Pages

Tuesday, September 17, 2013

சவூதி அரேபியாவில் 5 ஆண்டுகள் அதையும் தாண்டி 10 ஆண்டுகள் பணியாற்றுபவர்களா நீங்கள்?


அஸ்ஸலாமு அலைக்கும் . 

சவூதி அரேபியாவில் 5 ஆண்டுகள் அதையும் தாண்டி 10 ஆண்டுகள் பணியாற்றுபவர்களா நீங்கள்? என்றால் உங்கள் இதயத்தை பத்திரமா பாத்துக்கங்க... 

உங்கள் உடல் நலனை மாதம் ஒரு முறை அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 

சவூதியின் தட்பவெட்ப நிலைப்படி காற்றில் ஈரப்பதம் குறைவு, அடுத்ததாக காற்றில் பிராண வாயும் குறைவு அதன் காரணமாக அதிகமானவர்களுக்கு அலர்ஜி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

சாப்பிடும் உணவு வகைகளில் அதிகமாக பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகள் இதனால் நீண்ட காலம் சவூதியில் பணியாற்றியவர்களுக்கு கொலஸ்ட்ரால், ரத்தக் கொதிப்பு, சுகர் என்று எதாவது ஒன்று அன்பளிப்பாகக் கிடைத்திருக்கும். 

இதை ஆரம்ப கட்டத்தில் கவனிக்காமல் இருந்துவிட்டு பாதிப்பின் கடைசியில் கவனிக்கும் போது அந்த நோய் தனது வீரியத்தோடு எல்லையை தாண்டியிருக்கும்.

சகோதரர்களே! வெளிநாட்டில் வேலை செய்யும் அனைவரும் எதாவது ஒரு வகையில் மன இருக்கத்துடனேயே இருக்கிறார்கள் ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம் அதுவும் குடும்பத்துடன் இருப்பவர்களாக இருக்கும். 

பிரச்சனைகளின் போது இருக்கமான மனநிலையிலிருந்து விடுபட முயற்சியுங்கள். அந்த பிரச்சனையை மறந்து அடுத்த வேலையில் கவனம் செலுத்துங்கள்.

மன இருக்கத்தின் போது உடனே தொழுகையை நாடுங்கள்... உங்கள் மனதில் உள்ள குறைகளை சுமைகளை இறைவனிடம் கேளுங்கள் முறையிடுங்கள். மனச்சுமையிலிருந்து விடுதலை பெறுங்கள்...

உங்களை நம்பி உங்கள் உறவுகள் காத்திருக்கின்றன. 

மாதம் தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்து உங்களின் உடல் நலனை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உணவு பழக்கவழக்கங்களில் கட்டுபாடு வைத்துக் கொள்ளுங்கள். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். 

பரக்கத் நிறைந்த பேரிச்சை, ஆலிவ், தேன் போன்ற உணவுகள் தாராளமாக கிடைக்கும் நாடு இது அவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment