Pages

Thursday, May 31, 2012

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் வாராந்திர தர்பியா


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் 24/05/2012 வியாழன் அன்று இரவு 11/30 முதல் 12/30மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது. இதில் கிளைத் தலைவர்சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள், ஸஹாபாக்களை பின்பற்றவேண்டுமா? "வழி கெட்டக் கொள்கைகள்" பகுதி-8 என்ற தலைப்பில் சகோ. P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன்,குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில்எடுத்துரைத்தார்கள். இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். மேலும் து.ஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்தபூக் கிளை மர்கஸில்
24/05/2012 வெள்ளி அன்று ஜூம்ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "ஈமானில் உறுதி" என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நாட்டு நடப்பும் நமது நிலையும்" என்ற தலைப்பிலும், கிளை து.தலைவர் சகோ. முஜாஹீத் அவர்கள் "நபிகளாரின் நற்குணங்கள்" பாகம் 2 என்ற தலைப்பிலும், சகோ. முஹம்மது சாலிஹ் அவர்கள்"நபிகளாரின் முன்னறிப்பு" என்ற
தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்கள்
உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆவுடன்
மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

ஜித்தா மண்டலம் ஜீசான் கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஜீசான் கிளை மூலம் 25/05/2012 வெள்ளிக்கிழமை அன்று 
ஜும் ஆ தொழுகைக்குப்பின் ஜீசானில் உள்ள சபியாவில் தாவாக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்சகோ.ரியாஜ் அஹமது ஜமாதின் 
செயல்பாடுகளை பற்றியும், சகோ.சேக் தாவூத் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகள் பற்றியும் பேசினார்கள். மேலும் சபியாவின் பொறுப்பாளிகளாக சஹோதரர் இக்பால் மற்றும் அப்துர்ரஹ்மான் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் சகோதரர்கள் கனிசமாக கலந்து கொண்டனர்
கூட்டத்தில் குர்ஆன் தர்ஜுமா வாசிக்கப்பட்டது ஜமாத்தின் பனிகளை வீரியமாக
செயல் படுத்துவதைப் பற்றி விவாதிக்கப் பட்டது. து.ஆ விற்க்குப்பின் கூட்டம் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-கடையநல்லூர் கிளைஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைமை மற்றும் மண்டலத் தலைமையின் ஆலோசனையின் படியும் அனுமதியின் படியும் நிர்வாகிகள் என்று இருந்த நிலையை மாற்றி பொறுப்பாளர்கள் என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் முறையாக நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனைக்குழு கூடி மூன்று பொறுப்பாளர்களை ஒரு மனதாகதேர்வு செய்தார்கள். 1.சகோ.அப்துல் ஹலீம் சித்தீக், 2.அப்துல் பாசித், 3.அல் அமீன். இதனை பொதுக்குழு ஒப்புதலுக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, கடையநல்லூரில் இயங்கிக் கொண்டிருக்கும் கிளைகளின் செயல்பாடுகள் குறித்தும், அவர்கள் மர்கஸ்ஸுக்களுக்கு செய்துள்ள செலவுகள் மற்றும் மருத்துவ உதவி பற்றியும் விவாதிக்கப்பட்டது, து.ஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 25-5-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையின் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் கிளை தலைவர் சகோ. செய்யது முஸ்தபா அவர்கள் "நரகம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். 


ஜித்தா மண்டல பெண்களுக்கான ஆன்லைன் பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 23-5-2012 புதன் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் சார்பில் சாகர் பகுதியில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி இணையதளம் வாயிலாக நடைபெற்றது. அதில் தாயகத்திலிருந்து சகோ. அப்பாஸ் அலி அவா்கள் "அழிவு நாளை அறிந்து கொள்வோம்"  தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். 

ஜித்தா ஷர்ஃபியா கிளையில் பேச்சு பயிற்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 25-5-2012 வெள்ளி அன்று அஸருக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் தாயிகள் பயிற்சி வகுப்பு மண்டல துணை தலைவர் சகோ.ரஃபீ தலைமையில் நடைபெற்றது. இவ்வகுப்பில் பல சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்ச்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.



ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளை பயான்

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையில் 25.05.2012 வெள்ளி அன்று மாலை, வாராந்திர குர்ஆன் வகுப்பிற்க்கு பிறகு கிளை பயான் நடைபெற்றது. இதில் ஜித்தா மண்டல பேச்சாளர் சகோ.சவுகத் ஹூஸைன் இறைபக்தியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.



