Saturday, July 28, 2012

ஜித்தா மண்டல கல்வி உதவி தொகை



கடந்த  24-07-2012 அன்று தஞ்சை தெற்கு அதிராம்பட்டினம் கிளையிலிருந்து அவ்வூரை சேர்ந்த சகோ. ஆயிஷா அம்மாளுக்கு கல்வி உதவி கோரி பரிந்துரை கடிதம் ஜித்தா மண்டலத்திற்க்கு வந்தது. அதனை பரிசீலித்து மாநில தலைமைக்கும் அனுப்பி உறுதி செய்துகொண்டபின் அவர்கள் கேட்டுக்கொண்ட 6000 ரூபாய்க்கான தொகையை சௌதி ரியாலாக அவர்களின் உறவினர் சகோ.நவாஸிடம் மண்டல நிர்வாகிகளால்  27-07-2012 வெள்ளி அன்று ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி வகுப்பு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடநத 23-07-2012 வியாழன் அன்று இரவு 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு கிளை தலைவர்  சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில்  தபூக்  கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் ஆர்வத்துடன் திரளாக கலந்துக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். மேலும் து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Friday, July 27, 2012

ஜித்தா-தபூக் கிளையில் தர்பியா வகுப்பு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்   தபூக்  கிளையில் 26-07-2012 வியாழன் அன்று இரவு 2 முதல் 4 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது. இதில் கிளை தலைவர்  சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்:   “வழிகெட்டக் கொள்கைகள்” [பகுதி-16] “முதஷாபிஹாத்”  இரு பொருள் தரும் வார்த்தைகள், என்ற தலைப்பில் சகோ, பி.ஜெ அவர்கள் உரையின் வீடியோ காட்சிகளுடன்,  குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில்  எடுத்துரைத்தார்கள். இதில்  தபூக்  கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர்.மேலும் து.ஆ வுடன் இரவு [ஸஹர்] உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளை மர்கஸில் 27-07-2012 வெள்ளி அன்று ஜூ.ம்ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் “இறையச்சம் (கை) கூடியதா?” என்ற தலைப்பில், நோன்பின் தாத்பரியத்தையும், அதை கடமையாக்கிய அல்லாஹ்வின் நோக்கத்தையும் எடுத்துரைத்தார்கள். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் “கடந்து வந்த பாதை” என்ற தலைப்பிலும்,  கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் “உறுதி ஏற்போம்” என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்  பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான்(நாள்-8)


அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் 27-07-2012 வெள்ளி அன்று ரமளான் பிறை 8ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள “தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி”  என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  “ரமளானின் சிறப்புகள்” என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 8ம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான் (நாள்-7)


அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் 26-07-2012 வியாழன் அன்று ரமளான் பிறை 7ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள “தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி”  என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  “ரமளானின் சிறப்புகள்” என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 7ம் பாகத்தை உரை  நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

உலகில் சோம்பேறிகள் அதிகம் கொண்ட முதல் 20 நாடுகள்‏

உலக மருத்துவ கம்பெனிகள் இணைந்து நோய்கள் அதிகம் வருவது ஏன் என்றும் அதிலும் குறிப்பாக இதய நோய்கல், இரண்டாம் நிலை சக்கரை நோய்கள் மற்றும் மார்பக, மூட்டு கேன்சர்கள் ஏன் வருகின்றது என்று ஆராய்ந்ததில் உழைப்பு குறைந்து சோம்பேறித்தனம் அதிகமானதே என்று கண்டறிந்த்துள்ளனர். அதற்க்காக 122 நாடுகளை சேர்ந்தவரகள் ஆராய்ந்தது முதல் 20 நாட்டினர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். நீங்கள் நினைப்பது புரிகிறது. இந்தியாதானே? முதல் 20ல் எப்படியோ அந்த பட்டியலில் இடம்பெற தவறிவிட்டது. சரி பட்டியலை பார்ப்போம்.

எண்நாடுசதவீதம்
1 Malta71.90%
2Swaziland69.00%
3Saudi Arabia68.80%
4Serbia68.30%
5Argentina68.30%
6Micronesia66.30%
7Kuwait64.50%
8United Kingdom63.30%
9United Arab Emirates62.50%
10Malaysia61.40%
11Japan60.20%
12Dominican Republic60.00%
13Namibia58.50%
14 Iraq58.40%
15Turkey56.00%
16Cyprus55.40%
17Italy54.70%
18Ireland53.20%
19South Africa52.40%
20Bhutan52.30%

Thursday, July 26, 2012

இந்த வார உணர்வு 16 : 48 இதழில்….

1. திக்குமுக்காட வைத்த திருப்பூர் விவாதம்
‎
2.‎ குஜராத் பெஸ்ட் பேக்கரி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள்! ‎‎(உணர்வலைகள்)‎
‎
3.‎ போலீசாரால் விரட்டியடிக்கப்பட்ட போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர்!‎
‎
4.‎ பெண் விடுதலைப்புலி சொல்லும் உண்மைத் தகவல் – நாடும் நடப்பும்!‎
‎
5.‎ கருவியல் – பாகம் – 7‎
‎
6.‎ பேய் பிசாசுகளை துரத்தியடித்த டிஎன்டிஜே!‎
‎
7.‎ மதக்கலவரத்தை தூண்டும் நில அபகரிப்பாளர்கள்!‎
‎
8.‎ ஜெ.வுக்கு தமிழக முஸ்லிம்கள் நன்றி!‎
‎
9.‎ மோடிக்கு சூடு போட்ட நீதிமன்றம்!‎
‎
10.‎ காலியாகும் ம.ம.க.வின் கூடாரம்!‎
‎
11.‎ நீங்களும் செய்யலாமே – வித்தியாசமான முயற்சி! பட்டாபிராம் ‎கிளையின் அதிராடி புக்ஸ்டால் தாவா!!‎
‎
12.‎ இனியாவது சிந்திப்பார்களா? ‎
‎
13.‎ பதவி வெறி என்றால் என்ன பாடம் நடத்திக்காட்டிய வாத்தியார்!‎
‎
14.‎ குருமூர்த்தியின் கொலைவெறி – நிறைவு
‎
15.‎ ‎4 துணைவேந்தர்கள் நியமனம்: முஸ்லிம்களை ஓரம் கட்டிய அ.தி.மு.க ‎அரசு
‎
16.‎ உ.பி. உள்ளாட்சித் தேர்தலும், ஊடகங்களின் காமாலைப் பார்வையும்!‎
‎
17.‎ ஊழல் வழக்கில் கைதான 3 நீதிபதிகள்
‎
18.‎ ‎1870 வி.ஏ.ஓ. பணி இடங்கள் நிரப்பப்படும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
‎
19.‎ உத்தர்கண்ட் இடைத் தேர்தல்: மண்ணைக் கவ்விய பா.ஜ.க.!‎
‎
20.‎ வக்ஃபு வாரிய உறுப்பினர்கள் நியமனத்தில் ஏமாற்றம்! – பிரணாப்பை ‎ஆதரித்த சட்டமன்ற ஜனாஸாவின் பின்னணி
‎
21.‎ குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை!‎
‎
22.‎ விருதுநகர் மாவட்ட டிஎன்டிஜேவின் மெய்சிலிர்க்க வைக்கும் ‎மனிதநேயப்பணி!‎
‎
23.‎ அல்லாஹ்வுடைய சட்டத்தை அழிக்க துடிக்கும் இஸ்லாமிய ‎போராளி(?)‎

ஜித்தாவில் உணர்வு மற்றும் ஏகத்துவம், தீன்குலப்பெண்மனி சம்பந்தமான தொடர்புக்கு:- ஹக்கீம்(மண்டல து.செயலாளர்) 0564907446