Tuesday, April 9, 2013

துன்பம் நீக்கும் துஆ - ஸனாயியா கிளை நோட்டீஸ்


அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தாஹ்
மண்டலத்திலிருந்து வெளியிடப்படும் வாரந்திர துண்டு பிரசுரங்களில்
'துன்பமான வேளைகளில் நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்த துஆக்களை'
கடந்த 8-4-213 அன்று சனாயியா கிளையின் துணை செயலாளர் அப்பாஸ் அவர்கள் தமிழ் மக்கள் வசிக்கும் கேம்ப்களில் விநியோகித்தார். விசா மற்றும் டிரான்ஸ்பர் பிரச்சனைகளால் அல்லல்படும் சகோதரர்களுக்கு இதுபோன்ற துஆக்கள் இறைஅருளை பெற்றுத்தரும் என்று கருதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தொழுகை துஆக்கள் - ஸனாயியா கிளை நோட்டீஸ்

தொழுகை துஆக்கள் - ஸனாயியா கிளை நோட்டீஸ்

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தாஹ்
மண்டலத்திலிருந்து வெளியிடப்படும் வாரந்திர துண்டு பிரசுரங்களில்
'தொழுகையில் ஓதவேண்டிய துஆக்களை' கடந்த 4-4-213 அன்று சனாயியா கிளையின்
தலைவர் அப்துல்ஹக்கீம் அவர்கள் தமிழ் மக்கள் வசிக்கும் கேம்ப்களில்
விநியோகித்தார். பலரும் இதுபோன்ற துஆ பிரசுரங்கள் மனனம் செய்ய வசதியாக
உள்ளதாக தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, April 7, 2013

ஷரபியா நகர உணவகங்களில் நோட்டீஸ் விநியோகம்.





ஷரபியா நகர உணவகங்களில் நோட்டீஸ் விநியோகம். 

அல்லாஹ்வின் அருளால், நபிவழி துஆக்களை நம்மவர் மத்தியில் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் வாரந்திர துண்டு பிரசுரங்களாக சிறு சிறு துஆக்களை மனனம் செய்ய ஏதுவாக வெளியிட்டு வருகிறது. இதனை 06-04-2013 அன்று தமிழ் மக்கள் வருகை தரும் ஷரபியா நகர உணவகத்தில்(சென்னை தர்பார்) விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். 

நபிவழி துஆக்கள் - ஜித்தா - ஸலாமா கிளை நோட்டீஸ்







நபிவழி துஆக்கள் - ஜித்தா - ஸலாமா கிளை நோட்டீஸ்

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலத்தின் அணைத்து பகுதியிலும் பரவலாக்கப்பட்டு வரும் பல்வேறு தாவா பணிகளில் முதன்மையாக, கொள்கை சகோதரர்களிடையே நபிவழி துஆக்களை மனதில் பதிவேற்றும் நோக்கோடு வாராந்திர நோட்டிசுகள் விநியோகிக்கப் பட்டுவருகிறது. இவ்வாறே 05-04-2013 அன்று ஜித்தா மண்டல சலாமா கிளையிலும் துஆ நோட்டிசுகள் விநியோகிக்கப்பட்டது. அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.

ஹம்ரா பகுதியில் துஆ நோட்டீஸ் விநியோகம்



அல்லாஹ்வின் அருளால், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை நடைமுறைப் படுத்தும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா தலைமையிலிருந்து வாரந்தோறும் நபி(ஸல்) கற்றுத்தந்த துஆக்களை மக்கள் மனனம் செய்ய ஏதுவாக வாராந்திர துண்டு பிரசுரங்களாக தயாரித்து வெளியிட்டு வருகிறது. இவைகளை 04-04-2013 அன்று ஜித்தா மண்டலத்தின் ஹம்ரா பகுதி பொறுப்பாளர் சகோதரர். ஹாஜா அவர்கள் தமது பகுதி சகோதரர்களிடம் விநியோகித்தார். அல்ஹம்துலில்லாஹ்.



நபி வழி துஆக்கள் - ஜித்தா-ரவ்தா பகுதியில் நோட்டீஸ் விநியோகம்





அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலத்தின் அணைத்து பகுதியிலும் பரவலாக்கப்பட்டு வரும் பல்வேறு தாவா பணிகளில் முதன்மையாக, கொள்கை சகோதரர்களிடையே நபிவழி துஆக்களை மனதில் பதிவேற்றும் நோக்கோடு வாராந்திர நோட்டிசுகள் விநியோகிக்கப் பட்டு வருகிறது. இவ்வாறே 05-04-2013 அன்று ஜித்தா மண்டல ஜித்தா-ரவ்தா பகுதியில் துஆ நோட்டிசுகள் விநியோகிக்கப்பட்டது. அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.

Bayan on 05.04.2013 - sahar dist




  

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 05-4-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் ஸாஹர் பகுதியில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ.முனாஃப் அவா்கள் குா்ஆன் மற்றும் அறிவியல் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.  அதில் அனேக சகோதரா்கள் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


TNTJ ஜித்தா - மதினா கிளை பயான் நிகழ்ச்சி 5-4-2013





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 05-04-2013 வெள்ளியன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. முஜிபுர் ரஹ்மான்  அவர்கள்  நபி(ஸல்) அவா்கள் கற்று தந்த நற்பண்புகள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.