அல்லாஹ்வின் அருளால் ஜித்தா மண்டல கிளைகளில் சதகா
வசூலில் அதிகமான தொகைகளை வசூலித்து பாப்மக்காஹ் கிளை
இவ்வாண்டு முதலிடத்தை பிடித்தது. அல்ஹம்துலில்லாஹ், சிறப்பாக இப்பணியில் அல்லாஹ்விற்காக உழைத்த அனைத்து
மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஆர்வலர்கள் அனைவர்களுக்கும் ஜித்தா மண்டல நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்
கொள்கிறோம். ஜசாக்கல்லாஹ் கைர்.
Wednesday, August 14, 2013
பித்ரா வசூலில் ஜித்தா நகர சனாயியா கிளை முதலிடம்
அல்லாஹ்வின் அருளால் ஜித்தா மண்டல நகர கிளைகளில் பித்ரா வசூலில் அதிகமான தொகைகளை
வசூலித்து ஜித்தா சனாயியா கிளை இவ்வாண்டு முதலிடத்தை பிடித்தது.
அல்ஹம்துலில்லாஹ், இரண்டாம் இடத்தை துறைமுக கிளையும்
மூன்றாம் இடத்தை சலாமா கிளையும் பிடித்தன. சிறப்பாக இப்பணியில் அல்லாஹ்விற்காக உழைத்த
அனைத்து மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஆர்வலர்கள்
அனைவர்களுக்கும் ஜித்தா மண்டல நிர்வாகத்தின்
சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
"சொல்வதை செய்வோம்" - ஜித்தா ஹரசாத் பகுதி பயான்
ஜித்தா மண்டல ஹரசாத் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரமலான் இப்தார்
மற்றும் பயான் நிகழ்ச்சி அப்பகுதி சகோதரர்களால் 03-08-2013
அன்று சிக்கந்தர் பேக்கரியில் ஏற்பாடு
செயப்பட்டிருந்தது. மண்டல துணைத் தலைவர் ரபீ "சொல்வதை செய்வோம்"
என்ற தலைப்பில் உரையாற்றினார். இப்தார் மற்றும் இரவு
தொழுகைக்கு பின் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் ஏராளமான சகோதரர்கள்
பங்கேற்றனர்., அல்ஹம்துலில்லாஹ்.
இப்படிக்கு,
ஜித்தா மண்டல நிர்வாகிகள்.
ஜித்தாவில் நல்லொழுக்க பயிற்சி! பெருநாளிலும் மறுமை நன்மைக்கான முயற்சி! 10-08-2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல மற்றும்
கிளை நிர்வாகிகளுக்கான நல்லொழுக்கப் பயிற்சி லக்கி தர்பார் அரங்கில் 10-08-2013 அன்று மண்டல
துணைத் தலைவர் ரபீ தலைமையில் தொடங்கியது. இதில் மண்டல மற்றும் நகர கிளைகளின்
நிர்வாகிகளுக்கு, அமைப்பு விதிகள்,
நிர்வாக ஒழுங்குகள், பேச்சு பயிற்சி, தலைமைக்கு
கட்டுப்படல், தனிமனித
ஒழுக்கங்கள் என பல்வேறு அறிவுறுத்தல்கள் கருத்துரைக்கப்பட்டு அடக்கத்துடன் அனைவராலும்
செவிமடுக்கப்பட்டன. மண்டல துணை செயலாளர் ஷௌகத் ஹுசைன் தொகுப்புரைக்கு பின், மண்டல பொது
செயலாளர் அப்துல்பாரி நன்றியுரையாற்றினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இப்படிக்கு,
ஜித்தா மண்டல நிர்வாகிகள்.
Subscribe to:
Posts (Atom)















