நமது வெப்டிவி தற்போது Live WebTV ஆக மாற்றப்பட்டுள்ளது. தினமும் 4 மணி
நேர நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். ஐபோன் , ஆண்ட்ராய்டு,
மொபைல் உள்ளிட்ட டிவைஸ்களிலும் நமது வெப்டிவியை தங்கு தடையின்றி காண
முடியும். பாருங்கள் பார்க்க தூண்டுங்கள்!
TNTJ Live WebTV
Pages
▼
Tuesday, March 26, 2013
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இருவர்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 25-03-2013 திங்கள் அன்று தபூக் கிங் அப்துல் அஜீஸ் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கென்யா நாட்டின் நைரோபியைச்சேர்ந்த சகோ. Maara Kenneth Njorge அவர்களும், பிலிப்பைன்ஸ் நாட்டின் சாந்தாகுருஷை சேர்ந்த சகோ. Amar Carpio Sallao அவர்களும் தூய இஸ்லாத்தை தழுவினார்கள். அவர்களுக்கு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும், சகோ. அஹ்மது இஷ்புனுஷா(பிலிப்பைனி) அவர்களும் இஸ்லாத்தின் கொள்கை விளக்கங்களை கூறி கலிமாவை சொல்லிக்கொடுத்தனர். அவர்களுக்கு ஆங்கில திருக்குர் ஆனும் வழங்கப்பட்டது. அவர்களில் மாரா கென்னத் தனது பெயரை அப்துல் மாலிக் என்றும், அமர் கார்பியோ தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் மாற்றிக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-மதீனா கிளையில் மார்க்க உரை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 22-03-2013 வெள்ளி ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சலாஹுதீன் அவர்கள் சஹாபாக்களின் சிறப்புகள் என்ற தலைப்பின் முதல் பாகத்தை உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-ஷரஃபியா கிளை வாராந்திர பயான்
வல்ல நாயனின் கிருபையால் கடந்த 22-3-2013 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷரஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி மக்ரிப் முதல் இஷா வரை நடைபெற்றது. சகோ. நஸ்ருத்தீன் அவா்கள் இறை நினைவு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
|
Monday, March 25, 2013
Saturday, March 23, 2013
தொழுகை
உங்களுக்குத் தொழ வைக்குமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.. ஆம் முஸ்லிம்களின் மிகமிக முக்கிய வணக்க வழிபாடுகளில், உன்னதமான ஐம்பெரும் கடமைகளில் ஒரு கடமையானது தொழுகை. நம்மை படைத்த இறைவனுக்காக தினந்தோறும் நிறைவேற்றும் (சொர்க்கத்தின் திறவுகோலான) இறைவணக்கமான தொழுகையை முறையாக குறிப்பிட்ட சமயத்தில் நிறைவேற்றுவது நமது கடமையாகும்.
திருக்குர்ஆனிலும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களிலும் தொழுகை எனும் இறைவணக்கம் முஃமின்கள் மீது மிக வலியுறுத்தப்பட்ட கட்டாயக்கடமை என்பதை அறியமுடிகிறது. இதனை தவறாது நிலைநிறுத்துவதற்கு இறைவிசுவாசிகள் அனைவரும் கடமைபட்டுள்ளார்கள்.இத்தொழுகை எனும் இறைவணக்கம் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ள படவேண்டும் என்றால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த, காண்பித்து கொடுத்துள்ள முறையில்மஸாயில்களை அறிந்து நிறைவேற்ற வேண்டும்..இறைவன் கூறுகிறான்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றிபெற்று விட்டனர்.அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.மேலும்அவர்கள்தம்தொழுகைகளை குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். (அல்குர்ஆன்23:1,2,9 )
உள்ளச்சம்((خشوع என்றால் இந்த இடத்தில் இறைவனை பயந்து, நாம் அவனை பார்க்காவிட்டாலும் அவன் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று தொழுகவேண்டும். இரண்டாவது விளக்கம் தொழுகையை விளங்கி தொழுவது அதன் பர்ளு,வாஜிபு,சுன்னத் போன்றவைகள்.மூன்றாவதாக பேணுதல் அவசியம்,இன்று பேணுதல் என்றால் என்னவென்றே தெரியாமல் தொழுது கொண்டிருக்கிறோம். நிலையில்(நிற்பதில்) சொரிந்து கொண்டே நிற்பது,ஆடைகளை சரிசெய்வது,தாடியை கோதிவிடுவது,எங்கே பார்வையை
செலுத்துவது என்று தெரியாமல் நிர்ப்பது, கைகட்டுவது, ருகூவு, சுஜூது செய்வது என்று தக்பீர் தஹ்ரிமாவிலிருந்து சலாம் கொடுக்கின்றவரை பேணுதல் அவசியம்.அதைத்தான் நமது இமாம்கள் தொழுகையின் பார்ளு நான்கு, வாஜிபு பதினெட்டு,சுன்னத் ஐம்பத்தி ஒன்று என்று அழகிய முறையில் அற்புதமான சட்டங்களை சொல்லித்தந்துள்ளார்கள் யார் இவைகளை நல்லமுறையில் படித்து விளங்கி அமல் செய்கின்றார்களோ அவர்களிடத்தில் பேணுதல் வந்துவிடும்
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கிறார்கள் இதற்கு காரணம் அவர்கள்அறிவில்லாதமக்களாகஇருப்பதேயாகும். (அல்குர்ஆன்5:58)
அல்லாஹ் தஆலா அவனது வேத நூலில் அதிகமான இடங்களில் தொழுகையின் முக்கியத்துவம் பற்றியும்,அதை ஒழுங்குர பாதுகாத்து ஜமாத்தாக நிறைவேற்றுவது பற்றியும் குறிப்பிடுகின்றான்.அத்துடன் சோம்பல் காரணமாக தொழுகையை அலட்சியம் செய்வது,அல்லது தொழுகையின் பக்கம் அழைப்பு கொடுத்தால் அதனை அலட்சிய படுத்துவதோடு மட்டுமல்லாமல் அழைப்பவரையும் பரிகாசம் செய்வது நயவஞ்சகர்களின் அடையாளமாகும்.
நாயகம் (ஸல்)அவர்கள் தொழுகையைப் பற்றி ஒரு நாள் கூறி கொண்டிருந்தார்கள்.அப்போது யார் அதை பேணி நடக்கின்றானோ அவனுக்கு ஒரு பிரகாசமும், இறைவனிடம் ஓர் ஆதாரமும், கியாமத்து நாளில் வெற்றியும்ம் கிடைக்கும் என்றும், யார் அதைப்பேணி (தொழுகையை)நடக்கவில்லையோ அவனுக்கு பிரகாசமும் கிடைக்காது, ஆதாரமும் கிடைக்காது,வெற்றியும் கிடைக்காது,அவன் கியாமத்து நாளில் பிர்அவ்ன், காரூன்,ஹாமான் போன்ற பெரும் பாவிகளுடன் சேர்ந்திருப்பான் என்றும் சொன்னார்கள் (பைஹகி) மனிதனின் பிராகாசம் தொழுகையில்தான் உள்ளது,இந்த தொழுகைதான் நரகிலிருந்து விடுதலை பெருவதற்கு காரணமாகவும் ஆதாரமாகவும் உள்ளது ஆதாரம் என்பது நமது சஜ்தா செய்யும் ஏழு உறுப்புக்கள் தான் இதே தொழுகைதான் நாளை கியாமத் நாளில் நாம் வெற்றி பெறுவதற்கும் ஈடேற்றம்பெறுவதற்கும் காரணமாகவும் அமையும். அது அல்லாமல் எந்த ஒரு மனிதனாவது தொழுகையில் பொடுபோக்காக இருப்பானேயானால் அவனின் இறுதிமுடிவு படு பயங்கரமானதாக இருக்கும் அல்லாஹ்வின் விரோதிகலாகிய கொடியவர்களுடன் தான் தொழுகாதவனும் எழுப்பப்படுவான்,என அல்லாஹ்வின் தூதர் எச்சரித்துள்ளார்கள். மேலும் அல்லாஹ் கூறுவதை படியுங்கள்
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள் அவனிடம்தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்6:72 )
எவர்கள் வேதத்தை உறுதியாக பற்றி பிடித்துக்கொண்டு, தொழுகையையும் நிலை நிறுத்துகிறார்களோ(அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்கமாட்டோம். (அல்குர்ஆன்7:170)அல்லாஹ் தொழுகையாளிகளை நல்லவர்கள் என்று கூறுகிறான்.அதுமட்டுமல்ல அவர்களுக்குண்டான கூலியும் நிரப்பமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி தருகின்றான். நிரப்பமான கூலி என்றால் ஒரு மனிதன் தொழவேண்டும் என்று மனதால் நினைத்தான் ஆனால் தொழ வில்லை என்றாலும் நிய்யத்திற்கு கூலி
வழங்கப்படும். நபிகளார் (ஸல்)அவர்கள் தொழுகையை (தொழவேண்டும்) என்று ஒருவன் நாடினாலும்கூட (அவன்
நன்மையைப் பொறுத்த அளவில்)தொழுகையிளிருப்பவனைப் போலவே இருக்கிறான் என்றாகள்.ஆக நிய்யத்திற்கே கூலி என்றால் தொழுதவனின் கூலி எப்படி வீணாகும். கூலி வழங்குவதில் அல்லாஹ்வே மிகச்சிறந்தவன்.இவர்கள்தான் இறைவனின் அருளுக்குரியவர்கள். மேலும் அல்லாஹ் கூறுகிரான். நிச்சயமாக நாம்தான் அல்லாஹ்! என்னை தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர்வணங்கும்,என்னை தியானிக்கும்பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன்(20:14)
அல்லாஹ் மாத்திரமே வணங்குவதற்கு தகுதியானவன் மனிதனது உள்ளத்தால்,உறுப்புக்களால் (உடலும் உள்ளமும் சேர்ந்து ) நிறைவேற்றப்படும் அனைத்து வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்காகவே செய்ய வேண்டுமே தவிர வேறு எவனுக்காகவும் நிறைவேற்றுவது கூடாது.காரணம் அவன்தான் நம்மை படைத்தவன் அதுமட்டுமல்ல அவனின் தன்மைகளைப் பாருங்கள்,அல்லாஹ்தான் அனைத்தையும் படைப்பதில்,பரிபாளிப்பதில் தனித்தவன்.அவ்வாறே அண்டசராசரங்கள் அனைத்திலுமுள்ள படைப்பினங்கள் யாவற்றையும் பரிபாளிக்கக்கூடியவனும் அல்லாஹ்வே ஆவான்,மேலும் படைத்தல், பரிபாளித்தல், போஷித்தல், ஆட்சி செய்தல்,உயிர்பித்தல்,மரணிக்கச் செய்தல்,இவை யாவும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்தம்..மனிதர்களாகிய நாம் அவனின் அடிமைகள். நமது அடிமைத்தனத்தை தொழுகையின் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும். காரணம் வழிபாட்டு சடங்குகளில் தொழுகைதான் முதன்மையானது இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று,இறை நம்பிக்கையாளனின் அடையாளமே தொழுகைதான். இரண்டு,இறைவனுடன் நேரிடையாக தொடர்பை ஏற்படுத்துவதுடன் அவனது கட்டளைக்கு பணிந்து வாழ்வேன் என்று வாக்களித்து இறைவனின் வழிகாட்டுதலை மட்டுமே விரும்பி வேண்டி பெறுவதால் மனிதன் பாவத்திலிருந்து பரிசுத்தமாகிவிட வாய்ப்பு ஏற்படுகிறது. .அல்லாஹ் கூறுகிறான் உனக்கே நாங்கள் அடிபணிகிறோம் (இபாதத் செய்கிறோம் )மேலும் .உன்னிடமே நாங்கள் உதவி தேடுகின்றோம் எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிப்பாயாக (1:4-5)……….
யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகி விடும்.இஸ்லாம் என்பது இறைவனின் மார்க்கம். முழு மனித சமுதாயத்தின் ஈருலக ஈடேற்றத்திற்கு இறைவனால் தரப்பட்ட இனியமார்க்கம்.ஆக இஸ்லாம் என்றாலே இறைவனுக்கு கட்டுப்படுவது கீழ்படிவது இணங்கி நடப்பது என்பதுபொருள் (சாந்தி சமாதானம் எனவும் பொருளுண்டு) எனவேதான் ஒவ்வொரு ரகஅத்திலும் உன்னையே வணங்குகிறோம் உன்னிடத்திலேயே உதவி தேடுகிறோம் என்று வரும் சூரா ஃபாதிஹாவை அல்லாஹ் தொழுகையுடன் சம்பந்தப்படுத்தி வைத்திருக்கின்றான். எவனொருவன் இதை ஓதவில்லையோ அவனின் தொழுகையே கூடாது மேலும் தொழுகையின் மூலமாகத்தான் நேர்வழியும் பிரகாசமும் கிடைக்கின்றது. மறுமையில் வெற்றியும் ஈடேற்றமும் கிடைக்கின்றது, இதற்கு மாற்றமாக எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், ஹாமான் ,உபை இப்னு ஃகலப் ஆகியோருடன் இருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு,அம்ருஇப்னு ஆஸ் (ரழி) நூல் : அஹ்மத்
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தர்பியா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில், கிளை நிர்வாகிகளால் 21-03-2013 வியாழன் அன்று, கடந்த வாரம் இஸ்லாத்தை தழுவிய இரண்டு இலங்கை சிங்களவர்களுக்கு தர்பியா வகுப்பு நடைபெற்றது. இதில் அவர்களுக்கு தொழுகை, சிறிய சூராக்கள் மனனம் போன்றவை பயிற்ச்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு சிங்கள புத்தகங்கள், ஆடியோ கேஸட், சி.டிக்கள் போன்றவைகளும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு மொழிபெயர்த்து உதவிய ஷாக்கீர் கடந்த வருடம் நமது கிளை மூலம் தூய இஸ்லாத்தை தழுவியர் என்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.
|
Friday, March 22, 2013
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 22-03-2013 வெள்ளி அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இக்லாஸ் என்ற தலைப்பிலும், கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும், நமது நிலையும் என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹித் அவர்கள் நன்மையின் பக்கம் விரைவோம், என்ற தலைப்பிலும், சகோ. ரஃபீ அவர்கள் ஷைத்தானை வெல்வோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் பலர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-தபூக் இஸ்லாத்தை தழுவிய முத்து
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-03-2013 புதன் அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் சென்னையை சேர்ந்த சகோ. முத்து அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். இவருக்கு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளைக்கங்களையும், கடவுள் கொள்கையையும், வணக்க வழிபாடுகளின் முறைகளையும் விளக்கு கூறி கலீமா சொல்லிக்கொடுத்தார்கள். சகோ. முத்து அவர்கள் தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார்கள். அவருக்கும் சகோ. பி.ஜெ மொழிபெயர்த்த தமிழ் குர் ஆன், மற்றும் 15 மார்க்க புத்தகங்கள், 25 டி.வி.டிக்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய மலிந்த
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தபூக் அல்-ஜஸீரா ஹோட்டலில் பணிபுரியும் இலங்கை அனுராதபுரத்தை சேர்ந்த, புத்தமத சகோதரர் மலிந்த, தூய இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். இவருக்கு கிளை தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் அவர்கள், இலங்கை சகோதரர் முஹம்மது அஷீர் அவர்களின் மொழிப்பெயர்ப்புடன் தூய இஸ்லாத்தின் கொள்கைகளை எடுத்துரைத்து, கலீமாவை சொல்லிக்கொடுத்தார்கள். சகோ. மலிந்த தனது பெயரை நூஹ் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு சிங்கள குர் ஆன், மற்றும் கித்தாபுகள், ஆடியோ கேஸட்டுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
|
Thursday, March 21, 2013
நிலமெல்லாம் ரத்தம் - 38
38 - ஐரோப்பியர்களின் யூத வெறுப்பு:-
யூத இனத்தை முழுவதுமாக அழிக்கவும் முடியாது; அவர்களது வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது என்பதை உலகம் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறந்திருந்தது. கிட்டத்தட்ட ஐரோப்பா முழுவதிலுமே யூதக் களையெடுப்பு ஒரு செயல்திட்டமாகவே வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதிலும் ஒவ்வொரு தேசத்திலும் வெட்ட வெட்ட, அவர்கள் தோன்றிக்கொண்டே இருந்தார்கள். ஆயிரம் யூதர்கள் ஓரிடத்தில் கொல்லப்பட்டபோது பக்கத்து ஊரில் புதிதாக இன்னொரு இரண்டாயிரம் யூதர்கள் வந்து வாழ ஆரம்பிப்பார்கள். லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டபோது இன்னொரு லட்சம் பேர் எங்கிருந்தாவது வந்து சேர்வார்கள்.
யோசித்துப் பார்த்தால் ஐரோப்பியர்களின் யூத வெறுப்பு என்பது அருவருப்பூட்டக்கூடிய விதத்தில் வளர்ந்து பரவியிருந்திருக்கிறது. சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு யூதர், இயேசு என்னும் இன்னொரு யூதரைக் கொன்றார் என்பதற்காக யூத குலத்தையே வேரோடு அழிக்க நினைத்து எத்தனை படுகொலைகளைச் செய்திருக்கிறார்கள்!அது ஒரு காரணம். எத்தனை நெருக்கடி நேர்ந்தாலும் யூதர்கள் மனம் தளராமல் மீண்டும் அழிவிலிருந்து மேலேறி வந்து வாழத்தொடங்கிவிடுகிறார்களே என்கிற எரிச்சல் இன்னொரு காரணம். ஆனால் ஓர் இனத்தையே அழிக்குமளவுக்கு இவையெல்லாம் ஒரு காரணமாக முடியுமா?
உண்மையில், ஐரோப்பாவில் யூதர்கள் சந்திக்க நேர்ந்த கொடுமைகள்தான் அவர்களை மேலும் பலவான்களாக, மேலும் புத்திசாலிகளாக, வாழ்வின் மீது மேலும் மேலும் காதல் கொண்டவர்களாக மாற்றியது என்று சொல்லவேண்டும். பள்ளிகள் தடைசெய்யப்பட்டபோது, அவர்கள் வீட்டிலிருந்தே படித்தார்கள். யூத தேவாலயங்கள் உடைக்கப்பட்டபோது, அவர்கள் மறைவிடங்களுக்குப் போய் பிரார்த்தனையைத் தொடர்ந்தார்கள். வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டபோது வீட்டில் இருந்தபடியே வியாபாரங்களைக் கவனித்தார்கள். வீடுகளும் உடைக்கப்பட்டபோது நாடோடிகளாகச் சென்று எங்காவது வெட்டவெளிகளில் கூடாரம் அடித்துத் தங்கி வேலையைத் தொடங்கிவிடுவார்கள். எல்லாமே எல்லை மீறும்போதுதான் அவர்கள் அதிகாரிகளை வளைத்துப்போட்டு, தமக்கான வசதிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
உலக சரித்திரத்தில் யூதர்களைக் காட்டிலும் அதிகமாக லஞ்சம் கொடுத்தவர்கள் கிடையாது. எதற்கு, எதனால் என்பதெல்லாம் முக்கியமே இல்லை. எல்லாவற்றுக்கும் கொடுத்தார்கள். வாங்குவதற்கு ஆட்கள் இருந்த இடங்களிலெல்லாம் அவர்கள் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். பத்து, இருபதில் தொடங்கி, பல லட்சங்கள், கோடிகள் வரை கொடுத்தார்கள். அரசாங்கமும் மக்களும் அவர்களுக்குத் தராத பாதுகாப்பை அந்த லஞ்சப்பணம்தான் கொடுத்து வந்திருக்கிறது, சரித்திரமெங்கும். அருவருப்பானதுதான். வருத்தம் தரக்கூடிய விஷயம்தான். ஆனாலும் அவர்களுக்கு வேறெந்த வழியும் இல்லாமல் போனதற்கு ஐரோப்பிய கிறிஸ்துவர்களே காரணமாயிருந்தார்கள்.
வசதிகளுக்காக லஞ்சம் தருவது உலகெங்கும் இருக்கும் நடைமுறை என்றாலும், வாழ்வதற்கே லஞ்சம் தரக்கூடிய சூழ்நிலையில்தான் யூதர்கள் இருந்தார்கள். இதற்காகவே அவர்கள் நிறையச் சம்பாதிக்க நினைத்தார்கள். பிசாசுகள் போல் உழைத்தார்கள். புதிது புதிதாக இன்றைக்கு உலகம் கடைப்பிடிக்கும் எத்தனையோ பல நூதன வியாபார உத்திகளெல்லாம் யூதர்கள் தொடங்கிவைத்தவைதான். இன்றைக்கு எம்.எல்.எம். என்று சொல்லப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் இந்தியாவில்கூட பிரபலமாக இருக்கிறது. இதெல்லாம் பதினேழாம் நூற்றாண்டிலேயே யூதர்கள் கண்டுபிடித்துவிட்ட விஷயம். இப்படியரு பெயரை அவர்கள் தரவில்லையே தவிர, ஒவ்வொரு தேசத்துக்குள்ளும் அவர்கள் எம்.எல்.எம் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள்.
வெளிநாடுகளுக்குப் பணமாற்றம் செய்வது, ஹவாலா போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு நிறையச் சம்பாதித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பைசாவையும் மிக முக்கியமாகக் கருதிய இனம் அது. வர்த்தகத்தில் நேர்மை என்பது அவர்கள் ரத்தத்தில் பிறந்த விஷயம். வர்த்தகம் தடைப்படாமல் நடப்பதற்குத்தான் லஞ்சம் கொடுப்பார்களே தவிர, மக்களை ஒரு போதும் ஏமாற்ற மாட்டார்கள். போலிச் சரக்குகளை விற்பது, சரக்குப் பதுக்கல், திடீர் விலையேற்ற நடவடிக்கைகள் இவையெல்லாம் ஐரோப்பாவில் பரவலாகிக் கொண்டிருந்தபோதுகூட, எந்த ஒரு யூதக் கடையிலும் நம்பிப் போய் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம். ஒரு சிறு ஏமாற்றம் கூட இருக்காது!
