Thursday, February 14, 2013

மாநில தலைமை கட்டிட கட்டுமான பணிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது மாநில தலைமைக்கான தலைமை அலுவலக கட்டிட பணிகள் முனைப்புடன் நடந்து வருகின்றது. இப்பணி விரைவில் முடிந்து நமது செயல்பாடுகள் இன்னும் வீரியமாக அமைய து.ஆ செய்யவும். இப்புனித பணிக்கு உங்களின் பங்களிப்புகளையும் அவசியம் எதிர்பார்க்கின்றோம்.















இப்படிக்கு

ஜித்தா மண்டல நிர்வாகிகள்.

Wednesday, February 13, 2013

இந்திய அரசு ஹஜ் குழு விண்ணப்ப அறிவிப்பு


தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த, ஹஜ் 2013ல், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லீம்களிடம் இருந்து, பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்க்கிறது. ஹஜ் 2013-ற்க்கான விண்ணப்ப படிவங்களை சென்னை-34, எண் 13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 06-02-2013 முதல் பெற்றுக்கொள்ளாம். அல்லது இவ்விண்ணப்பங்களை  www.hajcommittee.com  என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நகல்கள் எடுத்தும் உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதர்க்கான கடைசி தேதி 20-03-2013.

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்னும் ஹஜ் கொள்கையினைச் செயற்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால் கடந்த காலங்களில் இந்திய ஹஜ் மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளாத நபர்கள் மட்டும் ஹஜ் 2013-ல் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். சுய கையொப்பம் இட்ட பாஸ்போர்ட்டின் நகல்/20-03-2013 அல்லது அதற்க்கு முன்பு வழங்கப்பட்ட மற்றும் குறைந்தது 31-03-2014 வரையில் செல்லத்தக்க பாஸ்போர்ட்டை அசலாக விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்புமாறு புனித பயணிகள் கேட்டுக கொள்ளபடுகிறார்கள். IFS குறியீடு உள்ள இரத்து செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்படாத வங்கி காசோலையை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். ஹஜ் 2013 பற்றிய விபரங்களுக்கு ஹஜ் 2013-ற்கான வழிமுறைகள் கையேட்டைப்படிக்கவும். அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையத்தளம் www.hajcommittee.com –ஐ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூபாய் 300/- (முன்னூறு) ஐ மட்டும் திருப்பித்தரப்படாத பரிசீலனை கட்டணமாக (processing fee) பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டத்தின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் பவர் ஜோதி கணக்கு எண் 32749477270-ல் செலுத்தி அதற்க்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்க்கு 20-03-2013 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்புவகைப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயணிகள் அவ்வகைக்கான அனைத்து வழுமுறைகள் தவறாமல் பின்பற்றுமாறும் அவ்வகையின் கீழ் பரிசீலிப்பதற்கு ஏதுவாக அனைத்து நிபந்தனைகளை பூர்த்தி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

வெளியீடு,
செய்தி – மக்கள் தொடர்புத் துறை – சென்னை-9.

காந்திப் படுகொலையும்! ஹிந்துத்துவா அரசியலும்!

சுதந்திர இந்தியா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2-ஆம் தேதியை காந்தி பிறந்த தினமாகவும், ஜனவரி 30-ஆம் தேதியை இரத்தசாட்சி தினமாகவும் அனுஷ்டித்து வருகிறது. ஆனால், காந்தி ஏன் கொல்லப்பட்டார்? என்பது மறந்துபோன ஒன்றாக மாறிவிட்டது.

காந்தி என்ற மகாத்மா, அவரைக் கொன்ற கொலைகாரன் கோட்ஸே, அவனது கும்பல் பரப்புரைச் செய்த அரசியல் சித்தாந்தம், அன்று நீடித்த தேசிய சூழல், சர்வதேச சூழல்கள், நீதிமன்றத்தில் கோட்ஸே வெளியிட்ட காரணங்கள்-ஆகியவற்றை இணைக்க முயன்றால் பல இடங்களில் பொருத்தமில்லாமையை நாம் உணரலாம். ஆகையால் காந்தி படுகொலை குறித்த மீளாய்வில் கூடுதலாக ஏதேனும் கூறவேண்டியது அவசியமாகும்.

1966-ஆம் ஆண்டுவரை காந்தி படுகொலை குறித்த ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டதற்கு மக்களின் மறதிக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பதுதான் காரணமா?

1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி மாலை 5.10 க்கு பிர்லா ஹவுஸிலிருந்து பிரார்த்தனை ஹாலிற்கு புறப்பட்டுச் சென்ற காந்தியடிகளை வினாயக் நாதுராம் கோட்ஸே என்பவன் வழியில் தடுத்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். கோட்ஸேயை தவிர காந்தியடிகளுடன் வந்தவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். தப்பிக்க கூட முயலாமல் கோட்ஸே தனது இரு கரங்களையும் நீட்டி போலீசாரை அழைத்து தன்னை கைது செய்ய கோரினான்.

பின்னர் நடந்த விசாரணையில் கோட்ஸே நீதிமன்றத்தில் 5 மணிநேரம் கொலையை நியாயப்படுத்தி வாக்குமூலம் அளித்தான். காந்தியை கொலை செய்தது குறித்து பெருமைக் கொள்வதாகவும், இக்கொலை முன்னரே நிகழ்த்தியிருக்க வேண்டியது எனவும் கூறினான்.

கோட்ஸே காந்தியை கொலைச் செய்ய கூறிய முக்கிய காரணங்களை பார்ப்போம்:

ஹிந்து-முஸ்லிம் பிரச்சனைகளில் காந்தி முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். ஜின்னாவின் தேசப் பிரிவினைக்கு ஆதரவளித்தார். பிரிவினைக்கு பிறகும் அரசு கருவூலத்திலிருந்து பங்குத் தொகையான 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு அளிக்கவேண்டும் என காந்தி இந்தியாவுக்கு நிர்பந்தம் அளித்தார். பிரிவினையை தொடர்ந்து உருவான கலவரத்தில் காந்தி ஹிந்துக்களை நிராயுதபாணிகளாக மாற்றினார். காந்தி பாகிஸ்தானின் தேசத் தந்தையாவார்.’ என்பதாகும்.

கோட்ஸேவின் இக்கூற்று உண்மைக்கு உகந்ததா? என்பதை ஆராய நீதிமன்றம் தயாராகவில்லை. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி நீதிமன்றம் தண்டனையை வழங்கியது. கோட்ஸே, நாராயணன் ஆப்தே ஆகியோருக்கு மரணத் தண்டனையும், இதர நான்கு பேருக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டன. சாவர்க்கர் மீதான குற்றத்திற்கு ஆதாரமில்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது. காந்தி படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சவர்க்கரை குற்றமற்றவர் என கூறி நீதிமன்றம் விடுதலைச் செய்தது விவாதத்தை கிளப்பியது. பின்னர் காந்தி படுகொலையை குறித்து மறுவிசாரணை நடத்திய கபூர் கமிஷன் கண்டறிந்தது என்னவெனில் காந்தி படுகொலையில் சாவர்க்கர் முக்கிய சூத்திரதாரி என்பதாகும். இதுக்குறித்து மீண்டும் ஆய்வுச்செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம். விசாரணையின் போது காந்திக்கு எதிராக கோட்ஸே முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை குறித்து புரிந்துக் கொள்வதற்கான மீளாய்வை காந்தியிலிருந்தே நாம் துவங்குவோம்.

காந்தியைப் பொறுத்தவரை அவர் தீவிரமான மத நம்பிக்கையாளர். தனது மத நம்பிக்கையின் ஒரு பகுதிதான் அரசியல் என உறுதியாக நம்பிய மதசார்பற்ற கொள்கைவாதி. காந்தியின் கொள்கைகளான அகிம்சை, ட்ரஸ்ட்ஷிப் சித்தாந்தம், பசுவதை தடை, வர்ணாசிரம சித்தாந்தம், ராமராஜ்யம்-இவற்றையெல்லாம் உருவாக்குவதில் காந்தியின் ஹிந்துமத நம்பிக்கை மிகவும் ஆதிக்கம் செலுத்தியது. சுருக்கமாக காந்தி ஒரு பழமைவாத ஹிந்து ஆவார்.

தீண்டாமைக்கு எதிராக போராடும்போது கூட அவர் ஜாதீய கட்டமைப்பை ஆதரித்தார். உயர்ஜாதியினர் ஆதிக்கத்திற்கு எதிராக உருவான தலித்-தாழ்த்தப்பட்டவர்களின் கூட்டமைப்பை திசை திருப்பினார். அம்பேத்கர் தலித்துகளின் முன்னேற்றத்திற்காக நடத்திய போராட்டத்தை புனே ஒப்பந்தம் மூலம் காந்தி தடுத்து நிறுத்தியதற்கு காரணம் அவரிடம் குடிக்கொண்டிருந்த உயர்ஜாதி உணர்வாகும்.

கோட்ஸே கூட நீதிமன்றத்தில் கூறினான், “எனது ஹிந்துத்துவா மீதான அபிமான உணர்வு உருவெடுத்தது காந்தி மற்றும் சாவர்க்கரின் சிந்தனைகளின் மூலமாகும்” என. ஆனால் காந்தியின் கொள்கை வேதாந்த ஹிந்துத்துவம் என்பதும், சாவர்க்கரின் கொள்கை காலனியாதிக்க ஹிந்துத்துவம் என்பதையும் அடையாளங்காண கோட்ஸேயால் இயலவில்லை. கோட்ஸேயின் முக்கிய குற்றச்சாட்டே காந்தி இந்தியாவை துண்டாட துணைபோனார் என்பதாகும்.

1947-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘ஹிந்துராஷ்ட்ரா’ என்ற நாளிதழில் கோட்ஸே இவ்வாறு எழுதினான்: ‘சகோதரர்களே! நமது தேசம் துண்டிக்கப்பட்டுவிட்டது!’ பின்னர் காந்திக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக எழுதுகிறான், ‘பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததன் மூலம் நீங்கள் பாரதத்தின் நெஞ்சத்தை கோடாரியால் பிளந்து விட்டீர்கள். நீங்கள் உங்கள் கொள்கையை மாற்றவில்லையெனில் அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிவரும்’.

ஆனால் நாடு பிரிவினையை குறித்து வரலாறு கூறுவது இதற்கு மாற்றமானதாகும். தேசப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர் காந்தியடிகள் ஆவார். காலனியாதிக்க ஹிந்துத்துவா சக்திகள் பல பத்தாண்டுகளுக்கு முன்பே பிரிவினைக்கு ஆதரவான சூழலை வளர்த்துக்கொண்டு வந்தனர்.

