Friday, December 14, 2012
TNTJ ஜித்தா-ஷாகாகா கிளையில் குர்ஆன் வகுப்பு
Saturday, November 24, 2012
ஜித்தா-ஷகாகா கிளை மார்க்க உரை
Wednesday, November 14, 2012
ஜித்தா-ஷகாகா கிளையில் மார்க்க உரை
Sunday, October 21, 2012
ஜித்தா-ஷகாகா கிளையில் மார்க்க உரை
ஜித்தா-ஷகாகா கிளையில் இஸ்லாத்தை தழுவிய அன்பழகன்
Sunday, September 30, 2012
ஜித்தா-ஷகாகா கிளையில் வாராந்திர பயான்
Wednesday, August 1, 2012
ஜித்தா-ஷகாகா கிளை சமுதாய பணி
| கடந்த 20-07-2012 வெள்ளி அன்று விருதுநகர் மாவட்ட தலைவர் சகோ.அபுபக்கர் சித்தீக் அவர்கள் அல் ஜொவ்ஃப் பகுதியில் ஷாஜஹான் என்கிற கான் முஹம்மது என்பவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும் அவரது உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்கள். உடன் ஷகாகா கிளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இடத்திற்க்கு சென்று இறந்தவரின் நண்பர் சகோ. ஜின்னா அவர்களை சந்தித்து விபரம் தருமாறு ஜித்தா மண்டல நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். பின் ரியாத் மண்டலத்தை தொடர்பு கொண்டு இந்திய தூதரகம் மூலம் அடக்கம் செய்வதற்க்கான பேப்பர் வேலைகளை செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டனர், அவர்களும் அதற்க்கு உதவினர். பின்பு இந்தியாவிற்க்கு தொடர்பு கொண்டு பேப்பர் அனுப்புவதை பற்றி விளக்கி அதனையும் பெற்றனர். பின் ஷகாகா கிளையினர் அப்பகுதியில் உள்ள கேரளத்தை சேர்ந்த சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உதவியுடன் 31-07-2012 செவ்வாய் அன்று இரவு இஷாவிற்க்குப்பிறகு இறந்தவர் உடலை நல்லடக்கம் செய்தனர். (சம்பவ இடம் சிறு கிராமமாக இருந்ததால், அங்குள்ள முத்தவாக்கள் போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை) |
Friday, July 13, 2012
ஜித்தா மண்டலம் - ஷகாகா கிளை பயான்
| அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் 13-07-2012 வியாழன் இரவு இஷாவிற்க்குப்பிறகு மார்க்க உரை நிகழ்ச்சி கிளை தலைவர் சகோ. அன்வர் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் சகோ.இஸ்மாயில் அவர்களும், கிளை தாயி சகோ. சிராஜ் மௌலவி அவர்களும் நோன்பின் சிறப்புகள் பற்றி உரை நிகழ்த்தினார்கள். இதில் அனேகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். |
Thursday, July 12, 2012
ஜித்தா மண்டலம் ஷாகாகா கிளை பயான்
| அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-07-2012 புதன் அன்று ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் மௌலவி அவர்கள் சொர்க்கம், நரகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். கொள்கை சகோதரர்கள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். |
Friday, June 15, 2012
ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் பொதுக்குழு கூட்டம்
அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் 15 / 06 / 2012 வியாழன் அன்று இரவு 12 மணிக்கு கிளை பொதுக்குழு ஜித்தா மண்டல தலைவர் ஆலோசனையின் பேரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவை நடத்த ஷகாகாவிலிருந்து 450 கி.மீ தூரத்தில் உள்ள தபூக் கிளை தலைவர் அப்துல் அஜீஸ் மற்றும் கிளை செயலாளர் நிஜாம் இருவரையும் ஜித்தா மண்டலம் நிர்ணயித்திருந்தது. அதனடிப்படையில் அவர்கள் இந்த கூட்டத்தை நடத்தி வைத்தனர்.
முதலில் கிளை செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சகோ. நிஜாம் TNTJ அரும்பணிகள் குறித்தும் நாம் ஏன் TNTJஇணைய வேணடும், என்று விளக்கி உரை நிகழ்த்தினார்கள்.அதை தொடர்ந்து சகோ.அப்துல் அஜீஸ் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக கிளைத்தலைவர் இம்தாத் அவர்களின் பதவி விலகல் கடித்தை ஏற்று கொண்டதோடு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நாகையை சேர்ந்த முஹம்மத் அன்வர்தீன் [0555194812] அவர்கள் ஏகமனதாக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கிளை அமைப்பாளர் சகோ , உபைதுர் ரஹ்மான் அவர்களின் நன்றி உரையோடு இரவு 1:30 மனியளவில் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
|
ஜித்தா-ஷகாகா கிளையில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-06-2012 வியாழன் இரவு இஷாவிற்க்கு பிறகு ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 45 பேர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் பற்றிய தங்களது சந்தேகங்களை கேட்டனர் அதற்க்கு தபூக் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தெளிவாகவும், விரிவாகவும் பதில் அளித்தார்கள். இரவு உணவிற்க்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
Thursday, June 14, 2012
ஜித்தா-ஷகாகா கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு
இறைவனின் அருளால் 07/06/2012 வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஷ்காகா கிளை வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியை கிளை செயலாளர் சகோ.இஸ்மாயில் தொடங்கிவைத்தார்கள். இதில் அமைப்பாளர் சகோ. A.K.உபைதுர்ரஹ்மான் அவர்கள் " பித்-அத்தினால் ஏற்படும் விளைவுகள். " என்ற தலைப்பில் விளக்கமாக உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இரவு உணவு, துஆ-விற்குபின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். |
ஜித்தா-ஷகாகா கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரர்.