இவை ஒருபுறம் இருக்க, பத்தொன்பதாம் நூற்றாண்டில் யூத குலத்தில் சில மகத்தான சாதனையாளர்கள் உதிக்க ஆரம்பித்தார்கள். எந்தத் துறையில் இருக்கிறார்களோ, அந்தத் துறையின் மிக உயர்ந்த இடத்தை அடையக்கூடியவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். பொதுவாக யூதர்களுக்கு இழைக்கப்பட்ட எந்த ஒரு கொடுமையும் அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கவில்லை.இந்தச் சாதனையாளர்களை வளைத்து, அரவணைத்து அவர்களின் வெற்றிக்காக உழைக்கக்கூடியதாக இருந்தது யூதகுலம். சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். நாம் ஒரு சாதனை செய்யக்கூடியவர்களாக இருக்கிறோம் என்றால் நமது குடும்பம் நம்மை ஊக்கப்படுத்தலாம், உற்சாகப்படுத்தலாம். ஒருவேளை மாநில அரசு கவனித்து ஏதாவது உதவலாம். சாதனை செய்யப்பட்ட பிறகு தேசம் கொண்டாடலாம், பெருமைப்படலாம். ஆனால், ஒரு சாதனையாளர் உருவாகிக்கொண்டிருக்கிறார் என்று கவனித்து, அந்த இனத்திலுள்ள அத்தனை பேருமே தோள்கொடுக்க முன்வருவார்களா?
யூதர்களிடம் மட்டும்தான் அது சாத்தியம். ஒரு யூதர் அரசியல்வாதியாக வருகிறார் என்றால் ஒட்டுமொத்த யூதர்களும் அவரை மட்டுமே ஆதரிப்பார்கள், சுத்தமாகப் பிடிக்காது என்றால் கூட. யாராவது ஒரு யூதர் கல்லூரிப் பேராசிரியர் ஆகிறார் என்றால் அங்குள்ள அத்தனை யூதர்களும் அவருக்குப் பின்னால் திரண்டு நிற்பார்கள். ஒருவர் அறிவியலில் முன்னேறுகிறார் என்றால், அவரது ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு யூதக் குடும்பமும் மாதம் தவறாமல் பணம் அனுப்பும். ஒரு யூத எழுத்தாளரின் புத்தகம் வெளியாகிறதென்றால், சந்தேகமில்லாமல் அந்தக் காலகட்டத்தில் எத்தனை படித்த யூதர்கள் இருக்கிறார்களோ, அத்தனை பிரதிகள் விற்றே தீரும். மேலோட்டமான பார்வைக்கு இவற்றின் வீரியம் சட்டென்று புரியாது. யூதர்கள் தமக்காகவோ, தமது குடும்பத்தினருக்காகவோ கவலைப்பட்டதில்லை. மாறாக, தமது இனத்துக்காக மட்டுமே சரித்திரம் முழுவதும் கவலைப்பட்டு, உழைத்து வந்திருக்கிறார்கள். உலகில் வேறெந்த ஒரு இனமும் இப்படி இருந்தது கிடையாது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறந்தவுடனேயே ஐரோப்பாவின் மேற்கு தேசங்களில் யூதர்களின் செல்வாக்கும் வாழ்க்கை நிலையும் நம்பமுடியாத அளவுக்கு உயரத் தொடங்கியிருந்தது. ஆங்காங்கே இனப்படுகொலைகள், ஊரைவிட்டுத் துரத்தல் போன்ற காரியங்கள் நடந்துகொண்டிருந்தன என்றபோதும் யூதர்களின் அந்தஸ்தும் அதற்குச் சமமாக வளரத்தொடங்கியிருந்தது. காரணம், ஐரோப்பிய மறுமலர்ச்சி. பலதேசங்களில் ஜனநாயகம் வரத் தொடங்கியிருந்தது அப்போது. பொருளாதாரக் கெடுபிடிகள் தளர்த்தப்படத் தொடங்கின. வர்த்தகம் சுலபமாகத் தொடங்கியிருந்தது ஜனநாயகம் எங்கெல்லாம் முளைவிட்டதோ, அங்கெல்லாம் யூதர்கள் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சிறு சிறு உள்ளூர்த் தேர்தல்கள் முதல் மாகாண சட்டசபை, தேசியத் தேர்தல்கள் வரை அவர்கள் போட்டியிட ஆரம்பித்தார்கள். தேர்தல்களில் போட்டியிடும் யூதர்களுக்காக உலகெங்கிலுமிருந்த யூதர்கள் உதவி செய்ய ஆரம்பித்தார்கள். யூத வர்த்தகர்கள் கணக்கு வழக்கில்லாமல் பணம் கொடுத்தார்கள். பணம் கொடுக்க முடியாத நிலையில் இருந்தவர்கள், துண்டேந்தி வசூல் வேட்டை நடத்தி உடலுழைப்பைத் தந்தார்கள்.
தேர்தல் தோல்விகளால் அவர்கள் துவளவில்லை. மாறாக, வாழப்போன தேசங்களில் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அதையும் ஒரு சாதக அம்சமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். 1848-ம் ஆண்டு யூதர்கள் தமது சரித்திரத்திலேயே முதல் முறையாக தமது பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். இது நடந்தது பிரான்ஸில். இதனைத் தொடர்ந்து 1860-ம் ஆண்டு ஹாலந்தில் ஒரு யூதர் அமைச்சரானார். 1870-ல் இத்தாலியில். எல்லாவற்றுக்கும் சிகரமாக 1868-ம் ஆண்டு பெஞ்சமின் டி’ஸ்ரேலி (ஙிமீஸீழீணீனீவீஸீ ஞி’மிsக்ஷீணீமீறீவீ) என்ற யூதர் பிரிட்டனின் பிரதமராகவே ஆகுமளவுக்கு அங்கே யூதர்களின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது!ஆங்கிலேயர்களால் ஜீரணிக்கவே முடியாமல் போனது. தம்மாலானவரை அவர்கள் யூதர்களை அவமானப்படுத்தி கார்ட்டூன்களும் கேரிகேச்சர்களும் போட்டுப்பார்த்தார்கள். ஜனநாயகத்தின் மிகப்பெரிய பிரச்னை இதுதான் என்றே சொன்னார்கள். ஆனாலும் யூதர்கள் எதையும் கண்டுகொள்ளவே இல்லை. பெஞ்சமின் டிஸ்ரேலியே தம்மைக் குறித்த கேலிச்சித்திரங்களை ரசித்துப் பாராட்டக்கூடியவராக இருந்தார்!
பின்னால் 1878-ல் பிஸ்மார்க், “பெஞ்சமினை ஒரு யூதராகப் பார்க்காதீர்கள், மனிதராகப் பாருங்கள்” என்று கேட்டுக்கொண்டதும் பிரிட்டன் அரைமனத்துடன் அதற்குச் சம்மதித்ததெல்லாம் சரித்திரம். யூதர்களின் விடாமுயற்சிக்கு பெஞ்சமின் டிஸ்ரேலியின் இந்த வெற்றி ஒரு மகத்தான உதாரணம்.பெஞ்சமின் டிஸ்ரேலியின் முன்னோர், இத்தாலியைச் சேர்ந்தவர்கள். (உண்மையில் எந்த யூதரும் இப்படிச் சொல்வதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்! ‘எங்கள் முன்னோர் பாலஸ்தீனைச் சேர்ந்தவர்கள்’ என்றே அவர்கள் சொல்லுவார்கள்.) அங்கிருந்து இடம் பெயர்ந்து ஸ்பெயினில் வாழ்ந்துகொண்டிருந்தவர்கள், பதினைந்தாம் நூற்றாண்டில் அகதிகளாக பிரிட்டனுக்கு ஓடிவந்தவர்கள். பெஞ்சமினின் குடும்பத்தினர் அத்தனைபேரின் பெயருடனும் ‘இஸ்ரேலி’ என்கிற துணைப்பெயர் ஒட்டிக்கொண்டிருக்கும். அன்றைக்கு இத்தாலியில் வாழ்ந்த அத்தனை யூதர்களுக்குமே இந்தத் துணைப்பெயர் உண்டு. பெஞ்சமின் மட்டும் கொஞ்சம் ஸ்டைலாக ஞி’மிsக்ஷீணீமீறீவீ என்று பெயரை மாற்றிக்கொண்டார். அது பின்னால் டிஸ்ரேலி என்றே ஆகிவிட்டது!
பெஞ்சமினின் தந்தை ஐஸக் இஸ்ரேலி, லண்டனில் இருந்த ஒரு யூத தேவாலயத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தார். அவரை கிறிஸ்துவராக மாற்றுவதற்கு நிறையப்பேர் முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர் மாறவில்லை. ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் தமது குழந்தைகளுக்கு மட்டும் ‘ஒரு பாதுகாப்புக் கருதி’ ஞானஸ்நானம் செய்விக்க அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. பெஞ்சமின் உட்பட அவரது சகோதரர்களுக்கு அப்படியாக ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பெஞ்சமின் ஒரு யூதராகவே வாழ்ந்தவர். அரசியலில் நுழைவதற்கு முன்னால் சிறுகதைகள், நாவல்களெல்லாம் எழுதிப்பார்த்திருக்கிறார். கிறிஸ்துவர் அல்லாத யாரும் பிரிட்டனின் பாராளுமன்றத்துக்குள் நுழைய முடியாது என்கிற சூழல் இருந்த காலத்தில் அவர் அந்த ஞானஸ்நானத்துக்குச் சம்மதிக்காதிருந்தால், பாராளுமன்ற உறுப்பினராகவோ, பிரதம மந்திரியாகவோ ஆகியிருக்கவே முடியாது என்பதையும் பார்க்க வேண்டும்.
பிரிட்டன் என்றில்லை. இன்னபிற ஐரோப்பிய தேசங்களிலும் இப்படியான நிலைமைதான் அன்று இருந்திருக்கிறது. அடிமைகள் போலவும் நாடோடிக் கும்பல்கள் போலவுமே கருதப்பட்ட யூதர்கள், ஒரு வீடுகட்டி உட்கார்ந்ததோடு மட்டுமல்லாமல், தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொண்டு அரசியலில் ஈடுபட்டு வெற்றியும் பெறத்தக்க வகையில் உயர்வதற்கு அந்த விலையைக் கொடுத்தே தீரவேண்டியிருந்தது. ஆனால் யாரும் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே மதம் மாறியதில்லை. எல்லாமே வாழ்க்கைக் காரணங்களுக்காகத்தான். அதாவது உயிருடன் வாழ்வது என்கிற அடிப்படைக் காரணம். பிறகு, கொஞ்சம் வசதியாக வாழலாமென்கிற இருப்பியல் காரணம். இதற்கு மேற்பட்ட வர்த்தக, பொருளாதாரக் காரணங்கள் இருக்கவே செய்தன என்றாலும், ஐரோப்பிய தேசங்களில் கிறிஸ்துவத்துக்கு மாறிய யூதர்களின் எண்ணிக்கை எப்படியும் பல லட்சங்களைத் தாண்டவே செய்கிறது.
