Showing posts with label தபூக். Show all posts
Showing posts with label தபூக். Show all posts

Sunday, October 14, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தாஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 13-10-12 சனி அன்று லுஹறுகுப்பின், தபூக் விமான நிலையத்தில் கிளைச் செயளாலர் சகோ. நிஜாம் அவர்களுடன் பணி புரியும் பாகிஸ்தானை சேர்ந்த சகோ. ரியாசத் அலீக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும், கிளைச் செயளாலர் நிஜாம் அவர்களும், உருது மொழியில் இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்து கூறி, உருதுமொழி நூல்களையும் வழங்கி தஃவா செய்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இய்யன்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம்  தபூக் கிளையில் கடந்த 11-10-12 வியாழன் அன்று தபூக் விமான நிலையத்தில் கிளைச் செயளாலர் சகோ. நிஜாம் அவர்களுடன் பணிப்புரியும் பிலிப்பைன்ஸ் - மின்ந்தநாவ்வைச் சேர்ந்த சகோ. இய்யன்  (IYAN)(நீல சட்டை அணிந்திருப்பவர்) அவர்கள், கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ், கிளைச் செயளாலர் சகோ. நிஜாம் ஆகியோரின் முன்னிலையில் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை அவர் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். இவருக்கு கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் இறைகோட்பாடு, வணக்க, வழிபாடுகள் மற்றும் கலீமாவின் விளக்கத்தையும் எடுத்துக்கூறி, [ஸஹாதா] கலீமாவையும் சொல்லி கொடுத்தார்கள். மேலும் அவர் தனது பெயரை ஆய்மன் என்றும் மாற்றிக் கொண்டார்.  அவருக்கு 15 முக்கிய இஸ்லாமிய  ஆங்கில  நுல்களையும்,   ஆங்கில திருக்குர்ஆனும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, October 13, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளை மர்கஸில் 12-10-12 வெள்ளி அன்று  ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "நபி வழியில் நம் ஹஜ்" என்ற தலைப்பில், நமது ஹஜ்ஜின் நோக்கம், அதன் செயல்முறைகள் எவ்வாறு அமையவேண்டும்? என்பன போன்ற விஷயங்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  "இறைத்தூதர்களும், எதிப்பாளர்களும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் "மூமின்கள்கள் யார்?" என்ற தலைப்பிலும் மிகச்சிறப்பாக சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி துஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில் 11/10/2012 அன்று வியாழன் இரவு 11:30 முதல் 01 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள், ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டது எவ்வாறு? எப்போது? "ஹதீஸ் கலை" [பகுதி-5] என்ற தலைப்பில் TNTJ மாநில தலைமையில் சகோ. P.J அவர்கள் நடத்திய பாட உரையின் வீடியோ காட்சிகளுடன்,  குர்ஆன் - ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் எடுத்துரைத்தார்கள். இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்து கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். மேலும் து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.
 

Sunday, October 7, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையின் மகத்தான மனிதநேய சேவை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 27-09-2012 வியாழன் அன்று "இந்தியன் இன்டர்நேஷ்னல் ஸ்கூல்"  வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தியத் தூதரக வருகையையொட்டி TNTJ  ஜித்தா மண்டலம்  தபூக் கிளையின் நிர்வாகிகள் பொதுமக்களுக்கான உதவி முகாம் இடப்பட்டிருந்தது.
இச் செய்தி அறிந்த தபூக் "அல் முத்தபில்" (முன்சிபாலிடி )  கம்பெனியை சேர்ந்த 76 இந்தியர்கள் கிளை நிர்வாகிகளை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை எடுத்துக்கூறி உதவி கோரி நின்றனர். பல மாநிலங்களைச் சேர்ந்த இவர்களில் அதிகமானோர் முஸ்லீமல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 கடந்த 6 வருடமாக வேலை செய்து சம்பளமும் இல்லாமல் தாயகமும் செல்ல இயலாமல் இருக்கும் 76 பேர்களையும் ஒன்று திரட்டி கிளை தலைவர் அப்துல் அஜீஸ் அவர்களின் தலைமையில் தூதரக அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகை இட்டனர். 
சிறிய சலசலப்பிற்கு பிறகு இறுதியாக இடைக்கால பாஸ்போர்ட் வழங்கி அவர்கள் அனைவரையும் தாயகத்திற்கு அனுப்புவதாக தூதரக அதிகாரிகள் வாக்குறுதி வழங்கியதை அடுத்து முற்றுகை கைவிடப்பட்டது.
 தூதரக அதிகாரியின் இடைக்கால பாஸ்போர்ட் வழங்கும் படிவங்களை வழங்கியதை தொடர்ந்து உடனடியாக கிளை செயளாளர் நிஜாம் மற்றும் துனைச்செயளாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் படிவங்களை நிரப்பி சரிபார்க்கப்பட்டு இடைக்கால பாஸ்போர்ட் வழங்கும் வேலைகள் துரிதமாக்கப்பட்டது.
 மேலும் கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்களால் தூதரக அதிகாரிகளை அழைத்து செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் வேலை செய்யும் "அல் முத்தபில்" கம்பெனியையும் மற்றும் அவர்களின் இருப்பிடங்களின் அவலங்களையும் நேரில் கான்பிக்கப்பட்டது.
 அவர்களை அரசு அலுவலகங்கள் அனைத்தும் கைவிடப்பட்ட நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தபூக் கிளையின் மனித நேயப்பணி மிகுந்த ஆறுதலாய் இருந்ததாக கூறி அனைவரும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
 

