Pages
Saturday, September 28, 2013
இரத்த தான முகாம் -27.09.2013
TABUK ஏர்பேஷ் B E Aவில் பிறமத தனிநபர் தஃவா!...
அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன்,
மேலும் அவர்களுக்கு சகோ, PJ அவர்களின்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், இஸ்லாமிய ஒழுங்குகள், மேலும் பல முக்கிய நூல்களும், இஸ்லாம் ஓர் அறிமுகம்
- ஆடியோ கேஸட்களும் மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், ஏகத்துவமும் எதிர்வாதமும், இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள், கிருத்தவர்களுடன் நடைபெற்ற விவாதங்களும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்….!!
அன்புச்சகோதர,சகோதரிகளே! அல்லாஹ்வை
புகழுங்கள்! இவர்களுக்காக துஆச் செய்யுங்கள்!!
=========================================================================================
"அல்லாஹ்ஒருவனுக்குநேர்வழிகாட்டநாடினால்அவனதுஉள்ளத்தை
இஸ்லாத்திற்காகவிரிவடையச்செய்கிறான். (திருக்குர்ஆன்: 6:125)...
TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்…!!
இன்நிகழ்ச்சியில்சகோ, {சங்கை}அப்துல்அஜீஸ் உரையில்"மஹ்ஷரில் மனிதனின் நிலை"!என்றதலைப்பில்: உண்மையான மஹ்ஷர் என்றால் என்ன அது எவ்வாறு
இருக்கும் என்பதை அழகிய முறையில் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.
மேலும்,மேலத்தாணியம் சகோ,நிஜாம் அவர்கள் கடந்தவர உலக நிகழ்வுகள் அனைத்தையும் "நட்டுநடப்பும் நமது நிலையும்" என்றதலைப்பிலும், மேலும்மேலப்பளையம் சகோ,முஹம்மது ரபீக் அவர்கள் "உண்மையான நேர்வழி எது" என்ற தலைப்பிலும் மிகச்சிறப்பாகசிற்றுரையாற்றினார்கள்.
இன்நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்கள் உள்பட பலர்கலந்துக் கொண்டனர். இறுதியில் நபிவழிதுஆவுடன், நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்….!!
நாங்கள் முஸ்லிம்கள்:
--------------------------------------
"எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்துக் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களை செய்து கொண்டு
நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் எனக்கூறுகிறாரோ, அவரைவிட அழகிய சொல் சொல்பவர்
யார்? (உலகப்பொதுமறை41:33)
மதீனா கிளையில் வினாடி வினா போட்டி
மதீனா வாராந்திர நிகழ்ச்சி - 27/09/203
இதில் சகோ.சியாத் அவர்கள் அவர்கள் "பெற்றோர்களை பேணுதல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அனேக மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.துஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, September 25, 2013
Monday, September 23, 2013
+++++======+++++=====
நூலாசிரியர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்.
________________________________________
ஏகஇறைவனின் திருப்பெயரால்...
இஸ்லாத்தின் இறுதிக் கடமையாக ஹஜ் அமைந்துள்ளது.
நாடு, மொழி, இனம், நிறம், கோத்திரம், செல்வம்,
செல்வாக்கு ஆகிய அனைத்து வேறுபாடுகளையும்
மறந்து உலக மக்கள்அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுடன் கூடும் உலக மகா மாநாடு! ஹஜ்!...
வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையைப் பறை சாற்ற
வேண்டிய புனித மிக்க ஆலயத்தில் கூட சிலர் அறியாமையின் காரணமாக வேறுபட்டுநிற்கும் கொடுமையைக் காண்கிறோம்.
மத்ஹபுகளின் பெயரால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமாக ஹஜ் செய்யும் நிலையையும் காண்கிறோம்.
அணிகின்ற ஆடைகள் கூட ஒரே மாதிரியாக இருக்கவேண்டிய இடத்தில் வணக்க வழிபாடுகளில் வித்தியாசப்படுவதை விடக் கொடுமை என்னஇருக்க முடியும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு ஹஜ்செய்வது என்பதை என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் (முஸ்லிம் 2286) என்றுகூறியதுடன் செய்து காட்டி விட்டும் சென்றுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு,மூன்று தடவை ஹஜ் செய்து ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமாக நடந்திருந்தால்வித்தியாசங்கள் ஏற்பட சிறிதளவாவது நியாயம் இருக்கலாம்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ ஒரு தடவை தான் ஹஜ் செய்தனர். அந்த ஹஜ்ஜை அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அந்த ஒரேவிதமாகத் தான் நாம் அனைவரும் செய்தாக வேண்டும்.
அந்தப் புண்ணிய பூமியிலாவதுஒரே விதமாக வணக்கங்கள் புரிய வேண்டும்.
இந்த நன்னோக்கத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு ஹஜ் செய்தனர் என்பதைத் தக்க சான்றுகளுடன் வெளியிட்டுள்ளோம்.
ஹஜ்ஜின் சிறப்புக்கள்!
-----------------------------
ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறை
வேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன.
அமல்களில் சிறந்தது எது? என்றுநபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புவது என்று விடையளித்தார்கள்.
அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது.
அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது என்றார்கள்.
அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக்கொள்ளப் பட்ட ஹஜ் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 26, 1519.
ஒரு உம்ராச் செய்து விட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட
பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத்தவிர
வேறு கூலி இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1773.
அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள் பெண்களாகிய உங்களுக்கு சிறந்த
ஜிஹாத், ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1520, 2748.
உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல்
யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா
(ரலி) நூல்: புகாரி 1521, 1819, 1920.
இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் ஹஜ்
செய்வதன் சிறப்பையும், அதனால் கிடைக்கும்
பயன்களையும் அறிவிக்கின்றன.
அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுவதும், கேட்டவை யாவும் கிடைப்பதும், மறுமையில் சுவனத்தைப் பரிசாக அடைவதும் உண்மை முஸ்லிம்களுக்குச் சாதாரணவிஷயம்
இல்லை.
ஹஜ்ஜின் அவசியம்!
----------------------------
மக்காவிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள புனிதத்
தலங்களுக்குச் சென்று சில கிரியைகளைச் செய்வது
ஹஜ் எனப்படுகின்றது.
வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் தங்கள்வாழ்வில் ஒரு
தடவை ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும்.
அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும்
உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.
அந்தஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது,
சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.
யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரைவிட்டும் தேவையற்றவன்.
(திருக்குர்ஆன் 3:97)
மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீதுஹஜ்ஜைக்
கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டார்கள்.
அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே!
ஒவ்வொரு ஆண்டுமா? என்று கேட்டார். அவர் இவ்வாறு
மூன்று தடவை கேட்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் மௌனமாக இருந்து விட்டு நான் ஆம் என்று
கூறினால் அவ்வாறே கடமையாகி விடும்.
அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2380.
நன்றி - onlinepj.com
பிறரைப் பற்றி புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். இந்தப் பாவத்தைச் செய்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது.
குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும். (அல்குர்ஆன் 104:1-9)
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)
புறம் பேசுவது நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பாவச் செயல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எச்சரித்துள்ளார்கள்.
11 حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيُّ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْإِسْلَامِ أَفْضَلُ قَالَ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ رواه البخاري
அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "எவரது நாவிலிலிருந்தும் கரத்திலிலிருந்தும் பிற முஸ்லிலிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள். நூல் : புகாரி
(11) 216 حَدَّثَنَا عُثْمَانُ قَالَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ أَوْ مَكَّةَ فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ ثُمَّ قَالَ بَلَى كَانَ أَحَدُهُمَا لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ وَكَانَ الْآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ فَكَسَرَهَا كِسْرَتَيْنِ فَوَضَعَ عَلَى كُلِّ قَبْرٍ مِنْهُمَا كِسْرَةً فَقِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ لِمَ فَعَلْتَ هَذَا قَالَ لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ تَيْبَسَا أَوْ إِلَى أَنْ يَيْبَسَا رواه البخاري
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, சவக் குழிகளுக்குள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ஒலத்தைச் செவியுற்றர்கள். அப்போது, "இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை'' என்று சொல்லிவிட்டு, இவ்விருவரில் ஒருவரோ, தாம் சிறுநீர் கழிக்கும் போது (தமது அந்தரங்கத்தை) மறைக்காமலிலிருந்தார். மற்றொருவரோ, கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார்'' என்று கூறிவிட்டு, ஒரு (பச்சை) பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லிலி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், "நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்''என்று பதிலளித்தார்கள். நூல் : புகாரி
(216) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) "முஃப்லிஸ் (திவாலாகிப் போனவன்) பற்றி உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "யாரிடத்தில் பொற்காசுகளும் இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவன் தான் முஃப்லிஸ் (திவாலானவன்)'' என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "என்னுடைய சமுதாயத்தில் முஃப்லிஸ், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்துடன் வருவான். (உலகில் வாழும்போது) ஒருவன் மீது இட்டிக்கட்டியிருப்பான். ஒருவனைத் திட்டியிருப்பான். ஒருவனது இரத்தத்தை ஓட்டியிருப்பான். ஒருவனை அடித்திருப்பான். எனவே இவனுடைய நன்மைகளிலிருந்து அவனுக்கு எடுத்துக் கொடுக்கப்படும். இவன் மீது கடமையாக உள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு முன்பே இவனது நன்மைகள் அழிந்து விட்டால் அவனுடைய தீமைகளிலிருந்து எடுத்து இவன் மீது வைக்கப்படும். பிறகு இவன் நரகில் வீசப்படுவான்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4678
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ سَمِعَ أَبَا حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளதற்கும், தம் இரு கால்களுக்கு இடையே உள்ளதற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அüக்கிறேன். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (6474)
6478حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ سَمِعَ أَبَا النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ يَعْني ابْنَ دِينَارٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (6478)
4235حَدَّثَنَا ابْنُ الْمُصَفَّى حَدَّثَنَا بَقِيَّةُ وَأَبُو الْمُغِيرَةِ قَالَا حَدَّثَنَا صَفْوَانُ قَالَ حَدَّثَنِي رَاشِدُ بْنُ سَعْدٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ قَالَ أَبُو دَاوُد حَدَّثَنَاه يَحْيَى بْنُ عُثْمَانَ عَنْ بَقِيَّةَ لَيْسَ فِيهِ أَنَسٌ حَدَّثَنَا عِيسَى بْنُ أَبِي عِيسَى السَّيْلَحِينِيُّ عَنْ أَبِي الْمُغِيرَةِ كَمَا قَالَ ابْنُ الْمُصَفَّى رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் வானுலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் அவர்கள் தங்களுடைய முகங்களிலும் நெஞ்சுகளிலும் கீரிக் கொண்டனர். ஜிப்ரீலே இவர்கள் யார்? எனக் கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியை உண்டவர்கள். மக்களின் மானத்துடன் விளையாடியவர்கள் என்று பதிலளித்தார். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : அபூதாவுத் (4235)
Article Copied From: www.onlinepj.com
ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளை-ன் "ஆலோசனை கூட்டம் " & "பயான் "
இறைவனின் அருளால்.... 20/09/2013- வெள்ளிகிழமை அன்று
ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளை-ன் "ஆலோசனை கூட்டம் " & "பயான் " அல் -போசான் கேம்பில் நடைபெற்றது.
கிளை தலைவர் சகோ: அப்துல் ஹக்கீம் தலைமையிலும் கிளை
செயலாளர் சகோ: யாகூப் முன்னிலையிலும் கூட்டம்
ஆரம்பித்தது. இதில் சகோ: சலீம் சேட் அவர்கள்
"மதினாவின் சிறப்புக்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மண்டல இரத்ததான தான முகாம் , மண்டல
ஒருங்கிணைப்பு கூட்டம் , மண்டல தர்பியா, கேள்வி-பதில்
நிகழ்ச்சி சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டது.. இதில் கிளை
நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள்
உட்பட 10கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
துவா உடன் கூட்டம் நிறைவுற்றது ...
அல்ஹம்துலில்லாஹ்....
Saturday, September 21, 2013
ஈமானில் உறுதி - ஜித்தாஹ்-பாப் மக்கா கிளை பயான்
அல்லாஹ்வின் பேரருளால், ஜித்தா மண்டல பாப் மக்காஹ் கிளையில் 20-09-2013
அன்று, கிளைத் தலைவர் அப்துல்மாலிக் அறையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மக்ரிப் முதல் இஷா வரை "ஈமானில் உறுதி" என்ற தலைப்பில் சகோ.