1921-ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதிய ‘ஹிந்துத்துவா’ என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார், ’ஹிந்துவும், முஸ்லிமும் இரண்டு தேசங்கள் ஆவர்’. 1923-ஆம் ஆண்டு ஹிந்து மகாசபையின் மாநாட்டில் மதன்மோகன் மாளவியா உரை நிகழ்த்தினார். அதில் அவர்,’இந்தியா ஒருபோதும் ஒரு ஒன்றிணைந்த தேசம் அல்ல’ என தெரிவித்தார். 1924-ஆம் ஆண்டு லாலா லஜபதிராய் ‘த ட்ரிப்யூன்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது என்னவெனில், ’இந்தியா தனி நாடல்ல’ என்பதாகும். 1937-ஆம் ஆண்டு கோட்ஸேவின் சித்தாந்த குரு சவர்க்கர் அஹ்மதாபாத்தில் நடந்த ஹிந்து மகாசபை மாநாட்டில் கூறியது என்னவெனில், ’இந்தியாவால் ஒரு ஒன்றிணைந்த நாடாக மாற இயலாது’ என்பதாகும். இந்த கருத்துக்களையெல்லாம் காந்தி அங்கீகரிக்கவில்லை.

1940-ஆம் ஆண்டு லாகூர் தீர்மானத்தின் மூலம் முஸ்லிம் லீக் ’பாகிஸ்தான்’ என்ற வாதத்தை முன்வைத்தது. இதனையும் காந்தியடிகள் அங்கீகரிக்கவில்லை. ஆனால், 1945-ஆம் ஆண்டு காங்கிரஸைச் சார்ந்த ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியும் பிரிவினைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அப்பொழுது கூட காந்தி பிரிவினையை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜின்னாவை பிரதமராக்கி பிரிவினையை தவிர்க்கலாம் என ஆலோசனை தெரிவித்தார். அதேவேளையில், ஷியாம்பிரசாத் முகர்ஜி போன்ற காலனியாதிக்க ஹிந்துத்துவாவாதிகள் பிரிவினைக்கான ரகசிய செயல்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

முஸ்லிம்களும், தலித்துகளும் ஒன்றிணைந்தால் உயர் ஜாதியினர் அதிகாரத்தின் படிக்கட்டுகளுக்கு வெளியே சென்றுவிடக் கூடிய சூழல் ஏற்பட்டுவிடும் என ஷியாம் பிரசாத் முகர்ஜி அஞ்சினார். இறுதியாக தலைபோனாலும் பரவாயில்லை, தலைவலி மாறினால் போதும் என்ற முடிவை காங்கிரஸ் செயற்குழு எடுத்தது. அங்கேதான் காந்தி மெளனியாக மாறினார்.

கோட்ஸே நீதிமன்றத்தில் வரலாற்றை வளைத்ததற்கு காரணம் ஏதோ ஒன்றை மூடி மறைப்பதற்காகும். கோட்ஸே காந்தி படுகொலைக்கு கூறிய அடுத்த காரணம், அரசு கருவூலத்திலிருந்து பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய பங்கான 55 கோடி ரூபாயை இந்தியா முடக்கி வைத்தபோது காந்தி தலையிட்டு பாகிஸ்தானுக்கு அப்பணத்தை கொடுக்கவேண்டும் என கூறினார் என்பதாகும். இங்கே புரியாத காரணம் என்னவெனில், நாட்டை பிரிப்பதற்கான திட்டங்களை தீட்டிய சங்க்பரிவாரத்திற்கு நாடு துண்டாடப்பட்டதை விட பெரிதா 55 கோடி ரூபாய்? என்பதாகும். ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாயை அந்நாட்டிற்கு வழங்கவேண்டும் என காந்தி கூறியது அவரை கொலைச்செய்ய எவ்வாறு காரணமாகும்? அவ்வாறெனில் நானூறு ஆண்டுகள் இந்தியாவை காலனியாதிக்க நாடாக மாற்றி ஆட்சிபுரிந்த பிரிட்டீஷார் இந்தியாவின் பெரும் செல்வங்களை கொள்ளையடித்தனர். ஆனாலும், சங்க்பரிவாரத்திற்கு ஏன் பிரிட்டீஷாரின் மீது துவேசம் ஏற்படவில்லை? 55 கோடி ரூபாய் விவகாரத்தில் காந்தி யாரையும் திருப்திப்படுத்துவதற்காக செயல்படவில்லை. மாறாக, உண்மை என்று தான் கருதியதை ஆதரித்ததேயாகும்.

அடுத்த காரணமாக கோட்ஸே கூறியது, முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதிலேயே காந்தி குறியாக இருந்தார் என்பதாகும். “பிரிவினையைத் தொடர்ந்து நடந்த வகுப்பு கலவரத்தில் காந்தி ஒருதலைபட்சமாக ஹிந்துக்களிடம் கலவரத்திலிருந்து விலகுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்தார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் வன்புணர்வுக்கு பலியாகினர்”. இதிலும் உண்மை கோட்ஸேவிற்கு எதிராகவே அமைந்துள்ளது.

ஜவஹர்லால் நேரு 1947-ஆம் ஆண்டு வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில், “கலவரத்தின் பின்னணியில் அதிகமாக செயல்படுவது ஹிந்துக்களும், சீக்கியர்களும்தான்” என தெரிவித்துள்ளார். எந்த வன்முறையையும் எதிர்க்கவேண்டும் என்பது காந்தியின் அகிம்சை கொள்கையின் ஒரு பகுதியாகும். வன்முறை உருவானதன் காரணமாக ஒரு கட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தை கூட காந்தி நிறுத்தி வைத்தார்.

1921-ஆம் ஆண்டு ஒத்துழையாமை போராட்ட வேளையில் சவுரிசவ்ரா என்ற இடத்தில் வன்முறை வெடித்தபொழுது காந்தி போராட்டத்தை வாபஸ் பெற்றார். கிலாஃபத்தின் நிழலில் வளர்ந்துவந்த கேரளாவின் மாப்பிள்ளைகள் போராட்டத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்ததாக கேள்விப்பட்ட வேளையில் மலபார் போராட்டத்தை காந்தி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இவ்விவகாரத்தில் கோட்ஸே உண்மையை மூடி மறைத்துள்ளார்.

இந்நிலையில், கோட்ஸே கூறிய காரணங்களெல்லாம் பொய்யானவையாக இருக்கும்போது ஒரு கேள்வி மட்டும் எஞ்சியிருக்கிறது. ஏன் காந்தி கொல்லப்பட்டார்? என்பதுதான் அக்கேள்வி. இதனைப் புரிந்துக்கொள்ள வேண்டுமெனில் ஏகாதிபத்திய-சியோனிஷ்டுகளுடன் சங்க்பரிவார்களுக்கு இருந்த ரகசிய உறவை அடையாளம் காணவேண்டும்.

சாவர்க்கரும் அவரது கூட்டாளிகளும் வளர்த்தது தேசிய ஹிந்துத்துவ அரசியல் அல்ல. மாறாக ஏகாதிபத்திய-சியோனிஷ விருப்பங்களை பாதுகாக்கும் காலனியாதிக்க ஹிந்துத்துவா அரசியலாகும். அது ஒரு ஏகாதிபத்திய கொள்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும் மாற்றியமைத்து தங்களுக்கு சாதகமான காலனியாதிக்க மனோநிலையை உருவாக்குவதுதான் இவர்களது திட்டம். அதற்காக புதிய அமைப்புகள், மதங்கள், மனித தெய்வங்கள் என எதனையும் ஏகாதிபத்திய சக்திகள் உருவாக்கும்.

காங்கிரஸ் என்றதொரு இயக்கத்தை உருவாக்கியது ஏ.ஓ.ஹ்யூம் என்ற பிரிட்டீஷ் காரர் ஆவார் என்பது இங்கே சிந்திக்கவேண்டிய விஷயமாகும். இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து ‘காதியானிசம்’ என்றதொரு காலனியாதிக்க பிரிவை உருவாக்கினர். அதுபோலவே சங்க்பரிவார் என்ற காலனியாதிக்க ஹிந்துதுத்துவா இயக்கமும் உருவானது.

நாத்திகவாதியான சாவர்க்கர் தனது இளமைப் பருவத்தில் பிரிட்டீஷ் எதிர்ப்பு போராட்டங்களில் விருப்பங்காட்டினார். 1857-ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திர போராட்டத்தைக் குறித்து சாவர்க்கர் 1909 ஆம் ஆண்டு ஒரு நூலை எழுதினார். அதில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஐக்கியத்துடன் போராடியதை குறிப்பிடுகிறார். மேலும் முஸ்லிம்கள் செய்த தியாகத்தை தனியாக பாராட்டி எழுதியுள்ளார். பின்னர் உயர்கல்வியை கற்பதற்காக சவர்க்கர் பிரிட்டனுக்கு சென்றார். ஆனால், அங்கே அவர் சற்று தீவிரமாக இந்திய அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சாவர்க்கரின் நண்பர் ஒரு பிரிட்டீஷ்காரரை கொலைச்செய்த வழக்கில் சாவர்க்கரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். விசாரணையில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனையை விதித்தது. இதனைத் தொடர்ந்து அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வைத்து அவரது அரசியல் சித்தாந்தம் மாற்றம் அடைந்தது. வாழ்க்கை முழுவதையும் சிறையில் கழிப்பதை விரும்பாத சாவர்க்கர் பிரிட்டீஷ் அரசுடன் சமாதானமாக செல்லும் நோக்கில் மன்னிப்பு கடிதத்தை எழுதினார்.

பிரிட்டீஷ் எதிர்ப்பு செயல்பாடுகளிலிருந்து விலகுவதும், மீதமுள்ள காலத்தை பிரிட்டீஷாருக்கு சேவை புரிவதில் கழிப்பதும் அக்கடிதத்தின் உள்ளடக்கமாகும்.

1913-ஆம் ஆண்டு அந்தமான் சிறையை பார்வையிட சென்ற பிரிட்டீஷ் அதிகாரி ஸர் ரெஜினால்ட் க்ராடக்குடன் சாவர்க்கர் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தினார். இதன் பலனாக, சிறையில் படிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபடவும், வெளி உலகத்துடன் தொடர்புக் கொள்ளவும் அதிக சுதந்திரம் அவருக்கு கிடைத்தது. இவ்வாறு அந்தமான் சிறையில் வைத்து 1921-ஆம் ஆண்டு சவர்க்கர் ‘ஹிந்துத்துவா’ என்ற நூலை எழுதினார். ’ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு தேசமல்ல’ என்ற வாதத்தை இந்நூலில் அவர் குறிப்பிடுகிறார்.