| அல்லாஹ்வின் மாபெருக் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் கடந்த 08-06-2012 வெள்ளி அன்று சீர்காழி தென்னியநல்லூரை சேர்ந்த பாலு (வெள்ளை சட்டை அணிந்து, முடியை சிறிதாக வெட்டி இருப்பவர்) என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை உமர் என மாற்றிக் கொண்டார்கள், கிளை அமைப்பாளர் சகோ. உபைதுர் ரஹ்மான் அவர்கள் அவருக்கு இஸ்லாம் பற்றிய அடிப்படை கொள்கைகளையும், ஓரிரை கொள்கையைப்பற்றியும் விரிவாக விளக்கியதோடு, சகோ. பி.ஜெ மொழிபெயர்த்த தமிழ் குர்ஆன் தமிழாக்கம் ஒன்றையும் கிளை சார்பாக வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்! |
Monday, April 23, 2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா-சகாகா கிளை பயான்
அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் 19 .04 .2012 வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டல சகாகா கிளையின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியை கிளை தலைவர் சகோ. இம்தாதுல்லா தொடங்கிவைத்தார்கள். இதில் அல்-குரையாத்தில் இருந்து வருகை தந்திருந்த. சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஈமானில் உறுதி " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். பிறகு அமைப்பாளர் உபைதுர்ரஹ்மான் அவர்கள் "ஈமானில் உறுதி " எப்படி அமைய வேண்டும் என்று விளக்கினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், இரவு உணவு, துஆ-விற்குபின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். - |
Monday, March 26, 2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜித்தா-சகாகா கிளை பயான்
Saturday, March 10, 2012
ஷகாகாவில் ஜித்தா மண்டல புதிய கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 08-03-2012 வியாழன் இரவு இஷாவிற்க்குப்பின் ஜித்தாவிலிருந்து 1600 கி.மீ தொலைவிலுள்ள அல்-ஜவ்ஃப் மாவட்டத்தில் உள்ள ஷகாகா நகரில் சகோ. உபைதுற் ரஹ்மான் முயற்ச்சியால் அங்குள்ள தவ்ஹீத் சகோதரர்களை இணைத்து, ஒரு புதிய கிளை அமைக்கப்பட்டது. ஷிகாகா நகரில் இருந்து சுமார் 20 பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் ஜித்தா மண்டல தலைவர் சகோ.நௌஷாத், தபூக் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ், தபூக் கிளை பொருளாளர் சகோ. சஃபியுத்தீன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். சகோ. அப்துல் அஜீஸ் தவ்ஹீத் ஜமாத் 4 முனைகளாக தன் செயல்பாடுகளை எப்படி அமைத்துக்கொண்டுள்ளது என்றும் அது போல் புதிய கிளை எப்படி செயல் படவேண்டும் என்றும் விரிவாக விளக்கி கூறினார்கள். சகோ. நௌஷாத் தவ்ஹீத் ஜமாத் ஆற்றி வரும் சமுதாய சேவைகள் பற்றியும், ஜித்தா மண்டலம் செய்து வரும் பணிகள் பற்றியும், வழங்கிவரும் பங்களிப்புகள் பற்றியும் சுருக்கமாக விவரித்தார்கள். இதன் பின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தலைவர்:- சகோ.இம்தாதுல்லாஹ் - களமருதூர்(விழுப்புரம்) - 0559427419.
செயலாளர்:- சகோ. இஸ்மாயில் - சேலம் - 0509698596
பொருளாளர்:- சகோ. அப்துல்லா - கட்டிமேடு - 0543363750
து.தலைவர்:- சகோ. சாதிக் - ஆலங்குடி - 0551060644
து.செயலாளர்:- சகோ.பஷீர் - கோவை - 0509031130
இவர்களும் அமைப்பாளர்களாக
சகோ. A.K உபைதுர் ரஹ்மான் - தோப்புத்துறை - 0509276937
சகோ. அப்துற் ரஹ்மான் - சிவகங்கை - 0500487515
ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வந்திருந்த அனைவருக்கும் ஜமாத்தின் பைலா நகல் வழங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளும், உறுப்பினர்களும், தாங்கள் செய்ல்படுவது மட்டுமின்றி சுற்றுபுறத்தில் உள்ள சிறிய ஊர்களிலும் கிளைகளை உருவாக்கி செயல்பாடுகளை அதிகமாக்குவோம் என்று கூறி, ஆர்வத்துடன் தங்களது செயல்பாட்டினை தொடங்குவாதாக கூறினார்கள்.
|











