Showing posts with label கடையநல்லூர் கூட்டமைப்பு. Show all posts
Showing posts with label கடையநல்லூர் கூட்டமைப்பு. Show all posts

Friday, November 3, 2017

கடையநல்லூர் கூட்டமைப்பு பயான்

03/11/2017, 4:59:53 PM: Viswa Abdul Kader: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது கூட்டமைப்பின் சார்பாக மாதாந்திர ஆலோசனை கூட்டம் நேற்று 02-11-2017 வியாழக்கிழமை இரவு ஜித்தா கடற்கரை பகுதியில் நடைபெற்றுது.

துவக்க உரை:

சகோ.நயீம் முகமது B E
(ஜித்தா மண்டல தாயி)

இறுதியில் கூட்டம் துவா மற்றும் இரவு உணவுடன் அமர்வு இனிதே நிறைவு பெற்றது. இதில் அதிகமான சகோதரர்கள கலந்துகொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு

பொருப்பாளர்கள்

TNTJ - ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பு

Saturday, September 23, 2017

கடையநல்லூர் கூட்டமைப்பு பயான்

9/22/17, 4:59:20 PM: Munaff TNTJ: *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது கூட்டமைப்பின் சார்பாக மாதாந்திர ஆலோசனை கூட்டம் கடந்த 21-09-2017 வியாழக்கிழமை இரவு ஜித்தா கடற்கரை பகுதியில் நடைபெற்றுது.*

*துவக்க உரை: சேவநல்லி முகைதீன்* *(பேச்சாளர் - ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பு)*

*நிறைவேற்றிய தீர்மானங்கள்:*

*தற்போது உள்ள நிர்வாகம் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஜித்தா மண்டலத் தலைவர் சகோ.முனாஃப் விளக்கம் அளித்தார்.*

*கூட்டமைப்பில் நடைபெறும் ஜமாத் தாஃவா பணிகளில் அனைவரும் கலந்து கொள்ள ஆர்வமூட்டப்பட்டது.*

*இப்படிக்கு*

*TNTJ ஜித்தா மண்டலம்*
*கடையநல்லூர் கூட்டமைப்பு*
*பொருப்பாளர்கள்*

Wednesday, March 20, 2013

TNTJ ஜித்தா-கடையநல்லூர் கூட்டமைப்பின் நிர்வாக கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் கடையநல்லூர் கூட்டமைப்பின் மஷூரா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் பாஸித் தலைமையில் 15-03-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் நடைபெற்றது. இதில் சகோ. மைதீன் மூஹ்மீனின் பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதன்பின் கடையநல்லூர் கிளைகளின் மார்க்க சமுதாய பணிகளை எப்படி மேம்படுத்துவது என்றும், அதற்க்கான பொருளாதாரத்தை திரட்டுவதை பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆவிற்க்குப்பின் மஷூரா இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, February 26, 2013

TNTJ ஜித்தா-கடையநல்லூர் கிளை ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-02-2013 ஞாயிறு அன்று ஜித்தா மண்டல கடையநல்லூர் கிளை ஆலோசனை கூட்டம் பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது. இதில் சகோ. சேனவல்லி முஹைதீன் அவர்கள் உறுதியான இறை நம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்பு தாயகத்தில் இருந்து வந்த சகோ. அப்துல் காதர் அவர்கள் அங்கு கிளைகளின் செயல்பாடுகளைபற்றி விவரித்தார்கள். அதன்பின் ஜித்தா கிளை செய்யவேண்டிய பங்களிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, February 20, 2013

TNTJ ஜித்தா-கடையநல்லூர் கிளை ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா-கடையநல்லூர் கிளை கூட்டம் 17-02-2013 ஞாயிறு அன்று இஷாவிற்க்குப்பின் நடைபெற்றது. கிளை பொறுப்பாளர்கள் கடையநல்லூர் மர்கஸிற்க்கு வசூலித்த விபரங்களை பகிர்ந்துகொண்டு, அந்த தொகையை மண்டலம் மூலம் கிளைகளுக்கு அனுப்பிய விபரத்தை தெரிவித்ததோடு, பற்றாக்குறை தொகையை திரட்டுவது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் மஷூரா இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, February 9, 2013