Wednesday, May 23, 2012

ஜித்தா ஷர்ஃபியா கிளையில் தாயிகள் பயிற்ச்சி வகுப்பு

வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 18-5-2012 வெள்ளி அன்று அஸருக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையில் பேச்சாளர்களை உருவாக்கும் முயற்ச்சியில், தாயிகள் பயிற்சி வகுப்பு ஜித்தா மண்டல துணைத்தலைவர் சகோ. முஹம்மது ரஃபி அவர்களால் நடத்தப்பட்டது. சகோதரர்கள் அனேகர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் வகுப்பு இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 


ஜித்தா ஷர்ஃபியா கிளை பயான்

வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 18-5-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் மௌலவி(ஜித்தா) அவா்கள் மறுமை சிந்தனை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் பயான் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, May 20, 2012

ஜித்தா மண்டல மதினா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 18-05-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் மார்க்க உரை நடைபெற்றது, இதில் கிளை துணை தலைவர் ஜமால் அவர்கள் "மர்யம் (அலை ) அவர்களின் சிறப்பு '' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின்பு குர் ஆன் பயிற்சி வகுப்பும் ,மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது. து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.


ஜித்தா மண்டலத்தின் பெண்களுக்கான சிறப்பு ஆன்லைன் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்கள் அனைவருக்கும் ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இன்ஷா அல்லாஹ் வரும் 23-05-2012 புதன் அன்று மாலை சௌதி நேரம் 7.15 முதல் 8.15 வரை ஆன்லைன் மூலம் மாநில் மேலாண்மை குழு உறுப்பினர் சகோ. அப்பாஸ் அலி அவர்கள் "அழிவு நாளை அறிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் பெண்களுக்கான சிறப்பு உரையை நடத்த ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்வதோடு, உங்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினரையும் கலந்து கொள்ள செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

ஜித்தா மண்டலம் மதினா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 11-05-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் மார்க்க உரை நடைபெற்றது.இதில் கிளை துணை தலைவர் ஜமால் அவர்கள் "கிறிஸ்துவர்களின் இஸ்லாத்திற்கு எதிரான அறிவற்ற வாதங்கள் '' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின்பு குர் ஆன் பயிற்சி வகுப்பும் மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது, துஆ, மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். 

Saturday, May 19, 2012

வாராந்திர குர்ஆன்வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 18-05-2012 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளையில் குர் ஆன் வகுப்பும், நபிவழி தொழுகை பயிற்ச்சியும் கிளை து.தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் மூலம் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 18/05/2012 வெள்ளி அன்று ஜூம்ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "சத்திய மார்க்கமும், தடம்புறலும் சமுதாயமும் - பாகம்-2" என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நாட்டு நடப்பும் நமது நிலையும்" என்ற தலைப்பிலும், கிளை து.தலைவர் சகோ. முஜாஹீத் அவர்கள் "நபிகளாரின் நற்குணங்கள்" என்ற தலைப்பிலும், சகோமுஹம்மது சாலிஹ் அவர்கள் "வார்த்தைகளில் சிறந்தது லாயிலாஹ இல்லல்லாஹ்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆவுடன் மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

ஜித்தா-தபூக் கிளையில் புதிய முஸ்லிம்களுக்கான தர்பியா முகாம்

TNTJ தபூக் கிளையில் 18-05-2012 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர்களுக்கு - கொள்கை விளக்கம், நபிவழித் தொழுகை செயல் முறை விளக்கம்திருக்குர்ஆன் - அல்ஹம்து சூறா, மற்றும் இதர சிறிய சூறாக்களையும் முறையாக ஓத தர்பியா வகுப்பு நடைபெற்றது. இதில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.   

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில் 17/05/2012 வியாழன் அன்று இரவு 11/30 முதல் 12/30மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது.  இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள், ஸஹாபாக்களை பின்பற்றவேண்டுமா?  "வழிகெட்டக் கொள்கைகள்" பகுதி-8 என்ற தலைப்பில் சகோ. P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள்இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர்மேலும் து.ஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
                                                                   