1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவானபோது சாவர்க்கர் சிறையில் இருந்தார். அவ்வியக்கத்தின் துவக்க விழாவில் பங்கேற்க தனது பிரதிநிதியாக தனது சகோதரர் கோபால் கோட்ஸேவை அனுப்பி வைத்தார்.

சங்க்பரிவாரத்தின் ‘காந்தி எதிர்ப்பு’ கொள்கை பிரிவினையின் பிறகு உருவானதல்ல. 1926-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் ஹெட்கேவார், ”காந்தியின் அகிம்சை வழி நாட்டில் அதிகரித்துவரும் ஆவேசத்தை கெடுத்துவிடுகிறது. ஆகையால் காந்தியை ஆதரிக்க இயலாது” என தெரிவித்தார். ஆனால், மறுபுறம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் ஆயுத போராட்டத்தையும் ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தது. இதற்கான காரணத்தை ஆர்.எஸ்.எஸ் விளக்கவில்லை. காங்கிரஸ் நடத்திய அனைத்து போராட்டங்களையும் ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தது. ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் முதுகில் குத்தியது.

இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களில் ஒருவரான ஷியாம் பிரசாத் முகர்ஜி பிரிட்டீஷ் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், ”போர் உறுதியாகிவிட்டது. இக்கட்டத்தில் காங்கிரஸ் போராட்டத்தை வலுப்படுத்தினால் பிரிட்டீஷ் அரசு அதனை கடுமையாக எதிர்கொள்ளவேண்டும்” என தெரிவித்தார்.

1948-ஆம் ஆண்டு காந்தி படுகொலையின் விசாரணை வேளையில் கோட்ஸே கூறியவை 1947-ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த நிகழ்வுகளுடன் தொடர்புடையவனவாகும். அவ்வாறெனில், 1944-ஆம் ஆண்டு காந்தியை கொல்ல ஏன் கோட்ஸே விரும்பினார்? சுருக்கமாக கூறவேண்டுமெனில், கோட்ஸே காந்தியை படுகொலைச் செய்ய தூண்டியதற்கு கூறிய காரணங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவையாகும். மனிதர்களை நேசித்த காந்தியடிகளுக்கு ஹிந்து விரோதமோ, முஸ்லிம் விரோதமோ, பிரிட்டீஷ் விரோதமோ இல்லை. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் வேளையிலும் நெருக்கடியான காலக்கட்டங்களில் பிரிட்டீஷாருக்கு உதவியுள்ளார். பிரிட்டனுக்கும், டச்சுக்காரர்களுக்கும் (நெதர்லாந்து) இடையே நடந்த போவர் போர், முதல் உலகப்போர் ஆகியவற்றில் பிரிட்டீஷாருக்கு ஆதரவாக சேவை புரிந்தார்.

சமூகத்தில் காணப்படும் அநீதி, சுரண்டல் ஆகியவற்றை எதிர்ப்பை தனது வாழ்க்கை முறையாக கொண்டவர் காந்தியடிகள். ஆகையால்தான் இருபது ஆண்டுகளாக நீடித்த ஆப்பிரிக்க போராட்டம் முடிந்து இந்தியாவுக்கு திரும்பியதும் ஓய்வெடுக்காமல் பிரிட்டீஷாருக்கு எதிராக போராட துவங்கினார். இவ்வேளையில் உலகின் பல இடங்களில் நடந்த அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதில் முக்கியத்துவம் வாய்ந்தது 1938-ஆம் ஆண்டு சியோனிஸ்டுகள் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்ததை எதிர்த்து, அரபுக்களின் உரிமைகளை ஆதரித்து குரல் கொடுத்ததாகும். காந்தியின் நிலைப்பாடு சியோனிஸ்டுகளுக்கு சர்வதேச தளத்தில் மிகப்பெரிய தலைவலியாக மாறியது. அதேவேளையில் சாவர்க்கரும் அவரது கூட்டாளிகளும் சியோனிஸ்டுகளை ஆதரித்தனர். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு காந்தி அதிகாரத்தில் பங்கேற்காமல், ஓய்வெடுக்காமல் மற்றொரு போராட்டத்திற்கு செல்வார் என்பதை சியோனிஸ்டுகள் புரிந்துக்கொண்டனர். ஆதலால் காந்திக்கு தடை விதிப்பது அவர்களது முக்கிய தேவையாக இருந்தது.

இந்த பணியை ஏற்றுக் கொண்டவர்கள் இந்தியாவில் சியோனிஸ்டுகளின் நம்பிக்கை பாத்திரமான காலனியாதிக்க ஹிந்துத்துவா சக்திகளாவர். காந்தி படுகொலையின் பலனை யார் அனுபவித்தார்கள் என்பதும், யாரெல்லாம் ஆதாயம் பெற்றார்கள் என்பதையும் ஆராயவேண்டும்.முதலாவதாக, சர்வதேச தளத்தில் பெரும் சலனங்களை உருவாக்கிய காந்தியின் சியோனிஷ எதிர்ப்பு அணைந்து போனது.

இரண்டாவதாக ஆர்.எஸ்.எஸ்ஸின் காலனியாதிக்க ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் முகத்திற்கு தேசிய ஹிந்துத்துவா முக மூடியை அணியவும் சாத்தியமானது. தொடர்ந்து உருவாக்கிய முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் கொள்கையின் மூலமாக தாங்கள்தாம் ஹிந்துக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்ற உணர்வை சாமான்யர்களின் உள்ளங்களில் நிறுவுவதை முக்கிய பணியாக கொண்டு செயலாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் மிகப்பெரும் அழிவுசக்தியாக மாறிவருகிறது என்பதை அண்மையில் இந்த தேசத்தை உலுக்கிய குண்டுவெடிப்புகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

நிலமெல்லாம் ரத்தம் - 29

29 - மன்னர் ரிச்சர்டும், சலாஹுதீனும்

யுத்தங்களில் வெற்றி தோல்வி வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் இழப்புகள் அப்படிப்பட்டதல்ல. இன்றைக்குச் சாவகாசமாக, பத்தாயிரம் பேர் இறந்தார்கள், ஐம்பதாயிரம் பேர் இறந்தார்கள் என்று பழைய போர்க்கதைகளை நினைவுகூர்ந்துவிட முடிகிறது. அவை நடந்த காலத்தில் அந்தப் பேரிழப்புகள் ஒவ்வொரு தேசத்துக்கும் அளித்த வலிகள் கொஞ்சநஞ்சமல்ல. மீண்டு எழுவதற்கு எத்தனையோ பல காலம் ஆகும் என்ற கணிப்புகளையெல்லாம் தூள் தூளாக்கி, மீண்டும் மீண்டும் போர் முரசு கொட்டினார்கள் என்றால், நோக்கத்தில் எத்தனை தீவிரம் இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம்.

முஸ்லிம்களுக்கு எதிரான கிறிஸ்துவர்களின் சிலுவைப்போர்களில் ஏற்பட்ட மொத்த இழப்பு எத்தனை என்பதற்குத் திட்டவட்டமான புள்ளிவிவரங்கள் இல்லை. குறைந்தது பத்திருபது லட்சங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. நவீன ஆயுதங்கள் எதுவும் உற்பத்தி செய்யப்படாத காலகட்டத்தில் வாள்களும் விஷ அம்புகளுமே முக்கிய ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. போரில் இறந்தவர்களின் உடல்கள் பெரும்பாலும் கடலில்தான் வீசியெறியப்பட்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் ஒரு கிராமத்தையே தோண்டி மாபெரும் குழியாக்கி, மொத்தமாகப் பிணங்களைத் தள்ளி மூடியிருக்கிறார்கள் அல்லது எரித்திருக்கிறார்கள். மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டும் குன்றுகளின் சிகரங்களுக்குப் பிணங்களைக் கொண்டுபோய் வீசிவிட்டு வந்திருக்கிறார்கள். போர் புரியும் படை ஒருபுறமென்றால் இப்படிப் பிணங்களை அப்புறப்படுத்தும் படைகளே தனியாக இயங்கியிருக்கின்றன.

ஆயிரக்கணக்கான பிணங்களைத் தொடர்ந்து பார்த்தும் சுமந்தும் செல்ல நேர்கிறவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று யூகிப்பது சிரமம். மதத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகிற யுத்தம். மிகச் சிலருக்காவது அந்த இழப்புகள் ஞானத்தைத் தந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கத் தோன்றலாம். உண்மையில் மேலும் யுத்தம், மேலும் மேலும் உக்கிரமான யுத்தம் என்பதாகத்தான் இருந்திருக்கிறது. இது சுட்டிக்காட்டுவது என்னவென்றால், அரசியலைக் காட்டிலும் வீரியமுள்ளதொரு சக்தியாகவே மதம் இருந்திருக்கிறது என்பதைத்தான். இந்த யுத்தங்களின் சூத்திரதாரியாக இருந்தவர் போப்பாண்டவர் என்பதையும் இதனுடன் இணைத்து யோசிக்கலாம். அன்றைக்கு ஐரோப்பாவை ஆண்டுகொண்டிருந்த கிறிஸ்துவ மன்னர்களைக் காட்டிலும் இந்தப் போப்பாண்டவர்களுக்கு இந்த யுத்தத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்திருக்கிறது. கிறிஸ்துவர்களுக்கு யுத்தத்தில் தோல்வி ஏற்படும்போதெல்லாம் எழுச்சியூட்டும் சக்தியாக முன்னின்று செயல்பட்டவர்கள் அவர்களே. ஒவ்வொரு போப்பாண்டவர் மாறும் போதும் இந்த யுத்த நோக்கத்தைத்தான் தம் சீதனமாக அடுத்து வருபவருக்கு அளித்துவிட்டுப் போயிருக்கிறார் என்று தெரிகிறது. சரித்திரத்தின் மிகச் சூடான பக்கங்கள் இவை. இல்லாவிட்டால் சுல்தான் சலாவுதீன் ஜெருசலேத்தை வென்று, அதிகாரத்தைக் கைப்பற்றிய கொண்டாட்டங்கள் முடிவதற்குள்ளாகவே இன்னொரு யுத்தம் எப்படிச் சாத்தியமாக முடியும்?

