Thursday, October 13, 2011

Sarafiyah Branch Bayan

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள சகோதரர்களுக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளை சார்பில் இன்ஷா அல்லாஹ் 14-10-2011 (வெள்ளிக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் ஆரம்பித்து இஷா தொழுகைக்கான பாங்கு வரையில் பயான் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

இந்த நிகழ்ச்சி jeddahtntj.blogspot.com என்ற இணையதளத்தில் நேரிடையாக ஒளிபரப்பப்படும்.

இணைப்பை பார்வையிடவும்.

நன்றி.

ஜித்தா-ஷர்ஃபியா கிளை மார்க்க சொற்பொழிவு

அல்லாஹ்வின் திருப்பெயரால்............
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
 
அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு. ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது.
 
இன்ஷாஅல்லாஹ் வரும் 14-10-2011 வெள்ளி அன்று மாலை 6.30 மணி முதல் 7.30 வரை(சௌதி நேரம்) சகோ. முனீப் அவர்கள் தேர்வுக்களமும் தீர்வுத் திடலும் என்ற தலைப்பில், இவ்வுலக வாழ்க்கை பற்றியும், மறுமையில் மஹ்ஷர் மைதானத்தின் நிலை பற்றியும் நமக்கு உரையாற்ற உள்ளார்கள். நம் சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்வதுடன், உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் கலந்துகொள்ள சொல்லவும்.
 
இந்த நிகழ்ச்சியினை ஜித்தா மண்டல சைட்டில் jeddahtntj.blogspot.com இன்ஷாஅல்லாஹ் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட உள்ளது. நேரில் வரமுடியாதவர்கள் இணையதளத்தில் நேரடியாக பார்த்து பயன்பெறவும்.
 
இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா - சௌதி அரேபியா



Friday, October 7, 2011

தபூக் கிளையில் இஸ்லாத்தில் இணைந்த சகோதரர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 07/10 / 2011 வெள்ளி அன்று தஞ்சாவூர் மாவட்டம் மானம்புச்சாவடியை சேர்ந்தவரும் தபூக் நகரில் மிலிட்டரி மருத்துவமனையில் மருத்துவ இயற்பியல் நிபுனராக பனியாற்றும் சகோ, பத்மாபன் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொன்டு தன் பெயரை அப்துல் ரஹ்மான் என்று மாற்றிக்கொன்டர், கிளை நிர்வாகிகள் முன்னிலையில் தமிழக்க நுல்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆன்லை பயான் ஜித்தா-மதீனா


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 07-10-2011 வெள்ளி அன்று மதியம் 2.45 முதல் 4.30 மணி வரை மாநில தலைவர் சகோ. பி.ஜெ அவர்கள் ஜித்தாஹ் மண்டல மதீனா கிளைக்காக கடல் கடந்தவர்கள் கவனிக்க வேண்டியவைகள் என்ற தலைப்பில் வெளிநாட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய குடும்ப, உலக, மார்க்க விஷயங்கள் பற்றி, மிகவும், அழகாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார்கள். மக்களுக்கு மிகவும் அவசியமான இந்த நிகழ்ச்சிக்கு அதிக சகோதரர்கள் தொடர்புகொண்டு தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்தார்கள், மண்டல கிளைகள் மூலமும் இதனை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதீன கிளையில் சுமார் 50 பேர்கள் கலந்துகொண்டனர், அவர்களுக்கு சிறப்பாக மதிய உணவும் கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். உலகம் முழுவதும் சுமார் 800 பேர்கள் கணிணி மூலம் இந்நிகழ்ச்சியினை பார்த்ததாக வெப்மாஸ்டர் மூலம் அறிந்தோம். இலங்கையில், SLTJ FM RADIO மூலம் இதன் நேரலையை ஒலிப்பரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.






Wednesday, October 5, 2011

தபூக் கிளையில் வாரந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில்
கடந்தவெள்ளி30/08/2011அன்று வாரந்திர பயான் நடைபெற்றது, அதில் தலைவர்
ஏகத்துவமும் எதிர்வாதமும் என்ற தலைப்பில் தொடர் உரையும், நிஜாம்தீன்
எல்லை மீறாதே  என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!

மாற்று சகேதரர்களுடன் தபுக்கிளையின் நிர்வாகிகள் சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த வியாழன்
27/08/2011அன்று தபூக் நகறுக்கு புதிதாக அன்நஸ்பான் எனும் கம்பேனிக்கு
வந்துள்ள பிறமத சகோதரர்களை மக்கள்தொடர்பாளர் பசீர் அவர்கள் மூலம் விபரம்
அறிந்து மாநிலச்செயலாளர் அவர்களின் அறியுரையின் படி  சந்திப்பு நிகழ்ச்சி
நடைபெற்றது.
பல சகோதரர்கள் கலந்து கொண்டார், அவர்களின் கேள்விகளுக்கு கிளைத்தலைவர்
அப்துல் அஜீஸ் அவர்கள் பதில் அளித்ததோடு , சகோ. பிஜே அவர்களின் மாமனிதர்
மற்றும் வருமுன் உரைத்த இஸ்லாம் உள்பட பல நுல்களும்
வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்!

ஜித்தா மண்டலம் நடத்தும் ரத்ததான முகாம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
 
அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இந்தக் கடிதம் உங்களை சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும், பூரண உடல் நலத்தோடும் சந்திக்கட்டுமாக.
 
