அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-10-12 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் நாகை மாவட்டம் திட்டச்சேரி-கொந்தையை சேர்ந்த சகோ.அன்பழகன்(கறுப்பு சட்டை, பேண்ட் அணிந்திருப்பவர்) தூய இஸ்லாத்தினை ஏற்றார். அவருக்கு சகோ. இஸ்மத் மற்றும் உபைதுற் ரஹ்மான் ஏக அல்லாஹ்வின் வல்லமை பற்றியும் இஸ்லாம் பற்றியும் எடுத்துரைத்து கலீமாவை சொல்லிக்கொடுத்தனர். அவர் தன் பெயரை ஹபீபுல்லாஹ் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.
Sunday, October 21, 2012
ஜித்தா-ஸாகர் கிளையில் பிரசுரம் விநியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஸாகர் கிளை மூலம் 21-10-12 ஞாயிறு அன்று அப்பகுதியில் வாழும் தமிழ் முஸ்லீம்கள் வாழும் வீடுகளில் அரஃபா நோன்பை வலியுறுத்தும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 19-10-12 அன்று அஸர் தொழுகைக்குப்பின் தபூக் சுலைமானியா பகுதியில் குடிநீர் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இலங்கை சகோதரர் மாரனுக்கும், சுகுந்தனுக்கும், கேரளாவைச் சேர்ந்த ராமனுக்கும் அவர்களது கடையில் சென்று கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தைப்பற்றி எடுத்துக்கூறி, இஸ்லாத்தின்பால் அழைப்புவிடுத்தார்கள். மேலும் அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து முக்கிய 20 நூல்களும், 20 சி.டிக்களும் வழங்கி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
ஜித்தா மண்டல பிரசுர விநியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், 20-10-12 சனி அன்று ஜித்தா மண்டலம் சார்பாக அரஃபா நோன்பை வலியுறுத்து பிரசுரம், ஜித்தா அஜீஸியா, பகுதியில் உள்ள தமிழர் சார்ந்த நிறுவனங்களில் அனைவருக்கும் விநியோகிக்கும் வகையில் 100 நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
ஜித்தா - ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான்.
அல்லாஹ்வின் பேரருளால், 19/10/2012 வெள்ளி அன்று மஃரி தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் மண்டல
தாயி சகோ. ஜஃபர் அலி அவர்கள், "அர்ஷின் நிழலில் 7 வகையினர்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் து.ஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, October 20, 2012
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் ஹஜ் செயல்முறை விளக்கம் (பாகம்-2)
அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் TNTJ
ஜித்தாஹ் மண்டலம்
தபூக் கிளையில், கடந்த 19/10/2012 வெள்ளி அன்று காலை 10 முதல் 11:30 மணி வரை {சமீபத்தில் புதிதாக} இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன்ஸ் சகோதரிகளுக்கு "நபிவழியில் நம்ஹஜ்" (பகுதி-2) செயல் முறை விளக்கம் வகுப்பு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் துணைவியார் சகோதரி சுமையாஹ்
அவர்கள், இவ் வருடம் ஹஜ்ஜிக்கு செல்லவிருக்கும் 15 புதிய முஸ்லீம் பிலிப்பைன்ஸ் சகோதரிகளுக்கு
புரெஜக்டர் முலம் நேரடி வீடியோ காட்சிகளுடன் நபிவழியில் நம்ஹஜ் செயல்முறை விளக்கமளித்தர்கள். மேலும், "இபுறாஹீம்
நபியின் தியாக வரலாறு” என்ற தலைப்பில் இபுறாஹீம் நபி அவர்களின் குடும்பத்தாரின் தியாகங்களையும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் {சமீபத்தில் புதிதாக} இஸ்லாத்தை தழுவிய 30திற்கும் மேற்பட்ட
பிலிப்பைன்ஸ் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சாளர் பயிற்சி முகாம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 19-10-2012 வெள்ளியன்று காலை 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் முதல் கட்ட பேச்சை முன் உதரணமாக பேசியவுடன் பின்பு ஒருவர் பின் ஒருவராக தபூக் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மற்றும் கொள்கை சகோதரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். மேலும் து.ஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
TNTJ தபூக் கிளையில் வாராந்திர பயான்
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 19-10-2012 வெள்ளி அன்று ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "இபுறாஹீம் நபியின் தியாக வரலாறு" என்ற தலைப்பில், குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "இறைத்தூதர்களும், எதிப்பாளர்களும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் "மூமின்கள்கள் யார்?" என்ற தலைப்பிலும் மிகச்சிறப்பாக சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.
நபிவழி துஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)