டைர் (Tyre) நகருக்கு அகதிகளாக வந்து சேர்ந்த சிலுவைப் போர் வீரர்கள், அங்கிருந்த ஏனைய கிறிஸ்துவர்களை ஒன்று திரட்டி உடனடியாக இன்னொரு பெரிய யுத்தத்துக்கான அடித்தளத்தை மிக உறுதியாகக் கட்டத் தொடங்கியிருந்தார்கள். இந்த உடனடி எழுச்சியின் பின்னால் இருந்தவரும் அன்றைய போப்பாண்டவர்தான். அவரது உத்தரவின் பேரில் ஜெர்மனியின் அரசராக இருந்த பிரடரிக் பார்பரோஸா (Frederick Barbarossa) என்பவரும் இங்கிலாந்து மன்னரான முதலாம் ரிச்சர்டும் (King Richard 1) பிரான்ஸ் பேரரசர் பிலிப் அகஸ்டஸ் (Philip Augustus) என்பவரும் கூட்டாகப் படை திரட்டிக்கொண்டு சிலுவைப்போர் வீரர்களுக்கு உதவுவதற்காக பாலஸ்தீனை நோக்கி வரத் தொடங்கினார்கள்.

மூன்றாவது சிலுவைப்போர் என்று சரித்திரம் வருணிக்கும் இந்தக் கொடும்யுத்தம், சிரியாவின் ‘ஏக்ர்’ என்னும் கோட்டை முற்றுகையில் ஆரம்பமானது. கண் திகட்டிப் போகுமளவுக்கு சிலுவைப்போர் வீரர்கள் அக்கோட்டையின் வெளியே அலையலையாக அணிவகுத்து நின்றார்கள். அவர்களை விரட்டியடித்து எப்படிக் கோட்டையை மீட்பது என்று சுல்தான் சலாவுதீன் யோசித்தார். முற்றுகையைத் தாம் சமாளித்துக்கொண்டிருக்கும்போது எப்படியும் வேறொரு பெரிய படை பாலஸ்தீனுக்குள் நுழையப்பார்க்கும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. ஒற்றர்கள் மூலம் அந்தப் படையின் பலம் குறித்துத் தகவல் சேகரித்து அறிய விரும்பியவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

பாலஸ்தீனை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த படையை வழிநடத்தி வந்தவர், ஜெர்மானிய சக்கரவர்த்தி பிரடரிக் பார்பரோஸாவேதான்! ஆகவே, நிலைமை கைமீறிப் போய்விடக்கூடாதே என்று கவலைப்பட்ட சலாவுதீன் உதவிக்கு வரமுடியுமா என்று கேட்டு மொராக்கோவுக்குத் தூது அனுப்பினார். அங்கே அப்போது ஆண்டுகொண்டிருந்தவர் ஒரு முஸ்லிம் குறுநில மன்னர். பக்கத்தில்தான் இருக்கிறது பாக்தாத். (ஈராக்கின் தலைநகர்.) கலீஃபா என்று ஒருவர் அங்கு இருக்கவே இருக்கிறார். பெரும்பான்மை இஸ்லாமிய மக்கள் வாழும் நாடுகளெல்லாம் அவரது கட்டுப்பாட்டின்கீழ்தான் இருக்கிறது. ஆனாலும் ஏனோ தமக்குச் சம்பந்தமில்லாமல் யாரோ யாருடனோ மோதும் யுத்தம் என்பது போலத்தான் அப்போது அவர் இருந்தார். சலாவுதீனுக்கு இதில் வருத்தம் உண்டு என்றாலும் சொந்தச் சண்டைகளைப் பேசிக்கொண்டிருக்க சமயமில்லை என்பதால் உதவக்கூடியவர் என்று நம்பியே மொராக்கோ சுல்தானுக்குத் தூது அனுப்பினார்.

துரதிருஷ்டவசமாக அவர் எதிர்பார்த்த உதவி எதுவும் அங்கிருந்தும் வரவில்லை. ஆகவே, தனியொரு நபராகத் தாமே முடிவெடுத்துச் செய்யவேண்டிய யுத்தம் இது என்று முடிவு செய்தார். சிலுவைப்போர் சரித்திரத்திலேயே இது ஒரு வினோதம்தான். இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் கலீஃபாவுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாமல் ஒரு குறுநில மன்னருடன் ஐரோப்பிய தேசங்கள் மோதிய யுத்தம். சலாவுதீனுக்கு அப்படியன்றும் அதிர்ஷ்டம் முற்றிலுமாகக் காலை வாரிவிடவில்லை. யாருமே எதிர்பாராவிதமாக பாலஸ்தீனை நெருங்கும் வேளையில் ஜெர்மானிய மன்னர் பிரடரிக் ஓர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார். இதனால் நிலைகுலைந்த ஜெர்மானியப்படை கொஞ்சம் சிதறிப்போனது. அவர்களை மீட்டு ஒருங்கிணைத்து மீண்டும் யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்காக ஹென்றி என்கிற மாவீரர் ஒருவர் தலைமையில் இன்னொரு பெரிய படையை போப் அனுப்பிவைத்தார்.

கி.பி. 1190-ம் ஆண்டு ஜூலை மாதம் யுத்தம் ஆரம்பமானது. சுமார் ஒரு வருட காலத்துக்கு எந்தத் தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் நீடித்துக்கொண்டே போன யுத்தம் அது. சலிப்புற்றாவது போரை நிறுத்துவார்களா என்று உலகம் பார்த்துக்கொண்டிருந்தபோது சலாவுதீனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. ஆகவே, வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படாமல் ஓர் இடைக்கால ஏற்பாடு போல போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போர் நிறுத்தக் காலத்தை சிலுவைப்போர் வீரர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். ஐரோப்பாவிலிருந்து கப்பல்களில் வந்த ஆள்பலம் மற்றும் பொருள்பலத்தைச் சரியாகப் பங்கிட்டு முற்றுகை நடந்துகொண்டிருந்த கோட்டைகளுக்கு அனுப்பிவைத்தார்கள். கப்பலில் வந்த வீரர்களுக்குத் தலைமை தாங்கி வந்தவர்கள் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் மன்னர்கள். இந்த இருவருமே வந்து சேர்ந்த கணத்திலிருந்தே காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். செய்தி கேள்விப்பட்ட சலாவுதீன், ஐயோ பாவம், மன்னர்களுக்குக் காய்ச்சல் வந்தால் வீரர்கள் சோர்வடைந்துவிடுவார்களே என்று பிரசித்தி பெற்ற லெபனான் நாட்டு மருந்துகளையும் சுரவேகத்தைத் தணிக்கக் கூடிய மூலிகை வேர்களிலிருந்து பிழியப்பட்ட சாறுகளையும் அன்பளிப்பாக அனுப்பிவைத்தாராம்!

அந்த இரு மன்னர்களும் உடல்நலம் தேறியபிறகு மீண்டும் முற்றுகை யுத்தம் ஆரம்பமானது. ஆனால் முஸ்லிம் வீரர்கள் இம்முறை மிகவும் சோர்ந்துவிட்டிருந்தார்கள். சலாவுதீன் யோசித்தார். தமது வீரர்கள் எவரும் வீணாக உயிரிழப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. ஆகவே, ஒருவரையும் கொல்லமாட்டோம் என்று உத்தரவாதம் தந்தால் ஏக்ர் கோட்டையை விட்டுத்தந்துவிடுவதாகச் சொன்னார். சிலுவைப்போர் வீரர்கள் சம்மதித்தார்கள். கோட்டை கிறிஸ்துவர்களின் வசமானது. அதன்பிறகு நடந்ததுதான் துரதிருஷ்டவசமானது. மன்னர் சலாவுதீன் எத்தனை மனிதாபிமானமுடன் கிறிஸ்துவர்களை நடத்தினார் என்பதைச் சற்றும் நினைவுகூர்ந்து பாராமல், கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கோட்டை கைவசமானதுமே அத்தனை முஸ்லிம் வீரர்களையும் கிறிஸ்துவர்கள் நிற்கவைத்துத் தலையைச் சீவினார்கள்! (வெண்ணிறமானதொரு பெரிய மைதானம் முழுவதும் ரத்தம் படிந்து செம்மண் நிலம் போலானது என்று இதனை எழுதுகிறார் சரித்திர ஆசிரியர் மிஷாட்.)

யுத்தம் தொடர்ந்து நடைபெற்றது என்றாலும் நம்பமுடியாததொரு திருப்பமாகக் குறிப்பிடவேண்டிய விஷயம், இங்கிலாந்து மன்னர் முதலாம் ரிச்சர்டின் மனமாற்றம். சலாவுதீன் இத்தனை அன்பானவராக, மனிதாபிமானம் உள்ளவராக இருப்பார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவருடன் போரிடுவதற்கு மன்னருக்குச் சங்கடமாக இருந்தது. ஏதாவது செய்து யுத்தத்தைத் தவிர்க்க முடிந்தால் எத்தனையோ சிறப்பாக இருக்குமே என்று கூட ஒரு கட்டத்தில் யோசித்திருக்கிறார்.

அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து அரசியலில் ஏற்பட்டிருந்த சில குழப்பங்களும் இதற்குக் காரணம் என்று தெரிகிறது. ரிச்சர்ட், நாடு திரும்ப எண்ணினார். போவதற்கு முன்னால் போரை நிறுத்த ஒரு சந்தர்ப்பம் வாய்க்குமா என்று அவர் பார்த்தார். ஆகவே, சலாவுதீனின் தம்பியான சைபுதீனைச் சந்தித்துத் தம் அமைதி நாட்டத்தைத் தெரியப்படுத்தினார். அது எந்த மாதிரியான அமைதி ஒப்பந்தம், அதில் இடம்பெற்றிருந்த ஷரத்துகள் என்னென்ன என்பது பற்றிய முழு விவரங்கள் இன்று கிடைப்பதில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி மிகவும் சுவாரசியமானது.

ரிச்சர்டுக்கு ஒரு சகோதரி இருந்தார். அவர் ஒரு விதவை. அந்த விதவைச் சகோதரியை சைபுதீன் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இங்கிலாந்து மன்னரின் சகோதரியை சுல்தான் சலாவுதீனின் சகோதரர் திருமணம் செய்துகொண்டுவிட்டால் முஸ்லிம் கிறிஸ்துவர்களிடையே போர் நிறுத்தம் ஏற்படுவது ஓரளவு சுலபமாகும். (அதாவது சிலுவைப்போரிலிருந்து இங்கிலாந்து மட்டுமாவது வெளியேறும்.) திருமணம் ஆனதும் ஜெருசலேமை சைபுதீனும் மன்னரின் சகோதரியும் இணைந்து ஆட்சி செய்யலாம். இந்த ஒப்பந்தம் மட்டும் நடைமுறைக்கு வந்திருக்குமானால் சிலுவைப்போர்கள் அன்றைய தினத்துடனேயே கூட முற்றுப்பெற்றிருக்கும் என்று அங்கலாய்க்கிறார்கள் அனைத்து சரித்திர ஆசிரியர்களும். இது புரட்சிகரமான திட்டம் மட்டுமல்ல. தொலைநோக்குப் பார்வை கொண்ட யோசனையும் கூட. இரு பெரும் சமூகத்தினரிடையே மூண்டிருந்த பகைமையை நிச்சயம் தணித்திருக்கக் கூடும். ஆனால், கிறிஸ்துவ மத குருமார்கள் ஒட்டுமொத்தமாக இதனை அன்று எதிர்த்துவிட்டார்கள். மன்னர் ரிச்சர்டுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றே பேசத் தொடங்கிவிட்டார்கள். ஏற்கெனவே உள்நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களால் மனம் சோர்ந்திருந்த ரிச்சர்ட், வேறு புதிய பிரச்னைகள் வேண்டாம் என்று கடைசி நிமிடத்தில் மனம் மாறியிருக்கலாம். குருமார்களை சந்தோஷப்படுத்துவதை மட்டுமே தமது அப்போதைய நோக்கமாக வைத்துக்கொண்டு வேண்டாவெறுப்பாக ஜெருசலேம் மீது படையெடுப்பைத் தொடங்கினார்.