இன்ஷாஅல்லாஹ் வரும் 21-10-2011 வெள்ளி அன்று மாலை 3 மணி முதல் இரவு 9 மணி ஜித்தா மண்டல தவ்ஹீத் ஜமாத் ஹாஜிகளுக்கான சிறப்பு ரத்ததான முகாம் ஒன்றினை கிங் ஃபஹத் மருத்துவமனையில் நடத்த உள்ளது. இதில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்வதோடும், உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ள வலியுறுத்தவும். வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இவ்வுலக துன்பத்திலிருந்து ஒரு துன்பத்தைவிட்டும் ஒரு முஸ்லீமை யாரேனும் விடுவித்தால், நியாய தீர்ப்பு நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை விட்டும் அவனை அல்லாஹ் விடுவிக்கிறான் - இப்னு மாஜா-225
 
இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா - சௌதி அரேபியா

Monday, October 3, 2011

ஏழைகளின் துயர் துடைத்திட கூட்டுக் குர்பானி


அஸ்ஸலாமு அலைக்கும் 
ஏழைகளின் துயர் துடைத்திட கூட்டுக் குர்பானி :

 

இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும்,

அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார்

என்று உறுதி எடுப்பதற்காகவும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது

குர்பானி கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

 

ஏழைகளின் துயர் துடைப்பது குர்பானியின் அடுத்த நோக்கமாக

அமைந்துள்ளது. இதனால் தான்  வறுமை நிலவிய ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டிருந்தார்கள். பின்னர் செழிப்பான நிலை ஏற்பட்டபின் இக்கட்டளையைத் திரும்பப் பெற்றார்கள்.

 

ஏழைகளின் துயர் துடைப்பதும் குர்பானியின் நோக்கம் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

 

ஒரு பக்கம் ஏராளமாக குர்பானி கொடுக்கப்பட்டு வாங்குவோரின்றி மாமிசம்

சீரழிவதையும், இன்னொரு பக்கம் போதிய மாமிசம் கிடைக்காமல் ஏழைகள் திண்டாடுவதையும் நாம் காண்கிறோம்.

இந்த ஏற்றத் தாழ்வை அகற்றி ஏழைகளுக்கு தாராளமாக இறைச்சி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தாங்கள் வழங்கும் ஆடு மாடுகளை டிஎன்டிஜே தலைமைக்கு வழங்கினால், தேவையான பகுதிகளில் முறையாக வினியோகம் செய்து அதன் கணக்கு விபரத்தை உணர்வில் வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

ஆடு மாடுகள் தரத்திற்கேற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாலும், ஒவ்வொரு  பகுதியிலும் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுவதாலும், கடைசி நேரத்தில் விலை ஏற்றப்படுவதாலும் உத்தேசமாகத் தான் இதற்கான தொகையை நிர்ணயிக்க இயலும்.

மாடுகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு மாடு 7500 முதல் 9000 வரை உள்ளது. அறுத்து வெட்டி கூறுபோட்டு பங்கிடுவதற்கான கூலியும் உள்ளது. எனவே நடுத்தரமான விலையில் 8500 அளவில் மாடு வாங்கி அதற்கான கூலியும் சேர்த்து 9100 வரை ஆகலாம். எனவே முழுமையாக ஒரு மாடு கொடுக்க விரும்புவோர் 9100 அனுப்பி வைக்குமாறும் ஒரு மாட்டில் ஏழு பேர் கூட்டு சேர்ந்து கொடுக்க விரும்பினால் ஒரு பங்குக்கு 1300 ரூபாய்கள் அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

 

நடுத்தரமான ஆட்டின் விலை மற்றும் அதற்கான கூலி சேர்த்து 6500 வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏழைகள் வாழும் பகுதி மக்களுக்காக ஒரு ஆடு வழங்க விரும்புவோர் 6500 அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விலை யாவும் உத்தேசமானது தான்.

 

நீங்கள் அனுப்பும் தொகைக்கு ஆடு மாடுகள் வாங்கி ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் வினியோகம் செய்யப்படும். இயன்ற வரை நீங்கள் வழங்கும் தொகைக்கே (கூலியைக் கழித்து) பிராணிகள் வாங்கப்படும். அந்த விலையில் ஆடுமாடுகள் கிடைக்காத பட்சத்தில் அதைவிட சற்றே குறைந்த விலையில் ஆடு மாடுகள் வாங்கப்படும். உங்களால் அனுப்பப்ட்ட 9100 விலையில்

மாடு கிடைக்காமல் 8500க்கு கிடைத்தால் இந்த வகையில் மிச்சமாகும்

தொகை முஸ்லிம் அல்லாத நண்பர்கள் கேட்கும்போது இலவச குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகங்கள் வகைக்கு மட்டும் பயன்படுத்தப்படும். இதற்கு உடன்படும் அன்பர்கள் குர்பானிக்கான தொகைகளை

அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

 

குர்பானிக்கான டிடி மற்றும் செக் அனுப்புவோர்

UNARVU. A/c No : CA 01000200000698, UCO BANK, CHENNAI என்ற பெயரில் எடுத்து பின் வரும்

முகவரிக்கு மட்டும் அனுப்பவும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநிலத் தலைமையகம்,

எண் 30 அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை - 600001

போன் 044 - 25215226