| தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் [மஸ்ஜீத் மலிக் அப்துல் அஜீஸ் கூடாரத்தில்] 28/10/ 2011 வெள்ளி அன்று ஜும் ஆ தொழுகைக்கு பின் வாரந்திர பயான் நடைபெற்றது, அதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாமும் இறைநம்பிக்கையும் என்ற தலைப்பிலும், ஈமானின் சுவை என்ற தலைப்பில் கிளை செயலாளர் நிஜாம்தீனும் உரையைற்றினார்கள். இதில் சுமார் 45 சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மதிய உணவு, து.ஆ விற்க்குபின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். |
Monday, October 31, 2011
தபூக் கிளையில் வாரந்திர பயான் நிகழ்ச்சி
Sunday, October 30, 2011
ஜித்தா மண்டலம், ஷர்ஃபியா கிளை இணைந்து பயான்
| அல்லாஹ்வின் திருப்பெயரால்... ஜித்தாவில் கடந்த 28-10-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம், ஷரஃபியா கிளையின் சார்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் மௌலவி அவர்கள் குர்பானியின் சிறப்புகளும் அதன் சட்டங்களும் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்களின் கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில் தரப்பட்டது. சுமார் 70க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை மண்டல வெப்சைட்டில் நேரலையாகவும் கொடுக்கப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
ஜித்தா - செனைய்யா கிளை ஆலோசனைக்கூட்டம்
| அல்லாஹ்வின் அருளால் கடந்த 28.10.2011 வெள்ளி அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளை ஆலோசனைக்கூட்டம் கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் வருகிற ஹஜ் பெருநாள் மறுநாள் நடக்க இருக்கிற மார்க்க மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளில் கிளையின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும், அதனைத்தொடர்ந்து நடக்க இருக்கும் மண்டல கிளைகள் ஒறுங்கிணைப்பு கூட்டத்தில் நமதுகிளைகளின் செயல்பாடு குறித்து, மண்டதலைமைக்கும், மாநில தலைமைக்கு நமது கருத்துக்கள், ஆலைசனைகள் தெரிவிப்பது குறித்தும் பேசப்பட்டது. அதோடு தாவா பணிகளுக்கு புள்ளிகள் பற்றியும் அவற்றில் நமது கிளையினால் செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது. ஆன்லைன்மூலம் நடத்தப்படும் பயான் நிகழ்ச்சிகளுக்கு, கேள்விப்பதில் நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்ற கேள்வியும் எழுந்தது. மாநில தலைமைதான் அதற்கு புள்ளிகள் கொடுக்க வேண்டும். மாநில தலைமையின் பைலாவில் புதிதாக சேர்க்க இருக்கும் விதிமுறைகளை படித்து காண்பிக்கப்பட்டது. ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். |
Friday, October 28, 2011
ஜித்தா மண்டல ஸ்திராஹ் நோட்டீஸ் & மேப்
| அல்லாஹ்வின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இன்ஷாஅல்லாஹ் வரும் ஹஜ் பெருநாளைக்கும் மறுநாள் 07-11-2011 திங்கள் அன்று நடைபெற உள்ள ஸ்திராஹ் நிகழ்ச்சியின் நோட்டீஸையும், நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்க்கான வழிகாட்டும் மேப்பினையும் இணைத்துள்ளோம். இன்ஷாஅல்லாஹ் உங்கள் அனைவரையும், உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் எதிர்ப்பார்க்கின்றோம். ஜித்தா மண்டல நிர்வாகிகள் |
2011 - அரஃபா தினம் - பெருநாள் அறிவிப்பு
Arafat Day on Nov. 5
By ARAB NEWS
Published: Oct 28, 2011 01:53 Updated: Oct 28, 2011 01:53
JEDDAH: The Arafat Day, when pilgrims stand in prayer in the plain of Arafat during Haj, will be on Saturday, Nov. 5, while Eid Al-Adha will be celebrated in the Kingdom on Sunday, the Supreme Court announced.
"It has been confirmed that the first day of Dul Hijjah is on Friday, Oct. 28 as the new crescent was sighted by a number of people on Thursday evening," the court said.
Thursday, October 27, 2011
Wednesday, October 26, 2011
வெளிநாடு மண்டலங்கள் மற்றும் கிளைகளின் தாவா பணிகளுக்கான புள்ளிகள் வழங்குதல் சம்பந்தமான முக்கிய அறிவிப்பு :
அஸ்ஸலாமு அலைக்கும்
- இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் வெளிநாடு மண்டலங்கள் மற்றும் கிளைகளின் தாவா பணிகள் கணக்கிடப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்
- உங்கள் கிளை மற்றும் மண்டலங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை நீங்கள் எந்த நிகழ்ச்சிகளையெல்லாம் புகைப்பட ஆதாரத்துடன் unarvunet@gmail.com என்ற நமது ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கின்றீர்களோ அது மட்டுமே புள்ளிகளுக்குரியனவையாக கருதப்படும். அது அல்லாமல் ஆதார புகைப்படங்கள் இல்லாமல் அனுப்பப்படுபவை புள்ளிக்கணக்கில் வராது.