TNTJ ஜித்தா-தபூக் கிளையின் மகத்தான மனிதநேயச் சேவை முகாம்

சமூக சேவையில் இன, மொழி, மதம் பாராமல் மறுமைக்காகவே உழைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளில் சவூதி அரேபியா தபூக் நகர கிளையின் மற்றுமொரு சேவை….!!!!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 27-09-2012 வியாழன் அன்று "இந்தியன் இன்டர்நேஷ்னல் ஸ்கூல்" வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தியத் தூதரக அதிகாரிகளின் குறைதீர்க்கும் வருகைக்கு பொது மக்களுக்கான உதவி முகாம் நடைபெற்றது. 
தூதரகங்கள் பெரிய நகரங்களில் மட்டுமே இருந்தாலும் சிறிய பகுதிகளில் வசிப்பவர்கள் "பப்ளிக் சர்வீஸ்களை" நாடவேண்டும், இவைகளால் துரிதமாக செயல்பட இயலாது. அது மட்டும் அல்லாமல் கோப்புக்களில் ஏதேனும் விடுபட்டு இருந்தாலும் அவதிகளை சந்திக்க நேரிடும். இதுபற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,  பாஸ்போர்ட் கோப்புக்களின் பணிகளை விரைந்து முடித்துக் கொடுக்கும் முகமாகவும் தூதரக அதிகாரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மனித நேயப்பணிகளை அறிந்து வைத்திருந்தமையால் தபூக் நகர "இந்தியன் இன்டர் நேஷனல் ஸ்கூல்" பிரின்ஸ்பல் சகோதரர் ஷம்சுதீன் அவர்கள் மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தபூக் நகர கிளையை தொடர்பு கொண்டு இம்முகாமிற்க்கான உதவிகளை கேட்டுக்கொண்டனர். கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி,  அழகிய முறையில் திட்டமிடப்பட்டு கிளை நிர்வாகிகள் தலைமையில் பெண்களுக்காக தனி பூத் ஒன்றும், ஆண்களுக்கு மூன்று பூத்துக்கள் அமைக்கப்பட்டு பாஸ்போர்ட் மற்றும் அனைத்து வித தூதரக தேவைக்கான விண்ணப்பப் படிவங்களையும் நிரப்பி கொடுக்கும் பணிகள் மிகத்துரிதமாக, செய்து கொடுக்கப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனேக மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேலான மக்கள் பலன் அடைந்தார்கள். குடிநீர்,  மற்றும் ஜூஸ் அனைவருக்கும் கிளை மூலம் வழங்கப்பட்டது. மேலும் ஜெரக்ஸ் மிசின் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் இலவசமாக ஆவணங்கள் நகல் எடுத்துக்கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இம்மையில் எந்தப்பலனையும் எதிர்பாராமல் மறுமைக்காகவே இவ்வுலகில் பம்பரமாக சுழன்று உழைத்ததை மாற்று மத மக்களும் கண்டு வியந்து பயனடைந்த அனைவரும், தூதரக அதிகாரிகளும் பாராட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பிலிப்பைன்ஸ் சகோதரிகளுக்கு ”ஹஜ்” செயல்முறை விளக்கம்.

அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில், கடந்த 05/10/2012 வெள்ளி அன்று 10 முதல் 11:30 மணி வரை புதிதாக இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன்ஸ் சகோதரிகளுக்கு "ஹஜ்" செயல் முறை விளக்கம்  வகுப்பு  நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் துணைவியார் சகோதரி சுமையாஹ் இவ் வருடம் ஹஜ்ஜிக்கு செல்ல இருக்கும்  15 புதிய முஸ்லீம் பிலிப்பைன்ஸ் சகோதரிகளுக்கு புரெஜக்டர் முலம் நேரடி வீடியோ காட்சிகளுடன் நபிவழியில் ஹஜ் செயல் முறை விளக்கமளித்தர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

 

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை  மர்கஸில்  கடந்த 04-10-2012 வியாழன் அன்று இஷாவிற்குப் பிறகு மூன்று பாகிஸ்தான் சகோதரர்களுக்கு  தனி நபர் தஃவா செய்யப்பட்டது. கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும், கிளைச் செயளாலர் நிஜாம் அவர்களும்: உருது மொழியில் இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்துகூறி, உருது மொழியிலான முக்கிய நூல்களையும் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளை மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 04-10-2012 வியாழன் அன்று இரவு 12 மணி அளவில் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் ஜித்தாஹ் மண்டலத் தலைவர் நவ்ஷாத் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தை  துவக்கிவைத்துப் பேசிய சகோ. நவ்ஷாத் அலி அவர்கள், தற்பொழுது வாங்கப்பட்டுள்ள மாநில தலைமையகக் கட்டிட நிதி தொடர்பாகவும், தான் நேரில் சென்று பார்த்து வந்த சுவாமிமலை – சிறார்ர் ஆதரவு இல்லம் தொடர்பாகவும் விரிவாவாக எடுத்து கூறினார். மேலும் ஜித்தாஹ் மண்டலம் மற்றும் கிளைகளின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாவாக எடுத்து கூறினார். அடுத்து பேசிய கிளைச் செயளாலர் நிஜாம் அவர்கள்  மாதாந்திர வரவு,  செலவு கணக்குகளை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டி,  தெளிவுபடுத்தி கருத்துரை வழங்கினார்.பின்னர் கிளை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள்,  ஆதரவாளர்கள் என அனைவருடைய கருத்துக்கள்,  ஆலோசனைகள் அனைத்தையும் பரிசிலிக்கப்பட்டன.
இறுதியாக கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்,  "நன்மையின் பக்கம் விரைவோம்" என்ற தலைப்பில், கிளையின் நற்பணிகள் எவ்வாரெல்லாம் அமைய வேண்டும் என்றும், அதற்கான அறிவு திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?  என்பதையும், நன்மைகளையும் மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்.  மேலும் தபூக் கிளையின் தனி நபர் அழைப்பு பணிகள், பிற மத சகோதர, சகோதரிகளுக்கான அழைப்பு பணிகள் இன்னும் வீரியமாக அமைய தேவையான ஆலோசனைகளையும் கொள்கை சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது. துஆவுடன், இரவு உணவிற்குப் பின் நிகழ்ச்சி  நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்
 

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 05-10-2012 வெள்ளி அன்று  ஜூம்.ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்துப் பேசிய TNTJ ஜித்தாஹ் மண்டலத் தலைவர் சகோ. நவ்ஷாத் அலி அவர்கள்: தற்பொழுது வாங்கப்பட்டுள்ள மாநில தலைமையகக் கட்டிட நிதி தொடர்பாகவும், தான் நேரில் சென்று பார்த்து வந்த சுவாமிமலை – சிறார் ஆதரவு இல்லம் தொடர்பாகவும் விரிவாவாக எடுத்துக்கூறினார். மேலும் ஜித்தாஹ் மண்டலம் மற்றும் கிளைகளின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாவாக எடுத்துக்கூறினார்.
 
அடுத்துப் பேசிய கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்  "இஸ்லாத்தின் எல்லைகளை மீறாதீர்" என்ற தலைப்பில்: நமது அன்றாட வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும்? என்பன போன்ற விஷயங்களை குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.
 
மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நபிமார்ளும், எதிப்பாளர்களும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் "மூமின்கள்கள் யார்?" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி துஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.
 

Saturday, October 6, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் சகோதரர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம்  தபூக் கிளையில் கடந்த 04-10-2012 வியாழன் அன்று தபூக் Air Port டில் கிளைச் செயளாலர் சகோ. நிஜாம் அவர்களுடன் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் - மனிலாவைச் சேர்ந்த  சகோதரர் ஜில்(GIL) அவர்கள் மண்டலத் தலைவர் சகோ. நவ்ஷாத் அலி, கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ். கிளைச் செயளாலர் சகோ. நிஜாம் ஆகியோரின் முன்னிலையில் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் இறைகோட்பாடு, வணக்க, வழிபாடுகள் மற்றும் கலீமாவின் விளக்கத்தை விளக்கி [ஸஹாதா] கலீமாவையும் சொல்லிகொடுத்தார்கள்.  அல்ஹம்துலில்லாஹ். மேலும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் மாற்றிக் கொண்டார். அவருக்கு 15 முக்கிய இஸ்லாமிய (ஆங்கிலம்) நூல்களும்,  ஆங்கில திருக்குர்ஆனும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Friday, October 5, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பிறமத நண்பர்களுக்கு தஃவா

