Monday, July 30, 2012

ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான்(நாள்-11)

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் -30-07-2012 திங்கள் அன்று ரமளான் பிறை 11 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி"  என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 11 ஆம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-செனையா கிளையில் ஆலோசனைக்கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் ஆலோசனை கூட்டம் 27/07/2012 வெள்ளி அன்று மாலை கிளை தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் எல்லோரும் 5 நிமிடம் ரமலான்  மற்றும் குர்ஆன் தலைப்பில் குர்ஆன் வசனங்களும், ஹதீஸூம் பற்றி உரையாற்றினார்கள். இதற்கு சகோ.அப்துல் ஹக்கீம் இப்ஃதார் ஏற்பாடு செய்திருந்தார். அல்ஹம்துலில்லாஹ். 


ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் 29-07-2012 ஞாயிறு அன்று ரமளான் பிறை 10ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி"  என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 10ம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, July 29, 2012

TNTJ மாணவரணி முகநூல் பக்கம்_TNTJ STUDENT WING FACEBOOK PAGE

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணியின் முகநூல் பக்கம்.

அஸ்ஸலாமு அலைக்கும்

இஸ்லாமியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறந்த இடத்தை அடைய ஆரம்பிக்கப்பட்டுள்ளது, நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறோம் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்

அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக !


TNTJ student Wing Facebook Page

Assalaamu alaikum

This page has been started to make sure that the muslim community acheive the best place in Education and Jobs. I hope you will like this please introduce to your friends as well

jazakkallah !

தங்களது இக்காமாவில் எத்தனை SIM கார்டுகள், லேன்ட் லைன்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தங்களது இக்காமாவில் எத்தனை SIM கார்டுகள், லேன்ட் லைன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை எந்த செலவுமின்றி அறிய கீழ்க்கண்ட முறையை பின்பற்றவும்.

STC: 902 என்ற எண்ணுக்கு 9988 என்ற எண்ணை டைப் செய்து SMS அனுப்பவும்.

MOBILY: 616166 என்ற எண்ணுக்கு எதுவுமே டைப் செய்யாமல்  SMS அனுப்பவும்.

ZAIN: 700123 என்ற எண்ணுக்கு எதுவுமே டைப் செய்யாமல்  SMS அனுப்பவும்.

தாங்கள் பயன்படுத்தும் மொபைல் சிம், தங்களது இக்காமாவில் பதிவு செய்யப்பட வில்லை எனில். உடன் அருகில் உள்ள STC/Mobily/Zain அலுவலகத்திற்குச் சென்று பதிவு செய்து கொள்ளவும்.

மேலும், ஏற்கனவே STC யில் தங்களது இக்காமா மூலம் "சிம்" எடுத்துள்ளவர்களும், அந்த "சிம்" மிலிருந்து 5855 என்ற எண்ணிற்கு தங்களது இக்காமா எண்ணை டைப் செய்து அனுப்பி உறுதி செய்து கொள்ளவும்.


ஜித்தா-தபூக் கிளை இஃப்தார் மற்றும் பயான்


அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் 28-07-2012 சனி அன்று ரமளான் பிறை 9ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள “தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி”  என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  “ரமளானின் சிறப்புகள்” என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 9ம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, July 28, 2012

2012 ம் வருட ஃபித்ரா தொகை


ஜித்தா மண்டல நிர்வாகக்குழு மஷூரா


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-07-2012 வெள்ளி அன்று இஷா தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டல நிர்வாகக்குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ.நௌஷாத் தலைமையில் அரப்லங்கா உணவகத்தில் நடைபெற்றது. இதில் ஃபித்ரா தொகை திரட்டுவது பற்றியும், மண்டல இஃப்தார் நிகழ்ச்சி பற்றியும், விடுமுறை பயண நிகழ்ச்சி பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.