- தாவா பணிகளை கிளை செய்யுமேயானால் கிளைக்கு முழுமதிப்பெண்களும், கிளைகளுடைய பணிகளுக்காக மண்டலத்திற்கு கிளைகள் பெறக்கூடிய புள்ளிகளும், அத்துடன் 20 சதவீதம் போனஸ் மதிப்பெண்களும் வழங்கப்படும். மண்டலமே அந்த தாவா பணிகளை செய்யுமேயானால் மண்டலத்திற்கு முழுபுள்ளிகள் வழங்கப்படும். (உதாரணத்திற்கு ஆன்லைன் நிகழ்ச்சியை கிளைகள் நடத்தினால் கிளைகளுக்கு 30புள்ளிகளும், மணடலத்திற்கு 20சதவீதபுள்ளிகளாக 6 புள்ளிகளுமாக மொத்தம் 30 + 6 = 36 புள்ளிகள் மண்டலத்திற்கு வழங்கப்படும். மண்டலமே அதை செய்யுமேயானால் மண்டலத்திற்கு 30 புள்ளிகள் மட்டும் வழங்கப்படும்
- ஒவ்வொரு மாதமும் தாவா பணியில் முன்னிலை வகிக்கும் வெளிநாட்டு மண்டலங்களின் பட்டியலும், கிளைகளின் பட்டியலும் உணர்வு இதழிலும், இணையதளத்திலும் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்…
- துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு இருந்தால் அவற்றை ஸ்கேன் செய்து தலைமைக்கு அனுப்பினால் தான் அவை புள்ளிகளுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
குறிப்பு:
unarvunet@gmail.com என்ற மெயில் ஐடிக்கு நீங்கள் செய்திகளை அனுப்பினாலேயே – உணர்வு இதழில் அந்த செய்தி பிரசுரிக்க தகுதியானதாக இருந்தால், உணர்வு இதழுக்கும், இணையதளத்தில் வெளியிட தகுதியானதாக இருந்தால் இணையதளத்திற்கும் ஃபார்வேட் ஆகிவிடும்.
வெளிநாடுகளுக்கான தாவா பணியின் விபரஙகள் புள்ளி
- ஆன்லைன் பயான் நிகழ்ச்சி 30 புள்ளிகள்
- உள்ளரங்கு நிகழ்ச்சிகள் 20 புள்ளிகள்
- துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் 20 புள்ளிகள்
- ஏகத்துவம் ஒரு வருட சந்தா 5 புள்ளிகள்
- தீன்குலப்பெண்மணி ஒரு வருட சந்தா 5 புள்ளிகள்
- உணர்வு வார இதழ் ஒரு வருட சாந்தா 20 புள்ளிகள்
- பேச்சுப்பயிற்சி முகாம்களை நடத்துதல் 20 புள்ளிகள்
- இஸ்லாத்தில் புதிய நபர்களை இணைத்தல் 30 புள்ளிகள்
- இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி 20 புள்ளிகள்
- இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 20 புள்ளிகள்
- திருக்குர்-ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு 15 புள்ளிகள்
- 3 புத்தகங்கள் அன்பளிப்பு வழங்கினால்… 5 புள்ளிகள்
- 3 டிவிடிக்கள் அன்பளிப்பு வழங்கினால்… 5 புள்ளிகள்
- 5 சிடிக்கள் அன்பளிப்பு வழங்கினால்… 5 புள்ளிகள்
- கூட்டுக்குர்பானி ஒரு மாட்டுக்கு 50 புள்ளிகள்
- ஃபித்ரா - உள்ளூரில் வசூலிக்கும் 1000 ரூபாய்க்கு 10 புள்ளிகள்
- நூலகங்கள் அமைத்தல் 30 புள்ளிகள்
- மண்டல தர்பியா 30 புள்ளிகள்
ரஹ்மத்துல்லாஹ்
உறுப்பினர் சேர்க்கை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
இம்மடல் தங்களை பூரண உடல் நலத்துடனும், வீரியமிக்க தவ்ஹீத் சிந்தனையுடனும் சந்திக்கட்டுமாக!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நம் அயல் நாடுகளில் மார்க்க மற்றும் சமுதாயப்பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். மாநிலத்தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் அனைத்து மண்டல நிர்வாகிகளுக்கும் நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்முடைய ஜமாஅத் அதிகமான உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொண்ட மாபெரும் இயக்கமாக அல்லாஹ்வின் அருளால் வளர்ந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
ஆயினும் நம்முடைய ஜமாஅத்தில் மனதார உறுப்பினர்களாக இணைந்து கொண்ட பலர் முறைப்படி உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைப் பெறாமல் உள்ளனர். இன்னும் பலர் நாம் எடுத்துச் சொன்னால் நமது கொள்கையை ஏற்று உறுப்பினராக தம்மை இணைத்துக் கொள்ள தயாராக உள்ளனர், ஆயினும் இதற்காக நாம் முயற்சி எடுக்காததால் எத்தனையோ பேர் இன்னும் உறுப்பினராகாமல் உள்ளனர்.
எனவே இந்தப் பணியை முடுக்கி விடும் வகையில் நவம்பர் மாதத்தை உறுப்பினர் சேர்க்கை மாதமாக அறிவிப்பது என தீர்மானித்துள்ளோம் நவம்பர் மாதத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு கூடுதல் முன்னுரிமை அளித்து செயல்படுமாறும் அதற்காக வழங்கப்படும் அதிகப்புள்ளிகளைப் பெற்று உங்கள் மண்டலத்தை தரம் உயர்த்துமாறும் கேட்டுக் கொள்கிறோம். புதிய உறுப்பினர்களைச் சேர்த்தும் பழைய உறுப்பினர்களைப் புதுப்பித்தும் ஒத்துழைப்பு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இத்தோடு 6 மாதத்திற்குள் உறுப்பினர்கள் அட்டை காலாவதி ஆகும் நிலையில் இருந்தால் அவர்களும் இப்போதே ரினீவல் செய்து கொள்ளுமாறு இதன்மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு ஒரு உறுப்பினருக்கு 5 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இப்படிக்கு..,
ஆர். ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச்செயலாளர்)