அப்துல் ஹக் பேசினார். இரவு உணவிற்கு பின் நிகழ்ச்சி துஆவுடன்
நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
"மனிதநேயம்" - ஜித்தாஹ்-துறைமுகம் கிளை பயான்
அல்லாஹ்வின் பேரருளால், ஜித்தா மண்டல துறைமுகம் கிளையில் 20-09-2013
அன்று, பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் "மனிதநேயம்" என்ற தலைப்பில்
சகோ. முஹாஜிர் பேசினார். பின்னர் ரத்த தான நிகழ்ச்சி குறித்து
விழிப்புணர்வு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
"தொழுகையின் முக்கியத்துவம்" - ஜித்தாஹ்-ஷரபியா கிளை பயான்
அல்லாஹ்வின் பேரருளால், ஜித்தா மண்டல ஷரபியா கிளையில் 20-09-2013 அன்று,
கிளை செயலாளர் ஹனீபா தலைமையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
"தொழுகையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் சகோ. முனீப் பேசினார்.
பின்னர் ரத்த தான நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
மதீனா கிளை ஆன் லைன் நிகழ்ச்சி - 20/09/203
தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளை மர்கஸில் ஆன் லைன் நிகழ்ச்சி
நடை பெற்றது.
இதில் தாயகத்தில் இருந்து சகோ. ஆலிம் அப்துல் நாசர் அவர்கள் அவர்கள்
"ஆடம்பர உலகமும் அழியா மறுமையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அனேக மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.துஆ மற்றும் மதிய
உணவிற்க்குப் பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
அல்ஹம்துலில்லாஹ்.
TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்…!!
======================================
அல்லாஹ்வின்பேரருளால் TNTJ ஜித்தாஹ்மண்டலம்
"தபூக்"கிளைமர்கஸில் 20/09/2013 வெள்ளியன்று
ஜும்ஆவிற்குபிறகுவாராந்திரமார்க்கசொற்பொழிவுமிகச்சிறப்பாக
நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!...
இன்நிகழ்ச்சியில்சகோ, {சங்கை}அப்துல்அஜீஸ் அவர்கள் உரையில் "மண்ணறையில்
மனிதனின் நிலை"! என்றதலைப்பில்: உண்மையான கப்ரு வாழ்க்கை எவ்வாறு
இருக்கும் என்பதையும், அதில் வானவர்கள் கேக்கப்படும் கேள்விகளின்
சாரம்ஷங்களையும் அழகிய முறையில் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுடன்
எடுத்துரைத்தார்.
மேலும்,மேலத்தாணியம் சகோ,நிஜாம் அவர்கள் கடந்தவர உலக நிகழ்வுகள்
அனைத்தையும் "நட்டுநடப்பும் நமதுநிலையும்" என்ற தலைப்பிலும்,
மேலும்மேலப்பளையம் சகோ,முஹம்மது ரபீக் அவர்கள் "உண்மை பேசுவோம்"
என்றதலைப்பிலும் மிகச்சிறப்பாக சிற்றுரையாற்றினார்கள்.
இன்நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்கள் உள்பட
பலர்கலந்துக் கொண்டனர். இறுதியில் நபிவழிதுஆவுடன்,
நிகழ்ச்சிஇனிதே நிறைவடைந்தது.
ஏர்பேஷ்ஷில் பிறமத தனிநபர் தஃவா!...
TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில்கடந்த 19/09/2013 அன்று தபூக்
ஏர்பேஷ்ஷில் பணிபுரியும் இலங்கை வவ்ணியாவைச் சேர்ந்த சகோதரர்,
ஒருவருக்கும், தமிழக – அரங்தாங்கி மற்றும் இராமநாதபுரம் பகுதியைச்
சேர்ந்த இரு சகோதரர்களுக்கும் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் :
இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக்
கூறியதுடன், மேலும் அவர்களுக்கு சகோ, PJ அவர்களின்குர்ஆன் தமிழாக்கம்
மற்றும் திருமறை தோற்றுவாய், மாமனிதர்
நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், இஸ்லாமிய ஒழுங்குகள்,
மேலும் பல முக்கிய நூல்களும், இஸ்லாம் ஓர் அறிமுகம் - ஆடியோ கேஸட்களும்
மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், ஏகத்துவமும் எதிர்வாதமும்,
இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள், கிருத்தவர்களுடன் நடைபெற்ற விவாதங்களும்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்….!!
அன்புச்சகோதர,சகோதரிகளே! அல்லாஹ்வை
புகழுங்கள்! இவர்களுக்காக துஆச் செய்யுங்கள்!!
========================================================================================
"அல்லாஹ்ஒருவனுக்குநேர்வழிகாட்டநாடினால்அவனதுஉள்ளத்தைஇஸ்லாத்திற்காகவிரிவடையச்செய்கிறான்.
(திருக்குர்ஆன்: 6:125)
Tuesday, September 17, 2013
சவூதி அரேபியாவில் 5 ஆண்டுகள் அதையும் தாண்டி 10 ஆண்டுகள் பணியாற்றுபவர்களா நீங்கள்?
உங்கள் உடல் நலனை மாதம் ஒரு முறை அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
சவூதியின் தட்பவெட்ப நிலைப்படி காற்றில் ஈரப்பதம் குறைவு, அடுத்ததாக காற்றில் பிராண வாயும் குறைவு அதன் காரணமாக அதிகமானவர்களுக்கு அலர்ஜி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
சாப்பிடும் உணவு வகைகளில் அதிகமாக பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகள் இதனால் நீண்ட காலம் சவூதியில் பணியாற்றியவர்களுக்கு கொலஸ்ட்ரால், ரத்தக் கொதிப்பு, சுகர் என்று எதாவது ஒன்று அன்பளிப்பாகக் கிடைத்திருக்கும்.
இதை ஆரம்ப கட்டத்தில் கவனிக்காமல் இருந்துவிட்டு பாதிப்பின் கடைசியில் கவனிக்கும் போது அந்த நோய் தனது வீரியத்தோடு எல்லையை தாண்டியிருக்கும்.
சகோதரர்களே! வெளிநாட்டில் வேலை செய்யும் அனைவரும் எதாவது ஒரு வகையில் மன இருக்கத்துடனேயே இருக்கிறார்கள் ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம் அதுவும் குடும்பத்துடன் இருப்பவர்களாக இருக்கும்.