சுல்தான் சலாவுதீனுக்கு இங்கிலாந்து மன்னரின் மனநிலை புரிந்தது. அவரது சூழ்நிலையும் புரிந்தது. ஆகவே, மிகவும் ‘பரிவுடன்’ யுத்தத்துக்கு ஒத்துழைத்தார்! ‘நீங்கள் வேறு வழியில்லாமல் ஜெருசலேம் மீது படை எடுக்கிறீர்கள். நானும் வேறு வழியில்லாமல் உங்களை எதிர்க்கிறேன்’ என்று சொன்னாராம் சலாவுதீன்! அந்தப் போரில் ரிச்சர்டால் ஜெருசலேத்தை வெல்ல முடியவில்லை. சுல்தானின் வீரர்கள் இரும்புச் சுவர்கள் போல நகரைச் சுற்றி அணிவகுத்து ஒரு கிறிஸ்துவப் போராளியும் முன்னேற முடியாமல் தடுத்து யுத்தம் புரிந்தார்கள். தோல்விதான் என்று ரிச்சர்டுக்குப் புரிந்துபோனது. வீணாக நாட்களைக் கடத்தவேண்டாம் என்று முடிவு செய்தவராக, அவர் சலாவுதீனுக்கு ஒரு கடிதம் எழுதினார்: “உங்கள் அன்பையும் நட்பையும் மிகவும் மதிக்கிறேன். உங்களுடைய இந்த நிலத்தில் ஆட்சிபுரிய நான் விரும்பவில்லை. இதுவரை நான் வென்ற பகுதிகளை என் சகோதரி மகனான ஹென்றிக்கு அளித்து விடுகிறேன். அவன் உங்களுக்குக் கட்டுப்பட்டே ஆட்சி புரிவான். அப்படித்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்திவிட்டே செல்கிறேன். ஆனால் ஜெருசலேத்தை மட்டும் நீங்கள் எனக்கு அளித்துவிடவேண்டுமென்று வேண்டுகிறேன்.” சலாவுதீன் புன்னகையுடன் அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார். நட்பு தொடரும். ஆனால் ஜெருசலேம் கிடையாது!

மூன்றாவது சிலுவைப்போர் இப்படியாக ஒரு முடிவுக்கு வந்தது. ஒரு ஜெர்மானிய சக்கரவர்த்தியின் துர்மரணம், பல்லாயிரக்கணக்கான வீரர்களின் உயிர்த்தியாகம், ஏகப்பட்ட நோய்க்கிருமிகள் பரவியது, இங்கிலாந்து மன்னரின் மனமாற்றம், நிறைவேறாத ஓர் அமைதி ஒப்பந்தம் ஆகியவை இந்தப் போரின் எச்சங்கள். சிரியாவின் ஏக்ர் என்னும் ஒரு சிறு நகரின் கோட்டையை வெற்றி கொண்டது மட்டுமே இந்தப் போரில் கிறிஸ்துவர்கள் அடைந்த லாபம்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 3 மார்ச், 2005

Tuesday, February 12, 2013

பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது!

“பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்” இது நாம போட்ட தலைப்பில்ல CNN போட்டது

CNN தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ”பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்” என்ற தலைப்பில் பின் வரும் இணைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த நீண்ட செய்தியின் தமிழாக்கத்தை அப்படியே நேயர்களுக்கு தருகின்றோம்.



பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல் - ஜான் பிலைக் (CNN -தொலைகாட்சியின் செய்தி தொடர்பாளர்)

உடல் பலஹீனமான முதியவர் ஒருவர் சிறைச்சாலையில், குளுரில் நடுநடுங்க அமர்ந்து இருக்கிறார். முன்பு ஒருமுறை மரணத்தில் இருந்து தப்பியவர். ஆனால் இம்முறையோ மரண தண்டனை உறுதி செய்யபட்டுள்ளார்.

“ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.”2 -ம் திமோத்தேயு(4:6-7)

அந்த வயதான முதியவர் வேறு யாருமில்லை அவர் தான் பவுல். மேலே குறிப்பிட்டுள்ள பைபிளின் படி புதிய ஏற்பாட்டின் மிகவும் சோகம் தோய்ந்த பகுதியாக கிருத்தவர்களால் கருதப்படுகிறது. பவுல் மரணிக்கும் முன்பு இறுதி வார்த்தைகளாக மேற்குறிப்பிட்டவாறு கூறினார் என்று பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள் .

ஆனால் அங்கு தான் ஒரு பிரச்சனை. அதுவென்ன பிரச்சனை? அதாவது இதனை உண்மையில் பவுல் கூறவில்லை. அது அவர் சொற்கள் இல்லை !உண்மையில், பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதிக்கும் மேல் உள்ள பகுதிகளை பவுல் என்கின்ற அபோஸ்தல பெயர்தாங்கிகள் தான் எழுதினார்கள்.

“பெய்யைச் சொல்லி நல்லதைப் பரப்பினால் அது மக்களிடம் எடுபடும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் பல மக்களிடம் காணப்பட்டது” என்று மிகவும் பிரசுத்தி பெற்ற பைபிளின் முற்கால கையெழுத்து பிரதிகளையும் ஆய்வு செய்யும், மிகவும் அனுபவமிக்க கிருத்துவ அறிஞர் எஹ்ர்மன்(Ehrman) தனது புத்தகமான “போர்ஜெட்(Forged)” (போலியாக இட்டுகட்டபட்டவைகள்) என்பதில் கூறுகிறார்.

மொத்தம் உள்ள 27 புதிய ஏற்பாடு புத்தகங்களில் 11 புத்தகங்கள்பொய்யாக இட்டுகட்டபட்டவை.

இயேசுவின் சீடர்கள் எழுதிய புத்தகங்கள் என்று குறிப்பிடப்படும் பைபிளின் புதிய ஏற்பாடுகளில் சில பகுதிகளும் அவர்கள் எழுதியவை இல்லை. ஏனெனில், இயேசுவின் சீடர்கள் படிக்கவும் எழுதவும் தெரியாதவர்களாக இருந்தனர்.

இயேசுவின் சீடர்கள் படிப்பறிவில்லாத விவசாயிகளா?

எஹ்ர்மனின் இந்த புத்தகம் அவரின் மற்ற பல புத்தகங்களை போலவே பல்வேறு விதமான விமர்சனங்களை கிளப்பிய வண்ணம் உள்ளது. அதில் ஒருவர் “பென் வித்தரிங்டன் (Ben Witherington)” இவர் “”ஃபோர்ஜ்ட்” என்ற எஹ்ர்மானின் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.ஆனால், அதில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை!

வித்தரிங்டன், எஹ்ர்மனின் புத்தகத்தை “ஒரு மூர்க்க தனமான ஏமாற்று புத்தகம், இதையும் மக்கள் நம்பதான் செய்கிறார்கள்” என்று விமர்சிக்கிறார்.

வித்தரிங்டன் மேற்படி எஹ்ர்மனின் புத்தகத்துக்கு ஒரு நீண்ட விமர்சனைத்தையே எழுதியுள்ளார். அதில், புதிய ஏற்பாட்டில் II பேதுருவைதவிர ஏனையவை இயேசுவின் வாழ்வுக்கும் பவுலுக்கும் சாட்சியாயிருந்த எழுத்தறிவுள்ள மிகச்சிறு கூட்டத்தினரால் எழுதப்பட்டிருக்க முடியும் என்கிறார்.

அடுத்து II திமோத்தேயு-வில் பவுலின் கூற்றாக சொல்லப்படுவது, அவர் எழுதாவிட்டாலும் அவர் சொல்லச் சொல்ல வேறு ஒரு எழுத்தர் வருங்கால சந்ததியினருக்காக எழுதியிருக்கலாம் என்றும்,

தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய, பவுலின் மனதைப் புரிந்து கொண்ட நண்பரோ அல்லது உதவியாளரோ பவுலின் கூற்றை செவியேற்று இருக்கலாம். இது புனையப்பட்டதல்ல! மரணத்தருவாயில் இருக்கும் ஒருவரின் வாக்கு! என்கிறார் வித்தரிங்டன்.

ஆனால்எஹ்ர்மன்,பேதுருவின் (பீட்டரின்) கடிதங்களை மாத்திரம் விமர்சித்துவிட்டு மற்றவைகளை விட்டுவிடவில்லை ! அவர், பரிசுத்த சுவிசேஷங்கலாக கருதப்படும் மத்தேயு, மார்க் மற்றும் யோவான் சுவிஷங்களும் கூட அவர்கள் எழுதியவைகள் இல்லை. இதில் எந்த ஒன்றும் இயேசுவின் சீடர்களால் எழுதப்படவில்லை. அதற்க்கு இரண்டு காரணங்களையும் முன் வைக்கின்றார்.

முற்காலத்தில் எழுத பெற்ற எந்த சுவேஷங்களானாலும் அவைகளில், அதை எழுதியவர்கள் யார் என்று குறிப்பிடப்படவில்லை. ஆக சுவேஷங்களின் பெயர்களை உண்டாக்கியவர்கள் பிற்கால எழுத்தர்கள் தான் என்று கூறுகிறார்.

இதற்கும் ஒரு படி மேலே சென்று இயேசுவின் சீடர்களாக கருதப்படும் ஜான் (யோவான்) மற்றும் (பீட்டர்) ஆகிய இருவருக்கும் இன்றைக்கு பைபிளில் அவர்கள் பெயரில் உள்ள அதிகாரங்களுக்கும் எந்த விதமான சம்மதமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் இருவரும் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்று கூறுகிறார்.

