ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை TNTJ மர்கஸில் மாதாந்திர செயற்குழு கூட்டம் கடந்த 09/02/2012 அன்று இரவு 11 மணியளவில் கிளை செயலாளர் நிஜாம் தலைமையில் நடைபெற்றது. கிளைத்தலைவர் சங்கரன் பந்தல் அப்துல் அஜீஸ் அவர்கள் பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார், அவற்றுடன் வெளிநாட்டில் இருக்கும் நம்மை போன்றவர்களின் பங்களிப்பும் எவ்வாறு இருக்க வேண்டும், மேலும் தாயகத்தில் நடைபெறவிருக்கும் போராட்டத்தில் நமதுபிரதிநிதிகளாக நம்முடைய குடும்பத்தார் அனைவரையும் பங்குபெற செய்யவேண்டும் என்றும் எடுத்துரைத்தார், மேலும் தலைமையின் சொந்த கட்டிட நிதிக்காக தமக்கு வந்த தலைமையின் கடிதத்தை உறுப்பினர்களுக்கு எடுத்து கூறி நமது கிளையின் பங்களிப்பு மற்ற கிளைகளுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என்றும் விவரித்தார், இந்த 2012 ஆண்டின் செயல் திட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய செயல் திட்டங்களான 4 வகையான செயல் திட்டங்களை தெளிவாக மக்கள் மத்தியில் எடுத்துஉரைத்தார், இந்த செயற்குழுவில் தபூக் பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்கள் அனைவரும் பங்கு கொண்டனர், மேலும் துஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்று புத்துணர்ச்சியுடன் களைந்து சென்றனர், அல்ஹம்துலில்லாஹ்................!! |
Pages
▼
No comments:
Post a Comment