பிரச்சனைகளின் போது இருக்கமான மனநிலையிலிருந்து விடுபட முயற்சியுங்கள். அந்த பிரச்சனையை மறந்து அடுத்த வேலையில் கவனம் செலுத்துங்கள்.
மன இருக்கத்தின் போது உடனே தொழுகையை நாடுங்கள்... உங்கள் மனதில் உள்ள குறைகளை சுமைகளை இறைவனிடம் கேளுங்கள் முறையிடுங்கள். மனச்சுமையிலிருந்து விடுதலை பெறுங்கள்...
உங்களை நம்பி உங்கள் உறவுகள் காத்திருக்கின்றன.
மாதம் தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்து உங்களின் உடல் நலனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உணவு பழக்கவழக்கங்களில் கட்டுபாடு வைத்துக் கொள்ளுங்கள். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
பரக்கத் நிறைந்த பேரிச்சை, ஆலிவ், தேன் போன்ற உணவுகள் தாராளமாக கிடைக்கும் நாடு இது அவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Saturday, September 14, 2013
"இஸ்லாமிய கலாச்சாரம்" - ஜித்தாஹ்-ஷரபியா கிளை பயான்
அல்ஹம்துலில்லாஹ்.
இறையச்சம் - ஜித்தாஹ்-பாப் மக்கா கிளை பயான்
'கஅபா'வின் சிறப்பு - ஜித்தாஹ்-சனாயியா கிளை பயான்
அல்லாஹ்வின் பேரருளால், ஜித்தா மண்டல சனாயியா
கிளையில் 13-09-2013 அன்று, கிளைத் தலைவர் அப்துல்ஹக்கீம்
தலைமையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் "கஅபா'வின் சிறப்பு" என்ற தலைப்பில் சகோ. சலீம்
சேட் பேசினார். பின்னர் மாநில செயற்குழு தீர்மானங்களை மண்டல
செயலாளர் அப்துல்பாரி வாசித்து வழங்கினார். மண்டல பொருளாளர் யூனுஸ் ரமலான் பித்ரா, ஜகாத், சதகா கணக்குகளை கிளை மக்களுக்கு சமர்பித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.
மதீனா கிளை வாராந்திர மார்க்க நிகழ்ச்சி - 13-09-2013
ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளை மர்கஸில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சியாத் ரஹிமான்
அவர்கள் "இஸ்லாம் கூறும் மனித நேயம்" என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அதன்
பின்பு குரான் வாசித்தல் நடை பெற்றது.து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, September 11, 2013
Tuesday, September 10, 2013
யாருக்குப் பரிசு?
மன அழுத்தம் அதிகம் உள்ள பெரிய அதிகாரிகளுக்கு மகிழ்வுடன் வாழ பயிற்சி முகாம் ஒன்றினைப் பேராசிரியர் ஒருவர் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது பயிற்சியில் கலந்து கொண்ட நாற்பது பேருக்கும் ஒரு ஊதிய பலூனும் ஒரு ஊசியும் கொடுத்துவிட்டு சொன்னார்,"இப்போது ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.இப்போது உங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பலூனும் ஊசியும் உள்ளது.இருபது நிமிடம் கழித்து யார் கையில் பலூன் உடையாமல் இருக்கிறதோ,அவர்களுக்கு ஒரு பரிசு உண்டு,"அடுத்த நொடியே அனைவரும் குதூகலத்துடன் தங்கள் பலூனை ஒரு கையில் உயரப் பிடித்துக் கொண்டு அடுத்த கையில் ஊசியை வைத்து அடுத்தவர் பலூன்களை உடைக்க முயற்சித்தனர்.
சிறுவர்களைப் போல அவர்கள் ஓடியும்,தாவியும்,நாற்காலிகளின் மேல் ஏறியும் இந்தப் போட்டியைத் தொடர்ந்தனர்.இருபது நிமிடம் ஆயிற்று.அப்போது ஒரே ஒருவரின் பலூன் மட்டும் உடையாதிருந்தது. அவர் குழந்தையைப்போல ஆர்ப்பரித்தார்.
பேராசிரியர் எல்லோரிடமும் கேட்டார்,"பலூன் உடையாது வைத்திருக்கும் இவரை வெற்றியாளராக அறிவித்துப் பரிசினைக் கொடுத்து விடலாமா?"என்று கேட்டார்.
எல்லோரும் சம்மதம் தெரிவித்தனர்.அப்போது அவர்,"பரிசு கொடுக்குமுன் ஒரு கேள்வி. நான் முதலில் என்ன சொன்னேன்?பலூன் உடையாமல் வைத்திருப்பவருக்கு பரிசு என்று தானே சொன்னேன்?ஒவ்வொருவரும் அடுத்தவர் பலூன்களைப் பார்க்காமல்,தன பலூனை மட்டும் உடையாமல் பாதுகாத்திருந்தால் இப்போது அனைவருக்கும் பரிசு கிடைத்திருக்குமே!"என்று சொன்னவுடன் ஒவ்வொருவருக்கும் சிறு குற்றம் செய்த உணர்வு ஏற்பட்டது.பேராசிரியர் தொடர்ந்தார், "இப்படித்தான் வாழ்விலும்,நாம் நம்மிடம் உள்ளதைக் கவனித்து முறைப்படி வாழ்ந்தாலே நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்கலாம்.ஆனால் நாம் அடுத்தவர்களையே கவனித்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு,அவர்களை அழிக்க,ஒடுக்க முயற்சித்து நம் மகிழ்ச்சியைக் காணாமல் போக்கி விடுகிறோம்."
Monday, September 9, 2013
திருச்சியில் கூடிய மாநில செயற்குழு
சென்னை – திருச்சி – நெல்லை – கோவை ஆகிய நான்கு இடங்களில் இன்ஷா அல்லாஹ் 2014 ஜனவரி 28 அன்று போராட்டத்தை நடத்துவது என நேற்று (25.08.13 – ஞாயிறு) காலை திருச்சியில் கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
செயற்குழு தீர்மானங்கள்:
மாநில செயற்குழு தீர்மானங்கள்
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஞாயிறு அன்று திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. சிறைநிரப்பும்போராட்டம் :
இடஒதுக்கீட்டுக்கானபோராட்டம்
தமிழகத்தில்முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித இடஒதுக்கீடு போதுமானதல்ல என்றும் அதை அதிகரித்துத்தருவோம் என்றும் ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு பத்துசதவிகிதம் தனியாக இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ராக மிஷன் பரிந்துரையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தியும் 2014 ஜனவரி 28 செவ்வாய்க் கிழமை அன்று சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய தமிழகத்தின் நான்கு பெருநகரங்களில் மாபெரும் சிறைநிரப்பும் போராட்டம் நடத்துவது என இந்தசெயற்குழு தீர்மானிக்கிறது.
புதுவை மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 6 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அதே 2014 ஜனவரி 28 செவ்வாய்க் கிழமை அன்று பாண்டிச்சேரியிலும் சிறைநிரப்பும் போராட்டம் நடத்துவது எனவும் இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.
ஆண்கள் மட்டுமின்றி இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் இச்செயற்குழு அறிவிக்கிறது.
2. ஊடகங்களின்பாரபட்சப்போக்கு
விஸ்வரூபம் என்ற திரைப்படம் முஸ்லிம்களின் மதநம்பிக்கையையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டதால் முஸ்லிம்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்சனையின் போது அனைத்து ஊடகங்களும் அதிகமான தலைவர்களும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து இழிவுபடுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டனர். சென்சார்போர்டு அனுமதி அளித்த பின் யாரும் தடுக்கக்கூடாது என்று சட்டம் பேசினார்கள்.மனிவண்ணன்,சீமான் தவிர அனைத்து சினிமாக்காரர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகக்களம் இறங்கினார்கள்.ஆனால் மெட்ராஸ்கபே என்ற திரைப்படம் விடுதலைபுப்புலிகளை பயங்கரவாதிகளாகச்சித்தரித்துள்ளதால் அந்தப்படம் தமிழகத்தில் வெளியிடப்படவில்லை. விஸ்வரூபம் படம் விஷயத்தில் வரிந்து கட்டிய ஊடகங்களும் தலைவர்களும் இன்று வாய் மூடிமவுனமாக உள்ளனர்.ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் முஸ்லிம்கள் விஷயத்தில் நியாயமற்ற முறையிலும் துவேஷத்துடனும் நடப்பது இதில் இருந்து உறுதியாகிறது .ஊடகங்கள், அரசியல்வாதிகள், மற்றும் சினிமாக்காரர்களின் இந்த மதவெறிப்போக்கை இந்த செயற்குழு கடுமையாகக்கண்டிக்கிறது..
இந்துத்துவா இயக்கத்தினர் கொல்லப்படும் போதெல்லாம் உடனடியாக அந்தப்பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஊடகங்கள் விஷமப்பிரச்சாரம் செய்து முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிரான கசப்புணர்வை விதைத்து வருகின்றன. கட்டப்பஞ்சாயத்து, பெண்தொடர்பு, ரியல்எஸ்டேட், கடன்தகராறு, நிலத்தகராறு, குடும்பத்தகராறு, சொந்தப்பகை அரசியல் பகை என பல காரணங்களால் கொலை நடந்திருக்கலாம்.இது குறித்து தகுந்த துப்பும் தடயமும் கிடைக்கும் போதுதான் விபரம் தெரியவரும். அதுவரை கற்பனைகளை எழுதி சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கவேண்டாம் என ஊடகங்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது..
மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜோதாரயில் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்கள் மீது முதலில் பழி போடப்பட்டு பின்னர் இந்துத்துவாவினர்தான் அவைகளைச் செய்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டதையும், கர்நாடாகா பீஜப்பூரில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிவிட்டு முஸ்லிம்கள் மீது பழிபோட்டதும், பெங்களூர் ஹனுமான்கோவிலுக்குள் மாட்டுக்கறியைவீசி முஸ்லிம்கள்மீது பழிபோடதிட்டம் தீடியதும் இந்துத்துவாவினர்தான் என்பதும், நெல்லை தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டுவைத்ததும், திருப்பூர் அருகே சதுமுகை என்ற ஊரில் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போட்டதும், நெல்லையில் கோவில் தேருக்கு தீவைத்ததும் இந்துத்துவாவினர்தான் என்பது விசாரணைக்குப் பிறகு அம்பலமானதையும் இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
3. குற்றங்கள் குறைய
நாட்டில் கற்பழிப்புகளும் குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.மென்மையான தண்டனைகளும் பல ஆண்டுகளுக்கு இழுத்தடித்து தீர்ப்பு வழங்கப்படுவதும் தான் இதற்குகாரணமாக உள்ளன.
சட்டம் ஒழுங்கைக் காப்பதுதான் அரசாங்கத்தின் முதல் கடமை என்பதை உணர்ந்து எந்த வழக்காக இருந்தாலும் ஐம்பது நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் வகையில் நீதிமன்றங்களையும்,நீதிபதிகளையும் அதிகரிக்க வேண்டும் எனவும், நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கான எல்லா காரணங்களையும் களைய வேண்டும் எனவும் இந்த செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
பாலியல் வன்முறைக்கு காரணமான அனைத்து ஆபாசங்களுக்கும் முற்றாக தடை விதிக்கவேண்டும் எனவும் இந்தசெயற்குழு வலியுறுத்துகிறது.
குற்றங்களுக்கு கடுமையான தண்டணைகள் வழங்கவேண்டும் எனவும் இந்தியாவில் மரண தண்டனையை எக்காரணம் கொண்டும் நீக்கக்கூடாது எனவும் இச்செயற்குழு வற்புறுத்துகிறது.
4. சிறைச்சாலைகளைமூடவேண்டும்
விசாரணைக் கைதிகளை பல ஆண்டுகள் சிறையில் அடைத்து வைப்பதால் அவர்களின் குற்றம் நிரூபணமாவதற்கு முன்னால் தண்டனை வழங்குவதாக அமைகின்றது.மேலும் சிறைச்சாலைகளின் செலவுக்காக மக்களின் வரிப்பணம் பாழாகிறது. காவலர்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக விசாரணைக் கைதிகளைச்சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு மின்னணுவளையம் பொருத்தி அவர்கள் தமது ஊரை விட்டு அல்லது பகுதியை விட்டு வெளியேறாதவாறு கண்காணிப்பது என்ற முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.இதனால் குற்றவாளிகள் சிறைச்சாலைகளில் அடுத்த குற்றங்களைச் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கமுடியாது. அரசுக்குச் செலவுகள் ஏற்படாது. மேலும் அவர்கள் குடும்பத்துடன் இருப்பதற்கும் உழைத்து சம்பாதிப்பதற்கும் இது உதவியாக அமையும்.
தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசினால் கண்காணிக்கப்படுவதால் அவர்கள் மேலும் குற்றங்கள் செய்யாமல் தம்மைத் தடுத்துக் கொள்வார்கள்.
15 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரும் செலவுகளும் சிரமங்களும் மிச்சமாகும். நீதிமன்றங்களின் பணிச்சுமைகளும் பெருமளவுகுறையும். நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் குறையும் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
5. பாபரிமஸ்ஜித்
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு சுமார் 20ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அப்பள்ளியை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையைத் துரிதப்படுத்தவும் நியாயமான தீர்ப்பு வழங்கவும் இச்செயற்குழு நீதித் துறையைக் கேட்டுக் கொள்கிறது.
பாபர் மசூதி குறித்த அலஹாபாத் நீதிபதிகளின் கட்டப்பஞ்சாயத்து அநியாயத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை துரிதமாக விசாரித்து முடிக்க மத்திய அரசு முயல வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றம் ஆறப்போட்டு அநீதியிழைக்காமல் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் எனவும்இச்செயற்குழு கோருகிறது.
6. வக்ஃபு வாரியத்தை முற்றாகக் கலைக்கக்கோரி
கிறித்தவ சமுதாயத்தின் அறப்பணிகளுக்கான சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் கிறித்தவ சமுதாயமே நிர்வகித்து வருகிறது. அதனால் அவர்களின் சொத்துக்கள் ஆக்ரமிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்து வருகிறது. ஆனால் முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசின் வக்ஃபு வாரியம் நிர்வகிக்கிறது. இது அரசியல்வாதிகளுக்கும், சுரண்டல் பேர்வழிகளுக்கும் கொள்ளை அடிக்க வாய்ப்பாக இருந்து வருகிறது. எனவே முஸ்லிம் சமுதாய சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ஃப் வாரியத்தை முற்றாகக் கலைத்து விட வேண்டும் என மாநில மத்திய அரசுகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
உள்ளூர் ஜமாஅத்துகள் வக்பு சொத்துக்களை நிர்வாகம் செய்தால் மட்டுமே வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க முடியும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
7. முஸ்லிம்தனியார்சட்டம்
பெண்கள் பருவ வயதை அடைந்தவுடன் திருமணத்துக்குத் தயாராகிறார்கள். பருவ வயதை அடைந்து 18 வயதை அடையாத பெண்கள் காதல் வலையில் விழுந்து சீரழிந்து போகிறார்கள். இந்த நிலை ஏற்படாமல் தடுக்க பொறுப்புள்ள சில பெற்றோர்கள் தங்கள் புதல்விகள் 16 வயதை அடைந்தவுடன் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் இது போன்ற திருமணங்களை குழந்தைகள் திருமணம் என்று சொல்லி அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோர் மீது வழக்கும் பதிவு செய்கிறார்கள். திருமணம் விவாகரத்து உள்ளிட்ட சில சட்டங்களில் முஸ்லிம்களுக்கு தனியாக சட்டம் உள்ளதால் பருவ வயதை அடைந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய முஸ்லிம்களுக்கு சட்டப்படி உரிமை உள்ளது. இந்த உரிமையைப் பறிக்கும் வகையில் செயல்படுவதை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
8. திருமண பதிவுகளில் கெடுபிடி
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டுமென மாநில அரசு சட்டம் இயற்றியது. திருமணத்தைப் பதிவு செய்யப் போகும் போது முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். தற்காலத்தில் முஸ்லிம்கள் திருமணப் பத்திரிக்கை கூட அடிக்காமல் எளிமையாக திருமணம் செய்கிறார்கள். திருமணப் பத்திரிக்கை கொண்டுவர வேண்டுமென அதிகாரிகள் நிர்பந்தம் செய்கின்றனர்.
நமது நாட்டில் ரேஷன் கடைகளில் உள்ள குளறுபடிகளை உலகமே அறியும். பெயரையும் வயதையும் தவறாக எழுதுதல், குடும்ப உறுப்பினர்கள் சிலரது பெயர்களை சேர்க்காமல் விட்டுவிடுதல் போன்ற குறைபாடுகள் ரேஷன் கார்டில் உள்ளது. திருமணத்தைப் பதிவு செய்யும் போது ரேஷன் கார்டில் கூறப்பட்டுள்ள தகவலுக்கு மாற்றமாக உள்ளதால் ரேஷன் கார்டில் பெயர் இல்லை என்பன போன்ற காரணங்களைக் கூறி திருமணத்தைப் பதிவு செய்ய மறுப்பது.
அதிகமான முஸ்லிம் பெண்கள் ஆரம்ப கல்வியை தாண்டுவதில்லை. ஆரம்ப கல்வி கற்ற சான்றிதழ்களையும் பாதுகாப்பதில்லை. திருமணத்தைப் பதிவு செய்யும் போது கல்வி சான்றிதழ்களையும் கேட்டு வற்புறுத்துகின்றனர். இதுபோன்ற தேவையற்ற நெருக்கடிகளால் முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்வதை தவிர்ப்பதுதான் இச்சட்டத்தால் கிடைத்த நன்மையாகஉள்ளது. எனவே இச்சட்டம் முழுமையாக பயனளிக்க வேண்டுமானால் முஸ்லிம் நிறுவனங்கள், ஜமாஅத்துகள் முன்னிலையில் பதிவு செய்த திருமணச் சான்றையே ஆதாரமாகக் கொண்டு திருமணத்தைப் பதிவு செய்ய ஆவண செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது.
9. தேர்தல் முறையில் மாற்றம் தேவை
இந்தியத் தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இந்தத் தேர்தல் முறையினால் மட்டுமே அனைத்து கட்சிகளும் அனைத்து சமுதாயமும் தங்களின் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெறமுடியும். மேலும் கொள்கை முரண்பாடுள்ளவர்களுடன் பொருந்தாக் கூட்டணி வைக்கும் அவலமும் இதனால் ஒழிக்கப்படும் என்று இச்செயற்குழு கருதுகிறது.
10. முஸ்லிம்களுக்கு ரிசர்வு தொகுதி
சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு தேர்தல் தோறும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே தலித் சமுதாய மக்களுக்கு இருப்பது போல் முஸ்லிம்களுக்கு 20 சதவிகித தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
11. இறந்தவர்களை அடக்கம் செய்ய மறுப்போர்
காழ்ப்புணர்வு காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சில ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மறுக்கிறார்கள். மனிதாபிமானமற்ற இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.