இதற்க்கு சான்றாக பைபிளில் அப்போஸ்தலர் 4 : 13 இல் இயேசுவின் சீடர்களான, பேதுரு மற்றும் ஜான் இருவரும் மீனவர்களாக் இருந்தனர். இது பற்றி குறிப்பிடுகையில் “agrammatoi,(அக்ரமத்தொய்)”என்ற கிரேக்க மொழிசொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடி அர்த்தம் “எழுதப்படிக்க தெரியாதவர்கள்” என்று அவர் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருக்கும்போது எப்படி இந்த ஆகாங்களை இவர்கள் எழுதியிருப்பர் என்பதே எஹ்ர்மனின் வாதம்.

பைபிளில் பவுலின் பெயரால் எழுதப் பட்டவைகள் உண்மையான பவுலால் எழுதப்பட்டது தானா?

புதிய ஏற்பாட்டின் உண்மையான மூல பிரதியான பவுலின் கடிதங்களில் சுமார் சரிபாதி (13 கடிதங்களில் 7 கடிதங்கள்) போலியானவையே என்று ஏர்மன் கூறுகிறார்.

அவரது கடிதங்கைளை நுனுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் போது, பயன்படுத்தப்பட்ட சொற்களின் தரங்கள், மற்றும் தனது போதனைக்கு தேரந்தெடுத்த சொற்களிலுள்ள தெளிவான முரண்பாடே இதற்கு காரணம்.

அதாவது, ஒவ்வொருவரது மொழி நடையும் வித்தியாசமானது. சிலர் ரத்தினச்சுருக்கமாகவும், சில பந்தி பந்தியாகவும் எழுதுவர். ஆனால் பவுலின் கிரேக்க மொழி நடையானது முதல் ரகம். கிரேக்கத்தில் குறுகிய சொற்களையே பயன்படுத்துவார். கனகச்சிதமான வசனங்களை பயன்படுத்துவார். ஆனால் எபேசியரில் (Ephesians) பவுலின் நடைக்கு மாற்றமாக மிக நீண்ட வசனங்களைக் கொண்டதாக காணப்படுகிறது.

இவ்வாறு நீண்ட வசனங்களை பயன்படுத்தவது கிரேக்க மொழியில் உள்ளதுதான். ஆனாலும், பவுலின் மொழிநடை அவ்வாறானதல்ல என்கிறார். இந்த விமர்சனத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தமிழ் பைபிளில் எபேசியருக்கு வழங்கிய ஆசிரியர் உரை அமைந்துள்ளது.

முதலாம் கொரிந்தியரில் பவுல்,பெண்கள் அனைவரும் தேவாலயங்களில “வாய் மூடிஅமைதியாக இருக்க வேண்டும், கேள்விகள் கேட்கக்கூடாது. அப்படி ஏதேனும் சந்தேகம் இருந்தால் வீட்டில் சென்று தன் கணவனை தான் கேட்க வேண்டும்” என்கின்ற 14ம்அதிகாரத்தின் 34 மற்றும்35 வசனங்களை எஹ்ர்மன் மேற்கோள் காட்டுகிறார்.

மேலும், இதேமுதலாம்கொரிந்தியரில்11ம்அதிகாரத்தின் 5,6 மற்றும்13ஆவதுவசனங்களில் பவுல்,“பெண்கள் திருச்சபைகளுக்கு வந்து இறைவேண்டலில் ஈடுபடும் போது தலையை மறைக்கவேண்டும்” என்று கூறுகிறார்.

பவுல், 11ம்அதிகாரத்தில்பேச அனுமதித்து விட்டு 14ம் அதிகாரத்தில் பேசக்கூடாது என்று எப்படிசொல்வார்? என்று எஹ்ர்மன்கேட்கிறார். இதிலிருந்து இதற்கும் பவுலுக்கும் சம்மந்தமில்லை என்று தெரிகிறது.

ஏன்பொய்யானசெய்தியைபுனைந்தார்கள்?

பைபிளில் பொய்யான செய்திகள் புனயபட்டதற்க்கு முக்கிய காரணம் முற்கால கிறித்துவ தேவாலயங்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடுகள் தான் . கிறித்துவ தேவாலயங்கள் பெண்களை நடத்தும் விதம், தலைமைத்துவம் மற்றும் எஜமானர்களுக்கும், அடிமைகளுக்கும் இடையேயான உறவு முறைகள் போன்ற விஷயங்களில் முரண்பட்டு சிதறி கிடந்தனர், என்கிறார் எஹ்ர்மன்.

தாம் எதை நம்ப வேண்டும் என்பதை பற்றி, ஒவ்வொரு கிறிஸ்துவ பிரிவைச் சார்ந்தவருக்கு மத்தியில் பயங்கரமான கருத்து வேறுபாடுகள் நிலவின. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் வாதங்களை நிலை நிறுத்த வேதத்தின் துணையை நாடினர் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் ஒருவர் எந்த பிரிவினரையும் சாராதவராக இருப்பின், அவர் தன்னுடைய பெயரை கொண்டு எந்த ஒன்றையும் எழுதாமல் பேதுரு (பீட்டர்) அல்லது யோவான் (ஜான்)என்கின்ற பெயர்களில் தங்கள் கருத்துகளை எழுதி வெளியிட்டனர்.

ஆக இந்த ஆரம்ப முதல் நான்கு நூற்றாண்டுகளில் தான் பேதுரு, யோவான் என்கின்ற பெயர்களில் பல்வேறு நபர்கள் தங்களை ஏசுவிற்கு மிகவும் நெருங்கியவர்களாக காட்டி கொண்டு தங்களுக்கு தோன்றியதை எல்லாம் பேதுரு, யோவான்என்கின்ற பெயர்களை பயன்படுத்தி போலியாக நூற்றுக்கணக்கான செய்திகளை இட்டுகட்டினர் என்று மதிப்பிட்டு எஹ்ர்மன் கூறுகிறார்.

இதனை வித்தரிங்டன் அவர்களும் மறுக்க முடியாத காரனத்தால், முற்கால கிறித்துவ பிரிவினர்களிடையே பல்வேறு முரண்பாடுகளும் பொய்யான செய்திகளும், கட்டுகதைகளும் மிதந்து கொண்டிருந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறார் !

அதே சமயம், பேதுரு (பீட்டர்) என்பவர் மீனவர் என்கின்ற காரனத்தால் அவர் எழுத படிக்க தெரியாதவர் என்று கூறுவது சரி இல்லை என மறுக்கிறார். ஏனெனில் மீனவர்களும் கூட வியாபாரத்தில் ஈடுபடும் பொழுது கொடுக்கல் வாங்கல்களின் ஒப்பந்தங்களை செய்ய எழுத்தை கையாளுகின்றனர் என்று பேட்டி ஒன்றில் கூறுகிறார் வித்தரிங்டன்.

ஊடக பரபரப்பை மக்கள் விரும்புவதால், எர்ஹமனின் ஆக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என்று வித்தரிங்டன்கூறுகிறார்.

விவிலியத்தை பற்றிய ஞானமே இல்லாத இயேசுவை தேடக்கூடிய கலாச்சாரத்தில் நாம் வாழ்கிறோம். எந்த விதமான வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்து சொல்லலாம்.ஏனெனில் “போர்ஜெட்(Forged)” போன்ற புத்தகங்களை ஆய்வு செய்யும் மக்கள் மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ ஒரு புதிய கருத்துக்கு செல்லவாய்ப்பே இல்லை என்கிறார் வித்தரிங்டன்.

ஆனால் எஹ்ர்மனின்கோணமோ இதற்க்கு மாற்றமானது.

“போர்ஜெட்(Forged)” என்கின்ற புத்தகத்தின் மூலம் பல மக்கள் உண்மையை கண்டு கொள்வர்.நானும் கூட இந்த உண்மைகளை முதலில் ஒப்பு கொள்ள மறுத்தேன். ஆனால் இப்போது இல்லை” என்று முன்னால் கிருத்துவ அடிப்படைவாதியான எஹ்ர்மன் கூறுகிறார். தற்போது அவர் கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்கின்ற கொள்கைக்கு மாறி விட்டார் !

பைபிளின் புதிய ஏற்பாடு கடவுளின் கரம் கொண்டு எழுதப் பட்டதல்ல, மாறாக அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் மனித கரங்களின் அச்சு தான் பதிந்துள்ளது !!

“நான் இதை மக்கள் தூக்கி வீச வேண்டும் என்றோ அல்லது இது பயனுள்ள இறையியல் என்றோ சொல்லவில்லை! மாறாக இதில் பல விடயங்கள் புனையப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது”. இதிலிருந்தே பைபிள் என்பது ஒரு சராசரி மனிதனால் எழுதப் பெரும் புத்தகத்தின் அந்தஸ்தை தான் பிடிக்கும் .!! பைபிள் என்பது இறைவனிடமிருந்து பெற்ற புத்தகம் இல்லை.

ஏனெனில் பைபிளில் பல்வேறு ஆசிரியர்கள் தங்களை யார் என்றே காட்டிகொள்ளாமல் பொய்யான பெயர்கள் கொண்டு எழுதியதே இதற்க்கு போதுமான சான்று என்று கூறி முடிக்கிறார் எஹ்ர்மன் !

பைபிளில் மனிதக்கரங்கள் மலிந்து காணப்படுகின்றன. அது இறைவேதமே இல்லை! என்று நாம் பல வருடங்களாக சொல்லி வருகிறோம். அதை கிறிஸ்வதர்களுடனான நேரடி விவாதத்திலும் நிரூபித்துக்காட்டியிருக்கிறோம்.

ஆனாலும், அதை பல கிறித்தவ சகோதரர்கள் கிறித்தவத்தின் மீது இருக்கும் காழப்புணர்வினால்தான் இவ்வாறு நாம் பேசி வருகிறோம் என்று நம்மை விமர்சனம் செய்கின்றனர்.

அது உண்மையல்ல! நாம் மட்டுமல்ல, இந்த பைபிளை காய்தல் உவத்தலின்றி யார் எக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அது மனிதக்கரங்கள் விளையாடிய ஒரு புத்தகம்தான் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக இந்த கட்டுரை விளக்குவதை மறுக்க முடியாது!!!

Sunday, February 10, 2013

அப்சல் குரு தெஹல்கா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி


எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு

அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...


சிறிய சிறிய அறைகளாகத் தடுக்கப்பட்ட ஓர் அறைக்குள் நான் நுழைகிறேன். சிறைவாசிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு தடிமனான கண்ணாடிச் சுவரும், இரும்பு சன்னலும் இருக்கிறது. இருபுறமும் சுவரில் ஒலிவாங்கியும் ஒலி பெருக்கியும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலமாகவே உரையாடல் நடக்கிறது. அப்சல் எனக்காக காத்திருந்தார். அவர், நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு கம்பீரமாகவும் அமைதியாகவும் இருந்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசினோம். பதினைந்து நாட்களுக்குப் பிறகு இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது. பேட்டியை நிறைவு செய்ய வேண்டுமென்பதில் இருவருமே அவசரம் காட்டினோம். என்னுடைய சிறிய குறிப்பேட்டில் நான் குறிப்பெடுத்தேன். அப்சலுக்கு சொல்வதற்கு நிறைய செய்திகள் இருந்தன. தனிமைச் சிறையில் இருந்ததால், உலகத்தோடு தொடர்பு கொள்ள இயலாத நிலையை குறித்தே அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.

