Pages

Sunday, May 12, 2019

மதீனா கிளை உம்ரா பயணம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

🌹 *அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)*
ரமலான் மாத உம்ரா பயணம் 9.5.2019  வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மதினாவில் இருந்து புறப்பட்டது. வழியில் இஃப்தார் செய்ய உணவுகள் ஏற்பாடு செய்து கொடுத்தோம். இரவு மக்கா நல்லபடியாக சென்றடைந்தோம். அனைவருக்கும் தங்குமிடம் ஏற்பாடு செய்து, ஸஹருக்கான உணவும் தரப்பட்டது. அனைவரும் சிறப்பான முறையில் புனித உம்ரா கடமையை முடித்து விட்டு,  மறு நாள்(10.5.2019) ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றி விட்டு மாலை சரியாக 2.30 மணியளவில் மீண்டும் மதினா புறப்பட்டோம்.

வழியில் இஃப்தார் முடித்து விட்டு, இரவு இஷாத் தொழுகைக்கு மதினா வந்தடைந்தோம். பயணத்தில் தாயீ சகோ.ஜக்கரிய்யா அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நிர்வாகக் குழுவினர் பயண ஏற்பாட்டை நன்றாக செய்திருந்தனர்.  இப்பயணத்தில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக! அல்ஹம்துலில்லாஹ்..!!

இவண்
*TNTJ மதினா கிளை*

No comments:

Post a Comment