12. இஸ்லாத்தைத் தழுவியோருக்கானஅரசுவேலைவாய்ப்பு
பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்தைத் தழுவினால் அவர்கள் கிறித்தவர்களின் பிற்பட்ட பிரிவினராகக் கருதும் வகையில் அரசாணை உள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினால் அவர்கள் பிற்பட்ட சமுதாயமாகக் கருதப்படுவார்கள் என்று அரசாணை இல்லாததால் கல்வி வேலை வாய்ப்பில் இவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இது குறித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு போட்ட பிறகும் தமிழக அரசு இதுவரை அரசாணை வெளியிடவில்லை. இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நடராஜ் அவர்களைச் சந்தித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்தனர். பின்னர் இப்பொறுப்புக்கு வந்த நவநீத கிருஷணன் அவர்களையும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இன்று வரை இது குறித்து ஆணை பிறப்பிக்கவில்லை. தமிழக அரசின் இந்தப் போக்கை இச்செயற்குழு கண்டிப்பதுடன் உடனடியாக இதற்கு அரசாணை பிறப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
13. பூரணமதுவிலக்கு
மதுபானங்களும், இதர போதைப் பொருட்களும் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது என்பதும், குடும்பத்தில் பிளவை ஏற்படுத்துகிறது என்பதும், கஷ்டப்பட்டு உழைத்த பொருளாதாரத்தைப் பாழாக்கி வறுமையை அதிகரிக்கிறது என்பதும், கொலை அடிதடி போன்ற சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதும், இல்லற வாழ்வில் ஈடுப்பாட்டை குறைப்பதால் கள்ள உறவுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். மானம் மரியாதையை ஒருவன் இழப்பதற்கும் போதைப் பழக்கமே முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. இளம் வயதினர் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் கல்வி கற்பதில் அவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து எதிர்காலம் நாசமாகி வருகிறது. இன்னும் சொல்லி முடியாத கேடுகள் மதுப்பழக்கத்தால் ஏற்படுவது தெரிந்திருந்தும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தமிழக அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து குடிப்பழக்கம் இல்லாத மக்களையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்குவதை இந்த செயற்குழு கண்டிக்கிறது. வருவாயை விட நாட்டு மக்களின் நலனும், நிம்மதியும், ஒழுக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்து உடனடியாக தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக அக்கறையுடன் தமிழக அரசை இந்தச்செயற்குழு வற்புறுத்துகிறது.
மது, பீடி சிகரெட், பான்பராக், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் தீமைகளை மக்களுக்கு விலக்கி இப்பழக்கத்தில் இருந்து விடுபடத்தக்க வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகங்களும் கிளைகளும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
14. கோஎஜுகேசன்கல்விமுறைஒழிக்கப்படவேண்டும்.
சமீபகாலமாக கல்வி கற்கச் செல்லும் அதிகமான மாணவ மாணவிகளும் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்களும் காமப் போதையில் தட்டழிந்து திரிகின்றனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கூட ஆண்களுடன் ஓட்டம் பிடிக்கும் நிகழ்ச்சிகளும் ஆசிரியரே மாணவிகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கும் கல்வி முறையும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் முக்கியமான காரணங்களாக உள்ளன. ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படித்தால் ஆண்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். படிக்காமல் பெண்களை ரசிப்பதில் கவனத்தைச் சிதற விடுவதால் ஆண்களின் தேர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. நமது நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஒத்து வராத கோஎஜுகேஷன் என்ற முறை ஒழிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படிக்கும் கல்வி முறையை அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதை தமிழக அரசு உணர்ந்து மாணவ மாணவிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
15. வரம்புமீறும் கிறித்தவ கல்வி நிறுவனங்கள்
சிறுபான்மை மக்கள் தனியாக கல்விக்கூடம் நடத்த அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இந்த உரிமையை அதிகமான கிறித்தவப் பள்ளிக்கூடங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன, கிறித்தவ மத வழிபாட்டை முஸ்லிம்களும் இந்துக்களும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். தங்கள் சமுதாய மக்களை கல்வியில் உயர்த்திடவே இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. மத மாற்றம் செய்வதற்கு அல்ல. இப்படி சட்டத்துக்கு எதிராக நடக்கும் கல்விக் கூடங்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு கடுமையான எச்சரிக்கை விடுப்பதுடன் இதுபோன்ற கல்விக்கூடங்களின் அனுமதியை ரத்து செய்யுமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
சட்டம் ஒழுங்குப்பிரச்சனை ஏற்படக் காரணமாக உள்ள இது போன்ற பள்ளிக்கூடங்களை அனைத்து சமுதாய மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று இசெயற்குழு கேட்டுக் கொள்கிறது.
16. இலங்கையிலும் பர்மாவிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் முறை
இலங்கையில் சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் நல்லிணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக புத்த பிக்குகள் பள்ளிவாசல்களை இடித்தும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையிலும் இறங்கி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கைஅரசும்மதவெறியர்களுக்குஆதரவாகவேஇருந்துவருகின்றது.
இலங்கையின் இந்த அராஜகத்தை உடனே தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கம் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் எனஇச்செயற்குழுகேட்டுக்கொள்கிறது.
முஸ்லிம் நாடுகளில் வாழும் தமிழ் கூறும் தவ்ஹீத்ஜமாஅத்நிர்வாகிகள் அந்தந்த அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று இலங்கை அரசுக்கு சர்வதேசநெருக்கடி ஏற்படுத்துமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
அதுபோல் மியான்மர் எனப்படும் பர்மாவில் வங்கதேசத்தில் இருந்து குடியேறியதாகக் கூறி முஸ்லிம்களை விரட்டியடிக்கும் புத்தமத வெறியர்களை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உலகமெங்கும் வாழும் புத்த துறவிகள் மீது எதிர்வினை உலகமெங்கும் நடந்தால் அதற்கு மியான்மர் அரசும் இலங்கை அரசும் தான் பொறுப்பாவார்கள் என்று இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. இது போன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ள தலாய்லாமா உள்ளிட்ட புத்த பிக்குகளை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு முஸ்லிம்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று இச்செயற்குழு எச்சரிக்கிறது.
