Saturday, August 4, 2012

ஜித்தா-தபூக் கிளை செயற்க்குழு கூட்டம்

TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் மாதாந்திர ஆலோசனை கூட்டம் கடந்த 02/08/2012 வியாழன் அன்று இரவு 01 மணி அளவில் கிளை செயலாளர் நிஜாம் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் நிஜாம் அவர்கள் மாதாந்திர வரவு, செலவு கணக்குகளை கிளை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டி,  தெளிவு படுத்தினார்கள். பின்னர் கிளை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள்,  ஆதரவாளர்கள் என அனைவருடைய கருத்துக்கள்,  ஆலோசனைகள் அனைத்தையும் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக  கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்: "நன்மையின் பக்கம் விரைவோம்"  என்ற தலைப்பில், கிளையின் நற்பணிகள் எவ்வாரெல்லாம் அமைய வேண்டும்  என்றும்,  அதற்கான அறிவு திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?  என்பதையும்,  நன்மைகளையும் தெளிவாக எடுத்துரைத்தார்.  மேலும்  தபூக் கிளையின் மீதமுள்ள ரமளான் மாத செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும்,  தபூக் கிளை மர்கஸில் [இப்தார்] நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அழகாக செய்து கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி கூறி பாராட்டினார். ஈதுல் பித்ரா வசூல் சம்பந்தமாவும் அதற்கான பொறுப்பாளிகளை ஏகமணதாக முடிவு செய்யப்பட்டது.  மேலும் ரமழானில் தனி நபர் அழைப்பு பணிகள், பிற மத சகோதர,  சகோதரிகளுக்கான அழைப்பு பணிகள் இன்னும் வீரியமாக அமைய தேவையான ஆலோசனைகளையும் கொள்கை சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது.  இந்த செயற்குழுவில் தபூக் பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.   அல்ஹம்துலில்லாஹ்.

 

இந்த வார 16:49 உணர்வு இதழில்…

‎1.‎ அஸ்ஸாம் கலவரம் – கொன்று குவிக்கப்படும் முஸ்லிம்கள்! ‎கண்டுகொள்ளாத காங்கிரஸ் அரசு!!‎
‎2.‎ உணர்வலைகள் – நோன்பு கஞ்சி காய்ச்ச அரசி தர மறுத்த தமிழக ‎அரசு
‎3.‎ எதிர்ப்புகளால் எழுச்சி பெறும் டிஎன்டிஜே!‎
‎4.‎ தீவிரவாதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அஸாம் முஸ்லிம்கள்!‎
‎5.‎ பர்மாவில் முப்பது ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு ஒரு ‎லட்சம் முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் – தொடரும் புத்த ‎வெறியர்களின் கொலை வெறியாட்டம்
‎6.‎ பர்தா அணியத் தடைவிதித்த கல்லூரி! – போராட்டக்களத்தில் ‎குதித்த மாணவர்கள்!!‎
‎7.‎ அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களே பாலியல் ‎வன்முறைக்கு காரணம்: – உண்மையை உடைத்துப் பேசிய ஸ்ரீலங்கா ‎அமைச்சர்கள்!‎
‎8.‎ கோவையில் எழுச்சியுடன் நடந்த புதிய ஜுமுஆ!‎
‎9.‎ பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யபட்டதற்கு அரைகுறை ‎ஆடையே காரணம்: திரிணாமுல் எம்.எல்.ஏ
‎10.‎ கிறிஸ்துவ பெண்களை பர்தா அணியச் சொல்லும் பாதிரியார்!‎
‎11.‎ ‎"என்னைத் தூக்கில் போடுங்கள்" – சொல்வது யாருமில்லை; நரபலி ‎மோடிதான்.‎
‎12.‎ மின்குறை தீர்க்க படவில்லையா? – லஞ்சம் தராமல் காரியம் ‎சாதிப்பது எப்படி?‎
‎13.‎ மக்கள் பணத்தில் மழை வேண்டி பூஜை! – பா.ஜா.க.வின் ‎முட்டாள்தனமான திட்டம்
‎14.‎ இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்! – ஆய்வுசெய்து அறிவித்த ‎அமெரிக்க கிறித்தவப் பேராசிரியர்!‎

உணர்வு இதழ் உங்கள் இல்லம் தேடி வர தொடர்பு கொள்ளவும்:

 9080898880

30,அரண்மனைக்காரன் தெரு , மண்ணடி, சென்னை – 1


http://www.tntj.net/98427.html

Friday, August 3, 2012

ஜித்தா-யான்பு கிளையில் இஃப்தார் மற்றும் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளையில் 01.08.2012 புதன் அன்று இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். ஆன்லைன் மூலம் ரியாத் மண்டல பேச்சாளர் சகோ.செய்து பைஜி அவர்கள் உரையாற்றினார்கள்.
து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். 


Thursday, August 2, 2012

ஜித்தா-தபூக் கிளை இஃப்தார் மற்றும் பயான்(நாள்-14)

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் -02-08-2012 வியாழன் அன்று ரமளான் பிறை 14 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி"  என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 14 ஆம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

 

ஜித்தா மண்டல இஃப்தார் நிகழ்ச்சி நோட்டீஸ் மற்றும் மேப்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இன்ஷா அல்லாஹ் வரும் 10-08-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் ஜித்தா மண்டலம் நடத்த உள்ள இஃப்தார் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்க்கு செல்லும் வழிக்கான மேப்பையும் இணைத்துள்ளோம். 
1 -மார்க்க உரை
2 -இப்தார் உணவு
3 -இரவு உணவு
4 -வாகனம்
5 -பெண்களுக்கு தனி இட வசதி
இவைகள் ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது நீங்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்வதோடு, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் அழைத்து வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா - சௌதி அரேபியா

ஜித்தா-தபூக் கிளை இஃப்தார் மற்றும் பயான்(நாள்-13)

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் -01-08-2012 புதன் அன்று ரமளான் பிறை 13 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி"  என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 13 ஆம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, August 1, 2012

ஜித்தா-ஷகாகா கிளை சமுதாய பணி

கடந்த 20-07-2012 வெள்ளி அன்று விருதுநகர் மாவட்ட தலைவர் சகோ.அபுபக்கர் சித்தீக் அவர்கள் அல் ஜொவ்ஃப் பகுதியில் ஷாஜஹான் என்கிற கான் முஹம்மது என்பவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும் அவரது உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்கள். உடன் ஷகாகா கிளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இடத்திற்க்கு சென்று இறந்தவரின் நண்பர் சகோ. ஜின்னா அவர்களை சந்தித்து விபரம் தருமாறு ஜித்தா மண்டல நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். பின் ரியாத் மண்டலத்தை தொடர்பு கொண்டு இந்திய தூதரகம் மூலம் அடக்கம் செய்வதற்க்கான பேப்பர் வேலைகளை செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டனர், அவர்களும் அதற்க்கு உதவினர். பின்பு இந்தியாவிற்க்கு தொடர்பு கொண்டு பேப்பர் அனுப்புவதை பற்றி விளக்கி அதனையும் பெற்றனர். பின் ஷகாகா கிளையினர் அப்பகுதியில் உள்ள கேரளத்தை சேர்ந்த சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உதவியுடன் 31-07-2012 செவ்வாய் அன்று இரவு இஷாவிற்க்குப்பிறகு இறந்தவர் உடலை நல்லடக்கம் செய்தனர். 

(சம்பவ இடம் சிறு கிராமமாக இருந்ததால், அங்குள்ள முத்தவாக்கள் போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை)

அஸ்ஸாம் முஸ்லீம் படுகொலைகளுக்கு TNTJ கண்டனம்