Tuesday, November 20, 2012

ஜித்தா-தபூக் கிளை பேச்சு பயிற்ச்சி முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக்  கிளை மர்கஸில்  கடந்த 16-11-2012 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 வரை பேச்சாளர்  பயிற்சி  வகுப்பு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் அறிமுக உரையை உதரணமாக கொண்டு கலந்து கொண்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். பின்பு துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-செனைய்யா கிளை இலவச குர்ஆன்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வாரம் ஜித்தா மாநகர் ஹூம்ரா பகுதியில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம், அந்தியித்தை சேர்ந்த சகோ.பூபாலன் மற்றும் திருவாருர் மாவட்டம் முல்லிக்கோட்டையை சேர்ந்த சகோ. குமார் இருவரும் தூய இஸ்லாத்தை தழுவி முறையே அஹமது, முஹம்மது என்று தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்ட விபரத்தை அறிந்த ஜித்தா மண்டலம் செனைய்யா கிளை நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து, இஸ்லாத்தின் ஓரிறை கொள்கையை கூறியதோடு இஸ்லாத்தின் பெயரில் புரையோடி இருக்கும் அநாச்சாரங்களை எடுத்துரைத்ததோடு, அவர்கள் இருவருக்கும் இரு தமிழாக்க குர்ஆன் மற்றும் 15 இஸ்லாமிய நூல்களும் வழங்கப்பட்டு தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-பாப் மக்கா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 16-11-2012 வெள்ளி அன்று மஃரிப் முதல் இஷா வரை ஜித்தா மண்டலம் பாப் மக்கா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.நஸ்ருதீன அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பி உரை நிகழ்த்தினார்கள். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-சுலைமானியா கிளை பிரசுர விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-11-2012 திங்கள் அன்று ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் ஆஷுரா நோன்பை வலியுறுத்தும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, November 17, 2012

ஆஷூரா நோன்பு பிரசுரம்


TNTJ ஜித்தா மண்டலம் பெற்ற ரத்ததான சான்றிதழ்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 05-10-2012 வெள்ளி அன்று ஹாஜிகளுக்காக நடந்த ரத்ததான முகாமிற்க்காக ஜித்தா கிங் ஃபஹத் அரசு மருத்துவமனை நிர்வாகம ஜித்தா மண்டலத்திற்க்கு வழங்கிய சான்றிதழ். இம்முறை கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் சான்றிதழ வழங்கப்பட்டது, அதில் கொடுத்தவரின் பெயருக்கு பின்னால் TNTJ என்று குறிப்பிடப்பட்டிருந்தது சிறப்பிற்க்குரியதாக இருந்ததுடன் வழங்கியவர்களுக்கு உற்சாகம் அளிக்ககூடியாதாகவும் இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோ.ரவி

சௌதி அரேபியாவின் ஹாலத் ஹம்மார் பகுதியில் ஆட்டுப்பண்ணையில் பணிபுரியும் புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த சகோ. ரவி அவர்கள் கடந்த 09/11/2012 அன்று கடுமையான கடுமையான வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருந்ததை கண்ட அங்குள்ள அரபிகள் அவரை தபூக் King Fahad Hospitalலில் சேர்த்துவிட்டனர். அங்கு பணிபுரியும் நமது கொள்கை சகோதரர்களில் சிலர் இச்செய்தியை கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களுக்கு தெரியப்படுத்தினர். உடனடியாக அவர் மருத்துவமனை சென்று அவரை சந்தித்து ஆறுதல்கூறி அருகில் இருந்து அனைத்துவித சோதனைக்கு பிறகு அவருக்கு Appendix Operation உடனடியாக செய்யவேண்டும் என தெரியவந்தது.  அதற்க்கான ஏற்பாடு செய்யப்பட்டு, அல்லாஹ்வின் பேரருளால் அவருக்கு ஆபரேஷன் நல்ல முறையில் நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
 
அதன் பிறகு அவரை கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து அவருக்கு ஓரிறைக்கொள்கையை எடுத்துக்கூறி, முக்கிய நூல்களையும் வழங்கி இஸ்லத்தின்பால் அழைப்பு விடுத்தார். அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 16/11/2012 வெள்ளியன்று அவர் இஸ்லாத்தை தனது வாழ்கை நேறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்களும், கிளை செயலாளர் நிஜாம் அவர்களும் கொள்கை விளக்கம், வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிகூறி, கலீமாவையும் சொல்லிக் கொடுத்தனர்.
 
அவர் தனது பெயரை முஹம்மது அலீ என்றும் மாற்றிக்கொண்டார். இறுதியில் அவருக்கு சகோ. P.J அவர்களின் தமிழாக்கம், பல தலைப்புகளில் இஸ்லாமிய நூல்கள் 15யும். 25 DVD களையும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-செனைய்யா கிளை இலவச ரத்த பரிசோதனை முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-11-2012 வெள்ளி அன்று காலை 08 முதல் 11 மணி வரை ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையில் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் கண்டறியும் இலவச முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில் சுமார் 8 பேர்களுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருப்பதும், மேலும் சிலருக்கு உயர் ரத்த அழுத்தமும், தாழ்வு ரத்த அழுத்தம் உள்ளதை கண்டறிந்து அவர்களுக்கு தக்க மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் இந்தியாவின் பல மாநிலத்தவர்கள் கலந்து கொண்டதோடு, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, சோமாலியா நாடுகளை சேர்ந்த பல மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு முஹம்மது யார் இவர் என்ற பிரசுரம் வழங்கப்பட்டது. மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு தூய இஸ்லாத்தை எத்திவைக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இருவருக்கு 10 இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டு தாஃவா செய்யப்பட்டது. இதுபோன்ற முகாம்களை அவ்வப்பொழுது நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். செனைய்யா கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்ததோடு, வந்திருத்த அனைவரையும் இன்முகத்தோடு உபசரித்தனர். மண்டல நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.