அப்சல் குறித்து பல்வேறு மாறுபட்ட பிம்பங்கள் உள்ளனவே. நான் எந்த அப்சலை இப்போது சந்தித்திருக்கிறேன்? அப்படியா? என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு அப்சல்தான். அது நான்தான். அப்படியெனில் அந்த அப்சல் யார்?

அப்சல் இளமையான, துடிப்புமிக்க, அறிவாளியான, குறிக்கோளுடைய இளைஞன். 1990களின் முன்பகுதிகளில் மாறிய அரசியல் சூழல்களால் பாதிக்கப்பட்ட பலரைப் போல நானும் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரி. ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத்தில் உறுப்பினராக இருந்தேன். அந்த அடிப்படையில் எல்லை தாண்டியவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே அந்த மாயையிலிருந்து விடுபட்டு இங்கு திரும்பி வந்து, ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ முயன்றேன். ஆனால், நான் ஒருபோதும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் என்னை கூட்டிச் சென்று, உச்சகட்ட சித்திர வதைகளை செய்தனர். உடம்பில் மின்சாரம் பாய்ச்சுவது, குளிர்ந்த நீரில் உறைய வைப்பது, பெட்ரோலில் முக்கி எடுப்பது, மிளகாய் புகையில் நிற்க வைப்பது என... வதைகளில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் நான் அனுபவித்திருக்கிறேன். பிறகு, ஒரு வழக்கில் பொய்யாக நான் இணைக்கப்பட்டேன். வழக்கறிஞர் இன்றி, நேர்மையான விசாரணையின்றி, இறுதியாக எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. காவல் துறையினர் கூறிய பொய்கள், ஊடகங்களில் பரப்பப்பட்டன.

அதுதான் ஒருவேளை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது போல, "தேசத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியாக உருவெடுத்தது. அந்த ‘கூட்டு மனசாட்சி'யை திருப்திப்படுத்த, எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த முகமது அப்சலைத் தான் நீங்கள் சந்திக்கிறீர்கள்.

வெளி உலகத்திற்கு இந்த அப்சலைப் பற்றி ஏதேனும் தெரியுமா என நான் வியக்கிறேன். நீங்களே சொல்லுங்கள்... எனது கதையை சொல்லும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதா? எனக்கு நியாயம் வழங்கப்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஒருவருக்கு வாதாட வழக்கறிஞரே வழங்கப்படாமல், நேர்மையான விசாரணையின்றி, அவன் தன் வாழ்க்கையில் சந்தித்தவற்றை கேட்காமல், அவனைத் தூக்கிலிடுவது சரியென கருதுகிறீர்களா? ஜனநாயகம் என்பது இதுவல்ல - இல்லையா?

உங்கள் வாழ்க்கையிலிருந்து தொடங்கலாமா? வழக்கிற்கு முந்தைய உங்கள் வாழ்க்கையிலிருந்து...

நான் வளரும் காலத்தில், காஷ்மீரில் ஓர் உணர்வெழுச்சிக்கான அரசியல் சூழல் நிலவியது. மக்பூர் பட் தூக்கிலிடப்பட்டார். அமைதியான வழியில் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வு காண மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதென காஷ்மீர் மக்கள் முடிவெடுத்தனர். காஷ்மீர் சிக்கலின் இறுதித் தீர்வில் காஷ்மீர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘முஸ்லிம் அய்க்கிய முன்னணி' உருவாக்கப்பட்டது. முன்னணிக்கு கிடைத்த ஆதரவு, தில்லி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக இருந்தது. இதன் விளைவாக, தேர்தலில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தன. தேர்தலில் பங்கெடுத்த மற்றும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகே, அதே தலைவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கினர். நான் அப்போது ஸ்ரீநகரில் ஜீலம் பள்ளத்தாக்கு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்தேன். எனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்க'த்தில் இணைந்தேன். அதன் உறுப்பினராக, காஷ்மீரின் அந்தப் பக்கத்திற்குச் சென்ற பலரில் நானும் ஒருவன். ஆனால், காஷ்மீர் சிக்கலில் பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் செயல்பாடு, எந்த வகையிலும் இந்திய அரசியல்வாதிகளின் செயல்பாட்டிலிருந்து மாறுபடாமல் இருப்பது கண்ட பிறகு, மாயை தெளிந்த மனதோடு சில வாரங்களிலேயே நான் இங்கு திரும்பிவிட்டேன். பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தேன். உங்களுக்குத் தெரியுமா? எல்லை பாதுகாப்புப் படையினர் எனக்கு ‘சரணடைந்த போராளி' என்று சான்றிதழ்கூட அளித்தனர். நான் புத்தம் புதிய வாழ்க்கையைத் தொடங்கினேன். என்னால் ஒரு மருத்துவராக முடியவில்லை என்ற போதும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளராக ஆகிவிட்டேன்.
எனக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் ஒரு ஸ்கூட்டர்கூட வாங்கி விட்டேன். திருமணம் செய்து கொண்டேன். ஆனால், ராஷ்டிரிய ரைபிள் படையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் துன்புறுத்தல் இல்லாமல் ஒரு நாள்கூட செல்லவில்லை. காஷ்மீரில் எங்கேயாவது போராளிகளின் தாக்குதல் நடந்தால், பொது மக்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துவிடுவார்கள். என்னைப் போன்ற சரணடைந்த போராளிகளின் நிலை இன்னமும் மோசம். எங்களைப் பல நாட்கள் பாதுகாப்பில் வைத்திருந்து, பொய் வழக்கில் இணைத்துவிடுவதாக மிரட்டினர். 22 ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சார்ந்த மேஜர் ராம் மோகன் ராய், என்னுடைய பிறப்பு உறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சினார். பலமுறை அவர்களின் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைக்கப்பட்டேன். அவர்களின் முகாம்களை பெருக்க வைத்தனர். ஒரு முறை ஹம்ஹமா அதிரடிப்படை வதை முகாமிலிருந்து தப்பிக்க, பாதுகாப்புப் படையினருக்கு என்னிடம் இருந்த அனைத்தையும் லஞ்சமாக கொடுக்க வேண்டியிருந்தது. துணை கண்காணிப்பாளர் வினய் குப்தாவும், துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங்கும் சித்திரவதைகளை மேற்பார்வையிட்டனர். வதை செய்வதில் தேர்ந்தவர்களில் ஒருவரான ஆய்வாளர் ஷண்டி சிங், நான் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொள்ளும் வரையில், மூன்று மணி நேரம் என் மீது மின்சாரத்தைப் பாய்ச்சினார். எனது மனைவி தன் நகைகளை விற்றார். மீதி பணத்திற்கு அவர்கள் எனது ஸ்கூட்டரை விற்று விட்டனர்.
நான் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் உடைந்து போனவனாக முகாமிலிருந்து திரும்பினேன். 6 மாதங்களுக்கு என்னால் எனது வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. எனது உடல் நிலை அத்தனை மோசமாக இருந்தது. எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதால், என்னால் எனது மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை. அதற்காக நான் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது.

வழக்கிற்கு வருவோம்... நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தங்களை சிக்க வைத்த நிகழ்வுகள் எவை?

சிறப்பு அதிரடிப்படை முகாம்களில் நான் கற்றுக் கொண்ட பாடங்களின் விளைவாக, துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், அவருக்காக ஒரு சின்ன வேலை செய்யச் சொன்னபோது, அதை மறுக்க எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர் அப்படித்தான் கூறினார்: ‘ஒரு சின்ன வேலை.' நான் ஒருவரை தில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். அந்த மனிதருக்காக நான் தில்லியில் ஒரு வாடகை வீட்டை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். நான் அந்த மனிதரை முதல் முறையாகப் பார்க்கிறேன். அவர் காஷ்மீரி மொழி பேசவில்லை என்பதால், அவர் வெளியாள் என சந்தேகித்தேன். அவர் தனது பெயர் முகமது என்று கூறினார் (நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய அய்வர் குழுவிற்கு முகமதுதான் தலைவர் என காவல் துறை குற்றம் சாட்டியது. அவர்கள் அனைவருமே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்).
நாங்கள் தில்லியில் இருந்தபோது, எனக்கும் முகமதுவிற்கும் தவீந்தர் சிங்கிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். அதோடு முகமது தில்லியில் நிறைய பேரை சந்தித்ததையும் நான் கவனித்தேன். அவர் ஒரு கார் வாங்கிய பிறகு என்னை திரும்பிச் செல்லுமாறு கூறினார். பரிசாக அளிப்பதாகக் கூறி அவர் எனக்கு 35,000 ரூபாய் அளித்தார். நான் ஈத்தை முன்னிட்டு காஷ்மீர் திரும்பினேன். ஸ்ரீநகர் பேருந்து நிலையத்திலிருந்து சோபூர் செல்ல முற்படும்போது, நான் கைது செய்யப்பட்டு, பரிம்போரா காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அவர்கள் என்னை சித்ரவதை செய்து, பின்னர் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து தில்லிக்கு கொண்டு வந்தனர். தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவின் வதை முகாமில் முகமதை பற்றி எனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறினேன்.
ஆனால், அவர்கள், நானும் எனது உறவினர் ஷவுகத், அவரது மனைவி நவ்ஜோத், சர் கிலானி ஆகியோர்தான் நடாளுமன்றத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும் என வற்புறுத்தினர். ஊடகங்களுக்கு முன் இதை நான் நம்பத்தகுந்த வகையில் சொல்ல வேண்டும் என கூறினர். நான் மறுத்தேன். ஆனால், என் குடும்பம் அவர்கள் கைப்பிடியில் இருப்பதாகவும், நான் ஒப்புக் கொள்ளாவிட்டால், அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். பல வெற்றுத் தாள்களில் கையெழுத்திட வைக்கப்பட்டேன். காவல் துறையினர் சொன்னதை ஊடகங்களிடம் சொல்லி, தாக்குதலுக்கும் பொறுப்பேற்குமாறு வற்புறுத்தப்பட்டேன். சர் கிலானி அவர்களின் பங்கு குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, கிலானி குற்றமற்றவர் என்று நான் கூறினேன். சொல்லிக் கொடுத்ததை தாண்டி நான் பேசியதற்காக, உதவி கமிஷனர் ராஜ்பீர் சிங், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே என்னிடம் கத்தினார்.
மறுநாள் ராஜ்பீர் சிங், எனது மனைவியிடம் நான் பேச அனுமதித்தார். அதன் பிறகு, அவர்களை நான் உயிருடன் பார்க்க வேண்டுமெனில், நான் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். எனது குடும்பத்தை நான் உயிருடன் பார்க்க வேண்டுமானால், குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழியாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு நான் விடுதலையாகிவிடும் வகையில் எனது வழக்கை பலவீனமாக அமைப்பதாக சிறப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி அளித்தனர். என்னை அவர்கள் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, முகமது பலவிதப் பொருட்களை வாங்கிய கடைகளை காட்டினர். இதன் மூலம் வழக்கிற்கு என்னை சாட்சியாக மாற்றினர். நாடாளுமன்றத் தாக்குதலின் பின்னிருந்த மூளையை கண்டுபிடிக்க இயலாத தங்கள் தோல்வியை மறைக்க, காவல் துறையினர் என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். மக்களை அவர்கள் முட்டாள்களாக்கிவிட்டனர். நாடாளுமன்றத் தாக்குதல் யாருடைய திட்டம் என்பது, இன்னமும் மக்களுக்குத் தெரியாது. காவல் துறை அதிகாரிகள் பதக்கங்கள் பெற்றனர். எனக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.

