Saturday, April 21, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில், 20/04/2012 வெள்ளி அன்று  ஜூம்ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர்   சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்  இஸ்லாம் கூறும் மனித நேயம் என்ற தலைப்பில் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள் மற்றும் அனைத்து செயல்பாடுகளிலும்  முழுக்க முழுக்க மனிதநேயம் மலிந்து கிடப்பதை குர்ஆன் - ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள்.   மேலும்  கிளைச் செயலாளர் சகோ, நிஜாம் அவர்கள்  தர்மம் தலைக்காக்கும்  என்ற தலைப்பிலும்,   கிளை து.தலைவர்  சகோ. முஜாஹீத் அவர்கள்     மார்க்கத்தின் எச்சரிக்கை என்ற தலைப்பிலும் சிற்றுரை ஆற்றினார்கள்.     இந்நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய    ஐந்து   சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.  து.ஆ வுடன் மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.   

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்   தபூக்  கிளையில்  19/04/2012 வியாழன் அன்று இரவு 11/30 முதல் 12/30 வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது. இதில் கிளைத் தலைவர்  சகோ.  அப்துல் அஜீஸ் அவர்கள்  வழி கெட்ட  கொள்கைகள் (பாகம் 5) என்ற தலைப்பில் சகோ. P.J  அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன்,  குர்ஆன், ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் கொள்கை சகோதரர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.  இதில்  தபூக்  கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.  மேலும் து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி  நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.

 

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன்ஸ் நாட்டின் – 5 சகோதரிகள்!!!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ  ஜித்தா மண்டலம் தபூக்  கிளையில் 14/04/2012  அன்று கிளைச் செயலாளர்  சகோ. நிஜாம் அவர்கள் பணிபுரியும்  Al-JAODA நிறுவனத்தில் பணிபுரியும்  ஐந்துபிலிப்பைன்ஸ் நாட்டு சகோதரிகள்  சத்திய  மார்க்கம்  இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.  இவர்களுக்கு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ்  அவர்களும் மற்றும்  அவர்களின் துனைவியார் சுமையாஹ் அப்துல் அஜீஸ் அவர்களும் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை  விளக்கி கூறி கலீமாவை சொல்லிக் கொடுத்ததுடன்  சகோ. P.J அவர்களின் ஆங்கில நூல்களையும்  மற்றும் பல  இஸ்லாமிய  ஆங்கில நுல்கள் 25ஐயும், 5  ஆங்கில  திருகுர் ஆனையும்    வழங்கினார்கள்.

 

அவர்களது பெயர்கள் மற்றும் விபரம் வருமாறு-     

 

பழைய பெயர்        இப்பொழுதைய பெயர் நாட்டில் இருப்பிடம்

 

1-CRISTIN LEJERALDE              HANNA             ROXASISABELA

2-AMY MANGASUEY                  SULAIJA           CONNER KALINGA

3-STENELLY PACTOL                AMEERA            CEBU CITY

4-BABYLINE SOBREPENA         FATIMAH           TAGIG MM

5-GEMMA ACERIT                      JAMEELA           SAN MARIAO ISA

என்றும் மாற்றிக்கொண்டனர்! அல்ஹம்துலில்லாஹ்.

 

"அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லீம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?" [திருக்குர்ஆன்-41:33]

Tuesday, April 17, 2012

ஜித்தா மண்டல செனைய்யா கிளையின்

அல்லாஹ்வின் மாபெரும் கிபருபையால் 13-04-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி மற்றும் கிளைக்கூட்டம் கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைச்செயலாளர் சகோ. இர்ஃபான் "நரகத்தின் நெருப்பு" என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் நரகநெருப்பின் ஆழம், அதற்கு உரியவர்கள் யார் யார், அது எப்படி இருக்கும் என்று குர்ஆன்,ஹதீஸின் ஆதாரங்களுடன் விளக்கினார். தொடர்ந்து மண்டல தலைமையின் நிர்வாகக்குழுவின் செயல்திட்டங்கள் பற்றிய செய்தியினை சகோ.அப்துல் ஹலீம் சித்திக் வாசித்தார்கள். மாநிலதலைமை கட்டிடத்திற்கு இடம் வாங்குவதற்கான வசூல் பற்றியும், மண்டல தலைமை நிர்ணயித்த தொகையை வசூலை எட்டிய விபரமும் கிளைத்தலைவர் மூலம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேச்சுப்பயிற்சியில் கலந்துகொண்ட பேச்சாளர்கள், சகோ.அப்துல் அஜீஸ், அப்துல் ரஹீம், முகம்மது மைதீன் ஆகியோர் சிறிய தலைப்புகளில் சிற்றுரை நிகழ்த்தினார்கள். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பு மஷீரா