ஜெர்மனியில் அப்படித்தான் ஒரு யூதக்குடும்பம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறிஸ்துவத்துக்கு மாறியது. அப்படி மாறியதன்மூலம் அந்தக் குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் கொஞ்சம் உயரலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படியன்றும் பிரமாதமாக உயர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்த யூதக் குடும்பத்தில் பிறந்து கிறிஸ்துவத்துக்கு மாறிய குழந்தைகளுள் ஒன்று பிற்காலத்தில் மானுட குலத்துக்கே நன்மை செய்யக்கூடியவராக மலர்ந்தார். தமது யூத, கிறிஸ்து அடையாளங்கள் அனைத்தையும் துறந்து, ஒரு மனிதனாக மட்டுமே அடையாளம் காணப்பட்ட அவர் பெயர் காரல் மார்க்ஸ்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 3 ஏப்ரல், 2005
Wednesday, March 20, 2013
TNTJ ஜித்தா-தபூக் கிளையின் மனிதநேய சேவை
கடந்த 01-03-2013 அன்று தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த மாற்றுமத சகோதரர் முத்துசாமி(வலமிருந்து இரண்டாவது நபர்) என்பவர் தபூக் கிளை நிர்வாகிகளை அணுகி தனது முதலாளி தனக்கு 3 மாதம் சம்பளம் தராமல் கொடுமைப்படுத்தியும் அடித்து துன்புறுத்தியும் வந்தார், அதனால் தனது காதின் சவ்வு கிழிந்து கஷ்டப்படுவதாகவும், தனக்கு நியாயம் பெற்றுத்தருமாறும் கண்ணீரோடு கேட்டுக்கொண்டார். உடன் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் அந்த சகோதரரின் விபரத்தை இந்திய துணை தூதரகத்திற்க்கு அறிவித்துவிட்டு தபூக்கில் உள்ள காவல் நிலையத்திற்க்கு சென்று சம்பந்தபட்டவரின் முதலாளி மீது வழக்கு பதிவு செய்தார், உடன் காவல்துறையினர் அந்த முதலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அத்தோடு நில்லாமல் அவரை அழைத்துச்சென்று தபூக் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்தனர். வழக்கை எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அந்த முதலாளிக்கு, முத்துசாமியின் 3 மாத சம்பளம் 3000 ரியால், இழப்பீடு 1500 ரியால், விமான டிக்கெட்டிற்க்கு 1500 ரியால் என 6000 ரியால் வழங்கும்படி உத்தவிட்டது. (ஒரு ரியால் என்பது சுமார் 15 ரூபாய் ஆகும்). அதனை பெற்று சகோ. அஜீஸ் முத்துசாமியிடம் ஒப்படைத்து அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 15-03-2013 வெள்ளி அன்று அவரை தாயகத்திற்க்கு அனுப்பி வைத்தார். அவர் கண்ணீருடன் நமது நிர்வாகிகளுக்கு நன்றி செலுத்தி தாயகம் திரும்பினார்.
நமது ஜமாத் மத இன வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கு உரிமையை பெற்றுத்தர பாடுபடுவைதை இது பறை சாற்றுவதுடன், அரபு நாட்டில் அந்நிய நாட்டினருக்கு நியாயம் கிடைப்பதில்லை என்ற வாதத்தை இந்நிகழ்வு தவிடுபொடியாக்குகிறது. குற்றம் செய்தவர் தன் நாட்டினரானாலும் உடனே அவரை கைது செய்த காவல்துறையும், இழப்பீடு வழங்கசொன்ன நீதித்துறையும் சட்டத்தைத்தான் பார்க்கிறதே தவிர, பிறநாடுகளைப்போல் அறிந்தவர் அறியாதவர் என்று பார்ப்பதில்லை என்பது மீண்டும் ஊர்ஜிதமாகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற 7 பிலிப்பைனியர்கள்
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக்
கிளையில் கடந்த 14/03/2013 வெள்ளியன்று Tabuk – Sanaya Industrial ஏரியாவில் பணிபுரியும் (7) ஏழு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள்சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்….!!
அவர்களின் பெயர்களின் விபரம் வருமாறு:-
1- பிலிப்பைன்ஸ் – மனிலாவைச்சேர்ந்த
- அமிர்ஜோன் மக்கபகல்!
2- பிலிப்பைன்ஸ் – மனிலாவைச்சேர்ந்த - கார்ல்வின்ஷன்!
3- பிலிப்பைன்ஸ் – செபூவைச்சேர்ந்த - கோக்கொ
மார்ட்டின்!
4- பிலிப்பைன்ஸ் – தாவாவ்வைச்சேர்ந்த – ஜோன் அல்டிரின்!
5- பிலிப்பைன்ஸ் – மிந்தநாவ்வைச்சேர்ந்த – மைக்கல் பிலிப்!
6- பிலிப்பைன்ஸ் - சாந்தாகுருஷ்வைச்சேர்ந்த – அர்லியானோ!
7- பிலிப்பைன்ஸ் – கண்டோன்வைச்சேர்ந்த – பிரையன் ஜோன்!
ஆகிய ஏழு கிருத்துவமதத்தைச்சேர்ந்த, தக்காலோக் மொழிபேசும் சகோதரர்களுக்கம் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும், சகோ. அஹமது இஷ்புனுஷா (பிலிப்பைன்)அவர்களும் அவர்களுடைய (தக்காலொக்) மொழியிலும், ஆங்கில மொழியிலும் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம், வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறி,(ஸஹாதா) கலீமாவையும் சொல்லிக்கொடுத்தார்கள்.
மேலும் அவர்கள் தங்களது பெயர்களை:-
1- அப்துல்லாஹ் - அமிர்ஜோன் மக்கபகல்!
2- காலித் - கார்ல்வின்ஷன்!
3- உமர் - கோக்கொ மார்ட்டின்!
4- எஹ்யா – ஜோன் அல்டிரின்!
5- முஹம்மது – மைக்கல் பிலிப்!
6- ஜஃபர் – அர்லியானோ!
7- அயூப் – பிரையன் ஜோன்!
என்றும் மாற்றிக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்….!!
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வராந்திர பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 15-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், கிளை செயலாளர் சகோ. நிஜாம் நாட்டு நடப்பும் நமது நிலையும் என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹித் சலாத்தை பரப்புவோம் என்ற தலைப்பிலும், சகோ. ரஃபீ அவர்கள் இஸ்லாத்தை நேசிப்போம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய 3 சகோதரிகள்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 14-03-2013 வியாழன் அன்று தபூக் பிரசவ மருத்துவமனையில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் மணிலாவை சேர்ந்த சகோதரி எமிலியும் இலங்கை கன்தலாவைச் பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி சந்திரிக்கா சமந்தி பிரேராவும், இலைங்கை நெக்கம்போவை பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி அனோமா தில்ஹனி சில்வவும், தூய இஸ்லாத்தை தழுவினார்கள். அவர்களுக்கு தபூக் கிளை தலைவர் அஜிஸும் அவரது துணைவியால் சுமையாவு, தூய இஸ்லாத்தை விளைக்கு கலீமாவை சொல்லிக்கொடுத்தனர். அவர்களில் எமிலி,-அமல் என்றும், சந்திரிக்கா சமீரா என்றும், அனோமா ஈமான் என்றும் தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். |
TNTJ ஜித்தா-கடையநல்லூர் கூட்டமைப்பின் நிர்வாக கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் கடையநல்லூர் கூட்டமைப்பின் மஷூரா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் பாஸித் தலைமையில் 15-03-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் நடைபெற்றது. இதில் சகோ. மைதீன் மூஹ்மீனின் பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதன்பின் கடையநல்லூர் கிளைகளின் மார்க்க சமுதாய பணிகளை எப்படி மேம்படுத்துவது என்றும், அதற்க்கான பொருளாதாரத்தை திரட்டுவதை பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆவிற்க்குப்பின் மஷூரா இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
Tuesday, March 19, 2013
TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் மார்க்க உரை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சகோ. முனாப் அவர்கள் வரும்முன் உரைத்த இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் பெண்கள் பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டல ஸாகர் கிளையில் 13-03-2013 புதன் அன்று காலை மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமதி முனாப் அவர்கள் இஸ்லாமிய அடிப்படை கல்வி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அனேக பெண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-சுலைமானியா கிளையில் மார்க்க உரை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் 14-03-2013 வியாழன் இரவு இஷாவிற்க்குப்பிறகு மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் மண்டல தலைவர் சகோ. முனாப் அவர்களும், குர் ஆன் ஓதுவதின் அவசியம் என்ற தலைப்பில் சகோ. முஹைதீனும் உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளை பயான் நிகழ்ச்சி
வல்ல நாயனின் கிருபையால் கடந்த 15-3-2013 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி மக்ரிப் முதல் இஷா வரை நடைபெற்றது. அதில் மண்டல தாயி சகோ. ஜாபர் அலி அவா்கள் நபிகளாரின் 40 பொன்மொழிகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
|
ஜித்தா-ஷர்ஃபியா கிளை பொதுக்குழு கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 15-3-2013 வெள்ளி அன்று இஷாவிற்க்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையின் பொதுக்குழு கூட்டம் மண்டல பொருளாளர் சகோ. யுனுஸ் அவா்களின் முன்னிலையில் நடைபெற்றது. அதில் மாநில கட்டிட நிதி மற்றும் கிளையின் செயல்பாடுகளை இன்னும் அதிகரிப்பது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. து.ஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளையில் பேச்சு பயிற்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் 15-03-2013 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் பேச்சு பயிற்ச்சி வகுப்பு மண்டல து. தலைவர் சகோ. ரஃபீ அவர்களால் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள கொள்கை சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் பயிற்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-பாப் மக்கா கிளையில் மார்க்க உரை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் பாப் மக்கா கிளையில் 15-03-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துணை தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் நபிகளாரின் இறுதி நாட்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-மதீனா கிளையில் மார்க்க உரை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 15-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை பொருளாளர் சகோ. முஜிபுர் ரஹ்மான் சுன்னத்துகளை பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
Friday, March 15, 2013
ஆயிரம் நன்மை
நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம்.அப்போது அவர்கள், " உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா ?'' என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர் ஒருவர் , " எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும் ? '' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை "சுப்ஹானல்லாஹ் ' என்று கூறித் துதிக்க , அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : முஸ்லீம் 5230.
இதய நோய்களை குணப்படுத்தும் தேன்
இதய நோய்களை குணப்படுத்தும் தேன்:-
உலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில்
இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பித்த நீர்ச்சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும். இது தவிர சுவாசக்கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் போன்றவையும் குணமாகின்றன. இரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும். ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது. குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஸ்லிம் ஆக மாறலாம்.
Thursday, March 14, 2013
நிலமெல்லாம் ரத்தம் - 37
37 - ரஷ்யாவில் கொல்லப்பட்ட யூதர்கள்:-
ரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜார் மன்னர் கேதரின் காலத்தில் யூதர்கள் அங்கே இடம் பெயர்ந்தும் தேசமெங்கும் பரவியும் வாழ முடிந்ததென்றாலும் அது நீடித்த சௌகரியமாக அவர்களுக்கு அமையவில்லை. மன்னர் எதிர்பார்த்தபடி யூதர்களின் படையைக் கொண்டு துருக்கி சுல்தானை வெல்ல முடியாதது மட்டுமல்ல இதன் காரணம். அரசியல் காரணங்களைக் கருத்தில் எடுக்காத சாதாரணப் பொதுமக்களுக்கு யூதர்களைப் பிடிக்காமல் போய்விட்டது. யூதர்கள் என்றால் கிறிஸ்துவத்தின் முதல் எதிரிகள் என்கிற அடிப்படைக் காரணம்தான் இங்கும் பிரதானம் என்றாலும், அதற்கு மேலும் சில காரணங்கள் இருந்தன.