17. மத்திய அரசின் ஹஜ் மானியக் கொள்ளை
ஹஜ் பயணிகளிடம் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு அதில் 20 ஆயிரத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்து அதை மானியம் எனக் கூறி முஸ்லிம்களையும் நாட்டு மக்களையும் ஏமாற்றும் மத்திய அரசின் இந்த வஞ்சகத்தை இச்செயற்குழு கண்டிக்கிறது.
விமானக் கட்டணம், உணவு தங்கும் வசதி அனைத்தும் 70 ஆயிரத்துக்குள் அடங்கும் போது மேலும் 60 ஆயிரம் அதிகமாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் கொள்ளை அடிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம்களிடம் காசு பறித்து அதில் சிறிதளவை அவர்களுக்குக் கொடுத்து அதை மானியம் என்று சொல்வதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது.
18. வளைகுடா பணியாளர் அவலம்
வளைகுடா பணியார்களின் அதிகமானோர் குறைந்த ஊதியத்தில் கடினமான வேலைகளைச் செய்கின்றனர். இவர்களின் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முயல வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
19. இந்தியத்தூதரகங்களின் அலட்சியப் போக்கு
அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்காக அனைத்து நாடுகளும் தமது தூதரகங்களில் கனிவான சிறப்பான பொறுப்பான சேவைகளைச் செய்து தங்கள் நாட்டு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்து வருகின்றன. ஆனால் அரபு நாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரகங்கள் இந்தியத் தொழிலாளர்கள் விஷயத்தில் திமிராகவும், ஆணவத்துடனும், பொறுப்பின்றியும் நடந்து கொள்வதாக எண்ணற்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்றினாலும், ஊதியக் குறைப்பு செய்தாலும், காரணமின்றி ஆட்குறைப்பு செய்தாலும், விபத்துக்களில் சிக்கிக் கொண்டாலும், தொழிலாளர் மரணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத கொடுங்கோலர்கள் தான் இந்திய தூதரகங்களில் உள்ளனர். இந்தியத் தொழிலாளர்கள் இந்தியத் தூதரகங்களை அணுகவே அஞ்சுகின்ற அளவுக்கு நிலைமை மோசமாகவுள்ளது. இப்போக்கை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. மத்திய அரசு இதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
20. பிறரைத் தாக்கும் ஊர்வலங்களுக்குத் தடை
சிறுபான்மையானாலும், பெரும்பான்மையானாலும் மற்ற மதத்தவரைத் தாக்கிக் கோஷம் போடும் வகையிலும் மற்ற மதத்தவர்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் நடத்தும் எந்த ஊர்வலத்துக்கும் எக்காலத்திலும் அனுமதி அளிக்கக் கூடாது. இதன் மூலம் மத நல்லிணக்கத்தைப் பேண முடியும் என்று அரசுக்கு இச்செயற்குழு ஆலோசனை கூறுகிறது.
21. கலவர தடுப்பு மசோதா
ஆட்சிக்கு வந்தால் மதக்லவரத் தடுப்பபு சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் வாக்களித்ததை தாமதமின்றி உடனே நிறைவேற்ற வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
ஜனவரி 28 போராட்ட சுவர் விளம்பர வாசகம்
1
மற்றவர்களுக்குச் சமமாக உயர் கல்வி பெற்றிட
தனி இடஒதுக்கீடே ஒரே வழி
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள்: ஜனவரி 28 இடம்: ……………………….
புறக்கணிக்கப்பட்ட சமுதாயமே! புயலென புறப்பட்டு வா!
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
2
மற்றவர்களுக்குச் சமமாக வேலை வாய்ப்பு பெற்றிட
தனி இடஒதுக்கீடே ஒரே வழி
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள்: ஜனவரி 28 இடம்: ……………………….
புறக்கணிக்கப்பட்ட சமுதாயமே!புயலென புறப்பட்டு வா!
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
3
நாம் பட்ட துன்பங்கள் நம்மோடு போகட்டும்
நம் சந்ததிகள் தலைநிமிர்ந்து வாழட்டும்
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள்: ஜனவரி 28 இடம்: ……………………….
சாதித்துக் காட்டுவோம் . சரித்திரம் படைப்போம்
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
4
நாள்: ஜனவரி 28 இடம்: ……………………….
மத்தியில் 10 விழுக்காடு . மாநிலத்தில் 7 விழுக்காடு
பெறும் வரை ஓயமாட்டோம்
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
5
பாலைவனத்தில் காய்ந்தது போதும்.
தாயகத்தில் தலைநிமிர்ந்து வாழ
தனி இடஒதுக்கீடே ஒரே வழி
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள்: ஜனவரி 28 இடம்: ……………………….
புறக்கணிக்கப்பட்ட சமுதாயமே! புயலென புறப்பட்டு வா!
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
6
அந்நிய நாட்டில் அடிமை வாழ்க்கை இனி இல்லை
தாயகத்தில் தலைநிமிர்ந்து வாழ
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள்: ஜனவரி 28 இடம்: ……………………….புறக்கணிக்கப்பட்ட சமுதாயமே!
புயலென புறப்பட்டு வா!
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
7
இட ஒதுக்கீடு அளித்திடு!
இல்லையேல் சிறையில் அடைத்திடு என
இடியாய் முழங்கிடc வீறு கொண்டு புறப்படு
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள் ஜனவரி 28
இடம்
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
8
மத்தியில் 10 விழுக்காடு
மாநிலத்தில் 7 விழுக்காடு
பெறும் வரை ஓயமாட்டோம்
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள் ஜனவரி 28இடம்
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
9
வறுமைக் கோட்டை மாற்றி எழுதி
வளமான வாழ்வைப் பெற
தனி இடஒதுக்கீட்டே ஒரே வழி
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
அலைகடலெனத் திரண்டு வாமனிதக் கடலாய் சங்கமிப்போம்.
நாள் ஜனவரி 28
இடம்
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
10
இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக முதல்வரை வலியுறுத்தி
சிறைகளை நிரப்புவோம்
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள் ஜனவரி 28
இடம்
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
11
ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைப்படி பத்து விழுக்காடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி
சிறைகளை நிரப்புவோம்
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள் ஜனவரி 28இடம்
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
12
அறுபது ஆண்டுகள் உறங்கியது போதும்.
இப்போது விழித்து விட்டோம்
என ஆள்வோருக்கு உணர்த்திட
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
அலைகடலெனத் திரண்டு வா
மனிதக் கடலாய் சங்கமிப்போம்.
நாள் ஜனவரி 28
இடம்
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்