Showing posts with label துறைமுகம் கிளை. Show all posts
Showing posts with label துறைமுகம் கிளை. Show all posts

Saturday, May 4, 2019

துறைமுகம் கிளை பயான்

துறைமுகம் கிளை

சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் துறைமுகம் கிளையில்

03/05/2019 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

"ரமலானின் சிறப்புகள்"

உரை: முஹம்மது மாஹீன்

Saturday, March 10, 2018

துறைமுகம் கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வியாழன் அன்று (08-03-2018) மக்ரிப தொழுகைக்கு பிறகு பலத் ஏரியாவில் மார்க்க விளக்க அமர்வு நடைபெற்றது.

சகோதரர் *நெய்னா முஹம்மது* அவர்கள்
*அந்த இறை நிழல் யாருக்கு* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

அல்ஹம்துலில்லாஹ்.

Friday, February 23, 2018

துறைமுகம் கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

Blade கிளையில் இன்று (22-02-2018) வியாழக்கிழமை மக்ரிபிற்கு பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் *முஹம்மது மாஹீன்*
*பொருள் உள்ள அருள்மறை* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Monday, March 31, 2014

மாற்று மத சகோதரருக்கு தாவா 28-3-2014‏

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 28-3-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- ஜித்தா மண்டலம் - துறைமுகம் கிளையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மாற்று மத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டது. அவரு்க்கு பிலிப்பைன்ஸ் மொழியிலான புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, October 25, 2012

ஜித்தா-துறைமுக கிளை டெங்கு விழிப்புணர்வு பிரசுர விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-10-12 புதன் அன்று ஜித்தா மண்டலம் துறைமுக கிளை மூலம் துறைமுகத்தில் உள்ள கேம்ப்களில் டெங்கு விழிப்புணர்வு பிரசுரம் 50 நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, October 21, 2012

ஜித்தா-துறைமுக பகுதியில் பிரசுர விநியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-10-12 ஞாயிறு அன்று ஜித்தா மண்டலம் துறைமுகம் கிளையில் அரஃபா நோன்பை வலியுறுத்தும் 50 பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, August 15, 2012

ஜித்தா-துறைமுக கிளை நோட்டீஸ் விநியோகம் மற்றும் இஃப்தார்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-08-2012 புதன் அன்று ஜித்தா துறைமுக பகுதியில் உள்ள சியான்கோ கம்பெனி கேம்பில் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளை புகை பிடிப்பதை தவிர்க்கும் வகையில் வெளியிட்டுள்ள நோட்டீஸை துறைமுக கிளை விநியோகித்ததுடன், இஃப்தார் நிகழ்ச்சியையும் நடத்தியது. கிளை மற்றும் மண்டல நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
 

Monday, July 16, 2012

ஜித்தா-துறைமுக கிளையில் பிரசுரம் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13 -02 -2012 வெள்ளி அன்று ரமலான் சிறப்புகள் என்ற ஜித்தா மண்டலம் வெளியிட்டுள்ள பிரசுரம் அப்பகுதியில்  உள்ளவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Friday, July 6, 2012

ஜித்தா-துறைமுக கிளையில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 3-7-2012 செவ்வாய் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் துறைமுகம் கிளையின் சார்பில் நேபாளத்தை சார்ந்த சகோ. ராம்குமார் என்பவருக்கு ஹிந்தி மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குர்ஆன் ஒன்று வழங்கப்பட்டது. மேலும் மாற்று மதத்தை சேர்ந்த 3 சகோதரர்களுக்கு தலா 3 புத்தகங்கள் வீதம் 9 புத்தகங்கள் வழங்கி தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


Wednesday, January 11, 2012

ஜித்தா-துறைமுக கிளை மதீனா பயணம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 05-01-2012 வியாழன் இரவு புறப்பட்டு 06-01-2012 வெள்ளி இரவு திரும்பும் வகையில் ஜித்தா மண்டலம், துறைமுகம் கிளை இணைந்து மதீனா நகருக்கு ஜியாராஹ் பயணம் ஒன்றினை குறைந்த கட்டணத்தில், லாப நோக்கின்றி 3 வேளை உணவு, தங்குமிடம் மற்றும் சிற்றுண்டிகளோடு ஏற்பாடு செய்திருந்தது, இதில் பயண துஆ வுடன் புறப்பட்ட 50 பேர்கள் கொண்ட பேருந்திற்க்கு மண்டல பொருளார் சகோ.யூனுஸ், மற்றும் கிளைத்தலைவர் சகோ.மெஹ்பூப் பொறுப்பாளர்களாக இருந்து, இந்த பயணத்தின் நோக்கங்கள் என்ன என்பது விளக்கினார்கள்.
பேருந்தில் நபி(ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கை மற்றும் மதீனாவின் சிறப்புகள் ஆகியவை பற்றி உரை நிகழ்த்தப்பட்டது, ஸபா மஸ்ஜித், மற்றும் உஹது மலைக்கும் அழைத்து செல்லப்பட்டு அதன் விபரங்களும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மஸ்ஜிது நபவியில் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றிய பின் மதிய உணவு முடிந்து ஜித்தா திரும்பும்பொழுது பேருந்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. ஃபிப்ரவரி 14 போராட்ட விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்படது..
தொண்டர் அணியின் பணி பாராட்டத்தக்கவகையில் இருந்தது. இந்த மதீனா பயணத்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் இந்த பயணம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. எல்லாரும் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது என்று சொன்னார்கள் இது போல் வருடத்திற்கு இரண்டு தடவை நடத்தலாம் என்றும். இது போல் மக்காவுக்கும் அழைத்துச் செல்லலாம் என்றும். ஆலோசனை தந்தனர். திரும்ப வரும் போது நிகழ்ச்சி நிறைவு துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்.