ரஷ்யாவின் மண்ணின் மைந்தர்களான கிறிஸ்துவர்களை, அங்கு குடியேறிய யூதர்கள் மதம் மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அப்போது மிக பலமாகக் கிளம்பியது. உண்மையில் நம்பமுடியாத குற்றச்சாட்டு இது. யூத மதத்தில், மத மாற்றம் என்பது அறவே கிடையாது. சரித்திரத்தின் எந்தப் பக்கத்திலும் அவர்கள் யாரையும் மதம் மாற்ற முயற்சி செய்ததாகத் தகவல் இல்லை. ஆனால், ரஷ்யக் கிறிஸ்துவர்கள் இப்படியொரு குற்றச்சாட்டைத்தான் பிரதானமாக முன்வைத்தார்கள்.இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்று யூதர்கள் தரப்பில் தொடர்ந்து போராடிப் பார்த்தார்கள். மன்னர் கேட்டாலும் மக்கள் விடுவதாக இல்லை. வேறு வேறு வகைகளில் யூதர்கள் அங்கே வாழ்வதற்கு நெருக்கடி தர ஆரம்பித்தார்கள்.
ரஷ்யாவிலிருந்து போலந்து பிரிந்தபோது (கி.பி. 1795-ல் இது நடந்தது. ரஷ்யாவுக்கு எதிராக போலந்து நாட்டு மக்கள் தொடர்ந்து புரட்சி செய்து துண்டுதுண்டாகப் பிரிந்துகொண்டிருந்தார்கள். இந்தக் குறிப்பிட்ட வருடம் நடந்த பிரிவினையின்போது மொத்தமாக போலந்து துண்டானது. துண்டாகும்போதே லித்துவேனியாவையும் சேர்த்துக்கொண்டு பிரிந்தது. இந்தக் கோபத்தில் ரஷ்யா தனது வரைபடங்களிலிருந்து போலந்தை ஒரேயடியாகத் தூக்கிவிட்டது!) அங்கெல்லாம் பரவி வசித்துக்கொண்டிருந்த யூதர்கள், பிரிவினையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நிறைய நிலங்களை வளைத்துப் போட்டார்கள். குறிப்பாக போலந்து ரஷ்ய எல்லைகள் சரியாகப் பிரிக்கப்படாத இடங்களிலெல்லாம் அவர்கள் மைல் கணக்கில் நிலங்களை வளைத்திருந்தார்கள். இது ரஷ்ய விவசாயிகளுக்கு மிகவும் கோபமூட்டியது. அவர்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தபோது, எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. காரணம், அத்தனை ரஷ்ய அதிகாரிகளுமே யூதர்களிடம் லஞ்சம் வாங்கியிருந்ததுதான்!
தேசம் உடையும் சோகத்தைக் காட்டிலும், இந்த ஊழல் நாற்றமும் அதற்கு வித்திட்ட யூதர்களின் குயுக்தியும் ரஷ்யர்களை மிகவும் பாதித்தது. ஒட்டுமொத்த கிறிஸ்துவ ரஷ்யாவும் திரண்டு எழுந்து யூதர்களுக்கு எதிரான கலகங்களைத் தொடங்கி வைத்தது. இன்னும் சற்று நுணுக்கமாக ஆராய்ந்தால், சகிப்புத்தன்மைக்குப் பேர் போன ரஷ்யர்கள், பின்னாளில் ஏன் அத்தனை உக்கிரமாக யூதர்களை ஓட ஓட விரட்டினார்கள் என்பதற்கு வேறொரு காரணமும் கிடைக்கிறது. ஜார் மன்னர்கள் ஆண்டபோதும் சரி, பின்னால் ரஷ்யப் புரட்சி ஏற்பட்டு கம்யூனிசம் வந்தபோதும் சரி, அதற்குப் பின்னால் சோவியத் யூனியன் என்கிற இரும்புக்கோட்டையே உடைந்து சிதறி, பல துண்டு தேசங்களானபோதும் சரி, ரஷ்யர்களின் தேசப்பற்று கேள்விக்கு அப்பாற்பட்டது. இன அடையாளங்களால் பிரிந்திருந்தாலும் தாங்கள் ரஷ்யர்கள் என்று சொல்லிக்கொள்வதில் அவர்களுக்கு அலாதியான ஆனந்தம் உண்டு. ஒவ்வொரு ரஷ்யரும் தமது தேசத்துக்குத் தனிப்பட்ட முறையில் கடமைப்பட்டிருப்பதாக எப்போதும் உணர்வார்.
ஆனால், யூதர்களால் அவர்கள் ரஷ்யாவிலேயே பல தலைமுறைகளாக வாழ்ந்தாலும் அப்படியொரு தேசிய அடையாளத்தை விரும்பி ஏற்க முடியவில்லை. ‘நீங்கள் யார்?’ என்று எந்த ரஷ்யரிடம் கேட்டாலும் ‘நான் ஒரு ரஷ்யன்’ என்றுதான் சொல்லுவார். அதே ரஷ்யாவில் வசிக்கும் யூதரிடம் ‘நீங்கள் யார்’ என்று கேட்டால் ‘நான் ஒரு யூதன்’ என்றுதான் சொல்லுவார்!
ரஷ்யாவின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்ந்த ஒரே மொழி, ஒரே மதம் என்கிற விஷயத்துடன் யூதர்களால் எந்தக் காலத்திலும் ஒத்துப்போக முடியவில்லை. வாழ்க்கைப் பிரச்னைக்காக அவர்கள் ரஷ்ய மொழி பேசினார்களே தவிர, அதைத் தங்கள் மொழியாக ஒருபோதும் சொல்லமாட்டார்கள். வாழப்போன கிறிஸ்துவ ரஷ்யாவில் ‘உங்களை விட நாங்கள்தான் மதத்தால் உயர்ந்தவர்கள்’ என்கிற தம்பட்டத்தையும் நிறுத்திக்கொள்ளவில்லை. இது பெரும்பான்மை கிறிஸ்துவர்களுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. தேசிய உணர்வே இல்லாத ஒரு கூட்டத்தை எதற்காகத் தாங்கள் வாழவைக்க வேண்டும் என்கிற கேள்வி அவர்களிடம் இருந்தது. இன்னொரு காரணமும் இதற்கு உண்டு. அப்போது ரஷ்யா, தீவிர நில உடைமை தேசம். ஜமீந்தார்கள் அங்கே அதிகம். எல்லா ஜமீந்தார்களும் கிராமங்களில் வசித்துக்கொண்டு ஏகபோக விவசாயம் செய்து ஏராளமாகச் சம்பாதித்து, முறைப்படி வரியும் லஞ்சமும் செலுத்தி வந்தார்கள். போலந்துப் பிரிவினையை ஒட்டி ஏராளமான நிலங்களை வளைத்துப் போட்ட யூதர்கள், அப்போது பெரும்பாலும் நகர்ப்புறங்களிலேயே இருந்தார்கள். நகரங்களில் தாங்கள் வசித்துக்கொண்டு, கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளைப் பார்த்துக்கொள்ள தம் சுற்றத்தாரையும் நண்பர்களையும் குறிப்பாக, எல்லாருமே யூதர்கள் அங்கே அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
இது, தினக்கூலிக்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த எளிய ரஷ்ய விவசாயிகளை மிக அதிகமாக பாதித்தது. தங்கள் கிராமங்களில் தங்களுக்கு வேலைவாய்ப்பு அறவே கிடையாது என்றால் அவர்கள் எங்கே போவார்கள்? அதிகாரிகளிடம் போக முடியாது. யாரும் காது கொடுத்துக் கேட்கக் கூடியவர்களாக இல்லை. யூத முதலாளிகளான ஜமீந்தார்களிடமே நியாயம் கேட்கலாம் என்றால் அவர்களும் கிராமப்புறங்களின் பக்கமே வரமாட்டார்கள். திடீர் திடீரென்று பெரிய பெரிய வாகனங்களில் மொத்தமாக யூத வேலையாட்கள் கிராமங்களுக்கு வந்து இறங்குவார்கள். சொல்லிவைத்தமாதிரி வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். உள்ளூர் விவசாயிகள் வரப்போரம் நின்று வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இதில் இன்னொரு கூத்தும் நடந்திருக்கிறது. பல இடங்களில் நகர்ப்புறங்களிலிருந்து ஆட்கள் கிராமங்களுக்கு தினசரி காலை வந்து வேலை பார்த்துவிட்டு மாலை ஆனதும் வண்டியேறி மீண்டும் டவுனுக்குப் போய்விடுவார்கள். ஆபீஸ் உத்தியோகம் மாதிரி. இது பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதுமே நடைமுறையில் இருந்திருக்கிறது!
அலெக்சாண்டர்-1 என்னும் ஜார் மன்னர் பதவி ஏற்ற பிறகுதான் (கி.பி. 1802 - 1825) நிலைமை கொஞ்சம் மாறத் தொடங்கியது. மக்களின் மனமறிந்து நடந்துகொள்வது முக்கியம் என்று கருதிய இந்த மன்னர், பதவியேற்றதும் முதல் வேலையாக கிராமப்பகுதிகளில் வேலைக்குப் போன யூதர்களையெல்லாம் விரட்ட ஆரம்பித்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எல்லையோர யூத நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளும் ஆரம்பமாயின. யூதர்கள் தரப்பில், அநியாயமாகத் தங்கள் நிலங்கள் அபகரிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டதே தவிர, அதன் பின்னணிக் காரணங்கள் எதுவுமே உலகுக்கு எடுத்துக்காட்டப்படவில்லை. எல்லா தேசங்களிலும் யூதர்களைத் துரத்துகிறார்கள், ரஷ்யாவும் துரத்த ஆரம்பித்திருக்கிறது என்று மட்டுமே உலகம் நினைத்தது.
உண்மையில், முந்தைய மன்னர் கேதரின் காலத்தில் கிடைத்த சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு ரஷ்யாவில் யூதர்கள் மிக வலுவாகக் காலூன்றியிருந்த அளவுக்கு வேறெந்த நாட்டிலும் நடைபெறவில்லை என்று சொல்லவேண்டும். பெரும்பாலான ரஷ்ய விவசாயிகளுக்கு அப்போது கையெழுத்துப் போடக்கூடத் தெரியாது என்பது அவர்களுக்குப் பெரிய சாதகமாக இருந்திருக்கிறது.ஆனால் அலெக்சாண்டர்-1ன் காலத்தில் ஆரம்பித்த யூத விரட்டல் நடவடிக்கைகள் மிக விரைவாக சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன. முதலில் கிராமங்களிலிருந்து யூதர்களை விரட்டினார்கள். பிறகு சிறு நகரங்களிலிருந்து விரட்ட ஆரம்பித்தார்கள்.எங்கெல்லாம் யூதர்கள் வசிக்கிறார்களோ (அவர்கள் எப்போதும் மொத்தமாகத்தான் வசிப்பார்கள் என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்!) அங்கெல்லாம் போய் அடித்து விரட்ட ஆரம்பித்தார்கள். இதையெல்லாம் அரசாங்கம் முன்னின்று செய்யவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக, ஒவ்வொரு ஊரிலிருந்தும் யூதர்களை விரட்டியடிப்பது தங்கள் தேசியக் கடமை என்றே ரஷ்யர்கள் அப்போது நினைத்தார்கள்! முதலில் அரசாங்கம் இதனை ஆதரிப்பதாகக் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் பெரிய அளவில் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.மாறாக, யூதர்களைப் பாதிக்கும் விதத்தில் சிலபல சட்டத்திருத்தங்கள், நில வரையறைகள் கொண்டுவரப்பட்டன. வரிகளும் அதிகரிக்கப்பட்டன. யூதர்கள் தங்களுக்கென்று தனியே பள்ளிக்கூடங்கள் நடத்திக்கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
ரஷ்ய அரசுத்துறை அதிகாரிகளுக்கு இந்த வகையில் கொஞ்சம் வருத்தம்தான். ஏனெனில் நீண்ட நெடுங்காலமாக அவர்கள் யூதர்களிடமிருந்து கையூட்டுப் பெற்று வந்திருக்கிறார்கள். திடீரென்று யூத எதிர்ப்பு அலை அடிக்க ஆரம்பித்துவிட்டதில் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பு ஆனார்கள். அதேசமயம் மக்களின் எழுச்சியுடன் தாங்கள் ஒத்துப்போகாத பட்சத்தில் பதவிக்கே ஆபத்து வரக்கூடும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. வேறு வழியில்லாமல்தான் இந்த நிர்ப்பந்தங்களை அவர்கள் யூதர்களின்மீது திணித்தார்கள் என்பதையும் சொல்லிவிட வேண்டும்.சுமார் ஐம்பது வருடங்கள். அதற்குக் கொஞ்சம் மேலே கூட இருக்கலாம். இம்மாதிரியான சிறு சிறு பிரச்னைகளும் பயமும் ரஷ்ய யூதர்களைக் கவ்விக்கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரவேண்டாமா?
