அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக்கிளை மர்கஸில் கடந்த 02-11-2012 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் முதல் கட்ட பேச்சை முன் உதரணமாக பேசிய பிறகு ஒருவர் பின் ஒருவராக தபூக் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மற்றும் கொள்கை சகோதரர்களும் தங்களது பேச்சு திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
Sunday, November 4, 2012
ஜித்தா மண்டல நிர்வாகக்குழு மஷூரா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-11-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டல நிர்வாகக்குழு மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல செயல்பாடுகள் பற்றியும், நிர்வாக சீர்திருத்தங்கள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
ஜித்தா மண்டல பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் 02-10-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சியை ஷர்ஃபியா பகுதியில் ஏற்பாடு செய்திருந்தது. அதில் சகோ. முனிப்(தம்மாம்) அவர்கள் பெருமை, பொறுமை, பொறாமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சுமார் 75 பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பி நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
ஜித்தா - ஷர்ஃபியா கிளை மருத்துவ முகாம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது.
இன்ஷா அல்லாஹ் வரும் 09-11-2012 வெள்ளி அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை இரத்தத்தில் சர்க்கரை கண்டறியும் சோதனை இலவச முகாமினை ஷர்ஃபியாவில் உள்ள நிஹாத் அரப் கேம்ப் வளாகத்தில் TNTJ ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை நடத்த உள்ளது. இதில் நீங்கள் அனைவரும் காலையில் உண்ணாமலும், பருகாமலும் வெறும் வயிற்றுடன் வந்து கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
Saturday, November 3, 2012
மதினா கிளை வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 03-11-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் "இஸ்லாம் கூறும் அறிவுரைகள் " என்ற தலைப்பில் சகோதரர் காஜா அவர்கள் உரை நிகழ்த்தினார். அதன் பின்பு மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பின்பு மதிய உணவிற்க்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, ஒவ்வொரு மாநில தேர்தல் ஆணையமும், 'வாக்காளர் பட்டியல்களை', இணையத்தில் பதிப்பித்திருக்கின்றன. உங்களுடைய மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில்சேர்க்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் தேட முடியும்
வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயரை தேடுவதற்கு உங்களுடைய மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்
| |
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம்
- ஜனவரி 01, 2010 அன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடைந்திருந்தால், தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு ஒருவர் விண்ணப்பிக்க முடியும்.
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6 ஐபயன்படுத்தவேண்டும்.
- படிவம்- 6 டன், 2 வண்ணப் புகைப்படம் அல்லது கருப்பு வெள்ளை புகைப்படம் இணைக்கவேண்டும்.
- பிறப்பு சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும் (அதாவது மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ் அல்லது மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்)
- விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் /வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்டஅஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.
பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம்
- வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம், அல்லது தவறுதலான பதிவு செய்யப்பட்டிருந்தால், ஒருவர் பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கமுடியும்.
- இதற்காக, படிவம்-7 – ஐ பயன்படுத்தவேண்டும்.
பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம்
- உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் (எபிக்) அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எ.கா - பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள்விண்ணப்பிக்க முடியும்.
- தவறான பதிவின் திருத்தத்திற்க்கு படிவம்-8 –ஐ பயன்படுத்துங்கள்
- அடையாளச் சான்றாக பிறப்பு சான்றிதழின் நகலை சமர்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பதிவின் இடமாற்றத்திற்க்கானவிண்ணப்பம்
- வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும்.
- இதற்காக படிவம்-8A வை பயன்படுத்தவேண்டும்.
- விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் /வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்டஅஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள்
விண்ணப்பத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்
நகராட்சி பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்களுடையவிண்ணப்பத்தை சமர்ப்பிக்க:
- துணை ஆணையர் அலுவலகம் ( நகராட்சி அலுவலகம் )
- அஞ்சல் அலுவலகங்கள்
- வணிக வளாகங்களில் அமைந்திருக்கும் இடுபெட்டிகள்.
- பெட்ரோல் விற்பனை நிலையங்கள்
நகராட்சி எல்லைக்கு நீங்கள் வசிப்பவராக இருந்தால், உங்களுடையமாவட்டங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க
- துணை ஆட்சியரின் அலுவலகம்
- வருவாய் டிவிசன் அலுவலரின் அலுவலகம் (வாக்காளர் பதிவு அலுவலர்)
- வட்டாட்சியர் அலுவலகம் ( துணை வாக்காளர் பதிவு அலுவலர் )
Subscribe to:
Posts (Atom)


