வல்ல அல்லாஹ்வின் கிருபையால், கடந்த 16-04-2009 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் மஸ்ஜிது நபவியை நோக்கி தலைவர் சலிம்சேட் அவர்களின் தலைமையில், துணைத்தலைவர் சகோ. செய்யது முஸ்தபா அவர்களின் மேற்பார்வையில் இரண்டு பேரூந்துகளில் பயணம் அழைத்துசெல்லப்பட்டது.
சகோ.பிர்ணாஸ் மௌலவி அவர்கள் மஸ்ஜிது ஸபா மற்றும் உஹது மலையில் அதனதன் வரலாற்றுப் பிண்ணனிகளை குறித்தும் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். சகோ. அப்துல் அஜிஸ் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைப்பற்றி சிற்றுரை நிகழ்த்தினார்.
கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறப்புப் பரிசுகளை ஜித்தா மண்டல துணைச் செயலாளர் சகோ. இபுறாகிம்ஷா, செனைய்யா கிளை தலைவர் சகோ. அமீன், சரஃபியா கிளை செயலாளர் சகோ. முஹம்மது ஹனிபா மற்றும் சரஃபியா கிளை பொருளாளர் சகோ. அப்துல் ரஹ்மான் ஆகியோர் வழங்கினார்கள்.
இப்பயணத்தில் வழக்கம்போல் ஆர்வமுடன் 100க்கும் மேற்பட்ட நபர்கள்(குடும்பங்கள் உட்பட) கலந்துகொண்டனர். இப்பயணத்திற்கு மண்டல நிர்வாகிகளும், மதினா கிளை தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களும் மிகுந்த ஒத்துழைப்பு நல்கினர். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment