Saturday, July 23, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் ,

செய்திகளை உடனுக்குடன் பெற   http://jeddahtntj.blogspot.com/  வலைத்தளம் சென்று

கீழே காட்டப் பட்டுள்ளது போல் உள்ள Subscribe பாக்ஸில் 

உங்களின் மெயில் ஐடியை பதிவு செய்யவும். இன்ஷாஅல்லாஹ்

Enter your email address: என்ற இடத்தில் உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும்.


நன்றி

                                      

Thursday, July 21, 2011

ஃபித்ரா வசூல்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..........
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அன்புள்ள மண்டல, கிளை நிர்வாகிகள், மற்றும் கொள்கை சகோதரர்கள் அனைவருக்கும் ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இந்தக்கடிதம் தங்களை சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும், பூரண உடல் நலத்தோடும் சந்திக்கட்டுமாக.
இன்ஷாஅல்லாஹ் விரைவில் நாம் புனித ரமலான் மாதத்தை அடைய உள்ளோம். இதில் நாம் அதிகம் நல் அமல்களை அதிகம் செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடும் அதே சமயத்தில், நாம் நமது ஜமாத் மூலமாக நோன்பு ஃபித்ரா தொகையை திரட்டி, தாயகத்தில் உள்ள நமது வசதியற்ற ஏழை எளியவர்களுக்கு கொடுத்து வருகின்றோம்.
இவ்வருடமும் நமது அந்த சேவை அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி இன்ஷாஅல்லாஹ் தொடர உள்ளது, இதற்க்காக நமது ஜித்தா மண்டலம் ஒரு நபருக்கு 13 ரியால் என்று நிர்ணயித்து உள்ளது. (பொதுக்குழுவில் 15 ரியால் என் நிர்ணயித்தாலும், அதிக சகோதரர்கள் எங்களின் அரிசி விலை 13 தாண்டாது என்று சொன்னதாலும், அதிக பேர்கள் தனக்கு மட்டும் தராமல், தாயகத்தில் உள்ள தமது குடும்பத்தினருக்காகவும் தருகிறார்கள், அவர்கள் நாட்டில் 75 அல்லது 80 ரூபாய்தானே கேட்கின்றார்கள் நீங்கள் அறிவித்தது மிகவும் அதிகமாக உள்ளது என்று தயக்கம் காட்டியதாலும், 13 என்று மாற்றி நிர்வாகாகுழுவில் நிர்ணயித்தோம், இதில் சில சகோதரர்கள் தனக்கு 15 ரியால் தரவிரும்பினால் அதைபெற்றுக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது) இவ்வாறு திரட்டப்படும் தொகையை ஜித்தா சார்பாக சுமார் 10 லட்சமாவது திரட்ட வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொருவரும் வசூல் செய்தால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும், அத்துடன் வாகன வசதி உள்ளவர்கள், எங்களில் சிலர் அந்த வசதி இல்லாமல், இடங்கள் தெரிந்தும் செல்ல முடியாமல் உள்ளனர்,
அவர்களுடம் நீங்கள் சென்று இந்த புனித பணியில் உங்களையும் ஈடுபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்களில் பல பேர்கள் இங்கு குடும்பத்துடன் உள்ளீர்கள், அவர்கள் நீங்கள் இதற்க்காக வெளியே செல்ல அனுமதிக்காமல் இருக்கலாம், அவர்களிடம் இதனால் அல்லாஹ்விடம் கிடைக்கும் நன்மையில் உங்களை போக அனுமதித்ததால் அவர்களுக்கும் கிடைக்கும் என்பதனை புரிய வைத்து வந்து கலந்துகொள்ளுங்கள் என்று அழைக்கின்றோம்.
ஃபித்ரா ஃபார்ம் தேவைப்பட்டால் பொருளாளர் யுனுஸ் - 0502786576 அல்லது அப்துல் பாரி - 0567122902 இவர்களை தொடர்பு கொள்ளவும்.
இந்த இலக்கை அடைந்த்திட உங்களின் ஒத்துழைப்பையும், உழைப்பையும் து.ஆ வையும் கேட்டுநிற்க்கும்,
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

Wednesday, July 20, 2011

ஜித்தா மண்டல நிர்வாகிகள்



தலைவர் - 
நௌஷாத் அலி தலைமை தொடர்பு, நிர்வாக குழு மற்றும் கௌரவ ஆலோசனை குழுவுடன் இணைந்து திட்டமிடல், கண்கானித்தல்
0533562686, nrnrn2004@hotmail.com


செயலாளர் - 
அப்துல் பாரி செயல்படுத்துதல், நிகழ்ச்சி ஏற்பாடுகள், து.செயலாளர்களின் செயல்பாடுகளை கண்கனித்தல்
0567122902. tntj_jeddah@yahoo.com

பொருளாளர் 
முஹம்மது யூனுஸ் -  வரவு, செலவு பராமரித்தல், வசூல் செய்வது, 6 மாதம் ஒருமுறை ஷாகுல் மூலம் தணிக்கை செய்வது.
 முஹம்மது ரஃபீ துணை தலைவர் தஃவா பொறுப்பு, தலைவருடன்
 இணைந்து பொறுப்புகளை கவனிப்பது. 
05027865756. gsccoyunus@yahoo.co.in

துணை செயலாளர்
அஹ்மது கபீர் -  ஜித்தா நகர் அல்லாத புறநகர் கிளை தொடர்பு
0507021643. kabeer.sony75@yahoo.com

துணை செயலாளர்
நஸ்ருதீன் உறுப்பினர் அட்டை பொறுப்பு, வாகன பொறுப்பு
0558166461. nasurudeenaziz@yahoo.com

துணை செயலாளர்
சையத் முஸ்தஃபா விளம்பர பொறுப்பு, லைப்ரரி பொறுப்பு
0567140437. js_musthafa2002@yahoo.co.in

துணை செயலாளர் 
முனாப் துணைத்தூதரகம் மற்றும் அலுவலக பொறுப்பு
0509386850. mohamed_munaff@yahoo.com

துணை செயலாளர்
சலாஹூதீன் ரத்ததானம், மற்றும் துணைத்தூதரக அலுவலக துணை பொறுப்பு
0508326083. jiya_salah@yahoo.com

துணை செயலாளர் 
ஜியாவுதீன் கல்வி குழு, பொருளாருக்கு துணையாக வசூல் பொறுப்பு
0508534340 - ahamednoor_zia@yahoo.com

துணை செயலாளர்
நஜீர் அஹ்மது கேமரா மற்றும் மீடியா தொடர்பு
துணை செயலாளர் 
ஷர்புதீன் இணையதளம் பொறுப்பு  
0507681698 - sarfudin@gmail.com


துணை செயலாளர்
அப்துற் ரஹ்மான் செய்தி தொடர்பு, மற்றும் தொழில் நுட்ப பொறுப்பு
0507654847 - abdouls@hotmail.com

துணை செயலாளர்
ஹக்கீம் நகர கிளைகள் பொறுப்பு, புதிய கிளைகள் உருவாக்குவது, உணர்வு, ஏகத்துவம், தீன்குலப்பெண்மனி சந்தா சேர்ப்பது
0564907446 - hakeemtntj@yahoo.com

துணை செயலாளர்
முஹம்மது கௌஸ் நகர கிளைகள் பொறுப்பு, புதிய கிளைகள் உருவாக்குவது, உணர்வு, ஏகத்துவம், தீன்குலப்பெண்மனி சந்தா சேர்ப்பது
0501805861 - tntj_jeddah@yahoo.com


Tuesday, July 19, 2011

இஸ்லாத்தை தன் வாழ்கைநெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரர்கள்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 01 / 7 /2011 
அன்று கேரளாவை சேர்ந்த இரு சகோதரர்கள்  இஸ்லாத்தை தன் வாழ்கைநெறியாக ஏற்றுக் கொண்டு தங்களத்  பெயரை அஹமத்  என்றும் முஹமத் என்றும்மாற்றிக் கொண்டார், கிளைச்செயலாளர் நிஜாம்தீன்  மூலம் . இவர்களுக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

------------------------------------------------------------------------------------------------------