வந்தது.
1881-ம் ஆண்டு அலெக்சாண்டர்-2 என்ற ஜார் மன்னர் படுகொலை செய்யப்பட்டார். (அலெக்சாண்டர்-1-க்குப் பிறகு நிக்கோலஸ்-1 என்பவர் மன்னரானார். நிக்கோலஸுக்குப் பிறகு இந்த அலெக்சாண்டர்-2, 1855-ல் மன்னராகியிருந்தார்.) என்னவோ உப்புப்பெறாத அரசியல் காரணங்களுக்காக நடைபெற்ற படுகொலை அது. ஆனால் விதி, அந்தக் கொலைச்சதியில் யூதர்கள் ஈடுபட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டிவிட்டது.அது உண்மையா, இல்லையா என்று விசாரிக்கக்கூட யாரும் அப்போது தயாராக இல்லை. ஒரு ரஷ்யச் சக்கரவர்த்தியின் படுகொலைக்கு, வந்தேறிகளான யூதர்கள் காரணமாக இருக்கக்கூடும் என்கிற வதந்தியே போதுமானதாக இருந்தது. (இன்று வரையிலும் இது தீராத சந்தேகம்தான். யூதர்கள்தான் இக்கொலைச்சதியில் ஈடுபட்டார்களா, வேறு யாராவதா என்பது தீராத விவாதப்பொருளாகவே இருக்கிறது.)
ஒட்டுமொத்த ரஷ்யாவும் கொதித்தெழுந்துவிட்டது.
எலிசபெத் க்ரேட் என்கிற இடத்தில்தான் முதல் கலவரமும் முதல் கொலையும் விழுந்தது. வருடம் 1881. தீ போல ரஷ்யாவின் தென் மாகாணங்கள் அனைத்திலும் ஒரு வாரத்தில் பரவிவிட்டது. பார்த்த இடத்திலெல்லாம் யூதர்களை வெட்டினார்கள். தப்பியோடியவர்களையெல்லாம் நிற்கவைத்துக் கொளுத்தினார்கள். முழுக்கக் கொல்லமுடியவில்லை என்றால் கை, கால்களையாவது வாங்கினார்கள். யூத வீடுகள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், சமூக நிறுவனங்கள் எதுவுமே மிச்சமில்லை. ரத்தவெறி தலைக்கேறிவிட்டிருந்தது ரஷ்யர்களுக்கு.தப்பித்து ஓடக்கூட முடியாமல் சிக்கிக்கொண்ட பல்லாயிரக்கணக்கான யூதர்கள் அப்போது நடுச்சாலைகளில் வெட்டுப்பட்டு இறந்துபோனார்கள். அவர்களது பிணங்களை எடுத்துப்போடக் கூட யாரும் முன்வரவில்லை!இந்தத் தாக்குதலுக்கு ரஷ்ய மன்னரே (புதிதாகப் பொறுப்பேற்றிருந்த அலெக்சாண்டர்-3) ரகசிய உத்தரவிட்டதாக பிறகு சொன்னார்கள்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 31 மார்ச், 2005
Wednesday, March 13, 2013
News from Consulate General of India
Consulate General of India
Jeddah
March 11, 2013
PRESS RELEASE
The Consulate General of India, Jeddah has been receiving queries from the Indian expatriate community in Saudi Arabia regarding media reports of a likely 'Amnesty' to be announced by the Government of the Kingdom of Saudi Arabia allowing expatriates, who have overstayed beyond their visa period, to exit the Kingdom without penal action. The Consulate General would like to clarify that it has not received any communication in this regard from the Government of the Kingdom of Saudi Arabia. The Consulate General would notify the expatriate community if any such notification is received.
The Consulate General of India, Jeddah would like to further inform all Indian nationals in Saudi Arabia that the travel document (Emergency Certificate) issued during any Amnesty is meant for one way return journey to India only. Those Indian nationals who posses valid passports need not apply for Emergency Certificate during the Amnesty.
நிலமெல்லாம் ரத்தம் - 36
36 - நெப்போலியனும் யூதர்களும்:-
இந்தியாவில் உள்ள மணிப்பூர் அல்லது மேகாலயா அளவேயான நிலம்தான் பாலஸ்தீன். சரித்திர காலத்து நிலப்பரப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்வதென்றால்கூட தமிழ்நாட்டு அளவை மிஞ்சும் சாத்தியம் இல்லை. ஆனால் இந்தச் சிறியதொரு நிலத்தை முன்வைத்து எத்தனை அரசியல்கள்! சரித்திர காலத்துக்கும் நவீன காலத்துக்கும் இடைவழியான கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிகள், பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கங்களில் எல்லாம் இந்த அரசியல் நம்பமுடியாத வேகம் எடுத்ததைக் குறிப்பிட வேண்டும். மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவெங்கும் மக்கள் மூச்சுக்கு முந்நூறு முறை யூதர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படிப் பேசப்பட்ட இடங்களிலெல்லாம் காற்றைப்போல யூதர்களும் பரவியிருந்தார்கள். நிலையான இருப்பிடம் என்று ஒரு பிரதேசம் அவர்களுக்கு இல்லை என்றாலும் இருக்கிற இடங்களிலெல்லாம், கிடைக்கிற தொழில்களில் எல்லாம் அவர்கள் ஒட்டிக்கொண்டு ஒரு மாபெரும் புரட்சிக்கும் போராட்டத்துக்கும் தங்களை ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். எல்லாமே மிக மௌனமாக நடந்தது. மிகமிக ரகசியமாக நடந்தது.
வாழ்க்கைப் பிரச்னைகள் அவர்களை ஊரைவிட்டு ஓடச் செய்தாலும் விருப்பம் முழுவதும் பாலஸ்தீனில் மட்டுமே இருந்தது. குறிப்பாக, ஜெருசலேம். அப்போது ஒட்டாமான் துருக்கியப் பேரரசின் ஓர் அங்கமாக இருந்த ஜெருசலேம். ஜெருசலேம் உள்ளிட்ட பாலஸ்தீனுக்குத் திரும்பி வரவேண்டும், அது தங்களது சொந்த நிலப்பரப்பு என்பதை அதிகாரபூர்வமாக ஸ்தாபிக்க வேண்டும், அங்கேயே வாழவேண்டும் என்கிற விருப்பம் ஒரு தீ போல அவர்கள் மனமெங்கும் பரவி தகித்துக்கொண்டிருந்தது.
யுத்தகாலங்களில் அம்போவென்று ஊரைவிட்டுப் புறப்பட்டு ஓடிப்போன குற்ற உணர்ச்சியெல்லாம் அவர்களிடம் இல்லை. அரேபியர்கள்தான் எதிரிகளிடம் நூற்றாண்டு காலமாகப் போராடிக் கொண்டிருந்தார்கள் என்கிற நியாய உணர்ச்சியும் இல்லை. சுல்தான் சலாவுதீன் காலம் தொட்டு பாலஸ்தீனின் விடுதலைக்காக அரேபிய முஸ்லிம்கள் எத்தனை பாடுபட்டிருக்கிறார்கள், வீடு வாசல்களை இழந்தும் அங்கேயே நின்று போராடியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நினைத்துப்பார்க்கும் நிலையில் அவர்கள் இல்லை.
கடவுளின் பிரதேசமான பாலஸ்தீன், கடவுளின் விருப்பக் குழந்தைகளான யூதர்களுடையது. அவ்வளவுதான். அது மட்டும்தான் அவர்களின் எண்ணமாக இருந்தது. இந்த எண்ணம் மிகவும் வலுப்படத் தொடங்கியதற்கு யூதரல்லாத ஓர் ஐரோப்பியச் சக்ரவர்த்தி ஒரு மறைமுகக் காரணமாக இருந்திருக்கிறார். நெப்போலியன். தெரியுமல்லவா? நெப்போலியன் போனபார்ட்.
(ழிணீஜீஷீறீமீஷீஸீ ஙிஷீஸீணீஜீணீக்ஷீtமீ).
அந்தக் காலத்தில் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் மன்னர்கள் யூதர்களை நடத்திய விதத்துக்கும், பிரான்ஸின் நிகரற்ற பேரரசராக விளங்கிய நெப்போலியன் அவர்களை நடத்தியதற்கும் நம்பமுடியாத வித்தியாசங்கள் இருக்கின்றன. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு பிரான்ஸில் யூதர்களுக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. நெப்போலியன் ஆட்சிக்கு வந்தபிறகு அவர்களுக்குக் கொஞ்சம் துணிச்சல்கூட வந்தது.
இத்தனைக்கும் ஒருமாதிரி வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட சுதந்திரத்தையும்தான் நெப்போலியன் அவர்களுக்கு வழங்கியிருந்தார். ஆண்டாண்டு காலமாக ஐரோப்பாவில் வசித்தாலும் யூதர்கள், அந்த தேசங்களின் வளமைகளிலோ, அரசியல் சாசன உரிமைகளிலோ பெரிய அளவில் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால் அவர்களது குடியேற்ற உரிமைகள் காப்பாற்றப்படும். பாலஸ்தீனிலிருந்து வந்தவர்கள் என்கிற அளவில் அவர்களது இருப்பு அங்கீகரிக்கப்படும். அதற்கு அப்பால் வேறு எதற்கும் சொந்தம் கொண்டாடிவிட முடியாது.
பாலஸ்தீனிலிருந்து வந்தவர்கள். இது போதாது யூதர்களுக்கு? அது மட்டும் தொடர்ந்து வலியுறுத்திச் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தால் போதும் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். அவர்களே இதனைச் சொல்லிக்கொண்டிருப்பதற்கும் நெப்போலியன் போனபார்ட் போன்ற ஒரு சக்ரவர்த்தி சொல்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன அல்லவா? என்றைக்கு இருந்தாலும் பாலஸ்தீன்தான் யூதர்களின் சொந்தபூமி, எத்தனை நூற்றாண்டுகள் அவர்கள் அங்கிருந்து வெளியேறி வாழ்ந்தாலும் எப்போது திரும்பினாலும் அங்கே உரிமை உண்டு என்பதை திரும்பத்திரும்ப அழுத்தந்திருத்தமாக நினைவுபடுத்திக்கொண்டே இருக்க, நெப்போலியனின் அந்த வரையறுக்கப்பட்ட சுதந்திரப் பிரகடனம் யூதர்களுக்கு உறுதி செய்தது.
