Saturday, September 12, 2009

ஜித்தாவில் நடைபெற்ற இஃப்தார் விருந்து

கடந்த 11-9-2009 அன்று வெள்ளிக் கிழமை மாலை 5-30 முதல் இரவு 8-30 வரை இரண்டு அமர்வாக இஃப்தார் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஜித்தா மண்டல தாஃயி சகோ.சௌகத் ஹூஸைன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முதல் அமர்வில் சகோ. பஸீர் மௌலவி அவர்கள் ”அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள்”’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

துஆ, இஃப்தார் மற்றும் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரண்டாம் அமர்வில் சகோ. பிர்னாஸ் மௌலவி அவர்கள் ”’நோன்பின் நோக்கம் இறையச்சம் ஒன்றே”’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஜித்தாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வந்து 600 க்கும் மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.

இறுதியாக சகோ.முகையதீன் அவர்களின் நன்றியுரைக்குப் பின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறையுற்றது.

நிகழ்ச்சி நிறைவுற்ற பின் சகோ.பி.ஜெயினுலாபிதீன் அவர்கள் எழுதிய திருமறையின் தோற்றுவாய் என்ற தலைப்பிலான புத்தகம் இலவசமாக கொடுக்கப் பட்டது. TNTJ ரியாத் மண்டலம் புத்தகம் அனுப்பி உதவியது.



Friday, September 4, 2009

அல்-பஹா கிளையில் நடைபெற்ற பொதுக்குழு!

ஜித்தா மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் 08 ஆகஸ்ட் 2009 அன்று ஜித்தாவில் உள்ள அல்-பஹா கிளை பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் அல்-பஹா கிளை புதிய தலைவராக செய்யது அப்துல்காதர்(மேலப்பாளையம்), செயலாளராக அக்பர் அலி(மயிலாடுதுரை), பொருளாளராக அப்துல் ஹமீது(மன்னார்குடி) ஆகியோர் மற்றும் துணை செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்திற்கு மண்டல பொருளாளர் நவ்ஷாத், மண்டல பொதுச்செயலாளர் அப்துல் பாரி மண்டல துணை பொதுச்செயலாளர் அஹ்மது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.