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 10 / 6 /2011 
அன்று திருவாரூரை சேர்ந்த  செந்தில்  என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை
நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் மாலிக் என மாற்றிக் கொண்டார்,சகோதரர் மன்சூர்  அவர்கள் மூலம் .  திருக்குர்ஆன்தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 17 / 6 /
2011 அன்று கொள்ளிடத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஹாலித் என மாற்றிக் கொண்டார், சகோதரர் முஜாஹித் அவர்கள் மூலம் . திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 24 / 6 /
2011 அன்று கோயம்புத்துரை சேர்ந்த பிரபு என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை இக்பால் என மாற்றிக் கொண்டார், கிளைத்தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாம் பற்றி விளக்கியதோடு பொருளாளர் சபியுதீன் அவர்கள் மூலம்    . இவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 10 / 6 /
2011 அன்று திருவாரூரை சேர்ந்த செந்தில் என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கைநெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் மாலிக் என மாற்றிக் கொண்டார்,சகோதரர் மன்சூர்  அவர்கள் மூலம் .  திருக்குர்ஆன்தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

Monday, July 18, 2011

பொது செயலாளருடன் கலந்தாலோசனை



அல்லாஹ்வின் திருப்பெயரால்

கடந்த 04-07-2011 திங்கள் இரவு 9.30 மணி முதல் 12 மணி வரை, ஜித்தாவிற்க்கு வருகை தந்திருக்கும் மாநில பொதுச்செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாவுடன் ஜித்தா மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் கௌரவ ஆலோசகர்களுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் மாநிலம் எதிர்காலங்களில் என்னவெல்லாம் செய்யலாம் என்றும், மண்டல செயல்பாடுகள் எப்படியெல்லாம் அமையவேண்டும் என்றும் ஆலோசனைகள் செய்யப்பட்டது, இதற்க்கு பதில் மற்றும் விளக்கங்களை பொதுச்செயலாளர் அளிக்க நிகழ்ச்சி பயனு  ள்ளதாக அமைந்த்து. து.ஆவுடன் இரவு உணவிற்க்குபின் நிகழ்ச்சி இனிதாக நிறைவேறியது.

Sunday, July 17, 2011

வாராந்திர குர்ஆன் வகுப்பு மற்றும் மார்க்க விளக்க நிகழ்ச்சிகள்


செனைய்யா கிளையில் வாராந்திர குர்ஆன் வகுப்பு

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 15-07-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் வாராந்திர குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



ஷர்ஃபியா கிளையில் வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி


அல்ஹம்துலில்லாஹ் கடந்த 15-07-2011 வெள்ளி அன்று மாலை ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளையில் வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மண்டல துணைத்தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் ஜீம்ஆ நாளில் பேனவேண்டியவைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.



ஷர்ஃபியா கிளையில் வாராந்திர குர்ஆன் வகுப்பு

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 15-07-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளையின் வாராந்திர குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.





Saturday, November 7, 2009

ஜித்தாவில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

வல்ல நாயன் கிருபையால் கடந்த 11-11-2009 அன்று மக்ரிப் முதல் இஷா வரை, ஜித்தா மண்டலம் சார்பில் ஜித்தாவில், ஸாகர் பகுதியில் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் சகோ. எம்.எஸ் சுலைமான் (TNTJ மேலாண்மைக்குழு உறுப்பினர்) அவர்கள் கலந்து கொண்டு, மறுமையின் சிந்தனைகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் அதிகமான பெண்கள் பிள்ளைகளுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்;.

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

 ஜித்தாவில்
வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 06-11-09 அன்று ஜித்தா மண்டல ஏற்பாட்டில் ஜித்தா கிலோ14, இஸ்லாமிய அழைப்பு மையத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் முதல் அமர்வில் சகோ. பஷீர் மௌலவி அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் வியாபாரம் எனும் தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சகோ. அப்துல் மஜீது ஸஹ்வி அவர்கள் குர்பானியின் சட்டங்கள் குறித்து உரையாற்றினார். இரண்டாம் அமர்வில் சகோ. சைபுல்லாஹ் அவர்கள் குர்ஆன் உருவாக்கிய சமுதாயம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் 300க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.