அல்லாஹ்வின் அருளால் 13/04/2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாமண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கிளைச்செயலாளர் சகோ.அப்துல் பாசித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். தொடர்ந்து கடையநல்லூரின் கிளைகளின் செயல்பாடுகள், தேவைகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. மாநில தலைமையின் கட்டத்திற்கு இடம் வாங்குவதற்கான வசூல் செய்யப்பட்ட கணக்கு, பிப்ரவரி14- போட்டத்திற்கான கிளைகளின் கணக்கும், கூட்டமைப்பின் கணக்கும் பொருளாளர் சகோ.அமீன் சமர்பித்தார்கள். நிகழ்ச்சி துஆவுடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

Sunday, April 15, 2012

20-04-2012 ஜித்தா மண்டல ஆன்லைன் பயான்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது.

இன்ஷா அல்லாஹ் வரும் 20-04-2012 வெள்ளி அன்று மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை தாயகத்திலிருந்து மாநில துணை பொது செயலாளர் சகோ. சையது இபராஹிம் அவர்கள் குர் ஆன், பைபிள் ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்கள். பொதுவாக மார்கம், மற்றும் கல்வி உரைகளையே கேட்ட நமக்கு கொஞ்சம் கலகலப்பாகவும், அதே சமயம் பைபிளில் உள்ள அசிங்கங்களையும் முரண்பாடுகளையும் நாமும் தெரிந்து கொண்டு பிற மத நண்பர்களுக்கு எத்தி வைக்க உதவும் நிகழ்ச்சியாக இன்ஷா அல்லாஹ் இது அமையும், தவிர்க்க முடியாத காரணங்களால் நேரலையை ஏற்பாடு செய்யவில்லை. எனவே அனைவரும் அவசியம் கலந்து கொள்வதோடு, உங்கள் உறவினர்கள், நண்பர்களையும் கலந்து கொள்ள தூண்டுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன்ஸ் நாட்டவர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ  ஜித்தா மண்டலம்  தபூக்  கிளையில்  14/04/2012  சனி அன்று பிலிப்பைன்ஸ் - லகூனாவைச்  சேர்ந்த  TABUK – SAUDI VEHICLE ANNUAL INSPECTION UNITல் பணிபுரியும் சகோ. ரய்மோன் டினோரியோ  (RAYMOND TENORIO) வயது  26  அவர்கள்  சத்திய  மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ். இவருக்கு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தூய இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களையும்,  பைபிலில் கிறுத்துவ பாதிரிமார்களின் சித்து விளையாட்டுக்களையும்  ஆதார பூர்வமாக விளக்கி கூறி கலீமா சொல்லிக் கொடுத்தார்கள்.

 

சகோ.ரய்மோன்  டினோரியோ அவர் தனது பெயரை  அப்துல் மாலிக்  என்றும் மாற்றிக்கொண்டார். இவருக்கு கிளை செயலாளர் சகோ. நிஜாம்  அவர்கள், சகோ. P.J  அவர்களின் ஆங்கில நூல்களையும் மற்றும் பல  இஸ்லாமிய  ஆங்கில  நூல்களையும்,  ஆங்கில திருக்குர் ஆனையும்  வழங்கினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.

 

"அல்லாஹ் ஒருவனுக்கு நேர்வழி காட்ட நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். (திருக்குர்ஆன்: 6:125)...

Saturday, April 14, 2012

சுன்னத் நோன்பு அழைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இந்தக் கடிதம் உங்களை பூரண உடல் நலத்தோடும் சீரிய இஸ்லாமிய சிந்த்னையோடும் சந்திக்கட்டுமாக. இன்ஷாஅல்லாஹ் வரும் 19-04-2012 வியாழன் அன்று சுன்னத்தான நோன்புகளை நாம் வழக்கில் கொண்டு வர ஆர்வமூட்டும் வகையில் ஜித்தா மண்டலம் வியாழன் அன்று ஆர்வமுள்ளவர்கள் இணைந்து நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்யவுள்ளது. ஆர்வமும், வசதியும் உள்ளவர்கள் புதன் அன்று இரவு ஸகர் செய்து, வியாழன் நோன்பு வைத்து, வியாழன் மாலை மண்டல இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். இடம் பின்பு அறிவிக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் முன்பே தெரிவித்துவிட்டால் இஃப்தார் ஏற்பாட்டிற்க்கு வசதியாக இருக்கும், எனவே கீழ்வரும் எண்களில் தொடர்பு கொண்டு உங்களின் வருகையை உறுதி செய்யவும்.

முஹம்மது ரஃபீ (மண்டல து. தலைவர்)-----------0557968391
முஸ்தஃபா------------------------------------------------------------0567140437

ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழைமகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனேவ நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை விரும்புகின்றேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)
திர்மிதீ 678 

இப்படிக்கு,
ஜித்தா மண்டல நிர்வாகிகள்,
ஜித்தா