Wednesday, June 20, 2012

இரயில்வே பணிக்கு ஆட்கள் தேர்வு ....

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக !!!

Tuesday, June 19, 2012

ஜித்தா மண்டலம் தபூக் கிளையில்ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 17 / 06 / 2012 ஞாயிறு அன்று ஜித்தா மண்டலத் தலைவர் சகோ. நவ்ஷாத் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கிளையின் செயல்பாடுகள் குறித்து அலோசிக்கப்பட்டது. இறுதியில் அர்-ரஹ்மான் ஆதரவற்ற சிறுவர் இல்லத்திலிருந்து கிளை பொறுப்பேற்ற இரண்டு குழந்தைக்கான ஆறு மாத தொகையை கிளை செயலாளர் நிஜாம் கிளையின் சார்பில் சகோ.நவ்ஷாதிடம் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ். 




Monday, June 18, 2012

ஜித்தா மண்டலம்-ஷர்ஃபியா கிளையின் ஆன்லைன் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இன்ஷா அல்லாஹ் வரும் 22-06-2012 வெள்ளி அன்று மஃக்ரிப் தொழுகைக்குப்பின், சௌதி நேரம் 07.15 முதல் 08.45 வரை ஜித்தா மண்டலம்-ஷர்ஃபியா கிளை ஷர்ஃபியா பகுதியின் நிஹாத் அரப் கேம்ப் மாடியில் ஆனலைன் பயான் ஒன்றின ஏற்பாடு செய்துள்ளது. இதில் தாயகத்திலிருந்து மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. அப்துந் நாசர் அவர்கள் இஸ்லாத்தின் போர்களும், பாசிஸத்தின் அக்கப்போர்களும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றி உள்ளார்கள். இதில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்வதோடு, உங்கள் உறவினர்கள், நண்பர்கள், கொள்கை சகோதரர்கள் அனைவரையும் கலந்து கொண்டு பயன் பெற செய்யவும்.

அன்புடன் அழைக்கின்றது,
ஜித்தா மண்டல நிர்வாகம்,
ஜித்தா - சௌதி அரேபியா.

Saturday, June 16, 2012

ஜித்தா-ஜிஸான் கிளை பிரசுர விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 15-06-2012 வெள்ளி அன்று குர் ஆன், ஹதீஸ் அடங்கிய துண்டு பிரசுரங்கள் சுவற்றில் ஒட்டியும், சகோதரர்களுக்கு விநியோகிக்கவும் பட்டு தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-மதினா கிளை வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 15-06-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் மார்க்க உரை நடைபெற்றது. இதில் மாநில தலைவர் சகோதரர் பி.ஜெ அவர்களின் தம்மாம் மண்டல கேள்வி பதில் நிகழ்ச்சி ஒளிபரபப்பட்டது. இதில் அவர் தனது முன்னுரையில் வெளி நாடு வாழ் முஸ்லிம்கள் தனது காசை ஹலாலான வழியில் சேமிப்பது குறித்து கூறியது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதன் பின்பு குரான் பயிற்சி வகுப்பும் ,மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் குர் ஆன் வகுப்பும் நடைபெற்றது. பின்பு மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

வல்ல ரஹ்மானின் கிருபையால் கடந்த 15-6-2012 வெள்ளி அன்று மஃக்ரிப் முதல் இஷா வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கப்ர் வேதனை எனும் தலைப்பில் சகோ. ஹுசேனும், கியாமத் நாளின் அடையாளங்கள் எனும் தலைப்பில் அக்கிளையின் தலைவர் சகோ. செய்யது முஸ்தபாவும் உரை நிகழ்த்தினார்கள். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
அல்ஹம்துலில்லாஹ்.


ஜித்தா-ஷர்ஃபியா கிளையின் தேசம் கடந்த தவ்ஹீத் பணிகள்

வல்ல ரஹ்மானின் கிருபையால் கடந்த 15-6-2012 அன்று மக்ரிப் முதல் இஷா வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த சகோதரர்களுக்கு உருது மொழியில் பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் சகோ. சௌகத் உசேன் அவர்கள் இஸ்லத்தின் அடிப்படை கொள்கைகள் பற்றி உருது மொழியில் உரை நிகழ்த்தினார்கள். 60க்கு அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர். இரவு உணவு து.ஆ விற்க்குப்பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.




ஜித்தா-ஷர்ஃபியா கிளையில் தாயிகள் பயிற்ச்சி வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 15-06-2012 வெள்ளியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் அஸா் முதல் மஃக்ரிப் வரை தாயிகளுக்கான பயிற்சி வகுப்பு கிளை தலைவர் சகோ.முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. அதில் அதிகமான சகோதரர்கள் (புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர் உட்பட) கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.