவர்களின் மேற்பார்வையில் இரண்டு பேரூந்துகளில் பயணம் அழைத்துசெல்லப்பட்டது.
சகோ.பிர்ணாஸ் மௌலவி அவர்கள் மஸ்ஜிது ஸபா மற்றும் உஹது மலையில் அதனதன் வரலாற்றுப் பிண்ணனிகளை குறித்தும் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். சகோ. அப்துல் அஜிஸ் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைப்பற்றி சிற்றுரை நிகழ்த்தினார்.
கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறப்புப் பரிசுகளை ஜித்தா மண்டல துணைச் செயலாளர் சகோ. இபுறாகிம்ஷா, செனைய்யா கிளை தலைவர் சகோ. அமீன், சரஃபியா கிளை செயலாளர் சகோ. முஹம்மது ஹனிபா மற்றும் சரஃபியா கிளை பொருளாளர் சகோ. அப்துல் ரஹ்மான் ஆகியோர் வழங்கினார்கள்.
இப்பயணத்தில் வழக்கம்போல் ஆர்வமுடன் 100க்கும் மேற்பட்ட நபர்கள்(குடும்பங்கள் உட்பட) கலந்துகொண்டனர். இப்பயணத்திற்கு மண்டல நிர்வாகிகளும், மதினா கிளை தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களும் மிகுந்த ஒத்துழைப்பு நல்கினர். அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, February 26, 2009
ஜெத்தா மண்டல TNTJ வின் புதிய நிர்வாகிகள் தேர்வு கடந்த 26.02.2009 அன்று இரவு 8.30 மணி அளவில் ஷரஃபியா - ஸ்னாக் ரெஸ்டாரண்ட்-ல் சவூதி TNTJ கூட்டமைப்புத் தலைவர் சகோ. பஷீர் மெளலவி தலைமையிலும், ரியாத் மண்டலத் தலைவர் சகோ. நிஜாம் மைதீன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
ஜெத்தா மண்டலதிற்கு உட்பட்ட கிளைகளைச் சேர்ந்த அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு புதிய மண்டல நிர்வாகிகளை தேர்வு செய்தனர். முன்னதாக மாநிலத் துணைத் தலைவர் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ‘கொள்கையில் உறுதி’ என்ற தலைப்பில் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜெத்தா மண்டல நிர்வாகிகள்:
தலைவர்: M. சலிம் சேட் - பரமக்குடி - 0502428818
பொதுச் செயலாளர்: P.M. அப்துல் பாரி - மேலப்பாளையம் - 0567122902
பொருளாளர்: S. நௌஷாத் அலி - மேலக்காவேரி - 0562363972
துணைத் தலைவர்: J. சையது முஸ்தபா - எமனேஸ்வரம் - 0567140437
துணைப் பொதுச்செயலாளர்: M.O. கபீர் - மேலப்பாளையம் - 0507021643

பின்னர் சவூதி கூட்டமைப்புத் தலைவர் சகோ. பஷீர் மவுலவி அவர்கள், ‘நிர்வாகிகளின் பண்புகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். ஜெத்தா மண்டல முன்னாள் தலைவர் சகோ. செளகத் ஹூசைன், பொதுக்குழு தீர்மானங்களை வாசிக்க, உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவோடு ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு தீர்மானங்கள்:
1. ஜெத்தா TNTJ வினால் நடத்தப்பட்டு, ஒளிப்பதிவு செய்யப்பட்ட அனைத்து சிடி மற்றும் கேசட்டுகள் நம்முடைய அமைப்பின் பொருட்செலவினால் தயாரிக்கப்பட்டவை. இவற்றைத் தவறாக உபயோகப்படுத்தும் முன்னாள் பொறுப்பாளர் சகோ ஷிப்லி அவர்களை இந்த பொதுக்குழு மிக வன்மையாக கண்டிக்கின்ற அதே வேளையில், அவற்றை அவர்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதையும் உடனே நிறுத்த வேண்டும் என இப்பொதுக்குழு அறிவுறுத்துகிறது.
2. ஜெத்தா TNTJ வின் முன்னாள் பொறுப்பாளர் சகோதரர் ஷிப்லியின் மீது மாநிலத் தலைமை நடவடிக்கை எடுத்ததை இப்பொதுக்குழு முழுமனதுடன் வரவேற்கின்றது.
இறுதியாக, ஜெத்தா TNTJ மண்டலப் பேச்சாளர் சகோ. ஃபிர்னாஸ் மவுலவி அவர்கள், ஜித்தா மண்டலத்தின் பொதுக்குழு ஒரு தனித் தன்மையை நிலை நாட்டியுள்ளது என்றும் இந்த தேர்தல் சிறப்பாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்ததை சிலாகித்தும் பேசி நன்றியுரையாற்றினார். பிறகு இரவு சிற்றுண்டிக்குப் பிறகு துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
Subscribe to:
Posts (Atom)