அல்லாஹ்வின் பேரருளால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளை மர்கஸிற்க்கு 28/09/2012 வெள்ளி அன்று  ஜூம்ஆவிற்கு பிறகு தபூக்  புறநகர் பகுதியில் பணிபுரியும் நாகர்கோவில் சகோ. டேவிட் அவர்களையும், புதுகோட்டை - காரக்குடி சகோ. மணி அவர்களையும் அழைத்து வந்து இஸ்லாத்தினை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. பின்பு அவர்களுக்கு சகோ. P.J அவர்களின் தமிழாக்கம், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம்,  மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்,  பைபில் இறைவேதமா?,  இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை, நபிவழித் தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும். மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம், கிருஸ்தவர்களுடன் நடந்த விவாதம், பைபில் இறை வேதமா? குர்ஆன் இறை வேதமா?  விவாதம்,  இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்! ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளையில்  கடந்த 28-09-2012 வெள்ளி அன்று இஷாவிற்கு பிறகு தபூக் தரீக் மதீனாவில் பணிபுரியும் இலங்கை சகோதரர் சுகுந்தனுக்கும், கேரளா மாநில திருச்சூர் நாராயணனுக்கும் அவர்களது கேம்பிற்க்கு சென்று கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும், கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்களும், சத்திய மார்க்கம் இஸ்லாத்தைப்பற்றி எடுத்துகூறி இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தனர். அப்பொழுது அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பின் இருவருக்கும் தலா 10 நூல்களும், 10 சி.டிக்களும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, October 4, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில் 27/09/2012 அன்று வியாழன் இரவு 11:30 முதல்  01 மணிவரை வாராந்திர மார்க்க தர்பியா நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்:  குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எவ்வாறு?  "ஹதீஸ் கலை" [பகுதி-4] என்ற தலைப்பில் TNTJ மாநில தலைமையில் சகோ, P.J அவர்கள் நடத்திய பாடத்தின் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன், ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் [கொள்கை சகோதரர்களுக்கு] எடுத்துரைத்தார். இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். மேலும் துஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில்  28/09/2012 வெள்ளி அன்று  ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் கேளிக்கைகள்" என்ற தலைப்பில்: கேளிக்கைகள் என்றால் என்ன? அது நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு அமையவேண்டும்? என்பதனை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.
மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நாடும் நடப்பும்!" என்ற தலைப்பில்: கடந்தவார உலகளாவிய நிகழ்வுகளில் முக்கியமானவற்றை,  குறிப்பாக தமிழகம் முழுவதும் TNTJவின் கண்டன ஆர்பாட்டங்கள்,முற்றுகை போராட்டங்கள் ஆகிய அனைத்து விஷயங்களையும் தொகுத்து வழங்கினார்கள்.அதன்பின் கிளை பொருளாளர் சகோ.முஜாஹீத் அவர்கள் மூமின்களின் பண்புகள் என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்  பிறமத சகோதரர்கள், மணி, டேவிட் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி துஆவுடன் மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சாளர் பயிர்ச்சி!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 28-09-2012 வெள்ளியன்று காலை 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு கிளைத் தலைவர்  சகோ.  அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் முதல் கட்ட பேச்சை முன் உதரணமாக பேசியவுடன் பின்பு ஒருவர் பின் ஒருவராக தபூக் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மற்றும் கொள்கை சகோதரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். மேலும் து.ஆவுடன் நிகழ்ச்சி இனிதே  நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, September 30, 2012

ஜித்தா TABUK ASTRA பண்ணையில் மார்க்க சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை,  தபூக் அஸ்ட்ரா விவசாய பண்ணையில் பணிபுரியும் இந்திய மற்றும் இலங்கை சகோதரர்களுக்கு கடந்த 21-09-2012 வெள்ளி அன்று  மஹ்ரிப்பிற்கு பின் அவர்களின் கேம்பில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "நற்பண்புகள்" என்ற தலைப்பில் குர்ஆன் - ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள். மேலும் இறுதியில் ஹஜ் பற்றிய பலவிதமான  அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்