Pages

Saturday, March 23, 2013

தொழுகை

உங்களுக்குத் தொழ வைக்குமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.. ஆம் முஸ்லிம்களின் மிகமிக முக்கிய வணக்க வழிபாடுகளில், உன்னதமான ஐம்பெரும் கடமைகளில் ஒரு கடமையானது தொழுகை. நம்மை படைத்த இறைவனுக்காக தினந்தோறும் நிறைவேற்றும் (சொர்க்கத்தின் திறவுகோலான) இறைவணக்கமான தொழுகையை முறையாக குறிப்பிட்ட சமயத்தில் நிறைவேற்றுவது நமது கடமையாகும்.
திருக்குர்ஆனிலும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களிலும் தொழுகை எனும் இறைவணக்கம் முஃமின்கள் மீது மிக வலியுறுத்தப்பட்ட கட்டாயக்கடமை என்பதை அறியமுடிகிறது. இதனை தவறாது நிலைநிறுத்துவதற்கு இறைவிசுவாசிகள் அனைவரும் கடமைபட்டுள்ளார்கள்.இத்தொழுகை எனும் இறைவணக்கம் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ள படவேண்டும் என்றால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த, காண்பித்து கொடுத்துள்ள முறையில்மஸாயில்களை அறிந்து நிறைவேற்ற வேண்டும்..இறைவன் கூறுகிறான்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றிபெற்று விட்டனர்.அவர்கள் எத்தகையோர் என்றால்,  தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.மேலும்அவர்கள்தம்தொழுகைகளை குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். (அல்குர்ஆன்23:1,2,9 )
உள்ளச்சம்((خشوع என்றால் இந்த இடத்தில் இறைவனை பயந்து, நாம் அவனை பார்க்காவிட்டாலும் அவன் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று தொழுகவேண்டும். இரண்டாவது விளக்கம் தொழுகையை விளங்கி தொழுவது அதன் பர்ளு,வாஜிபு,சுன்னத் போன்றவைகள்.மூன்றாவதாக பேணுதல் அவசியம்,இன்று பேணுதல் என்றால் என்னவென்றே தெரியாமல் தொழுது கொண்டிருக்கிறோம். நிலையில்(நிற்பதில்) சொரிந்து கொண்டே நிற்பது,ஆடைகளை சரிசெய்வது,தாடியை கோதிவிடுவது,எங்கே பார்வையை 
செலுத்துவது என்று தெரியாமல் நிர்ப்பது, கைகட்டுவது, ருகூவு, சுஜூது செய்வது என்று தக்பீர் தஹ்ரிமாவிலிருந்து சலாம் கொடுக்கின்றவரை பேணுதல் அவசியம்.அதைத்தான் நமது இமாம்கள் தொழுகையின் பார்ளு நான்கு, வாஜிபு பதினெட்டு,சுன்னத் ஐம்பத்தி ஒன்று என்று அழகிய முறையில் அற்புதமான சட்டங்களை சொல்லித்தந்துள்ளார்கள் யார் இவைகளை நல்லமுறையில் படித்து விளங்கி அமல் செய்கின்றார்களோ அவர்களிடத்தில் பேணுதல் வந்துவிடும் 
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கிறார்கள் இதற்கு காரணம் அவர்கள்அறிவில்லாதமக்களாகஇருப்பதேயாகும். (அல்குர்ஆன்5:58) 
அல்லாஹ் தஆலா அவனது வேத நூலில் அதிகமான இடங்களில் தொழுகையின் முக்கியத்துவம் பற்றியும்,அதை ஒழுங்குர பாதுகாத்து ஜமாத்தாக நிறைவேற்றுவது பற்றியும் குறிப்பிடுகின்றான்.அத்துடன் சோம்பல் காரணமாக தொழுகையை அலட்சியம் செய்வது,அல்லது தொழுகையின் பக்கம் அழைப்பு கொடுத்தால் அதனை அலட்சிய படுத்துவதோடு மட்டுமல்லாமல் அழைப்பவரையும் பரிகாசம் செய்வது நயவஞ்சகர்களின் அடையாளமாகும்.
நாயகம் (ஸல்)அவர்கள் தொழுகையைப் பற்றி ஒரு நாள் கூறி கொண்டிருந்தார்கள்.அப்போது யார் அதை பேணி நடக்கின்றானோ அவனுக்கு ஒரு பிரகாசமும், இறைவனிடம் ஓர் ஆதாரமும், கியாமத்து நாளில் வெற்றியும்ம் கிடைக்கும் என்றும், யார் அதைப்பேணி (தொழுகையை)நடக்கவில்லையோ அவனுக்கு பிரகாசமும் கிடைக்காது, ஆதாரமும் கிடைக்காது,வெற்றியும் கிடைக்காது,அவன் கியாமத்து நாளில் பிர்அவ்ன், காரூன்,ஹாமான் போன்ற பெரும் பாவிகளுடன் சேர்ந்திருப்பான் என்றும் சொன்னார்கள் (பைஹகி) மனிதனின் பிராகாசம் தொழுகையில்தான் உள்ளது,இந்த தொழுகைதான் நரகிலிருந்து விடுதலை பெருவதற்கு காரணமாகவும் ஆதாரமாகவும் உள்ளது ஆதாரம் என்பது நமது சஜ்தா செய்யும் ஏழு உறுப்புக்கள் தான் இதே தொழுகைதான் நாளை கியாமத் நாளில் நாம் வெற்றி பெறுவதற்கும் ஈடேற்றம்பெறுவதற்கும் காரணமாகவும் அமையும். அது அல்லாமல் எந்த ஒரு மனிதனாவது தொழுகையில் பொடுபோக்காக இருப்பானேயானால் அவனின் இறுதிமுடிவு படு பயங்கரமானதாக இருக்கும் அல்லாஹ்வின் விரோதிகலாகிய கொடியவர்களுடன் தான் தொழுகாதவனும் எழுப்பப்படுவான்,என அல்லாஹ்வின் தூதர் எச்சரித்துள்ளார்கள். மேலும் அல்லாஹ் கூறுவதை படியுங்கள் 
