Saturday, January 7, 2017

அல்சலாமா கிளை பயான்

1/6/17, 10:39:49 PM: Mohamed Ali Salama TNTJ: இன்று வெள்ளிக்கிழமை 6/01/2017 மக்ரிப்-இஷாவரை ஜித்தா மண்டலம் அல் ஸலாமா கிளையில்மறுமை நாள் என்ற தலைப்பில் சகோ அபுபக்கர் சித்தீக் உரை நிகழ்த்தினார் 30க்கு அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் .
அல்ஹம்துலில்லாஹ்

தனி நபர் தஃவா

1/6/17, 10:15:53 PM: Maheen TNTJ: இன்று 06/01/2017 வெள்ளிக்கிழமையன்று ஜித்தா சுலைமானியா கிளை சார்பாக ஹைஅல்ரிஹாப் பகுதியில் முருகன் என்ற சகோதரருக்கு தாவா செய்யப்பட்டது.
உடனிருந்தவர்கள்
முஹம்மது இப்ராஹிம்,
ஹபீப்,
ரியாஸ்

Friday, January 6, 2017

மதீனா கிளை பயான்

1/6/17, 2:15:56 PM: Mujib Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளை மர்கஸில் 6.1.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது அதில் சகோ.கஸாலி "ஹிஜ்ரத்தும் அதன் படிப்பினைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇
1/6/17, 2:25:45 PM: Mujib Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளை டிஎன்டிஜே மர்கஸில் 6.1.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு வாராந்திர பயானை தொடர்ந்து வாரம் ஒரு தகவலில் சகோ.சிவகாசி நிஜாம் "நாடும் நடப்பும் " என்ற தலைப்பில் சிறு உரை நிகழ்த்தினார் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

ஜீசான் கிளை பயான்

1/6/17, 2:41:53 PM: Riyas Jizan TNTJ: 🎤அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வின் உதவி கொண்டு நேற்று வியாழன் இரவு 10:30 மணிக்கு ஜித்தா மண்டலம் ஜீசான் கிளையை சார்ந்த தமத் என்ற ஊரில் சகோதரர் கும்பகோணம் சாதிக் அவர்களின் வீட்டில் ஆன்லைன் பயான் நடைபெற்றது இதில் ஜித்தா மண்டலத்தில் இருந்து சகோதரர் ஜமால் பாய் அவர்கள் அலச்சியப்படுத்தப்படும் அமல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, January 4, 2017

ஹதீஸில் துஆக்கள்

காலையில் ஓத வேண்டிய துவா: நமது நபிகள் நாயகம் சொல்லி கொடுத்தது நாமும் ஓதுவோம்
காலையில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ولَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذَا الْيَوْمِ وَخَيْرَ مَا بَعْدَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذَا الْيَوْمِ وَشَرِّ مَا بَعْدَهُ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
அஸ்பஹ்னா வஅஸ்பஹல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதல் யெவ்மி வ கைர மா பஃதஹா, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி ஹாதல் யெவ்மி வ ஷர்ரிமா பஃதஹா, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி
பொருள் : (அல்லாஹ்வின் கிருபையால்) நாம் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். ஆட்சியும் அல்லாஹ்வுக்கே! புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே! வணங்கப்படுபவன் அல்லாஹ்வைத் தவிர (வேறு) இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. அவனுக்கே ஆட்சி உரியது. அவனுக்கே எல்லா புகழும் உரியது. அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். என் இரட்சகா! இந்நாளின் நன்மை மற்றும் இ(ந்நாளான)தற்கு பிறகுள்ள நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன். இன்னும் இந்நாளில் ஏற்படும் தீமை மற்றும் இ(ந்நாளான)தற்கு பிறகுள்ள தீமையிலிருந்து உன்னை கொண்டு நான் காவல் தேடுகிறேன். என் இரட்சகா! நரகத்தில் உள்ள வேதனை மற்றும் கப்ரில் உள்ள வேதனையிலிருந்து உன்னிடம் நான் காவல் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம்


Sent from my iPhone

தர்மத்தின் சிறப்புகள்

தர்மத்தின் சிறப்புகள்
எம். ஷம்சுல்லுஹா
குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே!
ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி),
நூல்: புகாரி 55
அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்..
அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கின்றான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது "நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்' என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர், தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்துபவர் ஆகியோர் ஆவர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 660
இறந்தவருக்காக தர்மம்
ஸஅத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் இது அவருக்குப் பயனளிக்குமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்! என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத் (ரலி) அவர்கள், "நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகின்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 1388, 2756


Sent from my iPhone