நெப்போலியனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்திலும் யூதர்களுக்கு முழு சிவில் உரிமைகள் வழங்கப்பட்டன. ஆனாலும் அது குடியேறிகளுக்கான உரிமைகளாக மட்டுமே சொல்லப்பட்டது. வழிபாட்டுச் சுதந்திரம், வர்த்தகச் சுதந்திரம், வாழ்க்கைச் சுதந்திரம் எல்லாம் இருந்தன. ஒவ்வொன்றும் அவர்கள் பாலஸ்தீன்காரர்கள் என்று சொல்லிச் சொல்லி வழங்கப்பட்டது.
கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும். நெப்போலியன், ஒரு பாதுகாப்புக் கருதியே யூதர்களைத் தொடர்ந்து பாலஸ்தீன்காரர்கள், வந்தேறிகள் என்று ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லிவந்திருக்கிறார். அதாவது பிரெஞ்சுக்காரர்களின் பாதுகாப்பு. யூதர்கள் அங்கே மெஜாரிடிகளாக ஆகி, பெரிய அளவில் பிரச்னைக்கு வித்திட்டுவிடக் கூடாதே என்கிற பாதுகாப்புணர்வு. ஆனால் யூதர்களைப் பொறுத்த அளவில் இதை வேறு விதமாக எடுத்துக்கொண்டு விட்டார்கள்.
ஐரோப்பாவில் வேறு எந்தப் பகுதியிலும் வாழக்கூட முடியாத சூழ்நிலை அவர்களுக்கு. எங்கே போனாலும் உதைத்தார்கள். எந்த ஒரு கிறிஸ்துவ தேசத்திலும் அவர்களுக்கு நிம்மதி இல்லாத சூழ்நிலை. அப்படிப்பட்ட காலகட்டத்தில், வந்தேறிகள் என்று சொல்லியாவது இந்த நெப்போலியன் வாழ வழிகொடுக்கிறாரே என்கிற ஆறுதல் ஒரு பக்கம்; அதிர்ஷ்டப்பரிசு மாதிரி ‘பாலஸ்தீனிலிருந்து வந்தவர்கள்’ என்று திரும்பத்திரும்பச் சொல்கிறாரே, அந்த இடம் நம்முடையதுதான் என்பதை இதுவே உலக மக்கள் மனத்தில் பதியச் செய்கிறதே என்கிற ரகசிய சந்தோஷம் இன்னொரு புறம்.
கி.பி. 1799-ல் நெப்போலியன் எகிப்திலிருந்து சிரியா நோக்கி படை நகர்த்திச் சென்றுகொண்டிருந்தார். நெப்போலியனின் போர்த்திட்டங்கள், நாடு பிடிக்கும் வேட்கை போன்ற விஷயங்களெல்லாம் மிகப்பெரிய கதை. பாலஸ்தீன் சரித்திரத்துடன் சம்பந்தப்படாதது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட படையெடுப்பு மட்டும் சம்பந்தம் கொண்டது என்பதால் இதனைப் பார்க்கவேண்டியிருக்கிறது. நெப்போலியனின் அப்போதைய நோக்கம், இன்றைக்கு சிரியாவிலும் அன்றைக்கு பாலஸ்தீனிலும் இருந்த ஏக்ர் நகரக் கோட்டையைப் பிடிப்பது. சரித்திரகாலம் தொட்டு மிக முக்கியமான நகரமாகக் கருதப்பட்டு வந்தது ஏக்ர். (கிநீக்ஷீமீ.) மாபெரும் வீரர்; மிகப்பெரிய படை வைத்திருப்பவர் என்றாலும் அந்த முற்றுகை நெப்போலியனுக்கு வெற்றி தரவில்லை. காரணம், துருக்கியப் படைகள், அப்போது பிரிட்டிஷ் படைகளின் ஒத்துழைப்புடன் நெப்போலியனை எதிர்த்து நின்றது.
இதுவும் மிக முக்கியமானதொரு நிகழ்வு. முதல் முறையாக பாலஸ்தீன் பிரச்னையில் அப்போதுதான் பிரிட்டன் தலையிடுகிறது. அதுவரை பிரிட்டன் கவனத்துக்கு உட்பட்ட பிரதேசமாக பாலஸ்தீன் இல்லை. பிரிட்டனின் ராணி எலிசபெத், ‘கிறிஸ்துவரல்லாத யாரும் பிரிட்டனில் வாழ லாயக்கற்றவர்கள்’ என்று யூதர்களைக் குறிவைத்து அறிவித்திருந்த சமயமும் கூட அது.
ஏக்ர் கோட்டையைப் பிடிக்கும் எண்ணத்துடன் எகிப்திலிருந்து இன்றைய இஸ்ரேல் வழியே புறப்பட்டு வந்த நெப்போலியன், அப்போது ரமல்லாவில் தங்கியிருந்தார். யாசர் அரஃபாத் தமது இறுதிக்காலம் வரை வாழ்ந்திருந்த நகரம். ரமல்லாவில் சும்மா இருக்கும் நாட்களை வீணாக்க வேண்டாம் என்று அவர் அங்கிருந்த யூதர்களை ஒருங்கிணைத்து ஒரு சிறிய அணிவகுப்புடன் கூடிய ‘நீதி கேட்கும் நெடும்பயணத்தை’ மேற்கொண்டார். அந்தப் பேரணியின்போது அவர் அறிவித்தார்: “யூதர்களே, எனக்கு உதவுங்கள். துருக்கியப் படையை நான் வெற்றி கொள்ள முடியுமானால் நீங்கள் நிம்மதியாக உங்கள் ஜெருசலேத்துக்குத் திரும்புவதற்கு நான் உதவி செய்கிறேன்’’
இது ஒரு ராஜதந்திர அறிவிப்புத்தான் என்றாலும் யூதர்களுக்குப் பரவசமூட்டப் போதுமான அறிவிப்பாக இருந்தது. ஏராளமான யூதர்கள் அப்போது நெப்போலியனின் படையில் இணைந்ததாகப் பல வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. பெரெக் ஜோஸ்லெவிச் (ஙிமீக்ஷீமீளீ யிஷீsமீறீமீஷ்வீநீக்ஷ்) என்கிற புகழ்பெற்ற யூத வீரர், அப்போது நெப்போலியனின் ஒரு படையில் சாதாரண வீரராகச் சேர்ந்தவர். பின்னாளில் அவரது படையில் கர்னல் அளவுக்கு உயர்ந்து, ஆஸ்திரியப் போரில் உயிர் துறந்தவர். ஆனால் ஏக்ர் கோட்டைக்கான யுத்தத்தில் நெப்போலியன் தோல்வியடைய நேரிட்டபிறகு, யூதர்கள் விஷயத்தில் அவர் அத்தனை ஆர்வம் செலுத்தவில்லை.
சரியான காரணங்கள் ஏதுமில்லை என்றபோதும் அவருக்கும் யூதர்கள் மீது கொஞ்சம் வெறுப்பு ஏற்பட்டது உண்மை. அவர்களுக்கு வழங்கியிருந்த வரையறுக்கப்பட்ட சுதந்திரத்திலேயே நிறைய புதிய வரையறைகளைச் சேர்த்தார். குறிப்பாக, நெப்போலியனின் இறுதிக்கால ஆட்சி சமயத்தில் யூத வர்த்தகர்கள் ஏராளமான வரிச்சுமைக்கு ஆளாக நேர்ந்தது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில், பல மானியங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கொஞ்சம் வாலை நறுக்கி வைக்கலாம் என்று நெப்போலியனுக்கும் ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. ஆனாலும் அப்படித்தான் அவர் நடந்துகொண்டார்!
ஆனால் அவரது காலத்தில் போலந்து, லித்துவேனியா, பிரான்ஸ், (ஜெர்மனியிலுள்ள) ஹாம்பர்க் நகரம், போன்ற இடங்களில் சரசரவென்று யூதர்களின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போனது. எங்கிருந்துதான் இவர்கள் வருகிறார்களோ என்று வியந்து முடிப்பதற்குள்ளாகவே பல லட்சக்கணக்கான யூதர்கள் அந்தப் பகுதிகளில் குடியேறிவிட்டார்கள். அப்போது ரஷ்யாவும் நிலப்பரப்பு விஸ்தரிப்பில் தீவிர கவனம் செலுத்திக்கொண்டிருந்தது. இந்த விஷயத்தில் அப்போது நெப்போலியனுக்கு நிகரான ஆர்வம், ரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜார் (ஞீணீக்ஷீ) மன்னர்களுக்கும் இருந்தது. (ஜார் என்பது ஒரு குறிப்பிட்ட மன்னரின் பெயர் அல்ல. அது ஒரு வம்சத்தின் அடையாளப்பெயர். ஜார் என்ற பட்டத்துடன் பல மன்னர்கள் ரஷ்யாவை ஆண்டிருக்கிறார்கள்.) கி.பி. 1772 தொடங்கி, 1815-ம் ஆண்டு காலகட்டத்துக்குள் போலந்து, லித்துவேனியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிட்டன.
யூதர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட காலகட்டம் கொஞ்சம் சாதகமாக இருந்தது. அன்றைய ரஷ்ய அரசுத்தரப்பின் மிக முக்கிய நபராக விளங்கிய இளவரசர் பொட்ம்கின் (றிஷீtமீனீளீவீஸீ), சிலபல அரசியல் காரணங்களை உத்தேசித்து, யூத ஆதரவு நிலை எடுத்தார். ஐரோப்பாவில் வாழமுடியாத யூதர்களெல்லாம் ரஷ்யாவுக்கு வந்து, அதன் தென்பகுதி மாகாணங்களில் (அவை யாவும் குட்டி நாடுகள்!) வாழத்தொடங்கலாம் என்று பகிரங்கமாக அறிவித்தார். (இதே ரஷ்யாவிலிருந்து இன்னும் கொஞ்சகாலத்தில் அத்தனை யூதர்களும் அடித்துத் துரத்தப்படவிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.)
அப்போதைய ஜார் மன்னரின் பெயர் கேதரின் 2. மகா கேதரின் என்று அவர் தம்மைச் சொல்லிக்கொண்டார். மக்கள் சொன்னார்களா என்று தெரியவில்லை. அவரது விருப்பத்தின்படி, இளவரசர் பொட்ம்கின், ரஷ்யப் படையில் ஒரு யூதப்பிரிவை உருவாக்கினார். இந்தப் படை உருவாக்கப்பட்டதன் ஆதார நோக்கமே, துருக்கியுடன் ஒரு யுத்தத்தை உத்தேசித்துத்தான். திரும்பத்திரும்ப துருக்கி. திரும்பத்திரும்ப பாலஸ்தீன் ஆசைக்கனவு. முன்பு நெப்போலியன் என்றால் இப்போது ஜார். அவ்வளவுதான் வித்தியாசம்.
அந்த யூதப் படைப்பிரிவுக்கு பொட்ம்கின், இஸ்ரேலவ்ஸ்கி (மிக்ஷ்க்ஷீணீமீறீஷீஸ்sளீஹ்) என்று பெயரிட்டார். இதுவும் ஒரு அரசியல் காரணத்தை உத்தேசித்துத்தான். இஸ்ரேல் என்றொரு தேசம் குறித்தெல்லாம் யூதர்கள் அப்போது சிந்திக்கக்கூட இல்லை. ஆனாலும் இனத்தின் பெயரால் அவர்களை ஒருங்கிணைத்து, இடத்தின் பெயரால் வழி நடத்த இது ஒரு உபாயமாகப் பயன்படும் என்று கருதிய ரஷ்ய இளவரசர், புராதன ஹீப்ரு பைபிளில் வரும் இஸ்ரவேலர்களின் புத்திரர்களை நினைவு கூர்ந்து இப்படியொரு பெயர் சூட்டி யூதர்களைப் புளகாங்கிதமடையச் செய்தார்.