TNTJ ஜித்தா-கடையநல்லூர் கிளை பங்களிப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டல கடையநல்லூர் கிளை பொறுப்பாளர்களால், கடையநல்லூர் பேட்டைகிளை மர்கஸ் (மஸ்ஜித் நூர் & இஸ்லாமிக் சென்டர்) வகைக்கு வசூல் செய்யப்பட்ட ரூபாய் 200,000(இரண்டு லட்சம்)த்திற்க்கான சவூதி ரியாலை ஜித்தா மண்டல செயலாளர் சகோ அப்துல் பாரியிடம் கடையநல்லூர் கூட்டமைப்பின் பொருப்பாளர்கள் வழங்கினார்கள் . உடன் இந்த தொகை மண்டலம் மூலம் கடையநல்லூர் கிளைகளுக்கு அனுப்பபட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


Wednesday, January 2, 2013

ஜித்தா- கடையநல்லூர் கிளையுடன் M. I.ஆலோசனை கூட்டம்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளிக்கிழமை 28-12-12 அன்று தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோ. M.I சுலைமான் தலைமையில் நடைபெற்ற இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி த. த. ஜ. ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்து இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிவுற்ற பின் நமது ஜித்தா வாழ் கடையநல்லூர் கூட்டமைப்பு சகோதரர்கள் சகோ. M.I சுலைமான் தலைமையில் நமது ஊரில் அமையவிருக்கும் டவுன் கிளை மற்றும் பேட்டை கிளை மார்கஸ் விசயமாக கலந்து ஆலோசித்தனர். சகோ. M.I சுலைமான் அதற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கினார்கள் அதோடு கடையநல்லூரில் கடந்த காலம் நடைபெற்ற விசயங்களை பற்றியும் இனி எப்படி மார்க்க பணிகளை மேற்க்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அழகான முறையில் ஒரு உரை நிகழ்த்தினார்கள் . இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜித்தா மண்டல தலைவர் சகோ முனாப் மற்றும் ஜித்தா மண்டல செயலாளர் சகோ அப்துல் பாரி அவர்களும் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள் . துவாவிற்க்கு பின் ஆலோசனை கூட்டம் இனிதே நிறைவுபெற்றது . எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!



Sunday, September 30, 2012

ஜித்தா-கடையநல்லூர் கூட்டமைப்பு ஆலோசனை

அல்லாஹ்வின் கிருபையால் 23-09-2012 ஞாயிறு அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் டவுண் கிளையின் தவ்ஹீத் பள்ளிக்கு இடம் வாங்குவதற்காக ஜித்தாவாழ் அனைத்து தமிழ் சகோதரர்கள் அனைவரையும் சந்திக்க முடிவு செய்து பகுதி வாரியாக பிரித்து கொடுக்கப்பட்டது. துஆவுடன் நிறைவுற்றது.

Wednesday, August 22, 2012

ஜி்த்தா-கடையநல்லூர் கூட்டமைப்பின் பொதுக்குழு மற்றும் தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜி்த்தாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு மற்றும் தர்பியா வகுப்பு 20.08.2012 அன்று காலை 10:30 முதல் மாலை 4 வரை  மண்டல நிர்வாகிகள் தலைமையில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடை பெற்றது. சகோ.அல் அமீன் வரவேற்புரை நிகழ்ச்சி பற்றி விளக்கினார். தொடர்ந்து மண்டல பேச்சாளர் சகோ.சையது முஸ்தபா ஏகத்துவமும் இணைவைப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நீச்சல் போட்டி , மதிய உணவுக்குப் பிறகு தாயகத்திலிருந்து TNTJ- யின் மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்துந் நாசர் ஆன்லைன் மூலம் சத்தியமும் நித்தியமும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்தினார். அடுத்ததாக பொறுப்பாளர்கள் சகோ.அப்துல் ஹலீம் சித்திக் மற்றும் அப்துல் பாசித் பவர் பாய்ண்ட் மூலம் கடையநல்லூர் கிளைகள் மற்றும் வளைகுடா கிளைகள் செய்து கொண்டிருக்கிற மாக்க மற்றும் சமுதாய பணிகள் பற்றி விளக்கினார்கள். தொடர்ந்து மார்க்கம் சம்பந்தமான கேள்வி கேட்டு பதில் அளித்தவர்களுக்கு சிறந்த பரிசும் வழங்கப்பட்டது. இதில் எழுபதுக்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். அல்ஹம்து லில்லாஹ். 

