Saturday, December 14, 2013

ஜித்தா மண்டல செயல்வீரர்கள் கூட்டம்


அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா 

மண்டல செயல்வீரர்கள் கூட்டம் 13-12-2013 அன்று மண்டல் தலைவர் 

முனாப் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் எதிர்வரும் 

ஜனவரி 28 அன்று இன்ஷாஅல்லாஹ் நடைபெற இருக்கும் சிறை நிரப்பு 

போராட்டம் மற்றும் மார்க்கப் பணிகள் குறித்து மண்டல மற்றும் கிளை 

நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. துஆவிற்க்கு பின் கூட்டம் 

நிறைவடைந்தது.

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்?



சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? ஜித்தா - JIZAN கிளையில் நோட்டீஸ் விநியோகம் :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல JIZAN கிளையில்

12/12/2013 அன்று கிளை சார்பாக அப்பகுதி

சகோதரர்களிடம் "ஜனவரி 28 ல் சிறை நிரப்பும் போராட்டம் ஏன்?"

என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? ஜித்தா - சஃபா கிளையில் நோட்டீஸ் விநியோகம்


சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? ஜித்தா - சஃபா கிளையில் நோட்டீஸ் விநியோகம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல அல் சபா கிளையில் 12/12/2013 அன்று கிளை சார்பாக அப்பகுதி
சகோதரர்களிடம்  "ஜனவரி 28 ல் சிறை நிரப்பும் போராட்டம் ஏன்?"
என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர பயான் நிகழ்ச்சி


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

TNTJ யின் ஜித்தா மண்டல மதினா கிளையின் சார்பில் 13/12/2013 

அன்று  ஜும்மா தொழுகைக்கு பிறகு பிராத்தணையின் ஒழுங்குகள்

என்ற தலைப்பில் சகோதரர் ஜைனுல் ஆபிதீன்  அவர்கள் உரை 

நிகழ்த்தினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.







TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய தமிழக {இந்து} சகோதரர் கார்மேகம் ரத்தனசாமி! அவர்கள்


TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய தமிழக {இந்து} சகோதரர் கார்மேகம் ரத்தனசாமி! அவர்கள் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 12/12/2013 அன்று Tabuk Al Arjan கம்பணியில் பணிபுரியும், விருதுநகர் {இந்து} சகோதரர் – கார்மேகம் ரத்தனசாமி! அவர்கள் சத்திய மார்க்கம்! இஸ்லத்தை தனது வாழ்கை
நேறியாக ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்….!!

அவருக்கு சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ்  அவர்கள் : இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் {ஸஹாதா} கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்.
மேலும் அவர் தனது பெயரை :- உஸ்மான்! என்றும் மாற்றிக் கொண்டார்.

இவர்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!

அல்ஹம்துலில்லாஹ்….!!
-----------------------------------------------

Saturday, November 23, 2013

தாயிகள் பயிற்சி வகுப்பு - ஜித்தா மண்டலம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 22-11-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் தாயி பயிற்சி வகுப்பு
நடைபெற்றது.அதில் மாநிலத்தில் இருந்து வந்திருந்த பாடதிட்டங்கள்
அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது.
அதனை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப முடிவு
செய்யப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

ஜித்தா மண்டலம்-ஷரபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 22-11-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
- ஜித்தா மண்டலம் - ஷரபியா கிளையின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.. அதில்
சகோ. பி.ஜெ அவா்கள் உரையாற்றிய மாறும் உலகில் மாறாத இஸ்லாம் எனும் சிடி.
புரஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது.. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு
பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

ஜித்தா மண்டலம்-செனைய்யா கிளை நோட்டிஸ் விநியோகம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 22-11-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
- ஜித்தா மண்டலம் - செனைய்யா கிளையில் சிந்தனையும் ஒரு வணக்கமே என்ற
நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு

ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா மண்டலம்
சௌதி அரேபியா.