1768-லிருந்து 1774 வரை ஒரு யுத்தம். பிறகு 1787-லிருந்து 1792 வரை ஒரு யுத்தம். ஆக மொத்தம் துருக்கியுடன் இரண்டு யுத்தங்கள். இரண்டுமே வெற்றி பெறவில்லை. மாறாக ஒட்டுமொத்த அரேபிய முஸ்லிம்களுக்கும் யூதர்கள் நிரந்தரப் பகைவர்களாவதற்கு பெரிய அளவில் ஒரு பிள்ளையார் சுழியைப் போட்டுவைத்தன இத்தனைக்கும் ஒட்டாமான் துருக்கிய மன்னர்கள் யூதர்களுக்கு எத்தனையோ வசதிகள் செய்துதந்து, பாலஸ்தீன் உள்பட துருக்கியப் பேரரசின் அத்தனை இடங்களிலும் சர்வ சுதந்திரமுடன் வாழ அனுமதித்திருந்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக, பாலஸ்தீனை அவர்கள் முழுவதுமாகத் தங்களுக்கான தனிநாடாக அடைய விரும்புகிறார்கள் என்று சிந்திக்கவேயில்லை.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 27 மார்ச், 2005
Tuesday, March 12, 2013
அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள்
அல்லாஹ்வை நினைவு கூறுவது எந்தச் சிரமத்தையும் எடுத்துக் கொள்ளாமல் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் என்று கூறினால் அந்த வார்த்தைகள் அதிக நன்மைகளைப்பெற்றுத் தருகின்றன. இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், (நன்மையின் தராசில்) கனமானதாகவும் இருக்கின்றன. அவை, சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 7563.
நம்மில் எத்தனை நபர்களுக்கு தெரியும்?
ஏக இறைவனின் திருப்பெயரால்
அஸ்ஸலமு அலைக்கும்[வரஹ்]
நம்மில் எத்தனை நபர்களுக்கு தெரியும்? இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 1525
إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ
مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ[F]முஸீப(B](த்)தி வ அக்லிப்[F] லீ கைரன் மின்ஹா
இதன் பொருள் :
நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச்செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதைவிடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 1525
போப் பெனடிக் XVI தூய இஸ்லாத்தை தழுவினார்
கிறிஸ்தவ உயர்பதவியை ராஜினாமா செய்த போப் பெனடிக் XVI இஸ்லாத்தைத் தழுவினார்!
சில தினங்களுக்கு முன் கத்தோலிக்க கிறிஸ்தவ உலகின் மிகவும் உயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த போப் பெனடிக் XVI, தற்சமயம் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியுள்ள அவர் ''அல்லாஹ் தான் உண்மையான ஒரே இறைவன்'' என்று சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொண்டதாக தெரிவித்தார் கிறிஸ்தவ உலகை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் இச்செய்தி வேண்டுமென்றே ஊடகங்களால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இருதினங்கள் கழிந்தும் இதுவரை எந்த தமிழ் ஊடகமும் இச்செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை. கிறிஸ்தவ உலகின் வழிகாட்டியே இஸ்லாத்தைத் தழுவியுள்ளது இன்ஷா அல்லாஹ், நிச்சயமாக உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களை மட்டுமின்றி மற்ற மதத்தவரையும் இஸ்லாத்தின்பால் ஈர்க்கச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை. கல்வியறிவு மிகைத்திருக்கும் இக்காலத்தில் சிந்திக்கும் எவருக்கும் இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கமாக இருக்க முடியும் என்பது தான் இறுதி முடிவாக இருக்க முடியும்.
இஸ்லாத்தைத் தழுவியபின் அவர் மக்களுக்கு அளித்த உரையின் இடையில் இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான தொழுகையை (அஸர் வக்த்) நிறைவேற்றினார். 'போப்' ஆக இருந்தபோது இஸ்லாத்தை தவறாக அவர் விமர்சித்தைதைப்பற்றி வினவியபோது, அப்பொழுது தான் சிறுவராகவும் அறியாதவராகவும் இருந்ததாகவும், தற்போது தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார். கருத்துரிமை பற்றி அடிக்கடி பேசும் அமெரிக்க பத்திரிகைகள் (முன்னால்)போப் கிறிஸ்தவ உலகுக்கும், அமெரிக்கர்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்(!!!) என்று தங்களது வெறுப்பை உமிழ்ந்துள்ளன.
அல்லாஹ் எவருக்கு நேர்வழியை காட்டுகிறன்னோ அவர்களை எவராலும் வழிதவறச் செய்துவிட முடியாது. சகல வஸ்துகள் மீதும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ் ஒருவனே. அல்ஹம்துலில்லாஹ்.
நன்றி: Ramdam NET.Co. சகோதரன் .லுத்ஃபி.
Monday, March 11, 2013
TNTJ ஜித்தா-மதீனா கிளை மஷூரா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 08-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் கிளை மஷூரா பொருளாளர் முஜிப் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்டிட நிதி திரட்டல், செயல்பாடுகளை முடுக்குவது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
சௌதி அரசாங்க பொதுமன்னிப்பு பற்றி
அல்லாஹ்வின் திருப்பெயரால்.........
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அன்புள்ள சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது.
சில தினங்களுக்கு முன் சவுதி பத்திரிக்கைகளில் இந்திய வெளியுறவு அமைச்சரும், சவுதி வெளியுறவு அமைச்சரும் பேசி ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதியில் ஒப்பந்த காலத்தை மீறி வேலை செய்துகொண்டிருக்கும் பணியாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட இருக்கிறது என்றும், அப்படி இருப்பவர்கள், இந்திய தூதரகத்தையோ, துணை தூதரகத்தையோ அனுகுமாறு செய்தி வந்தது. அதனை தொடர்ந்து நமது மக்கள் வலைதளங்களிலும், முகநூல்களிலும், அதற்க்கான அவசர பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகளை இட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நம்மை பல ஊர்களில் இருந்தும் தொடர்புகொண்டு நாங்கள் வந்தால் உடன் தாயகம் திரும்ப முடியுமா என்று பலர் கேட்டுவருகின்றனர். இதனை உறுதி செய்ய ஜித்தாவில் உள்ள துணை தூதரக அதிகாரிகளை நாம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, அவர்கள் உங்களை போல் நாங்களும் அந்த செய்தியை பத்திரிக்கைகளில்தான் பார்த்தோம், இதுவரை அதிகாரப்பூர்வமான் எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை, அப்படி வந்தால் உடன் செய்து தருகின்றோம், இப்பொழுதைக்கு அதுபோன்று எதுவும் எங்களால் செய்யமுடியாது என்று கூறியதுடன் இதனை மக்களிடம் இதை கொண்டு செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
எனவே இந்த செய்திகளை நம்பி யாரும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். பின்பு இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால் உடன் தெரியப்படுத்துகின்றோம். அல்லாஹ் போதுமானவன்.
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
Sunday, March 10, 2013
ATM கொள்ளையை தவிர்க்க
நீங்கள் இந்திய ATM செண்டரில் பணம் எடுக்கும்போது கயவர்கள் உங்களை அதிகம் பணம் எடுத்து தரும்படி மிரட்டினால் உடன் நீங்கள் செய்யவேண்டியது. உங்களின் ரகசிய திறப்பு எண்ணை தலைகீழாக அழுத்தவேண்டும். உதாரணத்திற்க்கு உங்களது ரகசிய திறப்பு எண் 1234 என்று வைத்துக்கொள்வோம், அதனை நீங்கள் 4321 என்று அழுத்தவேண்டும். அப்படி செய்யும்போது பணம் வரும், ஆனால முழுவதும் வராமல் பாதியில் எடுக்கமுடியாத அளவு சிக்கி நின்றுவிடும், உடன் தானே தகவல் காவல் நிலையத்திற்க்கு சென்று திருடனை காட்டி கொடுத்துவிடும். அனைத்து ATM நிலையங்களிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை நீங்கள் அறிவதுடன் பிறர்க்கும் பகிரவும்.
TNTJ ஜித்தா-செனைய்யா கிளை மாதாந்திர கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம் 08-03-2013 வெள்ளி அன்று அஸருக்குப்பிறகு மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ. சௌக்கத் ஹுசைன் தவ்ஹீத் என்றால் என்ன என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்பு கிளை செயல்பாடுகள் பற்றியும், மாநில தலைவர் பி.ஜெ சவுதி வந்தது பற்றியும்,மாநில கட்டிட நிதி திரட்டல் பற்றியும் விளக்கப்பட்டது. து.ஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
Saturday, March 9, 2013
TNTJ ஜித்தா-ஜிஸான் கிளை மஷூரா
அல்லாவ்ஹின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஜிஸான் கிளை மஷூரா 08-03-2013 வெள்ளி அன்று கிளை தலைவர் சகோ. ஜப்பார் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் சகோ. ரியாஸ் கிளைகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவது பற்றியும், மாநில கட்டிட நிதிக்கு நிதி திரட்டுவது பற்றியும் விவரித்தார். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சகோ. முனாப் அவர்கள் குர்ஆனும் அறிவியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!
*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.
*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
*#3925538# – used to delete the contents and code of wallet.
நம்மால் இதை விடவே முடியாதா ?
கண்கள் உலர்ந்து போதல், கண்களில் அரிப்பு, எரிச்சல், சோர்வு, தலைவலி, பார்வைக் கோளாறு... இவையெல்லாம் கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை பார்ப்பதால் ஏற்படும் அறிகுறிகள். நிலத்தில் பாடுபடும் விவசாயி கூட நிலத்தைவிட்டு விட்டு வேறு வேலைக்குப் போய்விடலாம். ஆனால் கம்ப்யூட்டரை நாம் விடவே முடியாது போலிருக்கிறது. கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதை விட மோசமானது, கண்களைக் கெடுத்துக்கொண்டு கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது. கண்ணும் கெடாமல், கம்ப்யூட்டரையும் விடாமல் இருக்க என்ன செய்வது?
* மானிட்டரை உங்கள் முகத்திலிருந்து 20 அங்குல தூரத்துக்கு அப்பால் வையுங்கள். மானிட்டர் 20 டிகிரி சாய்வாக இருக்கட்டும்.
* ஜன்னல் பக்கத்தில் மானிட்டர் இருந்தால் வெளி வெளிச்சமும், கம்ப்யூட்டர் மானிட்டர் வெளிச்சமும் கண்களைக் கூச வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் கண்கள் உலர்ந்துவிடும். எனவே அவ்வப்போது கண்களை மூடித் திறங்கள்.
* 20 - 20 - 20 விதியைக் கடைப்பிடியுங்கள். அதாவது 20 அங்குல தூரத்தில் மானிட்டர் இருக்க வேண்டும். 20 நிமிடத்துக்கு ஒருமுறை கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்க்காமல் 20 வினாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
* எல்லாவற்றுக்கும் மேலாக ஃபாஸ்ட் ஃபுட்டை ஒரு பிடி பிடிக்காமல், கண்களுக்கு வளம் சேர்க்கும் உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.