Friday, May 18, 2012

TNTJ ஜித்தா மண்டலம் ஜீசான்

ஜித்தா மண்டலம் ஜீசான் கிளையில் 18 / 05 / 2012 வெள்ளிக்கிழமை அன்று சகோதரர் ராஜ்முஹம்மது அவரக்ள் பணிபுரியும் டைல்ஸ் கம்பனியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாதின் ஜிஸான் கிளையின் தாவாக் கூட்டம் அல்லாஹ்வின் கிருபையால் நடைப் பெற்றது, கூட்ட்த்தில் சகோ..ரியாஜ் அஹமது ஜமாதின் செயல்பாடுகளை பற்றியும் சகோ..சேக் தாவூத் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கைப் பற்றியும் பேசினார்கள். சகோதரர்கள் கணிசமாக கலந்து கொண்டனர், கூட்டத்தில் குரான் தர்ஜுமா வாசிக்கப்பட்டது, ஜமாத்தின் பணிகளை வீரியமாக செயல் படுத்துவதைப் பற்றி விவாதிக்கப் பட்டது . து.ஆ விற்க்குப்பின் கூட்டம் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளை சார்பாக "சாதி வாரி கணக்கெடுப்பு" குறித்து உணர்வில் வெளியான செய்தியை நோட்டீஸ் ஆக மக்களிடம் 18-05-2012 வெள்ளி அன்று விநியோகம் செய்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த தகவல்களை தாயகத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்க வசதியாக உள்ளது என்று பிரசுரம் பெற்றவர்கள் தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் மார்க்க உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் 17-05-2012 வியாழன் அன்று இரவு மாதாந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.புதுவை அன்சாரி அவர்கள் "கொள்கையில் உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் உறுப்பினர் அட்டை பெறுவது குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது. து,ஆவுடன் கூடம் நிறைவுற்றது.

ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன்ஸ் நாட்டவர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 17-05-2012 வியாழன் அன்று பிலிப்பைன்ஸ் - (Davao) தாவவ்வைச் சேர்ந்த Tabuk-Saudi Vehicles Annual Inspection Unitல் பணிபுரியும் சகோ. Johnny Neniel (ஊதா சட்டை போட்டிருப்பவர்) வயது 32 அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.  இவர், கடந்த   14/03/2012 அன்று  இஸ்லாத்தைத் தழுவிய சகோ. ரய்மோன்  டினோரியோ அவர்களுடன் பணிபுரியும் சகோதரர் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தூய இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களையும்வணக்க வழிபாடு சம்மந்தமான விஷயங்களையும் விளக்கிகூறியது மட்டுமின்றி பைபிலில் கிறுத்துவ பாதிரிமார்களின்  சித்து விளையாட்டுக்களையும் ஆதாரத்துடன்  விளக்கிகூறி  கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்.  மேலும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.     மேலும் அவருக்கு பைபில் இறைவேதமா?,   குர்ஆன் இறை வேதமா?  விவாத  DVD களையும் மற்றும் சகோ.P.J அவர்களின் ஆங்கில நூல்களையும் மற்றும் பல இஸ்லாமிய ஆங்கில  நூல்கL 15யும்,  ஆங்கில திருக்குர் ஆனையும் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.

Monday, May 14, 2012

செனைய்யா கிளை தாவா கேம்ப்களில் நோட்டீஸ்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிறிஸ்தவர்களுடன் நடத்திய "பைபிள் இறைவேதமா?" விவாத குறுந்தகடுகளை கிறித்தவ சகோதரர்களுக்கு இலவசமாக வழங்க  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் மூலம்  கேம்ப்களில்  நோட்டீஸ் ஒட்டப்பட்டு பல உறுப்பினர் மூலம் விநியோகிக்கப்பட்டது.  இதுவரை 10 பேருக்கு டிவிடி வழங்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-செனைய்யா வாராந்திர குர்ஆன் வகுப்பு

ஏக இறைவனின் பேரருளால் அவனது தூயமார்க்கத்தை அதன் தூயவடிவில் எடுத்துரைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணியில் முதன்மையானது முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை தூயவடிவில் எடுத்துரைப்பதே. அதனை ஜித்தாமண்டல செனைய்யா கிளையின் சார்பில் செய்யப்படும் முதல் பணி திருக்குர்ஆன் கற்றுத் தருவது, அதனை சரியான உச்சரிப்புடன் ஒதுவது, மனனம் செய்வது, து.ஆக்கள் மனனம் போன்ற பணிகளை வாராவாரம் செய்து வருகிறது. கடந்த வாரம் பெரியவர்களுக்காக நடந்த குர்ஆன் வகுப்பில் குர்ஆனை பிழையின்றி ஓதும் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-செனைய்யா கிளையின் மாநில தாயி பயிற்சி முகாமிர்க்கான நிதி உதவி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மாநில தலைமை நடத்தி வரும் தாயி பயிற்ச்சி முகாமிற்க்கு ஜித்தா மண்டல ஜித்த-செனையா கிளை தங்களது பங்களிப்பாக 500 ரியாலை(7000 ரூபாய்) கிளை தலைவர் சகோ. அமீன் மண்டல து.செயலாளர் சகோ. ஹக்கீமிடம் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-செனையா கிளையின் மாநில கட்டட நிதி