Saturday, August 4, 2012

ஜித்தா-கடையநல்லூர் கூட்டமைப்பு மஷூரா

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலத்தில் ரமலானை முன்னிட்டு அங்காங்கே கிளைகளில் இஃப்தாருடன் மார்க்க விளக்க பயானும். நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் கடையநல்லூர் கூட்டமைப்பின் சார்பில் 02/08/2012 வியாழன் அன்று நடந்த ஆலோசனை மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியில் கிளை பொருளாளர் சகோ.அமீன் குர்ஆனை ஓதுவோம் என்ற தலைப்பில் சிறிய உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து மற்றொரு பொருப்பாளர் சகோ.அப்துல் பாசித் கூட்டம் கூட்டப்பட்ட நோக்கம் பற்றி விளக்கினார்கள்..இஃப்தாருக்குபின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

 

ஜித்தா-கடையநல்லூர் கூட்டமைப்பின் கேம்ப் தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் சார்பில் 03/08/2012 வெள்ளி அன்று ஜித்தாவிலுள்ள உஸ்ஃபான் பகுதியில் உள்ள கேம்ப்களின் தாவா சந்திப்புக்கு சென்றனர். இதில் கூட்டமைப்பின் பொருப்பாளர் சகோ.அப்துல் பாசித் மற்றும் ஜித்தா மண்டல து.செயலாளர் சகோ.கவுஸ் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். ஃபித்ரா பற்றி விளக்கப்பட்டது. நோட்டீஸ்கள் விநியோகிப்பட்டது. து.ஆவுடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, July 21, 2012

ஜித்தா-கடையநல்லூர் கூட்டமைப்பு கூட்டம் & பிரசுர விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-07-2012 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் கடையநல்லூர் கூட்டமைப்பு கிளை மஷூரா நடைபெற்றது. இதில் இனிய ரமளான் நோட்டீஸும், ஃபித்ரா படிவங்களும் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, July 9, 2012

ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பின் சார்பாக நோன்பு திறக்க பேரிச்சம்பழம்

அல்லாஹவின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் சார்பாக கடையநல்லூர் TNTJ-கிளையின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு கடந்த வருடம் போல் 5டின் பேரிச்சம்பழம் நோன்பின் இஃப்தாருக்கா கார்கோ மூலம் அனுப்பபட்ட போது எடுத்த புகைப்படம். 

Monday, July 2, 2012

ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் 29/06/2012 அன்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை குழுவின் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கடையநல்லூர் கிளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில தலைமையின் செயற்குழு நடந்த விபரம் சகோ.ஹலீம் சி்த்தீக் படித்துக் காட்டினார். நோன்புக்கஞ்சி ஒரு கஞ்சிக்கு 180 ரியால் நிர்ணயிக்கப்பட்டது. நோன்புப் பெருநாள் இரண்டாம் நாள் பொதுக்குழு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. மருத்துவஉதவி கேட்டு கடிதம் தந்த வகைக்கு 12000 ரூபாய் டவுண் கிளைக்கு அனுப்பி கொடுத்த விபரம் அறிவிக்கப் பட்டது. ஆலோசகர்கள் அனைவரும் கலந்து கருத்துக்களை தெரிவித்தனர். துஆவுடன் நிறைவுற்றது.

Thursday, May 31, 2012

ஜித்தா-கடையநல்லூர் கிளைஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைமை மற்றும் மண்டலத் தலைமையின் ஆலோசனையின் படியும் அனுமதியின் படியும் நிர்வாகிகள் என்று இருந்த நிலையை மாற்றி பொறுப்பாளர்கள் என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் முறையாக நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனைக்குழு கூடி மூன்று பொறுப்பாளர்களை ஒரு மனதாகதேர்வு செய்தார்கள். 1.சகோ.அப்துல் ஹலீம் சித்தீக், 2.அப்துல் பாசித், 3.அல் அமீன். இதனை பொதுக்குழு ஒப்புதலுக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, கடையநல்லூரில் இயங்கிக் கொண்டிருக்கும் கிளைகளின் செயல்பாடுகள் குறித்தும், அவர்கள் மர்கஸ்ஸுக்களுக்கு செய்துள்ள செலவுகள் மற்றும் மருத்துவ உதவி பற்றியும் விவாதிக்கப்பட்டது, து.ஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, April 28, 2012

TNTJ ஜி்த்தா- கடையநல்லூர் கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜி்த்தாவாழ் கடையநல்லூர் கிளையின் கேம்ப் பயான் 27.03.2012 வெள்ளி அன்று வெள்ளி இரவில் உஸ்ஃபான் பகுதியில் மண்டல து.செயலாளர் சகோ.கௌஸ் முஹம்மது முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர் சகோ. அமீன் "அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்படவேண்டும்" என்ற தலைப்பில் குர்ஆனிலிருந்து பல வசனங்களை ஆதாரம் காட்டி உரையாற்றினார்.மார்க்க சம்மந்தமான சில கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. கடையநல்லூர் கிளையின் பொறுப்பாளர் சகோ.அப்துல் பாசித் மற்றும் அப்பகுதியில் உள்ள பலர் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலி்ல்லாஹ். 


