Tuesday, February 25, 2014

ஜித்தா மண்டல தபூக் கிளை விருது

அஸ்ஸலாமு அலைக்கும்
வளைகுடா மண்டலங்களில் கிளை தாவாவில் முதலிடம் பெற்ற ஜித்தா மண்டல தபூக் கிளைக்கு விருது மற்றும் சான்றிதழை ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் சகோ கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் வழங்கினார்.அல்லாஹ்விற்க்கே எல்லாப்புகழும்


Monday, February 24, 2014

சுலைமானியா கிளையில் மார்க்க உரை - 21.02.2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-02-2014 ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் மார்க்க உரை நடைபெற்றது. இதில் சகோ. முனீஃப் அவர்கள் அழைப்புப்பணி -ன் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அனேகர் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ ற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. 
அல்ஹம்துலில்லாஹ்.

அல் ஸாகர் கிளையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - 20.02.2014


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த
20-2-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் அல் ஸாகர் கிளையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் தாயகத்தில் இருந்து இணையதளம் வாயிலாக சகோ. செய்யது இப்றாகிம் அவா்கள் உரையாற்றினார்கள். அதன் பின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா மண்டலம்
சௌதி அரேபியா.

ஷரஃபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி - 20.02.2014

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 20-02-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷரஃபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் அவா்கள் ஏகத்துவம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். ஒருசில அறிவிப்புகளுடன் பயான் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள
ஜித்தா மண்டலம்
சௌதி அரேபியா

செனையா கிளை சார்பாக கிளை பயான் - 20.02.2014


 அஸ்ஸலாமு அலைக்கும்...

இறைவனின் அருளால் ...
20/02/2014-வியாழகிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செனையா கிளை சார்பாக கிளை பயான் ஏற்பாடு செய்யப்பட்டது.. கிளை தலைவர் சகோ:அப்துல் ஹகீம் அவர்கள் தலைமையில் சகோ: சலீம் செட் அவர்கள் "நல்ல அமல்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார் .கிளை நிர்வாகிகள் , உறுப்பினர்கள் உட்பட 10கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்..
அல்ஹம்துலில்லாஹ்.

வெற்றியும் தோல்வியும் இறைவனிடம் இருந்தே

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 21-02-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் மதினா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. HAJA அவா்கள் வெற்றியும் தோல்வியும் இறைவனிடம் இருந்தே எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். துஆ உடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
சௌதி அரேபியா.

தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய நாத்திகர்!

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளையில் கடந்த 20/02/2014 அன்று தபூக் Al Khodari Co. பலதியாவில் ட்ரைவராக
பணிபுரியும்,காஷ்மீரைச் சேர்ந்த {நாத்திகர்} சகோதரர் ரோஷ்னி வினித்! அவர்கள் சத்திய மார்க்கம்! இஸ்லத்தை தனது வாழ்க்கை நேறியாக ஏற்றுக்
கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்….!!

மேலும் அவர் தனது பெயரை :- முஹம்மது முஸ்தக்! என்றும் மாற்றிக் கொண்டார்.இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! வல்ல இறைவனுக்கு நன்றிச் சொல்லுங்கள்!இவருக்காக துஆச் செய்யுங்கள்!!

தாயிகள் பயிற்சி வகுப்பு 21.02.2014

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 21-02-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் ஹை அல் ஷரபியா  பகுதியில் தாயிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்.