கடந்த 11-05-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளைக்கு மண்டலம் மாநில தலைமை கட்டிட நிதியாக நிர்ணயித்திருந்த 75000 ரூபாய்க்கான ரியாலை கிளை செயலாளர் சகோ. யாக்கூப் அவரக்ள் மண்டல தலைவர் சகோ. நௌஷாத்திடம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளையின் மாதந்திர கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஜித்தஹ்-செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம் 11-.05.2012 அன்று மாலை ஜித்தா மண்டல தலைவர் சகோ. நவ்ஷாத் அவர்கள் தலைமையில், கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. "இஸ்லாத்தில் உணவு முறைகள்" என்ற தலைப்பில் மண்டல துணைத் தலைவர் சகோ.ரஃபி உரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து மாநில தலைமையில் நடைபெறும் தாவா பயிற்சி வகுப்பு பற்றி மாநில தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையை சகோ.ஹுசைன் படித்துக்காட்டினார்கள். மாநில தலைமையின் கட்டிட விபரமாக சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு மண்டல தலைவர் பதில் கூறினார். ஆர்வமுடன் பல சகோதரர்கள் கலந்து பயன் பெற்றார்கள். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, May 13, 2012

ஜித்தா-தபூக் ASTRA பண்ணையில் மார்க்க சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மூலம் TABUK ASTRA  பண்ணையில் பணிபுரியும் இந்திய மற்றும் இலங்கை சகோதரர்களுக்கு  கடந்த  11/05/2012 வெள்ளி அன்று  மஹ்ரிப்பிற்கு பின் அவர்களின் ரூம்களில் மார்க்க சொற்பொவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள்: "அழகிய முன்மாதிரி அண்ணல் நபி [ஸல்]" என்ற தலைப்பில் குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் உரையாற்றினார்கள். மேலும் இறுதியில்  அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டதுது.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

 

ASTRA பண்ணையில் பிறமதத்தவருக்கு மார்க்க சொற்பொழிவு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ  ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மூலம்,  தபூக் அஸ்ட்ரா விவசாய பண்ணையில் பணிபுரியும் இந்தியா மற்றும் இலங்கை பிமத சகோதரர்களுக்கு கடந்த 11/05/2012  வெள்ளி அன்று இஷாவிற்குப்பின் அவர்களின் ரூம்களில் இஸ்லாம் பற்றிய சந்தேகங்ளை தீர்க்க, கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களின் கேள்விகளுக்கும் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள், சிறப்பான முறையில் குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் பதில் அளித்தார்கள்.

மேலும் அவர்களுக்கு சகோ. P.J அவர்களின் திருமறை தோற்றுவாய்மாமனிதர் நபிகள் நாயகம்வருமுன் உரைத்த இஸ்லாம்மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்பைபில் இறைவேதமா?,  இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை, மற்றும் பல 15 இஸ்லாமிய நூல்களையும். மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம்கிருஸ்தவர்களுடன் நடந்த விவாதம்பைபில் இறை வேதமா?,  குர்ஆன் இறை வேதமாவிவாதம், இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள், ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினர்கள். அல்ஹம்துலில்லாஹ். 

 

TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் மாற்று மதத்தவருக்கான தாஃவா

கடந்த 11/05/2012 வெள்ளி அன்று  TNTJ  தபூக் கிளை மர்கஸிற்கு மார்க்கத்தை அறிய வந்த ராமநாதபுரம் - சாயல்குடியைச் சேர்ந்த   சகோதரர் சதீஷ்குமார்  அவர்களை கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்களும், கிளைச் செயலாளர் நிஜாம் அவர்களும் சகோதர வாஞ்சையுடன் வரவேற்று, உபசரித்து இஸ்லாத்தின் கடவுள் கொள்கை  என்ன என்பதைப் பற்றி சிறப்பான முறையில் எடுத்துரைத்து, இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களையும்,  ஆதாரப்பூர்வமாக விளக்கிக் கூறினர்கள்.

மேலும் அவர்களுக்கு சகோ, P.J அவர்கள் மொழிபெயர்த்த குர்ஆன் மற்றும் திருமறை தோற்றுவாய்,  மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், பைபில் இறைவேதமா?,   இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்படவில்லை              போன்ற 15 இஸ்லாமிய  நுல்களுடன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,  நாத்திகர்களுடன் நடந்த விவாதம், கிருஸ்தவர்களுடன் நடந்த விவாதம்,  பைபில் இறை வேதமா?  குர்ஆன் இறை வேதமா? விவாதம், இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்! ஆகிய தலைப்புகளின்  25 DVD களையும் வழங்கினர்கள். அல்ஹம்துலில்லாஹ்.