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள் அவனிடம்தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்6:72 )
எவர்கள் வேதத்தை உறுதியாக பற்றி பிடித்துக்கொண்டு, தொழுகையையும் நிலை நிறுத்துகிறார்களோ(அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்கமாட்டோம். (அல்குர்ஆன்7:170)அல்லாஹ் தொழுகையாளிகளை நல்லவர்கள் என்று கூறுகிறான்.அதுமட்டுமல்ல அவர்களுக்குண்டான கூலியும் நிரப்பமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி தருகின்றான். நிரப்பமான கூலி என்றால் ஒரு மனிதன் தொழவேண்டும் என்று மனதால் நினைத்தான் ஆனால் தொழ வில்லை என்றாலும் நிய்யத்திற்கு கூலி 
வழங்கப்படும். நபிகளார் (ஸல்)அவர்கள் தொழுகையை (தொழவேண்டும்) என்று ஒருவன் நாடினாலும்கூட (அவன் 
நன்மையைப் பொறுத்த அளவில்)தொழுகையிளிருப்பவனைப் போலவே இருக்கிறான் என்றாகள்.ஆக நிய்யத்திற்கே கூலி என்றால் தொழுதவனின் கூலி எப்படி வீணாகும். கூலி வழங்குவதில் அல்லாஹ்வே மிகச்சிறந்தவன்.இவர்கள்தான் இறைவனின் அருளுக்குரியவர்கள். மேலும் அல்லாஹ் கூறுகிரான். நிச்சயமாக நாம்தான் அல்லாஹ்! என்னை தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர்வணங்கும்,என்னை தியானிக்கும்பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன்(20:14) 
அல்லாஹ் மாத்திரமே வணங்குவதற்கு தகுதியானவன் மனிதனது உள்ளத்தால்,உறுப்புக்களால் (உடலும் உள்ளமும் சேர்ந்து ) நிறைவேற்றப்படும் அனைத்து வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்காகவே செய்ய வேண்டுமே தவிர வேறு எவனுக்காகவும் நிறைவேற்றுவது கூடாது.காரணம் அவன்தான் நம்மை படைத்தவன் அதுமட்டுமல்ல அவனின் தன்மைகளைப் பாருங்கள்,அல்லாஹ்தான் அனைத்தையும் படைப்பதில்,பரிபாளிப்பதில் தனித்தவன்.அவ்வாறே அண்டசராசரங்கள் அனைத்திலுமுள்ள படைப்பினங்கள் யாவற்றையும் பரிபாளிக்கக்கூடியவனும் அல்லாஹ்வே ஆவான்,மேலும் படைத்தல், பரிபாளித்தல், போஷித்தல், ஆட்சி செய்தல்,உயிர்பித்தல்,மரணிக்கச் செய்தல்,இவை யாவும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்தம்..மனிதர்களாகிய நாம் அவனின் அடிமைகள். நமது அடிமைத்தனத்தை தொழுகையின் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும். காரணம் வழிபாட்டு சடங்குகளில் தொழுகைதான் முதன்மையானது இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று,இறை நம்பிக்கையாளனின் அடையாளமே தொழுகைதான். இரண்டு,இறைவனுடன் நேரிடையாக தொடர்பை ஏற்படுத்துவதுடன் அவனது கட்டளைக்கு பணிந்து வாழ்வேன் என்று வாக்களித்து இறைவனின் வழிகாட்டுதலை மட்டுமே விரும்பி வேண்டி பெறுவதால் மனிதன் பாவத்திலிருந்து பரிசுத்தமாகிவிட வாய்ப்பு ஏற்படுகிறது. .அல்லாஹ் கூறுகிறான் உனக்கே நாங்கள் அடிபணிகிறோம் (இபாதத் செய்கிறோம் )மேலும் .உன்னிடமே நாங்கள் உதவி தேடுகின்றோம் எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிப்பாயாக (1:4-5)………. 
யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகி விடும்.இஸ்லாம் என்பது இறைவனின் மார்க்கம். முழு மனித சமுதாயத்தின் ஈருலக ஈடேற்றத்திற்கு இறைவனால் தரப்பட்ட இனியமார்க்கம்.ஆக இஸ்லாம் என்றாலே இறைவனுக்கு கட்டுப்படுவது கீழ்படிவது இணங்கி நடப்பது என்பதுபொருள் (சாந்தி சமாதானம் எனவும் பொருளுண்டு) எனவேதான் ஒவ்வொரு ரகஅத்திலும் உன்னையே வணங்குகிறோம் உன்னிடத்திலேயே உதவி தேடுகிறோம் என்று வரும் சூரா ஃபாதிஹாவை அல்லாஹ் தொழுகையுடன் சம்பந்தப்படுத்தி வைத்திருக்கின்றான். எவனொருவன் இதை ஓதவில்லையோ அவனின் தொழுகையே கூடாது மேலும் தொழுகையின் மூலமாகத்தான் நேர்வழியும் பிரகாசமும் கிடைக்கின்றது. மறுமையில் வெற்றியும் ஈடேற்றமும் கிடைக்கின்றது, இதற்கு மாற்றமாக எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், ஹாமான் ,உபை இப்னு ஃகலப் ஆகியோருடன் இருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு,அம்ருஇப்னு ஆஸ் (ரழி) நூல் : அஹ்மத்

No comments:

Post a Comment