Tuesday, April 17, 2012

ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பு மஷீரா

அல்லாஹ்வின் அருளால் 13/04/2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாமண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கிளைச்செயலாளர் சகோ.அப்துல் பாசித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். தொடர்ந்து கடையநல்லூரின் கிளைகளின் செயல்பாடுகள், தேவைகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. மாநில தலைமையின் கட்டத்திற்கு இடம் வாங்குவதற்கான வசூல் செய்யப்பட்ட கணக்கு, பிப்ரவரி14- போட்டத்திற்கான கிளைகளின் கணக்கும், கூட்டமைப்பின் கணக்கும் பொருளாளர் சகோ.அமீன் சமர்பித்தார்கள். நிகழ்ச்சி துஆவுடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

Monday, March 12, 2012

ஜித்தா - கடையநல்லூர் கூட்டமைப்பு கிளையின் தலைமை கட்டிட நிதி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-03-2012 திங்கள் அன்று ஜித்தா வாழ் கடையநல்லூர் கூட்டமைப்பு கிளைக்கு ஜித்தா மண்டலம் நிர்ணயித்தது போல் மாநில தலைமை கட்டிட நிதிக்காக பத்தாயிரம் ரூபாய் நிதியாக மண்டல து.செயலாளர் சகோ.ஹக்கீமிடம் வழங்கினார்கள். கடையநல்லூர் கிளைகளின் செயல்பாட்டிற்க்கு உதவ தொடங்கிய அமைப்பானாலும், மண்டலம் கேட்டுக்கொண்டதற்க்கிணங்க மாநில தலைமைக்கு அளித்தது பாராட்டும் வகையில் அமைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, March 7, 2012

ஜித்தா மண்டல கடையநல்லூர் கிளை ஆலோசனைக்கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02.03.2012 வெள்ளி அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கிளையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைமையின் கட்டநிதி பங்களிப்பு பற்றி விபரமாகவும், கடையநல்லூரில் நடக்க இருக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். 

Monday, January 30, 2012

TNTJ-ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பு பொதுக்குழு போட்டோ


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20.01.2012 அன்று இரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாவாழ்- கடையநல்லூர் சகோதரர்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு மண்டல துணைத்தலைவர் சகோ.ரஃபீக் அவர்கள் தலைமையில் மண்டல துணைசெயலாளர் சகோ.கவுஸ் முஹம்மது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. கிளைத்தலைவர் சகோ.அப்துல் காதர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். துவக்கவுரை பொருளார் சகோ. அமீன் செய்தார். தொடர்ந்து மண்டல துணைத்தலைவர் சகோ.ரஃபீக் "அழைப்பு பணியின் பயன் என்ன" என்ற தலைப்பில் சொர்பொழிவு நிகழ்த்தினார். தனது உரையின் அழைப்புப்பணியின் அவசியத்தையும் மிக தெளிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து செயலாளர் சகோ.ஹனீஃபா தாயகம் செல்வதால் புதிய செயலாளராக சகோ.கும்மாளி அப்துல் பாசித் போட்டியின்றி மண்டல துணைத்தலைவரால் தேர்வு செய்யப்பட்டார். இதில் கூட்டமைப்பின் பொருளாளர் சகோ. அமீன் கணக்குகளை சமர்ப்பித்தார்.புரொஜக்டர் மூலம் கணக்குகளும், உறுப்பினர்கள் சந்தா விபரமும் அகன்ற திரையில் காட்டப்பட்டது. செயலாளர் ஹனீஃபா கூட்டமைப்பின் கடந்த வருட செயல்பாடுகளை விளக்கினார். சகோ.அப்துல் பாசித் கடையநல்லூரின் கிளைகள் செய்து கொண்டிருக்கும் செயல்பாடுகளை விளக்கினார். சகோ. அமீன் அந்த கிளைகளின் செயல்பாடுகளை அகன்ற திரையில் புகைப்படங்களுடன் விளக்கினார். துணைத்தலைவர் சகோ.அப்துல் ஹலீம் சித்திக் டவுண்கிளையிலிருந்து வந்த கடிதத்தை படித்துக்காட்டினார். அனைத்து மாவட்டங்களிலும் நடத்த இருக்கும் போராட்டம் பற்றி விளக்கப்பட்டது. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அதிகமான உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர். துஆ வுடன் கூட்டம் நிறைவுற்றது.