உங்களுக்கு ஏன் சட்டப்பூர்வமான உதவிகள் கிடைக்கவில்லை?

எனக்காக முறையிட யாருமே இல்லை. நீதிமன்ற விசாரணை தொடங்கி ஆறு மாதங்கள் வரையில் எனது குடும்பத்தைக்கூட நான் சந்திக்கவில்லை. பாட்டியாலா இல்ல நீதிமன்றத்தில் அவர்களை சந்தித்தபோது, அது மிகக் குறைவான நேரமே நீடித்தது. எனக்காக வழக்கறிஞரை ஏற்பாடு செய்ய யாரும் இருக்கவில்லை. சட்ட உதவி இந்நாட்டில் அடிப்படை உரிமையாக இருந்த காரணத்தினால், எனக்காக வாதாட நான்கு வழக்கறிஞர்களை நான் பரிந்துரை செய்தேன். ஆனால், அவர்கள் நால்வருமே என் வழக்கை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டதாக நீதிபதி எஸ். என். திங்கரா கூறினார். நீதிமன்றம் எனக்காக தேர்ந்தெடுத்த வழக்கறிஞர், மிக முக்கிய ஆவணங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளத் தொடங்கினார். உண்மை என்னவென்று அவர் என்னிடம் கேட்கவே இல்லை. பின்னர் நீதிமன்றம் ஒரு நடுநிலையாளரை நியமித்தது. எனக்காக வாதாட அல்ல; நீதிமன்றத்திற்கு உதவி செய்ய. அவர் என்னை சந்திக்கவே இல்லை. மேலும், அவர் எனக்கு மிகவும் எதிரானவராகவும், மதவாதியாகவும் இருந்தார். அதுதான் எனது வழக்கு. மிக முக்கிய விசாரணைக் காலத்தில் எந்த விதத்திலும் எடுத்துரைக்கப்படாதது. என்னைக் கொல்வதுதான் உங்கள் நோக்கம் என்றால், எதற்காக இத்தனை நீளமான சட்ட வழிமுறைகள்? எனக்கு அவை அனைத்துமே மிகவும் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. நான் சொல்வதெல்லாம் இதுதான்: கண்மூடித்தனமான தேசிய உணர்வும், தவறான புரிதல்களும், சக குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்குமாறு செய்ய விட்டுவிடாதீர்கள்.

சிறையில் என்ன நிலையில் வைக்கப்பட்டுள்ளீர்கள்?

உயர் பாதுகாப்பு தொகுதியில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். பகலில் மிகக் குறைவான நேரம் மட்டுமே நான் எனது அறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறேன். வானொலியோ, தொலைக்காட்சியோ கிடையாது. நான் சந்தா கட்டியுள்ள நாளேடுகள்கூட பல பகுதிகள் கிழிக்கப்பட்டே என்னை வந்தடைகின்றன. என்னைப் பற்றி ஏதேனும் செய்தி வந்திருந்தால், அதைக் கிழித்துவிட்டு எஞ்சிய பகுதிகளை மட்டுமே எனக்கு அளிக்கின்றனர்.

தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையைத் தவிர, தாங்கள் மிக அதிகமாக அக்கறை கொள்ளும் விஷயங்கள் என்ன?

பல விஷயங்கள் மீது எனக்கு அக்கறை உள்ளது. நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் பல சிறைகளில், வழக்கறிஞர்கள் இன்றி, விசாரணையின்றி, எந்தவித உரிமையும் இன்றி வாடுகின்றனர். காஷ்மீரின் தெருக்களில் நடமாடும் பொது மக்களின் நிலை இதிலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதல்ல. காஷ்மீர் பள்ளத்தாக்கே ஒரு திறந்த வெளி சிறைதான். அண்மைக் காலங்களில் பொய்யான மோதல் சாவுகள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இது பனிப்பாறையின் சிறுமுனை மட்டுமே. ஒரு நாகரீக நாட்டில் நீங்கள் பார்க்க விரும்பாத அத்தனையும் காஷ்மீரில் இருக்கின்றன. உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடக்கிறது...
எனக்கு அநீதி இழைக்கப்பட்டதென சொல்ல முன் வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வழக்கறிஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அவர்கள் அனைவரும், அநீதிக்கு எதிராக வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் ஒரு மகத்தான செயலை செய்கிறார்கள். தொடக்கக் காலங்களில், 2001இல் வழக்கு விசாரணையின் தொடக்க நாட்களில், நீதியை நியாயத்தை விரும்புபவர்கள் வெளிப்படையாகப் பேசுவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது. உயர் நீதிமன்றம் சர் கிலானியை குற்றமற்றவர் என விடுவித்தபோது, காவல் துறையின் முடிவை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். மேலும் அதிகமாக மக்கள் வழக்கின் விவரங்களையும், உண்மைகளையும் அறிந்து, பொய்களைத் தாண்டியும் பார்க்கத் தொடங்கிய பிறகு, பேசவும் தொடங்கினர். நீதியை நியாயத்தை விரும்புபவர்கள், அப்சலுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என சொல்ல முன்வருவது இயற்கையானது, ஏனெனில், அதுதான் உண்மை.

தங்கள் மனைவி தபஸ்சும், மகன் காலிப் இவர்களைப் பற்றி நினைக்கும்போது தங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

எங்களுக்கு திருமணமான பத்தாவது ஆண்டு இது. அதில் பாதியை நான் சிறையில் கழித்திருக்கிறேன். அதற்கு முன்னால், காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினரால் நான் பலமுறை கைது செய்யப்பட்டு வதை செய்யப்பட்டுள்ளேன். தபசும் எனது உடல் மற்றும் மனப்புண்களுக்கு சாட்சியாக இருந்துள்ளார். பலமுறை நிற்கக்கூட இயலாதவனாக நான் வதை முகாமிலிருந்து திரும்பியுள்ளேன். எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது உட்பட, பல வகையான கொடுமைகளை அனுபவித்துள்ளேன். அவர்தான் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்தார். ஒரு நாள்கூட நாங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழவில்லை. இதுதான் பல காஷ்மீரி இணையர்களின் கதையாக இருக்கிறது. காஷ்மீர் இல்லங்கள் அனைத்திலும் அச்சமே முக்கிய உணர்வாக உள்ளது.

தங்கள் மகன் என்னவாக வளர வேண்டும் என விரும்புகிறீர்கள்?

தொழில் ரீதியாக என்றால், மருத்துவராக வேண்டும். அது என்னுடைய நிறைவேறாத கனவு. ஆனால், அதைவிட முக்கியமாக, அவன் அச்சமின்றி வளர வேண்டும் என நான் விரும்புகிறேன். அவன் அநீதிக்கு எதிராகப் பேச வேண்டும் என விரும்புகிறேன். அநீதியின் கதையை என் மனைவியையும் மகனையும் விட, வேறு யார் அதிகமாக அறிவார்கள்?
நாடாளுமன்றத் தாக்குதலில் 13 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன...
உண்மையில், தாக்குதலில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், என்னைப் போன்ற ஓர் அப்பாவியை தூக்கிலிடுவது, அவர்களை திருப்திப் படுத்தும் என அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். தேசியவாதத்தின் மிக சிதைக்கப்பட்ட நோக்கத்திற்காக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை செய்திகளின் ஊடாகப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வாழ்க்கையின் சாதனையாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

ஒரு வேளை எனது மிகப் பெரிய சாதனை என்பது, எனது வழக்கின் ஊடாகவும், எனக்கு நடந்த அநீதிக்கு எதிரான பிரச்சாரத்தின் காரணமாகவும், சிறப்பு அதிரடிப்படையினரின் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பாதுகாப்புப் படையினர் மக்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்கள், மோதல் கொலைகள், காணாமல் போனவர்கள், வதை முகாம்கள் போன்றவற்றைப் பற்றி மக்கள் இன்று விவாதிப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவைதான் ஒரு காஷ்மீரி நேரடியாக கண்டு வளரும் சூழல். இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் என்ன செய்கின்றனர் என்பது குறித்து காஷ்மீருக்கு வெளியிலிருக்கும் மக்களுக்கு எதுவும் தெரியாது.

காதை கிழிக்கும் மின்சார மணி அடிக்கிறது. இதுதான் நான் அப்சலிடம் கேட்ட இறுதிக் கேள்வி)
நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்?

அப்சலாக... முகமது அப்சலாக... நான் காஷ்மீரிகளுக்கு அப்சல்... இந்தியர்களுக்கும் நான் அப்சல்தான். ஆனால், இந்த இரு பிரிவினருக்கும் என்னைப் பற்றி முற்றிலும் முரண்பாடான புரிதல்கள் உள்ளன. நான் இயல்பாக காஷ்மீரி மக்களின் முடிவையே நம்புவேன். நான் அவர்களில் ஒருவன் என்பதால் மட்டுமல்ல; நான் சந்தித்த எதார்த்தங்களை அவர்கள் நன்கு அறிவர் என்பதாலும்! எந்தவித சிதைக்கப்பட்ட வடிவமும் அவர்களை தவறாக வழிநடத்த முடியாது. அது வரலாறாக இருந்தாலும் ஒரு நிகழ்வாக இருந்தாலும்.

பூங்குழலி - தலித் முரசு மார்ச் 2007 இதழில் வெளிவந்த தமிழாக்கம்