Tuesday, January 10, 2012

ஜித்தா-செனைய்யா மதீனா ஜியாராஹ் பயணம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 05-01-2012 வியாழன் இரவு புறப்பட்டு 06-01-2012 வெள்ளி இரவு திரும்பும் வகையில் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளை இணைந்து மதீனா நகருக்கு ஜியாராஹ் பயணம் ஒன்றினை குறைந்த கட்டணத்தில், லாப நோக்கின்றி 3 வேளை உணவு, தங்குமிடம் மற்றும் சிற்றுண்டிகளோடு ஏற்பாடு செய்திருந்தது, இதில் பயணத்துஆவுடன் புறப்பட்ட பேருந்திற்க்கு கிளைத்தலைவர் சகோ.அமீன் பொறுப்பாளராக இருந்து, இந்த பயணத்தின் நோக்கங்கள் என்ன என்பது விளக்கினார். நாம் போய் பார்க்க இருக்கும் இடங்கள் பற்றி அதன் வரலாற்றை விளக்கி கூறினார். அந்தந்த இடம் வந்தததும் வரலாறு நினைவூட்டப்பட்டது. உஹது யுத்தம் நடந்த இடத்தில் அதன் விளக்கம் விளக்கப்பட்டது.

செனைய்யா கிளை பேருந்தில் கேள்விகள் கேட்க்கப்பட்டு சரியான பதில் சொன்னவர்களுக்கு 90 புத்தகங்கள், பரிசாக வழங்கப்பட்டது. மாஷா அல்லாஹ். எல்லாரும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னார்கள். ஃபிப்ரவரி 14 போராட்ட விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்படது. குறிப்பாக உருது பேசக்கூடிய சகோதர்களுக்கும் உருதிலும் கேள்வி கேட்கப்பட்டது. சரியான பதில் சொன்னார்கள்.பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த மதீனா பயணத்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் இந்த பயணம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. எல்லாரும் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது என்று சொன்னார்கள் இது போல் வருடத்திற்கு இரண்டு தடவை நடத்தலாம் என்றும். இது போல் மக்காவுக்கும் அழைத்துச் செல்லலாம் என்றும். ஆலோசனை தந்தனர். திரும்ப வரும் போது துஆ மற்றும் நிகழ்ச்சி நிறைவு துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்.

Sunday, January 8, 2012

TNTJ ஜித்தா - தபூக் கிளையிள் இஸ்லாத்தை தழுவிய அமெரிக்க சகோதரர்

TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளையில் 06/01/2012 வெள்ளி அன்று    [King Abdul Aziz] மிலிட்டரி மருத்துவமனையில் இயற்பியல் தலமை நிபுனராக பனியாற்றும் அமெரிக்கா நியூயார்க்கைச் சேர்ந்த Mr Brown சத்திய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரையும் அப்துர்ரஹ்மான் என்று மாற்றிக்கொன்டர் அல் ஹம்து லில்லாஹ்!  இவர் சகோ, [பத்மநாபன்] அப்துர் ரஹ்மான் அவர்களுடன் பணிபுயும் சக நண்பர் என்பது குறிப்பிடதக்கது!  அவருக்கு TNTJ தபூக் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்களும், [பத்மநாபன்]அப்துர் ரஹ்மான் அவர்களும்  இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கியதுடன் சகோ, PJ அவர்களின் ஆங்கில நுல்களும் மற்றும் 10 இஸ்லாமிய நுல்களையும் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.          

                
                

Thursday, January 5, 2012

TNTJ தபூக் கிளையிள் இஸ்லாத்தை தழுவிய கணேசன்!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 04-01-2012 புதன் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் வீட்டு டிரைவராக வேலை இலங்கை மட்டகிளப்பு மாவட்டம் கல்லடியைச் சேர்ந்த சகோதரர் கணேசன் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவர் தனது பெயரை அப்துல் அஜீஸ் என்றும் மாற்றிக்கொண்டார். கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கியதோடு பி.ஜே அவர்கள் மொழிபெயர்த்த குர்ஆன், மற்றும் 10 இஸ்லாமிய புத்தகங்களை வழங்கினார்கள். அல்லாஹ்விற்கே எல்லா புகழும்


Wednesday, January 4, 2012

TNTJ ஜித்தா மண்டல ஜிஸாஹ் கிளை புதிய நிர்வாகிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த 30-12-2011 வெள்ளியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் ஜிஸான் கிளையின் புதிய நிர்வாக கூட்டம் சகோ. அப்துல் ஜப்பார் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதிமாதம் முதல் வாரம் வெள்ளி தோறும் கூட்டம் நடத்துவது என்றும்,  ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்து நோட்டிஸ் வினியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டது. பொருப்பாளர்கள் அனைத்து உறுப்பினர்களின் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் - சகோ. சேக்தாவுத் இப்றாகிம் - RS மங்களம்
து.தலைவர் - சகோ. அப்துல் ஜப்பார் - அம்மா பேட்டை
செயலாளர் - சகோ. ரியாஸ் அஹமது - ஆயங்குடி
பொருளாளர் - சகோ. ஜாபர் - வீரசோழன்

துஆஉடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

Sunday, January 1, 2012

ஜித்தா-மதீனா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 30-12-2011 வெள்ளி அன்று ஜூம் ஆ விற்க்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் மார்க்க சொற்பொழிவு நடந்தது. இதில் சகோ. அபு சாலிஹ் மதீனா ஹரம் பள்ளியில் இமாம் நிகழ்த்திய ஜூம் ஆ உரையின் தமிழாக்கத்தினை உரையாற்றினார்கள். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.




Saturday, December 31, 2011

TNTJ ஜித்தா-செனைய்யா வாராந்திர குர்ஆன் வகுப்பு

அல்லாஹ்வின் பேரருளால் 23.12.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளை பெரியவர்களுக்கான வாராந்திர குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

TNTJ ஜித்தா-செனைய்யா கிளை குர் ஆன் வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும்கிருபையால் 30.12.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளை வாராந்திர குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் YOU TUBE மூலம் குர்ஆன் எளிதில் ஓதிட என்ற தலைப்பிலான சகோ.பி.ஜெயினுலாபிதீன் அவர்களின் பாடமும் பார்த்து விளக்கப்பட்டது. மிகவும் பயனுள்ளாக இருந்தது என்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

 


ஜித்தா - ஷர்ஃபியா கிளை நோட்டீஸ் விநியோகம்

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 30-12-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷரஃபியா கிளையின் சார்பில் ஸபர் மாதம் பீடை மாதமா? என்ற நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.